ஆகாயத்திலுள்ள அணுவானது எப்படி? விந்துவாக மாறி பின் குழந்தையாக பிறக்கிறது?

        விந்து இதைக் குறித்து பலருக்கு தெரியும் ஆனால் அது எப்படி மறுபடியும் ஜெனிப்பிக்கிறது என்கிற விஷயம் நாம் அறியாமல் இருக்கிறோம் இதை தான் வள்ளலார் மிகவும் அழகாக சொல்கிறார் அவர் சொல்லும் அந்த அற்புத கதையை பார்ப்போம்முதலில் ஒரு குழந்தை எப்படி உருவாகிறது ஆணும் பெண்ணும் சேர்ந்து உடலுறவு கொண்டு ஆணின் விந்தும் பெண்ணின் சுரோனிதமும் இணைந்து ஒரு புதிய பொருள் கிடைக்கிறது. அதுவே அழகான குழந்தையாக பிறக்கிறது இதுதான் நமக்கு தெரியும். பிறகு அவை வளர்ந்து உலக வாழ்க்கையை அனுபவித்து பிறகு இழக்கிறது. இறந்தபின் நம் முன்னோர்கள் அல்லது சமூகம் கூறுவதுபோல் அந்த உயிர் மேலே சென்று அவை செய்த பாவ புண்ணியத்தை கொண்டு கடவுள் அதற்கு அடுத்த பிறவியை கொடுக்கிறார் என்று நமக்கு தெரிந்த ஒரு கதை இவ்வளவுதான். அதாவது அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்று நமக்கு தெரியும். பஞ்சபூத சக்திகளை கொண்டு நம் உடல் செயல்படுகிறது.        வள்ளல் பெருமான் இதை மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.அணுவானது எப்படி விந்துவாக மாறி குழந்தையாக பிறக்கிறது என்பதை.முதலில் மனித உடலில் உள்ள உயிரானது இறந்த பிறகு அணுவாக ஆகாயத்தில் சென்றடைகிறது அதாவது space ல் பிறகு வேறு ஒரு மனித உடம்பிலே இன்னொரு தாயினுடைய கர்ப்பப் பையிலேயே தந்தையினுடைய விந்துத்துளி வழியாக போய் சேருகின்ற வரை அவை எப்படிதான் ஆகாயத்தில் அணுவாக இருக்கின்றது. சரி பூமிக்கு எப்படி வருகிறது என்றால் மழை வரும்போது அந்த உயிரானது அணு அளவாக மழைத்துளியின் வழியாக பயிர்கள் அல்லது தானியங்களில் சேருகிறது. பிறகு நாம் உண்ணுகின்ற தானியம் பயிர்கள் உணவின் மூலம் நம் உடலுக்கு உள்ளே சென்று தந்தையினுடைய வயிற்றில் இரண்டு மாத காலம் இருக்கின்றது.அம்மாவின் உடைய வயிற்றில் பத்துமாதம் இருக்கின்றோம் ஆனால் அதற்கு முன்பே தந்தையின் வயிற்றில் இரண்டு மாத காலம் அந்த உயிரானது இருக்கின்றது. பிறகு இரண்டு மாத காலத்தில் அவை வளர்ச்சி அடைகிறது. ஆனால் இரண்டு மாத காலத்தில் அவை வளர்ச்சி அடையவில்லை என்றால் குழந்தை பிறக்காது.இதன் மூலம் தான் ஆண் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது என்று வள்ளல் பெருமான் தெளிவாக கூறுகின்றார். பிறகு வளர்ச்சி அடைந்த உயிரானது தந்தையின் சுற்றில் கலந்து பிறகு தாயின் உடைய வயிற்றில் உள்ள கர்ப்பப் பையிலேயே சென்று பின் கரு வளர்ச்சி அடைந்து பிறகு நாம் குழந்தையாக பிறக்கின்றோம். அணுவின் மூலம் நாம் இப்படி தான் பிறக்கின்றோம்.       உயிரின் உடைய தன்மை என்னவென்றால் ஆகாய கூறு ஆகாயம் என்றால் ஆன்மா காயம் என்றால் உடம்பு ஆன்மாவின் உடைய உடம்பு எனவே அனைவரும் பெறுகிறோம் அதனால்தான் அணுவானது செல்களாக மாறி பின் உறுப்புகளாக மாறி பின் உடம்பாக மாறுகிறது. இவை நமக்குத் தெரிந்தவை ஆனால் இந்த முறையானது அதற்கும் அப்பாற்பட்ட இயற்கையின் செயல் முறையாகும். இவை எப்படி மனிதனுக்குள்ளே செல்கிறதோ அதே போல்தான் விலங்குகளுக்கும் நடக்கும் அதுவே அணுவினுடைய செயல் முறை என்னவென்றால் அணுக்கள் ஆனது ஏதாவது ஒரு இடத்தில் சென்று செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கிறதாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த முறையை வள்ளல் பெருமான் மிக அழகாக கூறியுள்ளார். இதனால்தான் நாம் விந்துவினை உயிரணுக்கள் என்கிறோம் இந்த நுட்பமான விஷயத்தை மட்டும் நாம் இதில் தெரிந்துகொண்டோம்.நன்றி…மகிழ்ச்சி Hipnotist Sivaganesh,

பிரபஞ்ச சுவாசம் என்றால் என்ன?

            இந்தக் கேள்விக்கு இந்த உலகில் பலர் பேர் விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வித்தையை அறிந்தவர்கள் ஒரு சிலர் மட்டும் தான் பலரும் உண்டு அதிலும் இப்பொழுது இக்காலகட்டத்தில் தேவைப்படக்கூடிய ஒருவர் இது அவருடைய அனுபவம் அவர்தான் சுவாமி ராமா இந்த விஷயத்தை அனைத்தையும் தன் வாழ்க்கையில் அனுபவித்தவர் அவர் சொல்லும் செயல்பாடுதான் இந்த கருத்து இதை சொன்னது அனைத்தும் சுவாமி ராமா.நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்கிறோம்.உடலை அடிப்படையாக வைத்தே மனம் இயங்குகிறது என்று முடிவு செய்கின்றோம். உடலில் இருந்து மனம் பிறக்கிறது என்ற கோணத்திலிருந்து பார்த்தால் கர்ப்பத்திலுள்ள சிசுவுக்கு மனம் கிடையாது. அது உலகில் பிறந்த பின்னர்தான் எண்ணம், உணர்வு போன்றவை வளர்ச்சி பெறுகின்றன. இதே வகையில்தான் நாம் பிரபஞ்சத்தையும் பார்க்கிறோம்.எங்கிருந்தோ வந்து மண்ணில் விழுந்த சில மூலக்கூறுகள் பல்கிப் பெருகின. அதன் வாயிலாக உயிரினங்களின் தோற்றம் ஏற்பட்டதாக நாம் நம்புகிறோம். மில்லியன் கணக்கான வருடங்கள் அந்த உயிரினங்களுக்கு உள்ளே பல சிக்கலான விந்தைகள் நடந்தன. பிறகு மெதுவாக அந்த உயிருக்கு உணர்வுகள் தோன்றின.ஆனால் பழங்காலத்தைச் சேர்ந்த கீழ்த்திசை மக்களின் கருத்து வேறுவிதமாக இருந்தது. சொல்லப் போனால் முந்தைய கருத்துக்கு அதற்கு எதிரானதாகவே இருந்தது. மனிதனின் ஒவ்வொரு நிலையும் மேலே உள்ள நிலையிலிருந்து உருவெடுப்பதாக யோக தத்துவம் கூறுகிறது. உணர்வுகளில் இருந்து மனம் பிறக்கிறது. மனதிலிருந்து வெளிப் ஸ்தூல உடல் தோன்றுகிறது. மனம் உடலாக வடிவெடுக்க விரும்புவதால் அது அவ்விதம் தன்னை படுத்திக்கொள்கிறது என்கிறது யோக நூல். உலகைப் பார்க்கும் ஒரு வித்தியாசமான கோணம் இது! மனிதனின் மூலாதாரமானது உடல், மனம் போன்ற அம்சங்களுக்கு அப்பாற்பட்டது. புரிந்துகொள்ள முடியாத ஒரு உணர்வின் வடிவமாக நாம் பிறப்பெடுத்திருக்கிறோம் என்று இது உணர்த்துகிறது. ஸ்தூல உடலுக்கு அப்பால் இந்த உணர்வு நிலை அமைந்திருக்கிறது. இங்கிருந்துதான் நாம் வந்தோம். இறுதியில் இந்த இடத்திற்குத்தான் திரும்பிச்செல்ல இருக்கிறோம். இந்த முழுப்பிரபஞ்சமும் அந்த உணர்வு மையத்திலிருந்துதான் வெளிப்பட்டது. பின்னர் இறுதியாக அந்த மூலத்திற்கே திரும்பிப் போகவிருக்கிறது. கடல் அலைகரைக்கு வந்துவிட்டுக் கடலுக்குத் திரும்புவதை இதற்கு உதாரணம் கூறலாம்.சில வானியல் ஆராய்ச்சியாளர்களும் இதே விந்தையான கருத்தையே தெரிவிக்கிறார்கள். அவர்கள் ஆய்வு செய்யும் களமானது இதற்கு அப்பால் யோசிக்க அனுமதிக்கவில்லை. பிரபஞ்சம் பற்றிய அவர்களின் புவியியல் தீர்மானங்கள் தடுமாறிப் போகின்றன. அழியாத்தன்மை, முடிவற்ற நிலை போன்ற கோட்பாடுகள் சௌகரியமற்றுப் போகின்றன.எந்த இடத்தில் இவை எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்? காலம். ஆகாயம் போன்றவற்றிற்கு எல்லை இருந்தால், அது எங்கே உள்ளது? அதற்கு அப்பால் என்ன இருக்கிறது? பிரபஞ்ச உண்மைகளை அறிவதற்கு மனித அறிவு ஒரு அற்பமான கருவி என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். பல வானியல் ஆய்வாளர்கள் பால்வெளி மண்டலங்களும் (Galaxies) கிரகங்களும் (Planets) ஒன்றையொன்று உந்தித் தள்ளுவதாக தற்போது நம்புகிறார்கள்.அவற்றுக்கு இடையே உள்ள ஆகாயவெளி விரிவடைந்து கொண்டே போகிறது. அந்த விரிவினால் ஏற்படும் அழுத்தம் ஏதாவது ஒரு மையத்தில் குவியும்போது அண்டப் பெருவெடிப்பு நிகழும் என்கிறார்கள். இதுவே அண்டப் பெருவெடிப்புக் (Big Bang Theory) கோட்பாடாகும்.வெடிப்புக்கு பிறகு அண்டப்பெருவெளி போதுமான அளவு விரிவடைந்த பின்னர் பிரபஞ்சம் அனைத்து கிரகங்களையும் தன்பால் மீண்டும் இழுக்கும், நட்சத்திரங்களும் பால்வெளி மண்டலங்களும் இந்த ஈர்ப்பில் இடம் பெறும். மீண்டும் ஒரு அடர்வு மையம் உருவாகும்போது அடுத்த அண்டவெடிப்பு நிகழும் என்கிறார்கள்.இது விரிவும், அழிவும் தொடர்ந்து நடைபெறும் இயக்கமாகச் செயல்படுகிறது. பிரபஞ்சம் மூச்சை உள்ளிழுத்து, வெளியே விடுகிறது என்றும் இதைக் கூறலாம். மனிதர்களாகிய நாம் உயிர் வாழ்வதும் இதே போன்று அமைந்திருக்கிறது. ‘பிரபஞ்ச சுவாசத்தின்’ மூலம் நாம் வளர்கிறோம். வடிவம் பெறுகிறோம் எனலாம். ஏதோ காரணமாக நாம் மனிதர்கள் வடிவில் பிரபஞ்சத்தில் உலவவிடப்பட்டுள்ளோம். ஸ்தூல உடல் பெற்றுள்ள நாம் நமது மேலே உள்ள உணர்வு நிலைக்கு திரும்பிச் சென்றாக வேண்டும். சுவாசம் என்ற விஷயத்தினுள் மறைந்து கிடக்கும் செய்திகளை ஒருவர் ஆராய்ந்து அறிவதற்கு விரும்பினால் அவர் பல்லாண்டு காலம் அல்லது தனது வாழ்நாள் முழுவதையும் அதற்குச் செலவழிக்க வேண்டிவரலாம்.சுவாசம் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுதல்:பிராணாசக்தியை அதிகரித்துக் கொள்ளும் காரியத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம் என்ற கருத்து மேற்கு நாட்டவர்களுக்கு வியப்பளிப்பதாக உள்ளது. சிலர் அதை ஒரு ரகசியமான கலை என்றும் கருதத்தலைப்படுகிறார்கள். கீழ்த்திசை நாட்டவர்களின் நுண்ணறிவு சார்ந்த விஷயங்களின் பக்கம் பார்வையைத் திருப்பினால், அது அவ்வாறான மாயாஜாலக்கலை அல்ல என்பது தெரியவருகிறது.யோகிகளின் கருத்துப்படி பிராணாசக்தி என்பது எளிமையான. விஞ்ஞானபூர்வமானதாகும். அறிவியல் பூர்வமான இந்த மூச்சுக்கலையைக் கற்றுக்கொள்ள கால அவகாசம் நிறையத் தேவைப்படுகிறது என்பது மட்டும் நிஜம். நமது கலாச்சாரமும்,. பழக்கவழக்கங்களும் சுயவிழிப்புணர்வை கூர்மைப்படுத்தி; கொள்வதிலிருந்து விலகிச் சென்றுவிட்டன. சுவாசம் பற்றிய விழிப்புணர்வை நாம் எளிதாக நம்மிடம் உருவாக்கித் கொள்ளலாம். நாம் வேலை செய்வது, சிந்திப்பது, உணர்வது போல சுவாச விழிப்புணர்வையும் ஒரு பழக்கமாக உருவாக்கிக் கொள்ள முடியும். உதாரணத்துக்கு உங்கள் இடது காலை எடுத்துக் கொள்வோம். அதைப் பற்றி நீங்கள் அதிகமாக அலட்டிக்கொள்வது கிடையாது. சொல்லப்போனால், அந்த காலைப் பற்றிச் சிந்திப்பதும் இல்லை.”நான் அடுத்த வைக்கவேண்டும்?”அடியைஎங்கே எடுத்து நான் தூங்கி எழுந்ததும் அதை எப்படி இயக்குவது என்று ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும்?” என்றெல்லாம் திட்டமிடுவதும் கிடையாது.நீங்கள் நடந்து செல்லும்போது உங்கள் மனதில் ஏற்படும் சிந்தனைகளை நிறுத்திவிட்டு நடப்பது மீது கவனம் செலுத்த அவசியமில்லை.வலது காலுக்குப் பிறகு இடது கால் உயரவேண்டும். அதன் பின்னர் மறுபடியும் வலது கால் இயங்க வேண்டும். பெருவிரலை கவனமாக மேலே உயர்த்தி நிலத்தில் இழுபடாமல் பாதுகாக்க வேண்டும்” என்றெல்லாம் திட்டம் போடுவது கிடையாது. உங்கள் கால் எங்கே பதிகிறது, என்ன செய்கிறது என்று நீங்கள் யோசிப்பதே இல்லை. அதைத் தவறான இடத்தில் வைத்து விடுவோமோ என்று அஞ்சுவதும் கிடையாது. இந்தப் புத்தகத்தை உட்கார்ந்து நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் உங்களைச் சுற்றி இருக்கும் மக்களுடனும் கலந்துறவாடவே செய்கிறீர்கள். தொலைபேசி அழைப்பு வரலாம்என்று நினைக்கிறீர்கள். அதுபோலவே காலைப் பற்றியும் கவனம் உங்களிடம் இருக்கிறது.தொடர்ந்து வருடக்கணக்கில் நீங்கள் காலைப் பயன்படுத்து வதால் அது இயல்பாக இயங்குகிறது. அது எளிதாக வந்துவிடும் காரியமல்ல என்பதை நினைவில் வையுங்கள். சரியானபடி அதைப் பயன்படுத்தப் பல வருடகாலம் பிடித்திருக்கிறது. கால்களைச் சிறுவயதில் உபயோகிக்கப் பயிலும்போது வாயிலும் பாதங்களை வைத்துப் பார்த்திருக்கிறோம் அல்லவா?கால்களை அப்படியும் இப்படியுமாக அசைத்தும், பெருவிரலை பற்களால் கடித்து வலியால் சிணுங்கியும் அவதிப்பட்டிருக்கிறோம். பலவிதமான முயற்சிகளும், தவறுகளும் செய்து நாம் நடக்கக் கற்றுக்கொண்டோம். அதெல்லாம் நீண்ட காலத்துக்கு முன்பு நடந்தவை என்பதால், அதைப்பற்றி நினைக்கவேண்டிய தேவை ஏற்படுவதில்லை. இதேவகையில் சுவாசத்தையும் பயன்படுத்திப் பலன்பெற முடியும். காலால் நடப்பது போலவே சுவாசமும் ஒரு தன்னிச்சையான காரியமாக மாறிவிடும். சுவாசத்தின்மீது கவனம் செலுத்தி தொடர்ந்தவிழிப்புணர்வுடன் நம்மால் இருக்கமுடியும். அறிவியல்பூர்வமான மூச்சுக்கலை ஸ்வரோதயா (Svarodaya) என்று அழைக்கப்படுகிறது. இதில் தேர்ச்சிபெற்ற யோகிகளால் தங்களின் ஒவ்வொரு மூச்சின் மீதும் கவனத்தைச் செலுத்தி அதைக் கட்டுப்படுத்த முடியும்.யோகவிஞ்ஞானக் கலையின் முக்கியமான பகுதி பற்றி இப்போது பார்க்கலாம். சுவாசம் என்ற உடலியல் இயக்கம் மட்டும்தான் தன்னிச்சையாகவும், மனிதனின் விருப்பப்படியும் இரண்டு விதமாக இயங்கும் திறன் பெற்றிருக்கிறது. சாதகர் தனது சுவாசத்தின்மீது கவனம் வைத்து அதை அவர் விரும்பும் வகையில் வழி நடத்த முடியும். அவர் சுவாசத்தை கண்டு கொள்ளாது இருந்தால் உடல்தானே அந்த காரியத்தைச் செய்கிறது.சுவாசிப்பது இல்லாது போனால் உடல் இயக்கம் கிடையாது. சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம் அலட்சியப்படுத்தி விடும் சமயத்தில், மனதின் ஏதோ ஒரு பகுதி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மூச்சுவிடுவதற்கான இயக்கங்களை நடத்துகிறது.இப்போது சுவாசம் மூளையின் கட்டுப்பாட்டிற்குள் விடுகிறது. நமக்குள்ளே இருக்கும் 30 ஆழ்மனப்பிராந்தியம் சிக்கை தீர்க்கக் கைகொடுக்கிறது. இங்கிருந்து தான் மனக்கிளர்ச்சிகம் எண்ணங்கள், சிந்தனைகள் புறப்படுகின்றன என்று நாம் புரி கொள்வதில்லை. போதுமான விழிப்புணர்வு நம்மிடையே இல்லாது போய்விட்டதே காரணமாகும். சுவாசத்தின்மீது நமக்கு கவனம் இல்லாது போனால் அதன் ஒழுங்கும், நேர்த்தியும் கெட்டி. போய் விடுகின்றன.இதே காரியம் உங்கள் இடது காலுக்கும் நேரலாம் ஜனங்க தங்கள் பாதங்களைச் சரியாகப் பயன்படுத்தத் தவறும்போது இ நடக்கிறது. தவறாக பயன்படுத்தினாலும் இது நேரலாம். “ஐயோ எனது குதிக்காலில் கடுமையான வலி ஏற்படுகிறதே” என்று கூறுகிறார்கள். கொஞ்சம் அனுசரிப்புடன் இருந்தால், உங்களால் எப்போதும் போல நடக்க இயலும்.அக்கறை இல்லாது போகும்போது பாதம் கோணலாகி வடிவம் மாறிப்போகலாம். அதன் பிறகு நீங்கள் பாதங்களுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவருக்கு ஒரு பெரிய தொகையைக் கட்டணமாகச் செலுத்தி வைத்தியம் பார்ப்பீர்கள். அவர் சில பயிற்சிகள் செய்யும்படி பரிந்துரை செய்வார். இவ்வாறு செய்யும்போது மெதுவாகப் பாதத்தின்மீது உங்களுக்கு விழிப்புணர்வு தோன்றுகிறது. பிறகு அது நன்கு செயல்படத் தொடங்கிப் பிரச்சினை தீர்ந்து நோய் அகல்கிறது.இச்செயல் சுவாசத்திற்கும் பொருந்தும். கட்டுப்பாடின்றிச் சுவாசத்தை ஓடவிட்டால் அது உடலுக்கும், மனதுக்கும் கெடுதியை ஏற்படுத்துகிறது. அவ்வாறு விழிப்புணர்வுடன் சுவாசத்தைக் கட்டுப்படுத்தினால் அது நடக்க விடாமல் இருந்து இணக்கமாக நடக்கத் தலைப்படுகிறது. உங்கள் சுவாசமும், விழிப்புணர்வும் ஒன்று சேர்ந்துவிட்டால், ஏன் இதை முன்பே செய்யாமல் போனோம் என்று நினைக்கத் தோன்றுமளவு மனதுக்கு இதம் கிடைக்கும்.சிலருக்கு காயம் ஏற்பட்டு சில காலம் நடக்க முடியாது போய்விடுகிறது அல்லவா? தங்கள் உடலின் கீழ்ப்பகுதியை அவர்கள் அலட்சியம் செய்துவிடுவதே இதற்குக் காரணமாகும். இடுப்புக்கு மேலே மட்டும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மேல் பகுதி உயிர்த்துடிப்புடன் இருந்திருக்கிறது. அலட்சியப்படுத்தப் பட்ட உடலின் கீழ்ப்பகுதி செத்துப்போன நிலையை அடைந்து கனத்துப் போய்விடுகிறது. தங்களுடைய செயலிழந்த பாகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க அவர்கள் கடுமையான முயற்சிகள் செய்ய நேரிடுகிறது. கால்களைப் பயன்படுத்தும் முறைகளை மீண்டும் ஒருமுறை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.தங்களின் விழிப்புணர்வை பாதம்வரை அவர்கள் கொண்டு செல்கிறார்கள். அதற்கு கடுமையான முயற்சிகள் தேவைப்படு கின்றன. உடலின் கீழ்ப்பகுதியை அவர்கள் மனப்பூர்வமாகவே ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். அதை அலட்சியப்படுத்தி உடல் தொடர்பிலிருந்து துண்டித்துக் கொண்டுவிட்டனர். நாம் சுவாசக் கலையைக் கற்றுக்கொள்ளும் சமயத்திலும் இதே வகையான பிரச்சினையைத்தான் எதிர்கொள்ள நேர்கிறது. சுவாசம் என்ற விஷயத்தையே நாம் ஒதுக்கி அலட்சியம்

தியானம் பற்றி சுவாமி விவேகானந்தர்

       தியானத்தையும் மன ஒருமைப்பாட்டையும் பயிற்சி செய். பயிற்சி வேளையில் உன் முன் நறுமணம் கமழும் மலர்களை வை. நல்ல பத்தி கொளுத்தி வை. மனதைப் புனிதப்படுத்துவதற்கு வேண்டியவற்றை ஆரம்பத்தில் செய்.குருவின் நாமத்தையும் இஷ்டதெய்வத்தின் திருநாமத்தையும் ஜபிக்கும்போது, ‘பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் மங்கலம் உண்டாகட்டும்!’ என்று சொல்.வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, கீழே, மேலே என எல்லா திசைகளிலும் நல்லெண்ணங் களை முதலில் பரப்பு.பின்பு தியானத்தில் அமர். ஆரம்பத்தில் இவ்வாறு செய்ய வேண்டும்; பிறகு அமைதியாக இருந்து (எந்தத் திசையையாவது நோக்கி) நான் தீட்சையின் போது உனக்குக் கூறிய முறையில் தியானம் செய். ஒரு நாள்கூட விட்டுவிடாதே வேலை நெருக்கடி இருந்தாலும் கால்மணி நேரமாவது சாதனை செய்யத் தவறாதே. ஒருமுகப்பட்ட ஈடுபாட்டுடன் கூடிய முயற்சி இல்லாமல் எதை அடைய முடியும் மகனே?பின்னர் சுவாமிஜி பின்வருமாறு கூறினார்:’உங்களுக்கெல்லாம் எளிதில் ஆன்ம விழிப்பு உண்டாகும். எப்போது இங்கே வந்துவிட்டீர்களோ, அப்போது முக்தியும் பிற எல்லாமும் உங்கள் கையில்தான்.* வெளியிலோ, உள்ளேயோ மனதை ஓரிடத்தில் நிலை நிறுத்தப் பயிற்சி அளித்துவிட்டால், இடையீடற்றுப் பாய்கிற நீரோட்டம் போல் அது அந்த இடத்தை நோக்கித் தொடர்ந்து செல்லும் ஆற்றல் பெறுகிறது.          இந்த நிலைதான் தியானம்.தியானிக்கப்படும் பொருளின் புறப்பொருளை விட்டு அகப்பொருளாகிய கருத்தை மட்டும் தியானிக்கத் தக்கபடி தியான சக்தியைத் தீவிரமாக்கினால் அந்த நிலைதான் சமாதி. தியானத்திற்கு உரிய சில வழிகள் இதோ – தலைக்கு மேல் பல அங்குல உயரத்தில் ஒரு தாமரை இருப்பதாக நினையுங்கள். தர்மம் அதன் மையம், ஞானம் அதன் தண்டு, தாமரையின் எட்டு இதழ்களும் யோகியின் அஷ்டமாசித்திகள். தாமரைப் பூவின் உள்ளே இருக்கும் மகரந்த கேசரங்களும் சூல்பைகளும் தியாகம்.புறத்திலிருந்து வருகிற சித்திகளையும் தியாகம் செய்தால் யோகி முக்தி அடைவான். தாமரையின் எட்டு இதழ்களும் எட்டு சித்திகள். அதே வேளையில் உள்ளே உள்ள மகரந்த கேசரங்களும் சூல்பைகளும் உயர்நிலை தியாகம், அதாவது இந்தச் சித்திகளைத் துறத்தல்.தாமரையின் நடுவில் பொன்னொளி வீசுபவராக, சர்வ வல்லமை உள்ளவராக, அணுக அரியவராக, ஓங்காரம் எனும் பெயரை உடையவராக, விளக்க முடியாதவராக, பேரொளி யால் சூழப்பட்டவராக இறைவனை தியானம் செய்யுங்கள்.மற்றொரு தியானமும் கூறப்படுகிறது.உங்கள் இதயத்தில் ஒரு வெளி இருப்பதாக நினையுங்கள்.அதில் சுடர் ஒன்று ஒளிவிடுகிறது. அது உங்கள் ஆன்மா. அதனுள், உங்கள் ஆன்மாவிற்கு ஆன்மாவாகிய கடவுள் ஒரு பேரொளியாக இருப்பதாக எண்ணுங்கள். அதனை உங்கள் இதயத்தில் தியானம் செய்யுங்கள்.முதலில், தியானம் எதிர்மறை நிலையில் இருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் சிந்தித்து ஒதுக்கிவிடு| மனதில் வரும் ஒவ்வொன்றையும் சங்கல்ப சக்தியின் மூலம் பகுத்தறி.அதன் பின் உண்மையில் நாம் எதுவாக இருக்கின்றோமோ அதை, அதாவது உண்மை-அறிவு -ஆனந்த வடிவமாக, இருப்பு அறிதல் – அன்பு செய்தலாக இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.       தியானிப்பவரையும் தியானிக்கப்படும் பொருளையும் இணைப்பதுதான் தியானம்.மேலே உள்ளவை எல்லாம் நானே, கீழே உள்ளவை எல்லாம் நானே, இடையில் இருப்பன எல்லாம் நானே. எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன். எல்லா உயிர்களும் என்னில் இருக்கின்றன. ஓம் தத் ஸத்!அதுவே நான். மனதிற்கு அப்பாற்பட்டவன் நான்.இந்தப் பிரபஞ்ச ஆன்மாவுடன் ஒன்றுபட்டவன் நான்.நான் இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை.இந்த உடல் பருகுகிறது, சாப்பிடுகிறது மற்றும் இது போன்ற வேலைகளைச் செய்கிறது. இந்த உடல் நான் அல்ல; மனமும் நான் அல்ல; நானே அவன்.நானே சாட்சி, நான் விலகி நின்று பார்க்கிறேன். உடல் நலனுக்கு நான் சாட்சி, நோய்க்கும் நானே சாட்சி. உண்மை நானே, அறிவும் நானே, ஆனந்தமும் நானே.சாரம் நானே; அறிவமுதமும் நானே. நான் ஒருபோதும் மாறுதல் அடைவதில்லை. நான் அமைதியானவன், ஒளி மிக்கவன், மாறுதல் இல்லாதவன்.கேள்வி: சுவாமிஜி, தவம் என்றால் என்ன? பதில்: தவம் மூன்று வகை;உடல் தவம் -பிறருக்குச் சேவை செய்வது,வாக்குத் தவம் – உண்மையைக் கடைப்பிடிப்பது,மனத் தவம் – மனக் கட்டுப்பாடும் மன ஒருமைப்பாடும்.கேள்வி: எங்கு ஒருவன் தியானம் செய்ய வேண்டும்? உடலுக்கு உள்ளேயா, வெளியிலா? மனம் உள்ளே இழுக்கப்பட வேண்டுமா, வெளியே இருக்கலாமா?பதில்: உள்ளேயே தியானம் செய்ய வேண்டும். மனம்இழுக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்ற விஷயத்தைப்பொருத்தவரை, அந்த மனத் தளத்தை அடையவே நீண்டகாலமாகும். இப்போது நமது போராட்டம் உடம்புடன்தான்.தொடர்ந்து அசைவற்று அமரும் நிலை பெற்ற பிறகு மட்டுமே மனத்துடனான போராட்டத்தைத் தொடங்க வேண்டும். ஆசனம் நிலைபெற்றுவிட்டால் உடல் அசைவற்றி ருக்கும். அப்போது விருப்பப்படி நீண்ட நேரம் உட்காரலாம்.   கேள்வி: சுவாமிஜி, சில நேரங்களில் ஜபம் சோர்வைத் தருகிறது. அப்போது ஜபத்தைத் தொடர்வதா, நல்ல நூல்களை வாசிக்கலாமா? சுவாமிஜி: ஜபத்தால் சோர்வு இரு காரணங்களால் ஏற்பட லாம் – 1,மூளை களைத்துவிடுவதால்; 2, சோம்பலால்,முதல் காரணமாயிருந்தால் ஜபத்தைத் தொடர்ந்தால் போலிக் காட்சிகளில் மயங்க நேரும், சில வேளைகளில்பைத்தியம் பிடிக்கலாம். சோம்பலினால் ஏற்பட்ட சோர்வு என்றால், அதற்குப் பரிகாரம் மனதைப் பலவந்தப்படுத்தி, ஐபத்தில் தொடர்ந்து ஈடுபடச் செய்வதே. கேள்வி: சில வேளைகளில் ஜபம் செய்யும்போது ஆனந்தம்உண்டாகிறது. இந்த ஆனந்தத்தால் ஜபத்தை மேலும் செய்யத்.தோன்றாமல் போகிறது. அப்போது மேலும் ஜபம் செய்வதா? சுவாமிஜி: ஆம், இந்த ஆனந்தம் சாதனைக்கு இடையூறானது. அதற்குப் பெயர் ரஸாஸ்வாதனம் இன்பத்தைச் சுவைப்பது), இதைத் தாண்டிச் செல்,’     கேள்வி: மனம் அலைந்து கொண்டிருந்தால், நீண்ட நேரம் ஜபம் செய்வது நல்லதா? சுவாமிஜி: ஆம், முரட்டுக் குதிரையை அடக்க அதன்முதுகில் எப்போதும் உட்கார்ந்து பழக்குவது போன்றது இது. கேள்வி: தியானத்தின் உண்மையான இயல்பு என்ன?சுவாமிஜி: தியானம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது மனதைக் குவியச் செய்வது. மனம் ஒரு பொருளின் மீது ஒருமைப்பட்டு நிலைபெறுமானால் பிறகு அதனை எந்தப் பொருளின் மீதும் குவிக்கலாம். தியானத்தால் நீங்கள் அடையக்கூடிய அனைத்தையும்யோகிகளுக்கெல்லாம் யோகியாக உள்ள ஈசுவரனைத்தியானிப்பதால் அடைய முடியும்…     ஒரு மகானைத் தியானிப்பதாலும் அந்த நிலையை நீங்கள் அடைய முடியும். அல்லது வாழ்க்கையின் இயைபைப் பற்றித் தியானிப்பதாலும் அது கிடைக்கும். இவை புறச்சார்பு தியானங்கள். அதாவது உங்களுக்கு உள்ளே அல்லது வெளியே உள்ள சில பொருட்களைத் தியானிக்கிறீர்கள்.திரும்பத் திரும்ப ஒன்றைக் கூறி மனதைக் குவிப்பதேஅது. மனம் அகமுகமாகித் தன்மீது குவிவதுதான் தியானம். அங்கே மனதின் எண்ண அலைகள் எல்லாம் ஓய்கின்றன. உலகமே மறைந்து விடும். உங்கள் உணர்வு விரிகிறது. தியானம் செய்யும் போதெல்லாம் நீங்கள் வளர்கிறீர்கள்.” இன்னும் சிறிது கடினமாக உழையுங்கள். மேலும் தீவிரமாகப் பாடுபடுங்கள். தியானம் கைகூடும். இந்த நிலை யில் உடம்பையோ மற்ற எதையுமோ நீங்கள் உணர்வதில்லை. தியானம் முடிந்து நீங்கள் எழும்போது, இதுவரை நீங்கள் பெற்றிராத ஓர் அற்புதமான ஓய்வைப் பெற்றிருப்பீர்கள்.   நம் ஆசைகள், உணர்ச்சிகள் எல்லாவற்றிற்கும் முடிவிடம் இறைவனே. உனக்குக் கோபம் வருமானால் இறைவனிடம் கோபித்துக் கொள். உன் காதலனாகிய இறைவனை, உன் தோழனான இறைவனைக் கடிந்து கொள்.பயமின்றி இப்படி வேறு யாரை நீ கண்டிக்க முடியும்? மனிதன் உன் கோபத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டான்; பதிலுக்குக் கோபிப்பான். என்னிடம் நீ கோபம் கொண்டால் நானும் உடனே என் கோபத்தைக் காட்டுவேன். இது நிச்சயம். உன் கோபத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.நீ ஏன் இன்னும் என்னிடம் வராமல் இருக்கிறாய்? என்னை ஏன் இவ்வாறு தனியாகத் தவிக்க விட்டாய்?” என்று இறைவனிடம் கேள். அவனிடம் அல்லாமல் வேறு எங்கு இன்பம் இருக்க முடியும்? வெறும் மண்ணாங்கட்டிகளில் என்ன இன்பத்தைக் காண முடியும்? பேரானந்த ரசக்கட்டி அல்லவா நாம் நாட வேண்டிய இன்பம்! அது இறைவனே. நமது ஆசாபாசங்கள் எல்லாம், உணர்ச்சிகள் எல்லாம் அவனை நோக்கிச் செல்லட்டும். அவை அவனுக்காகவே அமைந்தவை. குறி தவறி அவை கீழே செல்லுமானால் தீமை ஆகிவிடும். இலக்காகிய இறைவனை நேராக அடையுமானால், மிகக் கீழான உணர்ச்சிகள்கூட உருமாறி விடுகின்றன.உடலும் உள்ளமும் தங்கள் சக்திகளை எப்படி வெளிப்படுத்தினாலும் அவற்றின் முடிந்த முடிவாக இருப்பவன் இறைவனே (ஏகாயனன்).    மனித உள்ளத்தில் எழும் அன்பனைத்தும் ஆசையனைத் தும் இறைவனிடமே செல்ல வேண்டும். அவனே நமது அன்பிற்கும் ஆசைக்கும் உரியவன். அவனைத் தவிர வேறு யாரை நம் உள்ளம் காதலிக்க முடியும்?ஒப்பற்ற அழகுடையவன் அவன். மிக மேலானவன் அவன். அவனே அழகு. அவனே மேன்மை. இந்தப் பிரபஞ்சத்தில் அவனைவிட அழகானவர் வேறு யார்?நமக்கு அன்புக்குரியவனாக இருக்க இந்தப் பிரபஞ்சத்தில்அவனைவிடத் தகுதியுடையவர் யார்?எனவே அவனே கணவனாக இருக்கட்டும்; அவனே அன்புக்குரியவனாக இருக்கட்டும். vinodhan,

முற்பியவிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

    முற்பிறப்பு தகவல்களை எப்படி பயன்படுத்த வேண்டும்?  மறுபிறப்பை நம்புகின்றவர்கள் தங்களின் கடந்த கால வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்ளுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. கடந்த வாழ்க்கையில் தாம் ஒரு முக்கிய நபராக இருந்திருந்தால் குதைப் பற்றி இப்போது பெருமை பேசிக் கொள்ள முடியும். இன்னும் சிலர் முற்பிறப் பில் எப்படி இருந்தோம் என்றுதான் தெரிந்து கொள்வோமே. என்சிற ஆர்வத்திலும் முன் பிறவிகள் பற்றி அறிய விரும்பக் கூடும். இந்தப் பிறவியில் நாம் இப்படி இருப்பதற்கு முற்பிறப் புகள் தான் காரணமா என்று அறிகின்ற ஆர்வமும் சிலருக்கு ஒருவகைத் திருப்தி ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். இதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கின்றவர்கள், முற்பிறப்பு பற்றி கிடைத்த தகவல்களை பல விதங்களில் நாம் பயன் படுத்திக் கொள்ள முடியும். இந்தப் பிறப்பில் எப்படி பயன் படுத்திக் கொள்வது என்றும் யோசிக்கக்கூடும். முற்பிறப்புத் தகவல்களை அந்தத் தகவல்கள் நமக்கு எப்படி உதவக் கூடும் என்பதைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும். அப்படி பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் என்னஎன்பதையும் நாம் ஆராய வேண்டும். இப்போது உள்ள நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்து ஒரு விஷயம் தெளிவானது; அந்தத் தகவல்கள் வதற்கு உதவ வேண்டும். இறைவனின் நோக்கத்தை நிறை வேற்ற அந்தத் தகவல்களை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நமக்கும் மற்றவர்களுக்கும் நம்முடைய வாழ்க்கை பயனுடையதாக அமைய அவை உதவ வேண்டும். கடந்த பிறப்புகளில் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டிருப்பது மட்டும் நம் முடைய நோக்கமாக இருந்து விடக்கூடாது. அதனால் நம் முடைய இப்போதைய வாழ்க்கைக்கு எந்தப் பயனும் இல்லை.மறுபிறப்பு தத்துவத்தில் உள்ள இன்னொரு விஷயத் தையும் நாம் கவனிக்க வேண்டும் மரணம் இறுதியானது அல்ல. மீண்டும் இந்த உலகத்தில் நாம் உடம்பும் உயிருமாக வாழப் போகிறோம். குறிப்பிட்ட ஒரு வாழ்க்கையில் நியாயம் கிடைக்கவில்லை என்கிற உணர்வு நமக்கு இருக்கலாம். மறு பிறப்பு இந்த உணர்வு சரியல்ல என் தை உணர்த்துகிறது. நமக்கு நியாயம் கிடைக்காமல் போன தற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். முற்பிறப்பில் நாம் செய்த ஏதோ ஒரு காரியம் நான் அதற்குக் காரணம். இதை நாம் உணர்கின்றபோது இந்தப் பிறவியில் ஆக்கப்பூர்வமான நல்ல செயல்களைச் செய்து மீண்டும் நமக்கு அநீதி ஏற்படாமல் நம்மைக் காத்துக் கொள்ள முடியும். மறுபிறப்பு நம்பிக்கை, நம்முடைய வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு என்பதையும் உணர்த்துவதாக அமைந் துள்ளது. நாம் இப்போது அனுபவிக்கின்ற அனைத்தும் நம் முடைய செயல்களின் விளைவே ஆகும். அதனால் நமக்கு நேர்ந்துவிட்ட எதையும் கண்டு நாம் கலக்கமடையவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய துரதிஷ்டங்களுக்கும் ஓரு நோககம் இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு, நடப்பதை எல்லாம் மன நிறைவுடன் நாம் ஏற்றுக் கொண்டால், இறை வனின் நோக்கத்தையும் நாம் ஈடேற்றி விடமுடியும்.நாம் இப்போது உள்ள நிலைமைக்கு நம்முடைய முற் பிறப்புச் செயல்களே காரணம் என்று ஆகிவிடுகிற போது, இப்போது உள்ள வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது என்கிற உறுதி நமக்குத் தோன்றுகிறது. இதை எல்லாம் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள, முற் பிறப்பு பற்றிய தகவல் தலே நமக்கு உறவுகின்றன. கடந்த பிறப்புகளில் நாம் செய்த எந்தத்தேர்வுகள் இந்தப் பிறப்பில் நமக்குள்ள நிலைமைக்குக் காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தவறுகள் எலவ, நல்லவை எவை என்பதை நம்மால் அடை யாளங் கண்டு கொள்ள முடிகிறது. இதன் விளைவாக நம் முடைய எதிர் காலத்தை நாம் சுலபமாகி விடுகிறது. உருவாக்கிக் கொள்ளுவதுகீழே கொடுக்கப்பட்டுள்ள சில யோசனைகளைப் பரிசீலித்துப் பார்க்கலாம். கற்பனையாக சொல்லப்பட்டுள்ள விஷயங்களே அவை.கடந்த பிறப்புகளில் நாம் என்னவாக இருந்தோம் என்பதைவிட, என்ன செய்தோம் என்பதுதான் முக்கியமான விஷயமாகும். கடந்த பிறப்பில் நாம் என்ன பெயருடன் இருந்தோம் எங்கு வாழ்ந்தோம் என்று தெரிந்து கொள்ளு வது எல்லாம் நம்முடைய ஆர்வத்தைத் திருப்தி செய் வதற்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால் நம்முடைய திறமை, மனோபாவம் குறைபாடுகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போதுதான், இந்த வாழ்க்கை அமைந்துள்ளதற்கான முடியும்.. காரணத்தைப் புரித்து கொள்ள நூற்றாண்டில் நீங்கள் இங்கிலாந்தில் ஒரு பிரபுவாக இருந்தீர்கள் என்கிற தகவல் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அதைவிட நீங்கள் ஒரு வியா பாரியாக இருந்து, பணத்தை சரிவர நிர்வகிக்காததால் பெரியநஷ்டத்துக்கு உள்ளானீர்கள் என்கிற தகவல் உபயோகமான தாக இருக்கும்.சில உதாரணங்களைப் பார்க்கலாம். Example No 1 வேண்டும் என்கிற இந்தப் பிறவியில் ஒருவனுக்கு ஓவியம் வரைவதைப் பொழுதுபோக்கு ஆக்கிக் துடிப்பு இருப்பதாக வைத்துக் கொள்ள கொள்வோம். மறுபிறப்பில் நம்பிக்கை உடையவனாக அவன் இருந்து, ஏற்படுகின்ற கனவுகளை அந்தக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்கின்ற பயிற்சியில் ஓரளவுக்குத் தேறியவனாகவும் கொள்வோம், இவன் கண்ட வைத்துக் கனவுகளைப் பரிசீலிக்கும் போது, கடந்த பிறவியில் ஓவியக் கலைஞனாக இருந்திருக்க வேண்டும் என்கிறமுடிவுக்கு வருகிறான், தியானத்திலிருந்து கிடைக்கின்ற தகவல்கள் மூலமும் அதை உணர்கிறான். எனவே கடந்த பிறவியில் தான் ஓர் ஓவியக் கலைஞன் என்கிற முடிவுக்கு வருகிறான். இந்தத் தகவலை இப்போது உள்ள வாழ்க்கைக்கு அவன் எவ்வாறு பயன் படுத்தவது? ஒன்று அவனுக்குத் தெளிவாகிறது. ஓவியம் வரைவதை பொழுதுபோக்காகக் கொள்ளவேண்டும். என்கிற துடிப்பு இப்போது அவனுக்கு ஏன் ஏற்படுகிறது என்கிற காரணம் புரிகிறது. அது ஏதோ தற்செயலாக ஏறபட்ட ஆசை அல்ல என்பதை உணர்கிறான். தனக்கு ஏற்பட்ட துடிப்பை நடை முறையாக்கி ஓவியம் வரையும் திறமையை வளர்த்துக் கொள்வது பயன்தரக் கூடியது என்கிற முடிவுக்கு அவன் வரலாம். கடந்த பிறவியைக் பற்றிய அறிவு, இந்தப் பிறவியில் பயனுள்ள ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவனுக்கு உதவுகிறது.Example No 2 : ஒருவன் தன்னுடையவாழ்நாள் முழுவதும் தீராத நோயினால் அவஸ்தைப்படுவதாக வைத்துக் கொள்வோம். இவனுக்கு கடந்த பிறவிகளின் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள முடிவுதாக வைத்துக் கொள்வோம்.அந்தப் பிறவியில் மற்றவர்கள் செயல்பட முடியாதபடி சரியங்களை இவன் செய்திருப்பதாக அதிலிருந்து தெரிந்து கொள்வதாக வைத்துக் கொள்வோம். அந்தச் செயல்களின் விளைவுதான் இந்தப் பிறவியில் அவனுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நோய்க்குக் காரணம் என்பதை அவன் புரிந்து கொள்ள முடியும்.இந்த அறிவு இந்தப் பிறவியில் வாழ்க்கையில் புதிய கண்ணோட்டம் பெற அவனுக்கு உதவக் கூடும். நோய் பற்றி அவனுக்கு ஏற்பட்ட கசப்பு உணர்வைப் போக்கு வகற்கு அது உதவக்கூடும். வாழ்க்கையே தனக்கு எதிராக அமைந்துவிட்டது என்கிற எண்ணத்தில் இருந்து அவன் விடுபடக் கூடும்.இப்போது உள்ள வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துக்கும் அது உதவும். மற்றவர்களுக்கு இடையூறு உதவுகின்ற செய்யாமல் வாழ்க்கையினை வாழ வேண்டும் என்கிற எண்ணத்தினையும் தோற்றுவிக்கும்.இந்த மனிதன் தன்னுடைய கடந்த பிறப்பு அனுபவங் களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் கர்ம வினையால் விளைந்த சூழ்நிலையை மாற்றிக் கொண்டு விட முடியாது. தன்னுடைய மனோபாவத்தை மாற்றிக் கொள் ளாமல் தன்னுடைய எதிர்கால வாழ்க்கையினை சிறப்பாக ஆக்கிக் கொள்வதும் முடியாது. Example No 3  முற்பிறப்பை மறுபிறப்பை அபரிமித செல்வத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். ஒருத்தி தன்னுடைய இந்த வாழ்க்கையில் கடந்த பிறவியில் தன்னிடம் இருந்த செல்வத்தை எல்லாம் மற்றவர்களின் தேவைகளுக்கே பயன்படுத்தி இருப்பதை உணருகிறாள்.கடந்த வாழ்க்கையில் அவள் செய்த நல்ல காரியங்கள் இந்தப் பிறப்பில் அவளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஆகவே அவள் இந்தப் பிறப்பிலும் முற்பிறப்பின் நல்ல காரியங்களைத் என்கிற முடிவுக்கு வர வேண்டும். தொடர வேண்டும் இறைவனின் நோக் கத்தைப் பூர்த்தி செய்கின்ற வகையில் செல்வத்தைச் செலவிட்டால், அது செல்வத்தைப் பெருக்கவே உதவுகிறது என்பதை அவள் தெரிந்து கொள்ளுகிறாள். அதற்கு மாதாக செல்வத்தைச் சேமிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டால், கடந்த பிறவியின் தகவல்கள் அவளுக்குப் பயன்படவில்லை என்று அர்த்தம். பிறரின் நலனுக்காக செல்வத்தைச் செலவிடுவதனால் ஏழையாகி விடுவோமோ என்கிற அச்சத்திலிருந்து விடுபட கடந்த பிறவித் தகவல்கள் அவளுக்கு உதவுகின்றன. கடந்த பிறவியில் செய்த நல்ல காரியத்தைத் தொடர வேண்டும் என்கிற நம்பிக்கையினை அவள் பெறுவதற்கு முற்பிறவித் தகவல்கள் அவளுக்கு உதவுகின்றன. Example No 4: ஒருவன் இந்தப் பிறவியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மேல வெறுப்பு கொண்டவனாக இருக்கிறான். வெளிப்படை யாக அதை அவன் காட்டாவிட்டாலும், அப்படி ஓர் எண்ணத்தை மனதில் வைத்து இருக்கிறான். கடந்த பிறப்பு பற்றி அவன் அறிகின்றபோது குறிப்பிட்ட அந்த மதத்தினர்தன்னைக் கொடுமைப்படுத்தியதையும், அவர்களுடைய வன்முறைக்குப் பலியாகிப் போனதையும் உணர்கிறான்.இந்தத் தகவலை இந்தப் பிறவியில் அவன் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம். இந்தப் பிறவி யில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மீது தனக்குப் புரிகிறது. அறிவு கொண்டு ஆராய்ந்தால் முற்பிறப்பில் தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கொடுமைப்படுத்தினார்கள் என்பதற் காக, இந்தப் பிறப்பில் அவர்களை வெறுக்கும் மனோபாவம் சரியல்ல என்பது விளங்கும்.அவர்களை மன்னிப்பதுதான் நியாயமாக இருக்கும் என்கிற எண்ணம் அவனுக்குத் தோன்ற அந்தத் தகவல்கள் உதவவேண்டும். அந்த குறிப்பிட்ட மதத்தினரிடம் அன்பும் பாசமும் காட்டி அவன் தனது மன்னிக்கும் குணத்தை வெளிப்படுத்த வேண்டும்.மேலே சொன்ன நான்கு உதாரணங்களிலும் உள்ள பொதுத் தன்மை, கடந்த பிறப்பின் தகவல்களை இந்தப் பிறப்பினை மேலும் சிறட்பாக்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். கடந்த பிறப்பை மறுபடியும் நாம் வாழ முடியாது. இப்போது கிடைத்துள்ள பிறவியைத்தான் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.கடந்த பிறப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளு வதே ஒரு லட்சியமாக தகவல்களை இருந்துவிட முடியாது. அந்தத் நம்முடைய ஆன்ம வளர்ச்சிக்குப் பயன் படுத்துவதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். அந்தத் தகவல்கள் நம்முடைய இந்தப் பிறப்பைப் புரிந்து கொள்ளு வதற்குப் பயன்பட வேண்டும். எப்படி நல்ல காரியங்களைச் செய்வது வேண்டும். என்பதற்கான பாடத்தை அதிலிருந்து பெறவேண்டும்.  vinodhan,

இரசமணி செய்முறை

ரசமணி சுத்தி முறை ரசமணி சுத்தி முறை மூணு கிலோ உப்பை 100 கிராம் புரதத்தையும் கொண்டு சுத்தி செய்ய வேண்டும் பிறகு செங்கல் தூள் நவச்சாரம் படிகார தூள் மஞ்சள் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி மணி சுத்தம் செய்ய வேண்டும் சுத்தி செய்யும் பொழுது ஏழுவிதமான சட்டைகள் 1. நாகம் – நாகம் எனும் சட்டை கழற்றப்படாத இரசத்தைப் பயன்படுத்தும்போது அது மூலநோயை உண்டாக்கிவிடும். 2.வங்கம்-வங்க சட்டை கழற்றாத இரசம் பெருநோய் எனும் குஷ்ட நோயை ஏற்படுத்தும். 3. அக்கினி – அக்கின சட்டை கழற்றப்படாத இரசம் உடலில் தோல்நோயை உண்டுபண்ணும். 4. மலம் – மலம் என்னும் சட்டை கழற்றப்படாத பாதரசத்தைப் பயன்படுத்துமபோத அறிவாற்றல்பாதிப்பு ஞாபகமறதி எனும் நினைவாற்றல் குறைபாடு உருவாகும். 5. விடம் – விடம் என்ற சட்டை கழற்றப் பெறாத பாதரசத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த இரசம் மரணத்தை உண்டுபண்ணிவிடுமல். 6.கிரி – கிரிசட்டை கழற்றாத ரசம் சாட்டியத்தை உண்டாக்கும். 7. சபலம் – சபலச்சட்டை கழற்றப்படாத இரசம் உடலின் வீரியத்தில் குறைபாட்டை உண்டாக்கும். இந்த குறைபாடுகளை நீக்குவது உள்ளுக்கு உண்ணக்கூடிய இரச மருந்துகளுக்கான கட்டுப்பாடு என நினைக்க வேண்டாம். உடலில் மணியாக அணிந்து பயன்பெற நினைப்பவர்களுக்கும் இதுவே கட்டுப்பாடாகும். எட்டுவிதமான தோஷங்கள் 1.உண்பீனம் – தாங்க இயலாத வயிற்றுநோயினைத் தரக்கூடிய தோஷமாகும் இது. 2. கௌடில்யம் – தலைசம்பந்தமான நோய்கள், தலைக்குத்தல், ஒற்றைத்தலைவலி, மண்டையிடி போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும். 3. அனவர்த்தம்- மூளை சம்பந்தமான நோய்கள், பைத்தியம், மயக்கம், வாய்ப்பிதற்றல் போன்றவற்றை இந்த தோஷம் உருவாக்கும். 4.சண்டத்வம்-சன்னியினால் உண்டாகக்கூடிய உடற்கோளாறுகளை இந்த தோஷம் உண்டாக்கும். 5.பங்குத்வம் பெருநோய் என்றழைக்கப்படும் குஷ்டம் மற்றும் தீராத தாகம் போன்ற நோய்களை இந்த தோஷம் ஏற்படுத்தும். 6. சங்கரம் – பயம் படபடப்பு இவைகளை உண்டாக்கி மனபாதிப்புகளை உண்டாக்குதல் மற்றும் உடலிலுள்ள ஏழுவித தாதுக்களையும் பலமிழக்கச் செய்தல், வீரியத்தின் தன்மையை வீணாக்குதல் போன்றவற்றை இந்த தோஷம் செய்துவிடும். ஏழுவித தாதுக்குறைபாடுமல், வீரியத்தின் குறைபாடும் அவரது வாரிசு – வம்ச வளர்ச்சியை பாதிக்கும். அல்லது வாரிசு இல்லாத மலட்டுத்தன்மையை உருவாக்கிவிடும். இதைத்தான் பெரியோர் மறைமுகமாக சிவன் சொத்து குலநாசம் (வாரிசு நாசம்) என்று கூறினார்கள். 7. சமலத்வம் – பலவித சுரங்கள், கிறுகிறுப்பு போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும்.8.சவிவிஷத்வம் – உடல் நடுக்கம், உடல் இளைத்தல், இரைப்பு நோய் போன்றவற்றை இந்த தோஷம் ஏற்படுத்தும் ரசமணி சுத்தி முறை  ஒரு எளிய அனுபவ முறை. தேவையான ரசத்தை அது மூழ்கும் அளவிற்கு எருக்கம் பால் விட்டு மண் சட்டியில் போட்டு மூடி வைக்கவும். 3 நாட்கள் கழித்து துணியில் பிழிந்து பத்திரப்படுத்தவும். தேவைக்குஉபயோகப்படுத்தி கொள்ளலாம் ஒரு பலம் ரசத்தை பீங்கான் கிண்ணியில் போட்டு 1 கிராம் வீரம் பொடித்து போட்டு உப்பு கிணற்று தண்ணீர் 200 மில்லி விட்டு 3 நிமிடம் விரலால் துழாவவும். ரசத்தில் உள்ள கழிவு வெளியாகும். பிறகு நீரை வடித்து ரசத்தை துணியில் பிழிந்து எடுக்கவும்.   ரசமணி செய்முறை     பாதரசம் – 100 கிராம் நவச்சாரம் – 50 கிராம் மயில் துத்தம் (துருசு) – 300 கிராம் எலும்பிச்சம் பழம் -8 அலுமினிய  பாத்திரம் -1 முதலில் மயில் துத்தத்தையும் நவாச்சாரத்தையும் நன்கு நுனுக்கி பவுடராக்கி கொள்ளவும். பின் அவற்றை அலுமினிய டம்ளரில் போடவும். பின் அதில் சுத்தி செய்த பாதரசத்தை விடவும். அதன் பிறகு 3 எலும்பிச்சம் பழங்களையும் கொட்டை நீக்கி சாறு எடுத்து அந்த டம்பளரில் விடவும். பின் டம்பளரை அப்படியே வெளியே மண் தரையில் வைக்கவும். சுமார் 10-15 நிமிடத்தில் டம்ளரில் உள்ள சரக்குகள் உறவாகி நுரை, நுரையாக பொங்கும். அது சமயம் டம்பளரை தொட்டால் மிகவும் சூடாக இருக்கும். எனவே சுமார் அரை மணி நேரம் கழித்து சூடு ஆறியபின் டம்பளரைஎடுத்து அதன் உள்ளே இருக்கும் சரக்கை ஒரு மண் பாத்திரத்தில் கரண்டியால் வழித்து போடவும். டம்பளரின் உள்ளே அழுக்காக ஒட்டிக்கொண்டு இருக்கும் கலவையை நான்கு சுரண்டி எடுத்து மண் பாத்திரத்தில் போடவும்.இப்போது கலவை உள்ள மண் சட்டியில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு அலசி, அலசி அழுக்கை எல்லாம் நீக்கிவிட்டு பார்த்தால் உள்ளே ரசம் இறுகியும் இறுகாமலும் வெண்ணெய் போல் இருக்கும். இதனை அப்படியே ஒரு துணியில் கீழே ஒரு பாத்திரம் வைத்து பிழிய வேண்டும். இறுகிய இரசம் துணியிலும், இறுகாத்த இரசம் பாத்திரத்திலும் வந்து விழும். இறுகிய இரசத்தை மேலும் தண்ணீர் விட்டு கழுவ வெள்ளி போன்று பிரகாசிக்கும். இதை எந்த வடிவம் வேண்டுமோ அப்படி செய்து கொள்ளலாம். மணியாக உருட்ட வேண்டும் என்றால் தேவையான அளவில் உருட்டி கொள்ளலாம். அந்த நிலையிலேயே ஒரு தீ குச்சியை அதில் சொறுகி (ஓட்டை போடுவதற்கு) மண் சட்டியில் அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு அதில் மணியை மூழ்கும்படி போட்டு வைத்து விடவும். தண்ணீரில் கிடக்கும் மணி நேரம் ஆக ஆக இறுக ஆரம்பிக்கும். எனவே அடிக்கடி சில நிமிடங்களுக்கு ஒரு முறை மணியில் சொருகப்பட்ட தீக்குச்சியை அசைத்து விட வேண்டும். இல்லாவிட்டால் தீக்குச்சியை எடுக்க முடியாது. ஓரளவு மணி இறுகியபின் தீக்குச்சியை எடுத்து விட வேண்டும். பிறகு அதில் நூல் கோர்த்து அணியலாம். சுமார் 3 முதல் 5 மணி நேரம் மணி தண்ணீரில் கிடந்தால் இறுகிவிடும். 24 மணி நேரம் கிடந்தால் நல்லது. மணியின் நிறம் பளபளப்பு போய் சிமென்ட் நிறத்தில் இருக்கும். அதனை சோப்பு போட்டு நான்கு கழுவி சுத்தப்படுத்தியபின் ஒரு சொட்டு இரசத்தில் இந்த மணியை போட்டு பிரட்ட அதை மணி இழுத்து கொள்ளும். பின் மணியை துடைத்தால் நல்ல பளபளப்பாக இருக்கும்.  இரசம் உருட்ட வராமல் திடமாக இருந்தால் சிறிது பாதரச துளிகளை சேர்க்க வேண்டும். இளகளாக இருந்தால் துணியில் பிழிந்து கொள்ள வேண்டும்.   சாரணை ஏற்றும் முறை ஒரு ஊமத்தங்காயை கொண்டு வந்து அதனை அரைத்து உருண்டை செய்து அதன் உள்ளே ரசமணியை வைத்து களிமண் தடவப்பட்ட துணியல் மேற்ப்படி உருண்டையை, பொதிந்து 3 எருவில்(வரட்டி) புடம் போடவும். அதாவது ஒன்றரை எருவை பொடித்து போட்டு அதன்மேல் மேற்ப்படி உருண்டையை வைத்து மீதமுள்ள ஒன்றரை எருவை பொடித்து போட்டு நெருப்பிட்டு விடவும். ஆறியபின் மணியை எடுத்து முன் சொன்னபடி ஊமத்தங்காயில் வைத்து முன் போல புடம் போடவும். இவ்வாறு 3 முறை செய்யவும். புடம் கூட கூட பவர் அதிகரிக்கும். ஆனால் குறைந்தது 3 புடம் போட வேண்டும். பின் மணியை எடுத்து சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். பளபளப்பு வேண்டுமெனில் பச்சை ரசத்தை உறிஞ்ச செய்து வைத்து கொள்ளலாம். புடம் இடுவதற்கு பதிலாக சுருக்கு கொடுப்பது எளிது. இது தான் நல்ல முறையும் கூட. சில நேரங்களில் புடம் போடும் பொது நெருப்பு அதிகமாகிவிட்டால் ரசமணி சிவப்பாக பயனற்றதாகிவிடும். தேவையான மூலிகையை கொண்டு வந்து இடித்து சாறு சுமார் 300 மில்லி எடுத்து கொள்ளவும். ஒரு சிறிய மண் சட்டியை அடுப்பில் வைத்து அதில் 3 ஸ்பூன் அளவு சாறு விட்டு அதனுள் மணியை போட்டு அடுப்பில் தீ எரிக்கவும். சாறு வற்ற வற்ற மணியின் மீது கொஞ்சம் கொஞ்சமாக சாறை விட்டு வரவும். இவ்வாறு மேற்படி சாறு முழுவதும் காலியாகும் வரை விட்டு எடுத்து கொள்வது சுருக்கு கொடுத்தல் எனப்படும். (கீழாநெல்லி சுருக்கு கொடுக்க தெய்வ வசியம் செய்யும்) உருவேற்றும் முறை சாரணை ஏற்றிய ரசமணியை எதாவது இஷ்ட தெய்வத்தின் மந்திர உரு செய்து உருவேற்ற வேண்டும். வடக்கு முகமாக உட்கார்ந்து 1018 முதல் 1008 உரு தினம் 41 நாட்கள் (1) மண்டலம்)செய்யவேண்டும். ரசமணி செய்யும் காலங்களிலும் மந்திர உரு செய்யும் காலங்களிலும் பிரம்மச்சர்ய விரதத்துடன் இருந்து செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பலன் தரும்.பாதரசத்தில் இறை உருவங்கள் பாதரசத்தில் இறை உருவங்கள் குறிப்பாக ரச பிள்ளையார், ரசசிவலிங்கம் போன்ற உருவங்கள் செய்து நாம் வழிபட்டோம் என்றால் நாம் வணங்கும் பொது கூறப்படும் மந்திரங்களை அது கிரகித்து அதிக பவர் உள்ளதாக இருக்கும்.நமக்கு எந்த உருவம் எந்த சைசில் தேவையோ அந்த அளவில் லேத்தில் கொடுத்து டை செய்து வைத்து கொள்ளவேண்டும். இரசம் உருட்டும் பக்குவத்தில் இருக்கும் போது அதனை டையில் வைத்து அழுத்தி அப்படியே எடுத்து கொள்ளவேண்டும். டையில் எண்ணை தடவி கொண்டால் எடுக்க எளிதாக இருக்கும் கிரக தோஷங்களுக்கான ரசமணி ஜோதிட ரீதியாக உடல்நிலை, தனம், வாக்கு, சொத்து, நோய், கடன், தைர்யம், பூர்வ புண்ணியம், கூட்டுத்தொழில், திருமணம், பூர்வீக சொத்து, ஆன்மிகம் மேற்கண்டவற்றில் பிரச்சனை இருந்தால் ஜாதக ரீதியாக எந்த கிரகம் பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த கிரகத்திற்கு உண்டான மந்திரத்தை ரசமணிக்கு உருவேற்றி அணிந்து கொள்ளலாம். மந்திரங்களை 21 நாட்களுக்குள் உருவேற்றி முடிக்க வேண்டும்.கிரகங்களுக்கு உண்டான மந்திரங்கள் சூரியன் (1000 தடவை ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சஹ சூர்யாய நமஹ: சந்திரன் (2,000 தடவை): ஓம் ஷ்ராம் ஷ்ரீம் ஷ்ரூம் சஹ சந்திரமஸே நமஹ: செவ்வாய் (1000 தடவை) ஓம் க்ராம் க்ரீம் க்ரூம் சஹ பௌமாய நமஹ: புதன் 1000 தடவை) ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரூம் சஹ புதாய் நமஹ: குரு (11,000 தடவை. சஹ குருவே சுக்கிரன்(100 தடவை). ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் சஹ சுக்ராய நமஹ: சனி ( 1000 தடவை)ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ சனிஸ்சராய நமஹ: ராகு(1000 தடவை) ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராகவே நமஹ; கேது(1800 தடவை) ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ கேதுவே நமஹ: எடுத்துகாட்டாக குருவின் மந்திரத்தை ரசமணிக்கு சாரணை கொடுக்கின்றோம் என்றால் குருவிற்கு உரிய

A Yogi Science of Breath!

Life is absolutely dependent upon the act of breathing. “Breath is Life.” Differ as they may upon details of theory and terminology, the Oriental and the Occidental agree upon these fundamental principles. To breathe is to live, and without breath, there is no life. Not only are the higher animals dependent upon breath for life and health, but even the lower forms of animal life must breathe to live, and plant life is likewise dependent upon the air for continued existence. The infant draws in a long, deep breath, retains it for a moment to extract from it its life-giving properties, and then exhales it in a long wail, and lo! its life upon earth has begun. The old man gives a faint gasp, ceases to breathe, and life is over. From the first faint breath of the infant to the last gasp of the dying man, it is one long story of continued breathing. Life is but a series of breaths. Breathing may be considered the most important of all of the functions of the body, for, indeed, all the other functions depend upon it. A man may exist some time without eating; a shorter time without drinking; but without breathing his existence may be measured by a few minutes. And not only is Man dependent upon Breath for life, but he is largely dependent upon correct habits of breathing for continued vitality and freedom from disease. Intelligent control of our breathing power will lengthen our days upon the earth by giving us increased vitality and powers of resistance, and, on the other hand, unintelligent and careless breathing will tend to shorten our days, by decreasing our vitality and laying us open to disease. Man in his normal state had no need of instruction in breathing. Like the lower animal and the child, he breathed naturally and properly, as nature intended him to do, but civilization has changed him in this and other respects. He has contracted improper methods and attitudes of walking, standing, and sitting, which have robbed him of his birthright of natural and correct breathing. He has paid a high price for civilization. The savage, today, breathes naturally unless he has been contaminated by the habits of civilized man. The percentage of civilized men who breathe correctly is quite small, and the result is shown in contracted chests and stooping shoulders, and the terrible increase in diseases of the respiratory organs, including that dread monster, Consumption, “the white scourge.” Eminent authorities have stated that one generation of correct breathers would regenerate the race, and disease would be so rare as to be looked upon as a curiosity. Whether looked at from the standpoint of the Oriental or Occidental, the connection between correct breathing and health is readily seen and explained. The Occidental teachings show that physical health depends very materially upon correct breathing. The Oriental teachers not only admit that their Occidental brothers are right, but say that in addition to the physical benefit derived from correct habits of breathing, Man’s mental power, happiness, self-control, clear-sightedness, morals, and even his spiritual growth may be increased by an understanding of the “Science of Breath.” Whole schools of Oriental Philosophy have been founded upon this science, and this knowledge when grasped by the Western races, and by them put to the practical use which is their strong point, will work wonders among them. The theory of the East wedded to the practice of the West, will produce worthy offspring. This work will take up the Yogi “Science of Breath,” which includes not only all that is known to the Western physiologist and hygienist but the occult side of the subject as well. It not only points out the way to physical health along the lines of what Western scientists have termed “deep breathing, etc., but also goes into the less known phases of the subject, and shows how the Hindu Yogi controls his body, increasing his mental capacity, and develops the spiritual side of his nature by the “Science of Breath.” The Yogi practices exercises by which he attains control of his body, and is enabled to send to any organ or part an increased flow of vital force or “prana,” thereby strengthening and invigorating the part or organ. He knows all that his Western scientific brother knows about the physiological effect of correct breathing, but he also knows s that the air contains more than oxygen and hydrogen and nitrogen and that something more is accomplished than the mere oxygenating of the blood. He knows something about “prana,” of which his Western brother is ignorant, and he is fully aware of the nature and manner of handling that great principle of energy and is fully informed as to its effect upon the human body and mind. He knows that by rhythmical breathing one may bring himself into harmonious vibration with nature, and aid in the unfoldment of his latent powers. He knows that by controlled breathing he may not only cure disease in himself and others but also practically do away with fear and worry and the baser emotions. To teach these things is the object of this work. We will give in a few chapters concise explanations and instructions, which might be extended into volumes. We hope to awaken the minds of the Western world to the value of the Yogi “Science of Breath. Vinodhan, Courtecy  Yogi Science

மூன்றாவது விழியின் ரகசிய விஞ்ஞானம்

        நெற்றியில் சந்தனத் திலகமோ, குங்குமத் திலகமோ வைப்பது பற்றி உங்களிடம் பேசுவதற்கு முன்னால், இரண்டு நிகழ்ச்சிகளைச் சொல்லப் போகிறேன். புரிதலுக்கு இவை உதவும். இரண்டுமே வரலாற்று உண்மைகள்,1888ல் தென்னிந்தியாவில், ஓர் ஏழை பிராமணக் குடும்பத்தில் ராமானுஜம் என்பவர் பிறந்தார். பிற்காலத்தில் புகழ்பெற்ற கணிதமேதையாகத் திகழ்ந்தார். அவர் அதிகம் படிக்கவில்லை. என்றாலும் அவரது கணித மேதமை வித்தியாசமானதாக இருந்தது.நன்கு கணிதம் கற்ற அறிஞர் பலர் புகழ் பெற்று விளங்கியதற்குக் காரணம். அவர்களுடைய பயிற்சியும் நீண்டகாலம் அவர்களுக்குக் கிடைத்த நிபுணர்களின் வழிகாட்டலும்தான். ஆனால், ராமானுஜம் பள்ளி இறுதி வகுப்பு கூட முடிக்காதவர்! அவர் யாரிடம் பயிற்சியும் பெறவில்லை. எவருடைய வழிகாட்டலும் அவருக்குக் கிடைக்கவும் இல்லை. அப்படியிருந்தும் அவரைப்போல ஒரு கணித மேதை இருந்ததே இல்லையென்று கணித நிபுணர்கள் கூறுகிறார்கள்!         ஒரு எழுத்தர் வேலை வாங்குவதற்குக் கூட அவர் படாத பாடுபட வேண்டிஇருந்தது. ஆனால், அவரிடம் அபூர்வமான கணிதத்திறன் இருக்கும் செய்தி. விரைவில் பரவிவிட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற கணிதப்பேராசிரியர் ஹார்டிக்குக் கடிதம் எழுதச் சொல்லி யாரோ ஆலோசனை கூறினார்கள். அந்தக் காலத்தில் அவர் பிரபலமானவராகத் திகழ்ந்தவர். ராமானுஜம் கடிதம் எழுதுவதற்குப் பதிலாக இரண்டு தேற்றங்களுக்கு விடை கண்டு அவருக்கு அனுப்பி வைத்தார். அவை வடிவியல் தேற்றங்கள். அவற்றைப் பார்த்து வியந்த பேராசிரியர், ராமானுஜத்தை உடனே இங்கிலாந்திற்கு வருமாறு கடிதம் எழுதினார்! அவ்வளவு சிறிய வயதுக்காரரால் எப்படி அவற்றிற்கு விடை காண முடிந்தது என்று பேராசிரியர் திகைத்துப் போனார்.ஹார்டி ராமானுஜத்தை சந்தித்தபோது, ராமானுஜருக்கு முன், கணிதத் துறையில் தான் ஒரு குழந்தை என்று உணர்ந்தார். ராமானுஜத்தின் திறமை மனதின் ஆற்றலால் விளைந்ததன்று. அறிவாளிகள் மனதில் நிதானமாகவே யோசிக்கிறார்கள். ராமானுஜரோ சட்டெனச் சொல்லி விடுகிறார் கணக்கைக் கரும்பலகையில் எழுதியவுடனே அல்லது சொன்னவுடனே, சிந்திக்க இடைவெளி எடுத்துக் கொள்ளாமல் உடனே பதில் சொல்லிவிட அவரால் முடிந்தது!அது எப்படி என்பதை, எந்தக் கணித மேதையாலும் கணித்துச் சொல்லமுடியவில்லை. ராமானுஜம் போட்ட கணக்கைப் போட ஒரு பிரபல கணித மேதைக்கு ஆறுமணி நேரம் பிடித்தது அப்போதும் கூட தம் விடை சரியானதுதானா என்பதை அவரால் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. ராமானுஜம் சட்டெனச் சொன்னார்; சரியாகச் சொன்னார். அவர் மனதின் மூலமாக விடை கண்டதாகத் தெரியவில்லை. அவர் படித்தவரும்அல்ல மெட்ரிக் வகுப்பில் தோற்றுப் போனவர்!அவரது மேதமைக்கு வேறு புறக்காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. என்றாலும் அவர் கணிதத்தில் அதிமனிதனாக விளங்கினார். அவரது மனதைக் கடந்து, அதற்கு அப்பால், அவருக்குள் ஏதோ நிகழ்வதாகத் தோன்றியது. எலும்புருக்கி நோயால் இறந்தபோது அவருக்கு வயது முப்பத்தி ஆறு. உடல் நலம் மிகவும் கெட்டு, அவர் மருத்துவமனையில் படுத்திருந்தபோது, ஹார்டி தனது நண்பர்களான சில கணித மேதைகளுடன் அவரைப் பார்க்கச் சென்றார்.அவர் தம் காரை வெளியில் நிறுத்துவதை, ராமானுஜம் தம் அறையிலிருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். ஹார்டி அறைக்குள் வந்ததும், அவருடைய காரின் எண் மிகவும் வித்தியாசமானது என்று ராமானுஜம் சொன்னார். அந்த எண்ணில் நான்கு சிறப்பு அம்சங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். ராமானுஜம் காலமான பிறகு, அவர் சொன்னதைப் புரிந்து கொள்ள, பேராசிரியருக்கு நான்கு மாத காலம் பிடித்தது! அதுவும் மூன்றுஅம்சங்களைத்தான் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது! ராமானுஜம், தமது உயிலில், அந்த எண்களைப் பற்றி ஆராயுமாறு குறிப்பிட்டிருந்தார். ஹார்டி இறந்து இருபத்தியிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்பே, கணித மேதைகளுக்கு அந்த நான்காவது சிறப்பு அம்சம் விளங்கியது! ராமானுஜம் ஒரு கணிதச் சிக்கலைத் தீர்க்க முயலும் போதெல்லாம். அவரது கருவிழிகள் இரண்டும் மேலேறி புருவ நடுவை நோக்கி உயர்ந்தன! யோகத்தில் அந்த இடத்தை மூன்றாவது கண்ணின் இருப்பிடம் என்று குறிப்பிடுவார்கள். அந்த நெற்றிக்கண் தூண்டுதல் பெறுமானால், சில அபூர்வமான மண்டலங்கள் முழுவதுமாய் தெரிய ஆரம்பித்து விடும்.நாம் நமது வீட்டிற்குள்ளிருந்து. கதவின் சிறிய துளை வழியே வெளியே பார்த்துக் கொண்டிருக்கும்போது, திடீரெனக் கதவே திறந்து விட்டால். எவ்வாறு முழு வானமும் புலப்படுமோ அதுபோலத்தான் அது!         இரு புருவங்களுக்கும் நடுவில் ஒரு சிறு துளை இருக்கின்றது. அது எப்போதாவது திறக்கும், ராமானுஜத்திற்கு அப்படித்தான் திறந்தது. விழிகள் மேலேறும்போது அது நிகழ்ந்தது. அப்போது விடை கிடைத்தது, அது ஹார்டிக்கும் தெரியவில்லை; மற்ற மேலை நாட்டுக் கணித மேதைகளுக்கும் இதுவரை தெரியவில்லை. மூன்றாவது கண்ணுக்கும் குங்குமத் திலகம் இடுதலுக்கும் உள்ள தொடர்பை விளக்க, நான் இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். எட்கர் கேய்ஸ் என்பவர் 1945ல் இறந்தார். நாற்பது ஆண்டுகளுக்கு முன், அதாவது 1905ல் அவர் கடும் நோய்வாய்ப்பட்டார். நினைவிழந்து மூன்று நாட்கள் ‘கோமா’நிலையில் கிடந்தார்.அவரை நினைவிற்குத் திரும்பவும் கொண்டுவர எவ்வளவோ முயற்சிகள் செய்தும் முடியவில்லை. அவரது ஆழ்மனம் மீண்டும் மேல் தளத்திற்கு வராது என்று மருத்துவர்கள் முடிவு கட்டினார்கள். நம்பிக்கையிழந்த மருத்துவர்கள், மூன்றாம் நாள் மாலை, மரணம் நிச்சயம் என்று சொல்லி விட்டார்கள். நான்கு மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் உயிர் போய்விடும் என்று சொன்னார்கள். ஒரு வேளை அவர் சாகாமல் போனால், அது மரணத்தைவிட மோசம், மூளைஅழிந்து போகும். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களும் செல்களும்தொடர்பறுத்துக் கொண்டு சிதைந்துவிடும் என்றார்கள். ஆனால், கேய்ஸ் ‘கோமா’நிலையில் இருந்தபடியே பேசத் துவங்கினார்! மருத்துவர்களால் நம்பமுடியவில்லை! உடல் பிரக்ஞையற்றுக் கிடக்கிறது. ஆனால், அவர் பேசுகிறார்!தாம் மரத்தின் மேலிருந்து கீழே விழுந்து விட்டதாகவும் முதுகெலும்பு முறிந்துவிட்டதாகவும் அதனால்தான் நினைவு தப்பிவிட்டதாகவும் அவர் கூறினார்!ஆறு மணி நேரத்தில் தமக்குச் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் தாம் இறக்க நேரிடும் என்றும் கூறி, சில பச்சிலைகளின் பேரைச் சொல்லி, அதைச் சாறு பிழிந்து கொடுத்தால் பன்னிரண்டு மணி நேரத்தில் தாம் பிழைத்துக் கொள்ள முடியும் என்றும் கூறினார்!         அவர் சொன்ன மூலிகைகளின் பெயர்கள் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமே இல்லை. அவரது மூளை கெட ஆரம்பித்து விட்டது. அதனால் உளற ஆரம்பித்து விட்டார் என்றே மருத்துவர்கள் முதலில் நினைத்தார்கள். ஏனென்றால், அவர் குறிப்பிட்ட மூலிகைகள் அதுவரை அவரது நோய்க்கு மருந்தாக அறியப்படவே இல்லை.சிரமப்பட்டு தேடிக் கொண்டு வந்ததில் அவர் பிழைத்து விட்டார்! அவர் சொன்னபடியே பன்னிரண்டு மணி நேரத்தில்! அப்புறம் அவரிடம் அதைத் தெரிவித்தபோது, அப்படிச் சொன்ன நினைவே அவருக்கு இல்லை! அந்த மூலிகைகள் பெயர்கள் அவருக்குத் தெரிந்ததாகவே இல்லை. ஆனால், அன்று முதல் அவர் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டு விட்டது.பிற்காலத்தில், குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு அவர் இயற்கை வைத்தியம் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய வாழ்நாளில், அவ்வாறு முப்பதாயிரம் பேரை அவர் குணப்படுத்தினார்! அவர் சொன்னதெல்லாம் சரியான மருந்தாகவே இருந்தது! விதிவிலக்கேஇல்லாமல் அவர் அனைவரையும் குணப்படுத்தினார்! ஆனால், அது எப்படி என்றுஅவரால் விளக்க முடியவில்லை!நோயாளி வந்து தம் நோயைத் தெரிவித்தால், அவர் கண்களை மூடிக் கொள்வார். அவரது கருவிழிகள் புருவ நடுவிடம் நோக்கிப் போகும். அவை அவ்வாறு அங்கே நிலைத்திருக்கும்போது, அவர் எல்லாவற்றையும் மறந்து விடுவார். ஒரு கட்டத்திற்குப் பிறகுதான் அவர் நினைவு திரும்பும். அந்த நினைவு மறந்த நிலை வராமல், அவரால் மருந்தைக் குறிப்பிட முடியாது. அவரது வாழ்வில் இரண்டு முறை குறிப்பிட்ட சிகிச்சை, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதை நாம் நினைவில் கொள்வது நல்லது.அமெரிக்க நாட்டின் மிகப் பெரிய செல்வர்களில் ஒருவர் ரோத்சைல்ட்ஸ் அவருடைய குடும்பத்தில் ஒரு பெண் நீண்டகாலமாக நோய்வாய்ப் பட்டிருந்தாள். எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அவளை எட்கர் கேய்சிடம் அழைத்து வந்து காட்டினார்கள், தமது ஆழ்மன நிலையில் அவர் ஒரு மருந்தைக் குறிப்பிட்டார்.அவரது ஆழ்மன நிலையில் அவர் நினைவிழந்து காணப்பட்டாலும் அவர் முழுப்பிரக்ஞை நிலையில்தான் இருந்திருப்பார் என்றே விவரம் அறிந்தவர்கள்சொல்வார்கள். உண்மையில், அந்த ஆழ்மன நிலை, மூன்றாவது விழியைஅடைகிற வரைக்கும்தான் நிலைத்திருக்கும்.ரோத்சைல்ட்ஸ், கோடீஸ்வரர் என்பதால், எந்த மருந்து எங்கிருந்தாலும் அவரால் தருவித்துவிட முடியும். ஆனால், அவரால் அப்போது முடியவில்லை. அது எங்கு கிடைக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. அப்படியொரு மருந்துஉண்மையில் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருந்தது.         உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகைகளில் எல்லாம் விளம்பரம் செய்தார்கள். மூன்று வாரங்களுக்குப் பிறகு ஸ்வீடனிலிருந்து ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். தற்போது அப்படியொரு மருந்தே இல்லையென்றும். இருபது ஆண்டுகளுக்கு முன் தன் தந்தை அப்படியொரு மருந்தைக் கண்டுபிடித்தார் என்றும், ஆனால், அதை தயாரிக்கவே இல்லையென்றும், ஆனால், அதே பெயரில் அதை அரசாங்கத்தில் பதிவு செய்திருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்!தந்தையார் இறந்து விட்டதால், அவர் எழுதி வைத்திருந்த செய்முறையை அனுப்பி வைத்திருந்தார். அதன்படி மருந்து தயாரிக்கப்பட்டது. அந்தப் பெண்மணி பூரணகுணம் அடைந்தாள்!கண்டுபிடித்ததோடு நின்றுபோன, கடைக்கு வராத அந்த வெளிநாட்டு மருந்து பற்றி கேய்சுக்கு எப்படித் தெரிந்தது? இன்னொரு சமயம், அவர் ஒருவருக்கு இன்னொரு மருந்தைச் சொன்னார். ஆனால், அந்த மருந்து கிடைக்கவே இல்லை. ஓராண்டு கழிந்த பின்பு, அந்த மருந்து கிடைக்கும் என்று ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதற்கு முன்னால் அது ஆய்வுச் சாலைகளில் சோதனை நிலையில் இருந்திருக்கிறது. அதற்குப் பெயர்கூட வைக்கப்படவில்லை!         அதற்கு முன்னால், பிற்காலத்தில் வைக்கப்போகும் பெயரை கேய்ஸ் எவ்வாறு கூறினார்? எப்படியோ, அந்த மருந்து கொடுக்கப்பட்டு நோயாளியும் குணமானார்!சில சமயங்களில் அவர் குறிப்பிடும் மருந்து கிடைக்காமல் நோயாளிகள் இறந்திருக்கிறார்கள், ஏன் அப்படி என்று அவரைக் கேட்டபோது, “நான் என்ன செய்யட்டும்? நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று சொன்னார்.“நான் நினைவிழந்த நிலையில் இருக்கும்போது, அந்த மருந்துகளின் பெயர்களைப் பார்ப்பது யார். அவற்றைச் சொன்னது யார் என்றே எனக்குத் தெரியாது. எனக்குள் அப்படிச் சொல்லும் ஆளுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை” என்று அவர் கூறினார்.ஒன்று மட்டும் உறுதி. அவர் அந்த நிலையில் இருந்து பேசும்போது அவரது கருவிழிகள் மேலே ஏறி நின்றன. நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, நமது கருவிழிகள் மேலேதான் போய் விடுகின்றன. உறக்கம் எவ்வளவு ஆழமோ அந்த அளவு கருமணிகள் மேலே போகும். உளவியல் அறிஞர்கள், உறக்கம் பற்றி

ஏலியன் மர்மங்கள்!

                ஏலியன் ஆய்வாளர்கள் பலர், அவைகள் நம்மை உயர் தொழில் நுட்பம் வாயிலாகவும் தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்கள் என்கிறார்கள்.ஆண்டு தோறும் பல காஸ்மிக் சிக்னல்களை நாம் பெற்று கொண்டு இருக்கின்றோம். பிக்பாங் நேரத்தில் உண்டான சிக்னல்கள் கூட இன்றைய சாதாரண தொலைகாட்சி மூலம் இதற்கு கிரகிக்கப்படுகிறது. டி.வியில் திடீரென தோன்றும் சில புள்ளிகள் ஹிஸ் சப்தம் அதுதான். ஆனால் இப்படிப்பட்ட பல காஸ்மிக் சிக்னல்களில் பல அடையாளம் தெரியாத இனம் காண முடியாதவை. சாதாரணமாக நட்சத்திரங்களிலோ, கருந்துளையிலோ உண்டாகாத அந்த மர்ம சிக்னல்கள் எங்கிருந்து எப்படி வருகிறது என்பதை அறிய முடியாதவை. சிலர் அதை இணை பிரபஞ்சத்தில் இருந்து வருகின்றன என்கிறார்கள். சிலர் அதை வேற்று கிரகவாசிகளின் சிக்னல் என்கிறார்கள்.அப்படிப்பட்ட சந்தேக சிக்னல்களில், சங்கேத சிக்னல் ஒன்றை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதுதான் 1977-இல் பதிவு செய்யப்பட்ட WOW சிக்னல். நாள் முழுவதும் பல வகையான கண்ணுக்கு தெரியாத கதிர்களை ரேடியோ சிக்னல்களை பூமி உள்வாங்கி கொண்டு இருக்கிறது. அப்படிபட்டதில் ஏதாவது பூமி சாராத அல்லது விசித்திரமான வேற்றுகிரக சிக்னல்கள் வந்தால் அதை பதிவு செய்ய அமைக்கப்பட்டதுதான் ஓஹியோ மாநில பல்கலை கழகத்தின் Big ear radio telescope. அது குறிப்பாக 1420 Mega hertz அதிர்வெண்ணில் வரும் சிக்னல்களை உள்வாங்கும்படி தயார் செய்யப்பட்ட ரேடியோ டெலஸ்கோப் ஆகும். (1420 Mhz என்பது ஹைட்ரஜன் வெளியிடும் அதிர்வெண் ஆகும். மேலும் நமக்கு தெரியும் பிரபஞ்சம் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பது ஹைட்ரஜன் தான் என்று.) 1977-ஆம்வருடம், ஆகஸ்ட், 15-இல் ஜெர்ரி இஹாமன் என்பவர் அங்கே ஒரு ரேடியோ சிக்னலை பதிவு செய்தார். அது மிக வலிமையான சிக்னலாக 72 வினாடிகள் நீடித்தது. அதை டீகோட் செய்து சாதாரண எழுத்தாக மாற்றி பார்த்த போது அது “wow” என ஆங்கிலத்தில் கிடைத்தது. மேலே இருந்து நமக்கு யாருப்பா ‘வாவ்’ன்னு சிக்னல் அனுப்பறது என்று விஞ்ஞானிகள் சுறுசுறுப்பானார்கள். இது ஏதோ எலியன் அனுப்பிய சிக்னல்தான் என்றார்கள். 40 ஆண்டுகள் கழித்து அதை ஆராய்ந்த குழு ஒன்று அதற்கான விடையை கண்டுபிடித்து விட்டதாக சொன்னார்கள். அந்த அலைவரிசையில் அந்த சிக்னலை வெளியிட்டது ஒரு வால் நட்சத்திரம் என்றார்கள். அதை இரண்டு மூன்று முறை மறுபதிவு செய்து உறுதி செய்தார்கள். ஆனால் மிக சரியாக அந்த வால் நட்சத்திரம் wow என்று ஏன் சிக்னல் கொடுத்தது. மேலும் அன்றைய தினம் அது அதற்கு மேல் ஏன் மீண்டும் சிக்னலை கொடுக்கவில்லை போன்ற கேள்விக்கு அவர்களிடம் சரியான விடை இல்லை. ஏலியன் நமக்கு சிக்னல் கொடுப்பது இருக்கட்டும். நாம்ஒரு பக்கம் ஏலியனுக்கு சிக்னல் கொடுத்து கொண்டிருக்கிறோம் தெரியுமா? பூமியில் இருந்து இது வரை மிக அதிக தொலைவு சென்ற மனிதனால் படைக்கப்பட்ட பொருள் என்ற பெருமை கொண்ட வாயெஜெர் என்ற விண்கலத்தில் நாம் ஒரு காரியத்தை செய்து வைத்து இருக்கின்றோம். அதில் உள்ள தங்க டிஸ்கில் 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும்படி சிக்னலை வைத்து இருக்கிறோம். மேலும் அதில் பூமியில் உள்ள பல வகை ஒலிகள் உதாரணமாக கடல் அலை சப்தம், பறவை சப்தம், குழந்தை அழும் குரல் அமெரிக்க ப்ரெஸிடெண்ட் பேச்சு இப்படி பலதையும் பதிவு செய்து ‘கேட்க காது உடையவன் கேட்கட்டும்’ என்ற பைபிள் வசனம் போல இருக்கின்றோம். இருட்டில் கல்லெறியும் முயற்சி தான் இது அநாமத்தாக என்றாலும் நம்மை போல ஏலியனை தேடும் ஏலியன் யாராவது அதை பார்க்கும் பட்சத்தில், கேட்கும் பட்சத்தில் நம்மை தொடர்பு கொள்வான் என்றுதான் இந்த ஏற்பாடு.                 ஏலியன் பற்றி பேசும் போது வான் டேனிகன் என்ற ஆய்வாளரை பற்றி வெகு நிச்சயமாக நாம் குறிப்பிட்டாக வேண்டும். ஆதி காலத்தில் பூமியில் ஏலியன்கள் நடமாட்டமும், ஆதிக்கமும் இருந்தது என்று நம்பிய அவர் அது சார்ந்த ஆய்வுகளில் இறங்கிய போது பல அதிசயதக்க உண்மைகளை கண்டு கொண்டார். குறிப்பாக ஏலியன்கள் பூமிக்கு வந்ததை பின் வாய் அடைத்து போனார்கள்.                நம் நாட்டில் நாம் பண்டைய வரலாறை செப்பேடுகளில் கல்வெட்டில் தேடுவது போல் அவர் ஏலியன் வருகையை பண்டைய காலத்து கட்டிடங்கள், கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் புராணங்களில் தேடினார். அதுவும் உலகம் முழுவதும் அதில் அவர் கண்டு கொண்ட ஒரு விஷயம் மத வாதிகளிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. மத நூல்களில் சொல்லப்பட்ட தேவதூதர்கள் எல்லாம் ஏலியன் களாக இருக்கலாம் என்றார். காரணம் அவர் உலகம் எங்கும் உள்ள பண்டைய மத நூல்கள், புராணங்களில் ஒரு ஒற்றுமையை கவனித்தார்.அவை எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக ஏலியன் வருகையை பற்றிய தகவல் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். அவைகள் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப் பட்டு இருந்தன. சிலதில் தேவர்கள் என்று, சிலதில் கந்தர்வர்கள் என்று, சிலதில் தேவதைகள் என்று இருந்தன.அவை அனைத்திலும் நிறைய ஒற்றுமை இருப்பதைக் கண்டார். அவர்கள் மந்திரம் போட்டது போல சூப்பர்மேன் போல பறப்பது இல்லை. அவர்கள் வந்து செல்ல நெருப்பு கக்கும் வாகனம் தேவைப்பட்டது. அவைகள் வானத்தில் இருந்து வரும் போது மக்கள் பார்த்த வர்ணனைகள் நெருப்பு கக்கி செல்லும் விதம் இன்ஜின் போல நெருப்பு உமிழும் காட்சி இவைகளை பார்த்து அவருக்கு ஒன்று தோன்றியது. பறந்து வந்து செல்ல இவைகள் எல்லாம் கடவுளுக்கு அவசியமே இல்லையே. பிறகு ஆச்சர்யமாக தான் கண்டு கொண்டதை உலகிற்கு உரக்கச் சொன்னார்.”அட வந்தது கடவுள் எல்லாம் இல்லை. அதுங்க எல்லாம் வேற்றுகிரகவாசிகள்.” அவர் பல மதவாதிகளின் சாபத்திற்கு ஆளானாலும் அவர் ஒரு நாத்திகர் அல்ல. மிகவும் கடவுள் நம்பிக்கைகொண்ட தவறாமல் பூஜை செய்யும் ஒரு ஆள் அவர்.அவர் சொன்னது எல்லாம் கடவுளை பற்றி அல்ல. கடவுள் தூதர்கள் என்று நாம் அழைப்பது வேற்றுகிரக வாசிகளை என்பதைதான் அவர் சொன்னார். இதைக் குறித்து ஆராய்ந்து பல ஆதாரங்களை கொண்டு 1968-இல் அவர் எழுதிய கடவுளின் ரதம் (Chariots of the God) புத்தகம் பல நபர்களை இந்த துறையில் ஆர்வம் கொள்ள செய்தது.அதன் பிறகு பல வருடம் இந்த துறையில் கொஞ்சம் ஆழமாக அவர் இறங்கி தேடிய தேடல் அதிர்ச்சிகரமான பல உண்மைகளை கொண்டு வந்தது. அவர் பல இடங்களில் இக்காலத்தாலும் கட்டமுடியாத தொழில் நுட்பத்தை பயன் படுத்தி கட்டப்பட்ட பல கட்டிட அமைப்பை கண்டார். அதில் சில ராட்சச எடை கொண்ட பாறைகள் சில வெட்ட முடியாத லேசர் வெட்டுகள், பண்டைய காலத்தில் இங்கிருந்த தொழில் நுட்பத்திற்கு சம்பந்தப்படாமல் இருப்பதைக் கண்டார். உதாரணமாக ஒரு இடத்தில் ஏதோ பிளாஸ்டிக்கை உருக்கி வைத்து ஒட்டியதை போல பாறைகளை சூடாக்கி ஒட்டி ஒரு சுவர் செய்யப்பட்டிருப்பதை பார்த்தார். அவ்வளவு டிகிரி சூட்டை உண்டாக்கும் கருவி அன்றைய காலத்தில் எப்படி வந்தது? மாயன் கல்லறை ஒன்றில் ஒருவரின் கல்லறையில் செதுக்கி வரையப்பட்டிருந்த சித்திரம் ஒன்று அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதில் அங்கே பண்டைய காலத்தில் வருகை புரிந்த அவர், ராக்கெட் மாதிரி இயந்திரத்தை ஓட்டி வானத்திற்கு செல்வது செதுக்கப்பட்டிருந்தது.(மூக்கில் ஆக்ஸிஜன் கொடுப்பது கூட) இதுவரை சொன்னவை வெறும் மாதிரிகள் தான். இப்படிப்பட்ட பல ஆதாரங்கள் அவரிடம் எக்கச்சக்கமாக உண்டு. கட்டிடத்தை மனிதன் கட்டினான் என்பதை அவர்மறுக்கவில்லை. ஆனால், ஏலியன் தனது அறிவை அவர்களுக்கு கொடுத்து கட்ட வைத்தது என்றார். பலகோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் மந்தமான வளர்ச்சி கொண்ட உயிரினம் சில ஆயிரம் ஆண்டுகளில் இவ்வளவு அறிவுத்திறனுடன் வானில் பயணம் செல்லும் அளவு வளர்ந்தது தற்செயலானது அல்ல என்கிறார் அவர். அவர் பார்வையில் ஏலியன்கள், வில்லன்கள் அல்ல நமக்கு அறிவை பரிசளித்த தேவதூதர்கள்.இந்த ஏலியன்கள் உண்மையில் பார்க்க எப்ப இருக்கும் என்று என்றாவது யோசித்தது உண்டா. ஹாலிவுட் புண்ணியத்தில் பலவகை ஏலியன்களை நாம் கற்பனை செய்ய மூடிகிறது. ‘பிரடேட்டர்’ படத்தின் ஏலியன் ஒருவகை என்றால், ஏலியன் படத்தின் ஏலியன் ஒரு வகை. அவதார், எட்ஜ் ஆப் டுமாரோ, ஜான்கார்டர், டிரான்ஸ்பார்மர், சூப்பர்மேன், அண்டர் தி ஸ்கின், இன்டிபெண்டஸ்டே. மென் ஸ்வார் வார். ப்ரோமித்தியஸ், ஸ்பெசியஸ், தி அரைவல், ரிட்டிக், இப்படி பல கணக்கற்ற படங்களில் தங்கள் கற்பனைக்கேற்ற ஏலியன்கள் பல வடிவங்களில் காட்டப் பட்டுள்ளன.ஆனால் உண்மையில் அவைகள் படத்தில் காட்டப் படுவதை போல மனிதனை ஒத்த சாயலில் தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. அது நம் வசதிக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள். பொதுவாக ஏலியன் என்று சொன்னால் நமது கற்பனைக்கு வருவது சாம்பல் நிற அந்த குள்ளர்கள் தான். அதற்கு காரணம் உலகமெங்கும் இப்படிப்பட்டவர்களை பார்த்ததாக மக்கள் சொல்வதுதான்.தான் வணங்கும் கடவுளை மனிதன் தனது சாயலில் செய்து கொண்டது போல ஏலியனையும் அவன் தனது சாயலிலேயே கற்பனை செய்து கொண்டான் (அல்லது நம்மை தொடர்பு கொள்ள வசதியாக அவர்கள் நம்மை போல தற்காலிக உருமாற்றத்துடன் வந்து போகிறார்களா?) ஏலியன் தோற்றம் குறித்து பெரும் ஆய்வாளர்கள் கருத்து என்ன தெரியுமா? ஒரு வேற்று கிரகவாசி எப்படி வேண்டுமானாலும் இருப்பான். மனித வடிவத்தில் அல்லது வடிவமே இல்லாமல் அல்லது அவ்வப்போது வடிவம் மாறக்கூடிய அல்லது பாக்டீரியாவை விட சின்னதாக அல்லது நாம் நேரடியாக உணரமுடியாத ரேடியோ அலைகள் போல அலை வடிவத்தில். யோசித்து பாருங்கள் நம்மை சுற்றி உள்ள பல்வேறு வகை அலைகளை நாம் தகுந்த கருவிகள் இல்லாமல் உணர முடிவது இல்லை. அதே போல நம்மால் உணர முடியாத ஏன் இன்னும் அவனை உணரும் கருவிகள் கண்டு பிடிக்கபடாதபடி ஒரு பரிமாணத்தில் கூட வேற்று கிரகத்தினர் இருக்கலாம்.பொதுவாக விஞ்ஞானிகள் அதிகம் பரிந்துரைப்பது பாக்டிரியா போன்ற நுண்ணுயிர் ஏலியன்களின் இருப்பை தான். அதுவும் அவைகளை தேடி அதிக தூரம் செல்ல

மர்மங்கள் நிறைந்த ஏரியா 51 வேற்றுகிரகவாசிகள் வசிக்கிறார்களா?

              உலகின் மிகவும் மர்மம் நிறைந்த பகுதியாக அறியப்படும் ஏரியா 51. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி டிரெண்ட் ஆவது வழக்கமான டிரெண்ட் ஆகி விட்டது. அங்கு என்னதான் நடக்கிறது. என் டிரெண்ட் ஆனது போன்ற பல கேள்விகளுக்கு கூகுள் தேடுதளத்தில் கிடைத்த சில பகுதிகள் இங்கு.  ஏரியா 51′ பகுதியின் உண்மை பெயர். ‘நெவேடா டெஸ்ட் அண்டு டிரெய்னிங்ரேன்ஜ்’ இது அமெரிக்காவின் நெவேடா பகுதியில் அமைந்துள்ளது. இரண்டாம் உலக போரின் போது இங்கு அணு ஆயுத சோதனை நடத்தப் பட்டதாம்.அமெரிக்காவின் ஆயுத சோதனைகள், உளவு விமானங்களின் சோதனை ஓட்டம், புதுமையான ஆயுத தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகள் போன்றவை இங்கு தான் நடைபெறுகிறது. அதற்காகவே இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பலத்த பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். பாலைவன பகுதி போல நீளும் நிலப்பகுதியை வளைத்து அதில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் இங்கு நடத்தப் படுகின்றன. அதனால் ஆராய்ச்சிக் கூடங்களையும், நில அமைப்பையும் குறிப்பிட இங்கு 1 முதல் 30 வரையிலான பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு ‘ஏரியா 1’ பகுதியில் புதுரக போர் விமான தயாரிப்பு நடக்கிறது.                         ஏரியா 51 எங்கே இருக்கிறது? லாஸ் வேகாஸில் இருந்து வடமேற்கே 80 மைல்கள் தொலைவில் நிவேடாவில் உள்ள ராணுவப் பயிற்சி முகாம் தான் ஏரியா 51 எனப்படுகிறது. நிவேடா பரிசோதனை மற்றும் பயிற்சி வளாகம் என்று அதை அமெரிக்க அரசு குறிப்பிடுகிறது. அது பரவலான எட்வர்ட்ஸ் விமானப் படை தளத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பல ராணுவ முகாம்களைப் போல, இதன் முதன்மையான பயன்பாடு பற்றிய தகவல்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. Facebook  Comment  உள்ளதைப் போல அந்த இடத்தில் அத்துமீறி நுழைவது சிரமமான காரியம் – அது மக்களுக்குத் தடை செய்யப்பட்ட பகுதி. வெளி வளாகத்தில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி இல்லாமல், அந்தப் பகுதிக்கு மேலே உள்ள வான்வெளியில், நுழைவதும் கஷ்டமான காரியம். அதற்கு அனுமதி தரப்படுவது கிடையாது.   ஏரியா 2′ பகுதியில் ஆயுத தயாரிப்பு நடக்கிறது என பெயர் பலகைகளை கொண்டு ஆராய்ச்சிக் கூடங்களையும் ஆராய்ச்சிகளையும் குறிப்பிட்டு பேசுவார்கள். அந்த வரிசையில் ‘ஏரியா 15’ பகுதியில் தான் மர்மமான விஷயங்களை ஆராய்வதற்கான கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அங்குதான் மர்ம முடிச்சுகளில் மிக முக்கியமான தான ஏலியன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளும் நடக்கிறது. அதனால் தான் ‘ஏரியா 15’ பகுதி பிரபலமானது. ‘ஏரியா 15’ என்று அழைக்கப்பட்ட பகுதி பின்னாளில் ஏரியா 51 என மாறியது. ஏரியா 51’ பகுதியில் கண்ணுக்கு தெரியும். ஆய்வுக் கூடங்களை விட மண்ணுக்குள் மறைந்திருக்கும் ஆய்வுக் கூடங்களே அதிகம். அதனால்தான் ‘ஏரியா 51’ வைரல் விஷயத்தில் பட்டையை கிளப்புகிறது. ‘ஏரியா 51’ பற்றிய பரபரப்பு அடிக்கடி காட்டுத் தீ போல பரவுவதற்கு பாப்லஸார் என்ற ஆராய்ச்சியாளர் ஒரு காரணம். ஏனெனில் பாப்லஸார் 1989-ஆம் ஆண்டு முதல் ‘ஏரியா 51’ பகுதியின் எஸ்-4 சோதனை பிரிவில் பணியாற்றி வருவதாக வும் இவரே ‘ஏரியா 51’ பகுதியில் நடக்கும் ஏலியன் ஆராய்ச்சிகளுக்கு வகிக்கிறார். என்றும்கூறப்படுகிறது. இவர் வெளியிடும் ஆய்வு முடிவுகள் தான் ஏரியா 51′-யை பரபரப்பாக்குகிறது. பாப்லஸார் ‘ஏரியா 51’ பகுதியில் சில ஏலியன்களை பிடித்து வைத்து ஆய்வுகளை மேற்கொள்வதாக வெகு காலமாக நம்பப்படுகிறது. அதற்கு சான்றாக ஏலியன் தொடர்பான பல உண்மை தகவல்களை பாப்லஸார் வெளியிட்டுள்ளார். யூ.எப்.ஓ. எனப்படும் பறக்கும் தட்டு தொழில்நுட்பம், பறக்கும் தட்டிற்கான எரிபொருள் தொழில் நுட்பம்,ஏலியன்களின் கிரகம் பற்றிய தகவல் என பலவற்றை ஆய்வு முடிவுகளாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக 2003-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உன்னுன்பென்டியம் தனிமத்தை 1989-ஆம் ஆண்டே கணித்து கூறிவிட்டார். உன்னுன்பென்டியம் தான் ஏலியன் தொழில்நுட்பத்தின் பலம் என்றும் கூறியிருந்தார். ‘ஏரியா 51’ பகுதியில் ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களது விவரங்களை வெளியிட அமெரிக்கா அரசாங்கம் தயங்குகிறது. அங்கு பணியாற்றுபவர்களுக்கென லாஸ்வேகாஸில் இருந்து தினமும் 20 சில விமானங்கள் ‘ஏரியா 51’ பகுதிக்கு சென்று வருவதாகவும் அவைகளில் 1000 ஊழியர்கள் அங்கு சென்று வருவதாகவும் கூறப்படுகின்றது. வெள்ளை நிற விமானத்தின் நடுவே சிவப்பு கோடு இருக்கும். ‘ஜேனெட்’ என அழைக்கப்படும். இந்த விமானம் மட்டும்தான் ‘ஏரியா 51’ பகுதியின் வானில் பறக்க அனுமதிக்கப் படுகின்றது. ராணுவ விமானங்களுக்கு கூட இங்கு பறக்க குறிப்பிடத்தக்கது. என்பதும் அனுமதி கிடையாது ஏரியா 51 எப்படி இருக்கும்?         விமானப்படை தளத்திற்குச் செல்லவில்லை. ஆனால், பாலைவனத்தில் எவ்வளவு தொலைவுக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு தொலைவு செல்வோம், நம் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என நினைத்துப் பயணித்தோம் – விலகி இருக்குமாறு அமெரிக்க ராணுவத்தின் மிரட்டும் வகையிலான எச்சரிக்கைகளை மட்டுமே நாங்கள் பார்க்க முடிந்தது” என்று சினியட் கர்வன் தெரிவித்தார்.அவர் முன்பு ரேடியோ 1 நியூஸ்பீட் -ல் பொழுதுபோக்குப் பிரிவு செய்தியாளராக இருந்தார். இந்தக் கட்டுரை தொடர்பான விஷயங்களைக் கையாண்டதை அடுத்து, எங்களுடைய முதன்மையான வேற்றுகிரகவாசி செய்தியாளராகிவிட்டார். 2014ல் சாலைப் பயணமாக அவர் ஏரியா 51-க்குச் சென்றார் உயர் ரகசியத்தன்மை உள்ள அந்த ராணுவ முகாமை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுமே வேற்றுகிரகம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன.” அங்கு `பூமிவாசிகளை வரவேற்கிறோம்’ என்ற அறிவிப்புப் பலகை, நெடுஞ்சாலையில் இருந்தது பெட்ரோல் நிலையமும் வேற்றுகிரகத்தைப் போலவே அமைக்கப்பட்டிருந்தது. அலுவலர்களும் அதுபோலவே இருந்தனர். கவுண்டரில் இருந்த பெண்மணியும் போரடித்து இருப்பவரைப் போல இருந்தார்.” அங்கு சுற்றியிருந்த சில கட்டடங்களின் சுவர்களில் கார்ட்டூன் வேறுகிரகவாசிகள், அடையாளம் தெரியாத பறக்கும் வாகனங்களின் படங்கள் இருந்தன. அவற்றில் பிரபலமான லிட்டில் ஏரியன் மோட்டலும் ஒன்று.”புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தூண்டும் நிறைய அம்சங்கள் இருந்தன; ஆனால் ஏரியா 51 ன் பாதுகாப்பான வாயிலில் இருந்து நாங்கள் கண்காணிக்கப்படுகிறோமா என்று எங்களுக்கு சிறிது அச்சம் இருந்தது மர்மமான ஒன்று இருக்கும்போது அதைச் சுற்றி பல கற்பனைகளும் கதைகளும் கட்டி விடப்படும். அமெரிக்க ராணுவம் இந்த இடத்தில் ரகசிய ஆயுத ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாகவும், அமெரிக்கா அரசு வேற்றுகிரகவாசிகள் குறித்த சோதனைகளை ரகசியமாக செய்து வருவதாகவும், வேற்றுகிரக UFO-க்கள் வந்து இறங்குவதாகவும் பல மர்மக் கதைகள் இதைச் சுற்றி உள்ளன.24 ஜூலை 1952-ம் ஆண்டு இரண்டு விமானப்படை அதிகாரிகள் நெவாடாவில் கார்சன் சிங்க் என்னும் பகுதியில் மூன்று டெல்ட்டா விங் எனும் அசாதாரண விமானம் V வடிவத்தில் வானில் பறப்பதைப் பார்த்தாகச் சொல்லி பரபரப்பை பற்றவைத்தார்கள். அமெரிக்க கடற்படை வீடியோ ஒன்றில் வானில் சுழலும் ஒரு வட்டவடிவ UFO ஒன்றும் பதிவாகியுள்ளது. இது மட்டுமல்லாது ஏரியா 51-க்கு அருகில் பொதுமக்கள் பார்த்த பல UFOக்கள் பற்றிய தகவல்கள் கூட பதிவாகி உள்ளன. எது எவ்வாறாயினும் இதுவரை இந்த இடம் பற்றிய எந்த ஓர் அதிகாரப்பூர்வமான தகவல்களும் அமெரிக்க அரசால் வெளியிடப்படவில்லை.                                                                                                                                                                                                              ஏரியா 51’யை எங்கிருந்து பார்க்க முடியும் தெரியுமா? பாதுகாக்கப்பட்ட பகுதியான ‘ஏரியா 51’யை பொது மக்கள் பார்க்க முடியும். எங்கிருந்து தெரியுமா? வெகு தூரத்தில் நின்று ‘ஏரியா 51’ பகுதியில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ‘டிகாபூ பீக்’ பகுதியில் நின்று தொலை நோக்கி வழியே பார்க்கலாம். இதற்கு முன்பாக ‘வைட்ட சைட்ஸ்’ மற்றும் ‘ப்ரீடம் ரிட்ஜ்’ என இரு இடங்களில் இருந்து’ஏரியா 51′ பகுதியை பார்க்க முடிந்தது. பின்னாளில் இவை இரண்டும் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் இன்றைய இளைஞர்கள் ‘ஏரியா 51’ பகுதியின் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளனர். அங்கு என்ன உள்ளது. அப்படி அங்கு என்னதான் ஆராய்ச்சி நடத்தப்படுகிறது என்பதை தெளிவுப்பகுத்தி கொள்ள பல வழிகளில் எண்ணத்தோடு ‘ஏரியா 51’ பகுதியை நெருங்குவது அவ்வளவு சுலபம் இல்லை. அங்கு அமெரிக்கா வெள்ளை மாளிகையை விடவும் இரு மடங்கு பாதுகாப்பு போடப் பட்டிருக்கிறது ஒரு ஈ எறும்புக்கு கூட உள்ளே போக அனுமதி கிடையாது. அத்துமீறி உள்ளே நுழைவோர் கேள்விகள் இன்றி கைது செய்யப்படுவர். மேலும் இவ்விடத்தை பாதுகாக்கும் காவலர்கள் ‘Cammo Dudes’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ராணுவத்தையோ, காவல்துறையையோ சேர்ந்தவர்கள் அல்ல. ரகசியப் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள். இவர்களைப்பற்றி இன்றளவும் தகவல்கள் தர அமெரிக்கா அரசு மறுத்து வருகிறது. வேற்றுகிரகவாசிகளோ, அணு ஆயுத பரிசோதனையோ, விமானப்படை தளமோ, இல்லை இது அனைத்தையும் தாண்டிய வேறு ஏதோவொன்றோ, எதுவாயினும் அங்கு இருப்பது உண்மையில் என்னவென்பது அமெரிக்கா அரசுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம். Vinodhan,

மர்மங்கள் நிறைந்த அஸ்வினி நட்சத்திரம்!

                                                                                                                                                                                                    மர்மங்கள் நிறைந்த அஸ்வினி நட்சத்திரம் இருபத்தியேழு நட்சத்திரங்களுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் அஸ்வினி நட்சத்திரத்தின் பெருமைகளும் மர்மங்களும் அதிசயங்களும், ரகசியங்களும் ஏராளம் ஏராளம். மேஷ ராசியில் அமைந்துள்ள அஸ்வினி நட்சத்திரன் அதிதேவதை அஸ்வினி தேவதைகள். மேலை நாட்டினரால் ஆல்பா, பீடா, ஏரியஸ் என இது அழைக்கப்படுகிறது. பிறருக்கு உதவி செய்வதற்கென்றே ஒரு தேவதை இருக்கு மானால் அது அஸ்வினிதான். அஸ்வினி இரட்டையரைப் பற்றிய ஏராளமான கதைகள். ரிக் வேதத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல் மஹாபாரதம் மற்றும் 16 புராணங்கள் நம் மனதைக் குளிர வைக்கும் பல ரகசியங்களை அஸ்வினி பற்றிக் கூறுகின்றன. அயோதெளம்யரின் கட்டளை: அஸ்வினி பற்றிய முக்கியமான ஒரு சரித்திரத்தை இங்கு பார்ப்போம். இந்தச் சம்பவம் நிகழ்ந்த காலம் த்வாபர யுகத்தின் இறுதிக்காலம். அயோதெளம்யர் என்ற மகரிஷிக்கு உபமன்யு, ஆருணிவேதர் மற்றும் பல சிஷ்யர்கள் இருந்தனர். தௌம்யருக்கு குருகுல வழக்கப்படி உபமன்யு உள்ளிட்ட வர்கள் உரிய முறையில் சேவை செய்து கொண்டிருந்தனர். ஒருநாள், தௌம்யர் உபமன்யுவை அழைத்து, “நீ என் பசுக் கூட்டத்தை ரக்ஷித்துக் கொண்டு வா” எனக் கட்டளை யிட்டார். அவ்வாறே உபமன்யு பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு போய் மாலையில் குருவிடம் வந்து சேர்ந்தார். குரு உபமன்யுவின் தேகம் வாடாமல் இருந்ததைக் கண்டு அவரை நோக்கி, “உபமன்யு உன் தேகம் வாடாமல் பொலிவுடன் இருக்கிறதே நீ என்ன ஆகாரம் உண்டாய்?” என்று கேட்டார். உபமன்யு, “குருவே, நான் யாசகம் செய்து அதனால் ஆகாரம் உண்டேன்” என்றார். அதற்கு குரு, “யாசகத்தினால் உனக்குக் கிடைப்பதை என்னிடம் இனி கொண்டு வந்து கொடுத்து விடு. அதை எனக்குச் சேர்ப்பிக்காமல் நீ உண்பது முறையன்று” என்றார். உபமன்யு அந்தக் கட்டளையை சிரமேற் கொண்டார். மறுநாள் பிட்சையில் தமக்குக் கிடைத்த அனைத்தையும் குரூவிடம் உபமன்யு சமர்ப்பித்தார். அதில் ஒரு கவளம் கூட உபமன்யுவுக்குத் தராமல் தௌம்யரே அனைத்தையும் எடுத்துக் கொண்டார். பிறகு மாடுகளை மேய்க்கச் சென்ற உபமன்யு மாலையில் வீடு வந்து சேர்ந்தார். அவர் உடல் வாடாமல் இருந்ததைக் கண்ட குரு, “உனக்கு நான் கவளம் கொடுக்கவில்லையே, என்றாலும் கூட நீ உடல்வாடாமல் கூடக் வந்திருக்கிறாயே! எதை ஆகாரமாக உண்டாய்?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு, ”குருவே! முதலில் யாசகம் எடுத்ததைத் தங்களிடம் கொடுத்து விட்டேன். இன்னொரு முறை யாசகம் எடுத்ததைத் தங்களிடம் கொடுத்து விட்டேன். இன்னொரு முறை யாசகம் எடுத்து அதை நான் சாப்பிட்டேன்” என்றார். தெளம்யர், “உபமன்யு நீ செய்தது சரியல்ல. உன்னுடைய இந்த செய்கையினால் பிக்ஷ ஜீவனம் செய்யும் மற்றவர்களுக்கு நீ இடைஞ்சல் செய்கிறாய். இப்படி நீ ஜீவிப்பதால் நீ துர்ஆசை உள்ளவன் என்பது நிச்சயமாகிறது” என்றார்.குரு கூறிய அனைத்தையும் மனதில் வாங்கிக் கொண்டு உபமன்யு மாடுகளை மேய்க்கச் சென்றார். அன்று மாலை வழக்கம் போல அவர் வந்ததும் அவரை நோக்கிய குரு, “என்ன உபமன்யு நீ வாடாமல் கொழுத்துத்தான் இருக்கிறாய்? என்ன உணவை உண்டாய்?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு, ”குருவே நான் இந்தப் பசுக்களின் பாலை அருந்தி ஜீவிக்கிறேன்” என்றார். உடனே தெளம்யர், “அடடா, என்னுடைய அனுமதியைப் பெறாமல் பாலை அருந்தலாமா? இனி அருந்தாதே” என்றார். குருவின் வார்த்தைகளுக்குச் சரி என்று சொல்லி விட்டு உபமன்யு திரும்பினார். மறுநாள் மாலை ஆயிற்று, உபமன்யு வந்தார். குரு, அவர் சற்றும் சோர்வடையாமல் இருப்பதைக் கண்டு. ‘உபமன்யு, இன்று எதையாவது அருந்தினாயா என்ன? பாலை அருந்தவில்லையே” என்று கேட்டார். “ஐயனே பாலை அருந்தவில்லை. ஆனால் பாலைக் கன்றுகள் குடித்த பின்னர் கீழே விழும் நுரைத்துளிகளை அருந்தினேன்” என்றார். உடனே தெளம்யர், ”இந்த கன்றுக்குட்டிகள் போதிய அளவு பாலை அருந்தாமல் விட்டு விடுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இனி நீ நுரைத் துளிகளையும் அருந்தாதே” என்று கட்டளையிட்டார். கட்டளையை உபமன்யு சிரமேற் கொண்டார். நுரைத் குருவின் துளிகளை இனி அருந்த மாட்டேன் என்று குருவிடம் உறுதி கூறினார். கன்றுகள் அருந்திய பின்னர் வந்த பாலின் மாடுகளை நுரைத்துளிகளையும் அருந்தாமல் காட்டில் மேய்த்தவாறு அலைந்த அவர் இறுதியில் பசி தாங்காமல், எருக்க இலைச் சாற்றை அருந்தினார். காரம் நிறைந்த எடுக்கஇலைச் சாறின் விஷத்தினால், அவர் கண்கள் உடனே குருடாயின. அஸ்வினி தேவர்களை நோக்கி துதி கண் தெரியாததால், காலால் நடக்க முடியாமல் உபமன்யு ஊர்ந்து செல்லத் தொடங்கினார். அப்போது வழியில் இருந்த ஆழமான கிணற்றுக் குழி ஒன்றில் விழுந்தார். மாலை நேரமாயிற்று. உபமன்யு வராததைக் கண்ட தௌம்யருக்குக் கவலை வந்தது. தனது இதர சீடர்களை அழைத்து, எங்கே?” என்றார். அவர்களுக்குப் பதில் தெரியவில்லை. “வாருங்கள். அவனைச் சென்று தேடுவோம்” என்று கூறிய தெளம்யர் காட்டை நோக்கிக் சென்றார். ”உபமன்யு நீ எங்கே இருக்கிறாய்?” என்று கூவியவாறே காட்டில் ஒவ்வொரு பகுதியாக தேட ஆரம்பித்தார். தன் குருவின் சப்தத்தைக் கேட்ட உபமன்யு, ”குருவே! நான் இதோ இந்தக் கிணற்றுக் குழியில் விழுந்து கிடக்கிறேன்” என்று பரிதாபமான குரலில் உரக்கக் கத்தினார்.”இதில் நீ எப்படி விழுந்தாய்?” என்று தௌம்யர் கேட்க, உபமன்யு தான் எருக்கஞ்சாறு அருந்தியதையும் கண்கள் குருடான விஷயத்தையும் கூறினார். உடனே தெளம்யர், “உபமன்யு, தேவர்களுக்கு வைத்தியர்களான அஸ்வினி தேவர்களை,நீ ஸ்தோத்திரம் செய். அவர்கள் உனக்கு கண் பார்வை அளிப்பார்கள்” என்று கூறி அருளினார். குருவால் கட்டளையிடப்பட்ட உபமன்யு மனமுருக அஸ்வினி தேவர் களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார். ரிக் வேதத்தில் உள்ள மிக நீண்ட உபமன்யுவின் துதி மிக மிகச் சிறப்பானது அதன் இறுதி வாக்கியங்களில் அவர்.”ஓ அஸ்வீனி தேவர்களே. நான் உங்களை வணங்குகிறேன். உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாயத்தையும் வளங்குகிறேன். தேவர்களும் கூட தப்ப முடியாத எல்லாக் காமங்களுக்கும் பலன்களை நீங்களே விதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால் உங்களின் செய்கைகளால் ஏற்படும் பலன்கள் உங்களைச் சார்வதில்லை. நீங்களே எல்லோருக்கும் பெற்றோர்களாய் இருக்கின்றீர்கள். நீங்களே ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னால் ரத்தமாகவும், ஜீவாதாரமான நிரவியமாயும் ஆகிற அன்னத்தைப் புசிக்கிறீர்கள். புதிதாய் பிறந்த குழந்தை தாயின் பாலை உண்ணுகிறது. உண்மையில் குழந்தை ரூபமாக இருப்பவர்கள் நீங்களே! ஹே! அஸ்வினி தேவர்களே என்னுடைய ஜீவனை ரட்சிப்பதற்கு ஆதாரமாக உள்ள கண்பார்வையை எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்” என்று கூறி அஸ்வினி தேவர்களை மனமுருக பிரார்த்தனை மீண்டும் கண்பார்வை கிடைத்தது எல்லோருக்கும் உடனே உதவத் துடிக்கும் அஸ்வினி தேவர்கள் தன்னை அண்டி வணங்கிய உபமன்யுவின் துதியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். உபமன்யுவின் மூன் தோன்றி, அவர்கள் “நாங்கள் திருப்தி அடைந்தோம். இதோ இந்தத் தின்பண்டத்தை உடனே உட்கொள்” என்று கூறி அவர் உண்ண தின்பண்டம் ஒன்றைத் தந்தனர். உபமன்யு, “நீங்கள் கொடுப்பதை என் குருவுக்கு முதலில் கொடுக்காமல் நான் சாப்பிடத் துணியேன்” என்றார். உடனே அஸ்வினி தேவர்கள் பழைய சம்பவம் ஒன்றை உபமன்யுவிடம் கூற ஆரம்பித்தனர். “முன்னொரு காலத்தில் உன்னுடைய குருவானவர் எங்களைப் பிரார்த்தித்தார். நாங்கள் அப்போது அவருக்கு இதே மாதிரி தின்பண்டம் ஒன்றை உண்ணுவதற்காகத் கொடுக்காமலேயே தந்தோம். அதை அவர் தன் குருவுக்குக்“யா. ஆகவே, உன குரு முன் செய்த பிரகாரமே நயும் அவருக்குக் கொடுக்காமல் உடனே இதைச் சாப்பிடலாம் என்று கூறினர். உபமன்யு, “ஓ! அஸ்வினி தேவர்களே என்னை மன்னிப்பீர்களாக இதை என் குருவுக்குக் கொடுக்காமலேயே நான் சாப்பிட மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினார். உடனே அஸ்வினி தேவர்கள், “உன் குருவின் மீது உனக்கு இருக்கும் பக்தியை மெச்சினோம். உன் குருவினுடைய பற்கள் காரிருப்பினால் ஆக்கப்பட்டுள்ளன. உன்னுடைய பற்கள் தங்கப் பற்களாகக் கடவது” என்று கூறி ஆசீர்வதித்தனர். ‘இனி நீ உன் பார்வையை அடைவாய். உனக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்” என்று கூறி அஸ்வினி தேவர்கள் மறைந்தனர். குருவிடம் உபமன்யு நடந்த அனைத்தையும் கூறி வணங்கினார். தௌம்யர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். உபமன்யுவை நோக்கி அவர், “நீ இனி அஸ்வினி தேவர்கள் கூறியபடியே சகல க்ஷேமத்தையும் அடைவாய். எல்லா வேதங்களும் எல்லா தர்ம சாஸ்திரங்களும் உன்னிடத்தில் விளங்கும்” என்று கூறி ஆசிர்வதித்தார். அதன்படியே உபமன்யு வேத சாஸ்திரங் களில் தேர்ந்து பெரும் தவம் புரிந்து பெரிய மஹரிஷியாக ஆனார். அஸ்வினி தேவர்கள் அனைவருக்கும் உதவி செய்த ஏராளமான சம்பவங்களுக்கு உபமன்யுவின் கதை ஒரு சிறந்த சான்று.                                                                                                                                                    

தனிமை என்பது சுகமா அல்லது வேதனையா…..

            தனிமை என்பது என்ன என்று என்னைக் கேட்டால் உண்மையிலேயே சுகம் என்றுதான் நான் கூறுவேன். ஏனென்றால் மனதிற்கு சிறந்த மருந்து தனிமை தான். ஏனென்றால் தனிமையில்தான் ஒருவன் சிறந்த அறிவாளியாகவும் புதுமையான படைப்புகளை உருவாக்குகின்றவனாகவும் மாறுகிறான். எப்படி என்றால் தனிமையில் இருக்கும்போது நம் மனமானது மிகவும் அமைதியாக இருப்பதே நீங்கள் உணரலாம். ஆனால் இந்த அமைதி தனிமையில் கிடைக்க வேண்டுமென்றால் நாம் முதலில் மனம் என்கிறவனை கவனிக்க வேண்டும். ஆம் அப்போதுதான் மனதில் இருக்கும் கழிவுகள் அனைத்தும் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும். அந்த நேரத்தில் நாம் அமைதியாக அமர்ந்து அதை கவனித்தால் போதும் ஏனென்றால் அப்போதுதான் நம் மனதில் இருக்கும் கவலை வேதனை கஷ்டம் கோபம் என அனைத்தும் வெளியேறும் போது நமக்கு எவ்வித reactionனும் இருக்கக்கூடாது.அப்போது மன அமைதி கிடைக்கும். ஆனால் பலபேர் தனிமையில் இருந்தால் அதிகம் கவலை கொள்கிறார்கள் அப்போது இவை வேதனையாக மாறத் தொடங்குகிறது. ஏன் கவலை கொள்கிறார்கள் என்றால் மனிதர்கள் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் நம்மை சுற்றி பல பேர் இருந்தால் தான் சந்தோஷம் என்றும் நினைக்கின்றனர்.        அவை எல்லாம் நிரந்தரமில்லை தனிமை என்பது தான் நமக்கு நிரந்தரம் நாம் சாகும் வரை தனிமை தான் நிரந்தரம் எப்படி என்றால் நாம் பிறக்கும் போதும் தனியாகத்தான் பிறக்கிறோம் இறக்கும்போதும் தனியாகத்தான் இருக்கிறோம். அதுவே பூமியின் இயற்கை என் தனிமை என்பது சுகம் என்கிறேன் என்றால் நீங்கள் தனியாக இருக்கும் போது மனதை புரிந்து கொள்ள முடியும். மனம் என்பது சாதாரண ஒன்றாக நீங்கள் நினைக்கிறீர்கள் ஆனால் மனதை பற்றி அறிய தனி கலயை உருவாக்கி அதை மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு மனிதன் உலக சாதனை படைக்க செய்வதும் மனமே அதே மனம் மனிதனை அழிக்ககூடிய அளவிற்கு அதிக ஆற்றல் கொண்டது. மனிதர்கள் யாரையோ தேடி எதையோ நம்பிக்கொண்டு மனிதர்களின் பின்னால் சுற்றிக் கொண்டு அவர்களிடத்தில் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டு கடைசியில் ஏமாற்றப்படுகிறார்கள். பிறகு மனம் வருத்தப்படுகிறார்கள் விரக்தி அடைகிறார்கள். அதன்பின்பு எனக்கு யாருமே இல்லை என்று புலம்புகிறார்கள். அப்போது தனிமை என்கிற ஒன்று தேவைப்படுகிறது.அந்த தனிமையில் மனிதர்கள் செய்த சில தீய வினைகளை நினைத்து மனம் வாடுகிறார்கள். அதனால் இங்கு தனிமை வேதனையாக மாறுகிறது. பிறகு தற்கொலை செய்துகொள்கிறார்கள் அதற்குத் தான் கூறுவார்கள் தனிமை தான் ஒரு மனிதனை தவறு செய்யத் தூண்டும் என்று சரி தனி வழி எப்போதும் சந்தோஷமாக மாறும் அது மனிதர்களாகிய நாம் கையில் தான் உள்ளது எப்படி என்றால் வேதனை கஷ்டங்களில் சிக்கிய நீங்கள் உங்கள் கஷ்டத்தை யாரிடமும் கூறாமல் நீங்கள் தனிமையை விரும்பவேண்டும்.           அப்போது என்ன நடக்கும் என்றால் மனதில் புதைந்துள்ள நச்சுக்கள் முதலில் வெளியேறத் தொடங்கும் அதாவது கவலை கோபம் அழுகை வேதனை வெறுப்பு இப்படி மனதை துன்புறுத்த செய்யும் நச்சுக்கள் வெளியேறும். அப்போது மனதின் செயல்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.அப்போ நீங்கள் தெரிந்து கொள்ளலாம் மனதின் பித்தலாட்டங்களை உங்களுக்கு நடந்த துன்பங்கள் ஒன்றுமே இருக்காது. ஆனால் மனம் அதை எவ்வளவு பெரியதாக உருவகப்படுத்தி உங்களை நிலைகுலைய வைக்கும். அதை நீங்கள் கவனிக்க கவனிக்க அது உங்களை விட்டு மறைய ஆரம்பிக்கும்.சில காலம் சென்ற பிறகு தனிமையாக நீங்கள் இருப்பீர்கள் உங்களது மனம் ஒருவித பக்குவமடைந்த தெளிவாக இருப்பதை நீங்கள் உணர முடியும். தனிமையை நீங்கள் விரும்ப ஆரம்பித்து விடுவீர்கள். இந்த மனிதர்களுடன் பழகுவதை விட தனிமையில் இருப்பதை எவ்வளவு சிறந்தது. ஏனென்றால் மனிதர்களுடன் பழகி அதன் மூலம் வரும் துன்பங்களை விட தனிமையில் வரும் துன்பம் எவ்வளவு சிறந்தது தனிமையில் துன்பமே கிடையாது மனம் அமைதியாக நிம்மதியாக இருக்கும். ஏனென்றால் சூழ்நிலைக்கேற்ப மனிதர்கள் அவர்களை மாற்றிக்கொள்கிறார்கள்.அந்த சில சூழ்நிலை நமக்கு பாதகமாக மாறிவிடுகிறது ஏன் நாம் மனிதர்களை வெறுகிறோம் என்றால் எதிர்பார்ப்பு தேவை அன்பு இதையெல்லாம் அளவுக்கு அதிகமாக அவர்களிடம் நாம் வைப்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் அவையே கத்தியாக மாறுவதால் நாம் மனவேதனை கொள்கிறோம். நோயினை நாமே உருவாக்குகின்றோம். ஆகவே தனிமை என்பது மனதிற்கு சிறந்த மருந்து 70 80 வயதிற்கு மேல் எப்படியோ நீங்கள் தனிமையில் தான் இருக்கப் போகிறீர்கள் அப்போது யாருமே உங்கள் கூட இருக்கமாட்டார்கள். இருப்பார்கள் ஆனால் இருக்க மாட்டார்கள். அப்போ இருக்கவேண்டிய தனிமை நமக்கு அதிக கஷ்டத்தை ஏற்படுத்தும் அப்போது நம்மால் தாங்க முடியாது.          நீங்கள் சிறுவயதிலேயே தனிமையில் இருக்க பழகிக் கொண்டால் உங்களுக்கு இந்த தனிமை வயதான காலத்தில் இனிமையாக இருக்கும். இப்படி இருந்து பழகினால் ஒரு கட்டத்திற்கு மேல் உங்களுக்கு மனிதர்கள் கூட இருக்கப் பிடிக்காது மனிதர்களை கேட்க மாட்டீர்கள் மனித தொடர்பு குறைய ஆரம்பித்துவிடும் தனிமை என்கிற ஒன்றினை சரியாக புரிந்து கொண்டு வாழ்ந்தால் நமக்கு மனிதர்களுக்காக ஏங்க வேண்டிய அவசியமில்லை. எப்போதும் மன அமைதி மற்றும் சந்தோஷம் கிடைக்கும். ஏன் வயதான காலத்தில் இனிமையாக இருக்கும் என்கிறேன் என்றால் மனதை நீங்கள் கவனித்த பிறகு அதில் தோன்றும் மாயை விலகும் பிறகு மனம் அமைதியாக இருக்கும் போது உங்களுக்குள் ஓர் சந்தோஷம் கிடைக்கும் அந்த சந்தோஷம் எவ்வளவு பணம் எவ்வளவு மனிதர்கள் கூட இருந்தாலும் அதற்கு நிகராக எதுவுமே கிடையாது. அதனால்தான் முதுமை காலத்தில் எவ்வித மனிதர்களையும் நினைத்து ஏங்க மாட்டீர்கள் அப்போது உங்களுக்குள்ளேயே சந்தோஷம் இருக்கும் அந்த சந்தோஷம் உங்கள் உள்ளுணர்வு என்று சொல்லக்கூடிய super conscious உங்களுக்கு கொடுக்கும். இதுவே கடவுள் என்கின்றனர். கடவுள் என்றால் நம் உள்ளே கிடப்பவர் அதாவது (உள் கட )அதனால்தான் கடவுள் என்கிறார்கள். ஆகவே தனிமையில் தான் நீங்கள் மனதை கடந்து உங்களுக்குள் இருக்கும் கடவுளை உணர முடியும்.நான் தனிமையை நேசிப்பவன். நன்றி.. மகிழ்ச்சி….😇 HIPNOTIST SIVAGANESH,

The Secret Life of a Satanist!

         The gods of the right-hand path have bickered and quarreled for an entire age of the earth. Each of these deities and their respective priests and ministers have attempted to find wisdom in their own lies. The ice age of religious thought can last but a limited time in this great scheme of human existence. The gods of wisdom-defiled have had their saga, and their millennium hath become as reality. Each, with his own “divine” path to paradise, hath accused the other of heresies and spiritual indiscretions. The Ring of the Nibelungen doth carry aneverlasting curse, but only because those who seek it think in terms of “Good” and “Evil” – themselves being at all times “Good”. The gods of the past havebecome like their own devils in order to live. Feebly, their ministers play the devil’s game to fill their tabernacles and pay the mortgages on their temples. Alas, too long have they studied “righteousness”, and poor and incompetent devils they make. So they all join hands in “brotherly” unity, and in their desperation go to Valhalla for their last great ecumenical council. “Draweth near in the gloom the twilight of the gods.” The ravens of the night have flown forth to summon Loki, who hath set Valhalla aflame with the searing trident of the Inferno. The twilight is done. A glow of new light is borne out of the night and Lucifer is risen, once more to proclaim: “This is the age of Satan! Satan Rules the Earth!” The gods of the unjust are dead. This is the morning of magic and undefiled wisdom. The FLESH prevaileth and a great Church shall be built, consecrated in its name. No longer shall man’s salvation be dependent on his self-denial. And it will be known that the world of the flesh and the living shall be the greatest preparation for any and all eternal delights!                                                                                                                                              THE NINE SATANIC STATEMENTS     1. Satan represents indulgence, instead of abstinence!2. Satan represents vital existence, instead of spiritual pipe dreams! 3. Satan represents undefiled wisdom, instead of hypocritical self-deceit!4. Satan represents kindness to those who deserve it, instead of love wasted on ingrates!5. Satan represents vengeance, instead of turning the other cheek!6. Satan represents responsibility to the responsible, instead of concern for psychic vampires!7. Satan represents man as just another animal, sometimes better, more often worse than those that walk on all-fours, who, because of his “divine spiritual and intellectual development”, has become the most vicious animal of all!8. Satan represents all of the so-called sins, as they all lead to physical, mental,  or emotional gratification!9. Satan has been the best friend the church has ever had, as he has kept it in business all these years! Vinodhan, Courtecy  The Satanic Bible,

Shopping Cart