எல்லாவித நோய்களையும் குணப்படுத்தும் அட்டை விடல் அகத்தியரின் சிறப்பு சித்தமருத்துவம்
Post Views: 95 அட்டை விடல் (Leech Therapy) ஓர் அறிமுகம்! அனைவருக்கும் வணக்கம் என்னுடைய வினோதனின் கருத்துக்களை இங்கே பதிவு செய்து கொண்டிருக்கும் என்னுடைய ஒவ்வொரு பதிவையும் படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் இன்று நாம் பார்க்கப் போகிறது அட்டை விடல் பயிற்சி அதாவது அட்டையை குறித்த முழு தகவல் இதை சொன்னது நான் அல்ல நம்முடைய அகத்தியர் மாபெரும் மகா சித்தர் இவர் தான் இதை முழுமையாக நமக்கு சொல்லி இருக்கிறார் சித்த மருத்துவத்தில் அற்புதமான விதிமுறைகள் உள்ளன அதை சுலபமான முறையில் இருக்கிறது ஆனால் இந்த அட்டை விடல் என்பது சற்று யோசித்து செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் இதை குறித்து முழு தகவல்களையும் நாம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் அப்போதுதான் இதை குறித்து முழு விஷயத்தை நாம் செய்ய முடியும் அதை குறித்த முழு தகவல்களை இந்த பதிவில் கொடுத்திருக்கிறேன் மறக்காமல் இதை ஒவ்வொன்றாக படியுங்கள் இது பழமையான ஒரு மருத்துவ முறையாகும். ஐ உடலில் வைத்தால், அது ரத்தத்தை மெது வாக உறிஞ்சும். இதை சித்த மருத்துவம் (Siddha medicine) மற்றும் ஆயுர்வேதம் (Ayurveda)-ல பயன்படுத்துவாங்க. எப்படி வேலை செய்கிறது? அட்டைப் புழு ரத்தத்தை குடிக்கும் போது: ரத்தத்தை மெல்ல உறிஞ்சும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் அதின் உமிழ்நீரில் இருக்கும் enzyme (hirudin) ரத்தம் அடைப்பு ஆகாமல் தடுக்கும் எதற்கெல்லாம் பயன்படுத்துவார்கள்? வீக்கம் (swelling) வலி (pain relief) ரத்தக் கட்டி (blood clot) தோல் நோய்கள் சில சமயம் plastic surgery பிறகு கவனிக்க வேண்டியவை மருத்துவர் மேற்பார்வையில் மட்டும் செய்ய வேண்டும் infection வர வாய்ப்பு இருக்கு எல்லாருக்கும் பொருந்தாது அகத்தியர் சொன்ன அட்டை விடல் மருத்துவ முழு ஆய்வு ஆச்சாயமும், பாரம்பரிய மருத்துவ முறைகளில் அருவெறுப்பும் தரக் கூடிய சில மருத்துவ முறைகள் உள்ளன. அப்படியான ஒரு மருத்துவ முறை பற்றியதே இந்த தொடா. தமிழில் “அட்டை விடல்” என அறியப் படும் இந்த மருத்துவ முறையினை ஆயாவேதத்தில் “ரக்த மோக்ஷ்ன்” என்றும சித்தர்கள் ஐரோப்பிய கண்டத்தில் “Hirudotherapy” என்றும் அறியப் படுகிறது. அட்டைகள் என்பவை புழு இனத்தை சேர்ந்தவை. மழைக் காலங்களில் நமது வீட்டோரங்களிலும், நீர் நிலைகளின அருகாமையிலும் இவற்றை காணமுடியும். தற்போதைய அறிவியல் வகைப்பாட்டின் படி 500 க்கும் மேற்பட்ட அட்டைகள் கண்டறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் குறிப்பிட்ட சிலவகை மட்டுமே இந்த வகை மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது. அதென்ன அட்டைவிடல் என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கும். மருத்துவ சிகிச்சை என்பது இரண்டு பெரும் பிரிவுகளாய் அறியப் படுகிறது. ஒன்று அக வைத்தியம், மற்றது புற வைத்தியம் அக வைத்தியம் என்பது மருந்தினை உள்ளுக்குள் உண்ணக் கொடுப்பதன் மூலம் சிகிச்சை அளிப்பது, மற்றது புற வைத்தியம் மேற்பரப்பில் சிகிச்சை செய்வது இது உலகில் உள்ள எல்லா வகை மருத்துவ முறைகளுக்கும் பொருந்தும் அந்த வகையில் சித்த மருத்துவத்தில் பல்வேறு புற சிகிச்சை முறைகள் கூறப் பட்டிருக்கிறது அவற்றில் அட்டை விடல் என்பது ஒரு வகை சிகிச்சை முறை இந்த இடத்தில் ஒரு தகவலாக சித்த மருத்துவத்தின புற சிகிச்சை முறைகளையும் பட்டியலிட விரும்புகிறேன். அவை கட்டிகை, வர்த்தித்தல், நீர், சீலை, களிப்பு, தொக்கணம், பொட்டணம், வேதுகாட்டல், பூச்சு, ஒற்றடம், பற்றிடல், கட்டுதல், பிச்சு, புகை, மையிடல், பொடியிடுதல், நசியம், கலிக்கும், ஊதல், நாசிகாபரணம், முறிச்சல், கீறல், காரம், அறுவை, பட்டை கட்டல், உறிஞசல், அசுதத ரத்தத்தை வாங்குதல், அட்டைவிடல் பசை, களி, சலாகை, சிட்டிகை என்பனவாகும். இவற்றில் அட்டை விடல் என்பது ரத்தத்தை உறிஞசக கூடிய அட்டைகளை உடலின் மேற்புறம் விட்டு கடிக்க விடுவதன் மூலம் அளிக்கப் படும் சிகிச்சை முறையாகும். நோயின தன்மை மற்றும் தீவிரத்தை பொறுத்து இந்த அட்டை விடல் உடலின் குறிப்பிட்ட பகுதியில் விட்டு அந்த இடத்தில் இருக்கும் இரத்தத்தை உறிஞ்சிடச் செய்யும் முறையே அட்டை விடல் ஆகும். இந்த முறையில் இரத்தக் கட்டு, வீக்கம், அடிபட்டதால் ஏற்படும் காயங்கள், தலைவலி, வாந்தி, மூட்டுவலி, தோல் வியாதிகள், பெண்களுககான மாதவிலக்கு பிரசசினைகள் போன்றவைகளை குணமாக்குகின்றனர். எல்லாம் சரிதான், இதில் சித்தர்கள் எங்கே வருகிறார்கள் என்ற கேள்வி நியாயமானதே…. இந்த வினோதன் தளத்தில் தளத்தின் உங்களுக்குப் பிடித்த மொழிகளில் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்கலாம் அட்டை விடல் சித்தமருத்துவமே! அட்டை விடல் சித்த மருத்துவம் அட்டை விடல் என்பது தற்போது பலவேறு மருத்துவ முறைகளின் ஒரு அங்கமாக இருக்கிறது. எனவே இது எந்த மருத்துவ முறையை சேர்ந்தது என்பது விவாதத்திற்கு உரியது. எனினும் தற்போதுள்ள மருத்துவ முறைகளில் காலத்தால் மிகவும் பழைமையானதான சித்த மருத்துவத்தில் இது பற்றிய தெளிவான விளக்கங்களும் வரையறைகளும் காணக கிடைக்கின்றன. அந்த வகையில் நாம் இதனை தமிழரின் மருத்துவ முறையாகவே கருதிடலாம். அட்டை விடல் பற்றி அகத்தியர் தனது “அகத்திய நயனவிதி 500” என்ற நூலில விரிவாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார் இந்த அட்டை விடல் வைத்தியத்தின் நோக்கத்தை அகத்தியர் பின் வருமாறு கூறிப்பிடுகிறார். அடடையின விதிதனை யறிய யாவருந் திட்டம் தாகவே செப்ப வுள்னினேன் மட்டமா குழலி னாள வரன ளித்திடும் இட்ட விநாயகன் இணையடி போற்றியே முன்னமே கேளட்டையின் குணந்தான மொய்குழல் மாதே நீ கேளாய் அந்நா என்னம பால்பருகும் அது போல வாங்கும் விஷநீரை நன்னாள் பார்த்து நோயறிந்து நயனந் தன்னில் விடுவாயால் சொன்னோஞ் சொன்னோம் நாற்றிசையுந துலங்கச் சொன்னோஞ் சொன்னோமே அன்னப் பறவையானது பாலில் கலந்திருக்கும் தண்ணீரை பிரித்து எடுத்து விடுவதை போல அட்டையானது நமது உடலில் உள்ள நஞ்சு நீரை பருகி குருதியை தூயமை செய்கிறது என்கிறார். எனவே நோயின் தன்மை அறிந்து அதற்குண்டான நாளில் அட்டை விடல செயதால நோய் தீரும் எனகிறார் அகத்தியா அட்டை விடலின் நோக்கத்தை தெளிவாகச் சொன்ன அகத்தியா, வரையறுத்திருக்கிறார். அட்டையின் வடிவத்தையும் ஆதியோ தியவே தத்தில அட்டைக்கு மேனி யுந்தான ஏதெனில் பல்லு மூன்று மியன்ற அஞ் சடுக்குத் தோலும் ஓதிய முகமும் பச்சை உதிரமுஞ் சிவப்பாய் பின்னை தீதிலாப் பக்க மிரண்டும் பருத்திடும் நரம்பு சேரும். அரவின் வாய்த் தேரை போன்றும் அணிமழுத் தலையே போன்றும் பருதியின் பைங்கண் போன்றும் பல மணி சிதறி நாறபோல விரவியே பல நே கிழ்ந்து மெத்ததெனக் கடிக்கும் அட்டை கருதியே காலன தன்னைச் கட்டிடுங் காய் தானே. அகத்தியர். அட்டையின் உடலானது ஐந்து அடுக்கு தோலினால் ஆனது. மூன்று பற்களை உடையதாக இருக்குமென கூறுகிறார். மேலும் அதன் இரு பக்க ஓரங்கள் தடித்திருப்பதுடன் அதன் இரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்குமாம். இப்படி பட்ட அட்டையானது உடலை கடிக்க விட்டால் உடலை நோயின்றி காத்து எமனை நெருங்க விடாது செய்யலாம் என்கிறார் அகத்தியர் எத்தனை வகை அட்டைகள் இருக்கின்றன? (Leech Therapy) சித்த மருத்துவம் தற்கால அறிவியல் ஆய்வேடுகளுக்கு சற்றும் குறையாத தரத்தில், அகத்தியர். தனது நூலில் அட்டைகளின் வகைப்பாட்டியலை விவரித்திருக்கிறார். இந்த தகவலகளை நாம் எந்த அளவு மேம்படுத்தி செயலாக்கத்தில் வைத்திருக்கிறோமா என்பது கேள்விக்கும், விவாதத்திற்கும் உரியது. அகத்தியரின் நயனவிதி 500ல் அடடைகள் மூன்று பெரும் பிரிவுகளாய் பிரித்துக் கூறப் பட்டிருக்கிறது அவை முறையே 1-தீய அட்டைகள் 2 சாதாரண அட்டைகள் 3- நல்ல அட்டைகள் என்பதாகும். இனி இவற்றை கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம் 1-தீய அட்டைகள் ஆகா வட்டை யது கேளாய் அலவன் தவளை நீர்ப்பாம்பு மேகா சலத்தில் பிறத்தனவும் வேண்டா சருகிற பிறந்தனவும் போகாச் சுனையில் பிறந்தனவும் பொல்லா வட்டையிவையென்றே பாகார் மொழிகொள் பைந்தொடியே பாரா யடடை வருப்பினையே இவை தவளை, நீர்ப்பாம்பு, பதனழிந்த இலைகள், புற்கள் நிறைந்துள்ள குளங்கள், குழிகள் ஆகிய இடங்களில் இருக்கும். அத்துடன் இவை இவை கருத்த நிறத்துடனும் கருஞசெமமை நிறத்துடனும் வான வில்லைப் போல பல நிறத்தையும் உடையனவாகவும் காணப்படுமாம். 2-சாதாரண அட்டைகள் இவை பொன்னிறத்தில் சற்றுக் கருமைநிறம் சேர்ந்த நிறத்துடனிருக்கும். 3-நல்ல அட்டைகள் I ‘ நன்னட்டை தனக்குள்ள அழகான லட்சணத்தைத திட்ட முடன நடுவேசெப்பக்கேள் – குட்டிக்குப் பாலமுத மென்னுமொழி பாவைநல் லாயுருக்கள் நாலுவகை யுண்டென்றே நாட்டு வெள்ளைநிற மொன்று மிகுநீலந் தானொன்று கள்ளமிலாப் பொன்மை கருப்பொன்று – எள்ளியதாம் வாசமிகும் பூங்குழலீர் மற்று மிவைகளெலாந் தேசகுண மாமென்று செப்பு. அழுகா சலத்தில் பிறந்தவுரு அறவே மேனி சரசரக்கும் மெழுகா நிலை சீர்ச்சுனையிலுறு உருவை யொழிய அடைகாக்குங் கழியா நீரில் பிறந்தவுருக கழுநீ ரான நிறமதுபோல ஒழியா வயிறு சிவந்திருக்கும் உண்மை யிதுவென றுணர் வாயே, நீர் ஊற்றுக்களிலும் அருவிகளிலும் மணலின் மறைவாகவுமிருக்கும். கீழ் இதன் வயிற்றுப் பக்கம் பெரும்பகுதிசெங்கழுநீர்ப் பூவின் நிறத்தை ஒத்திருக்கும். அகத்தியர். நல்ல அட்டை நான்கு வகைகளாய் பிரித்துக் கூறுகிறார் அவை. முதற் பிரிவில் சேர்ந்தவை வெண்மையும் சற்றுப் பொன நிறமும பெற்றிருக்கும். இரண்டாம் பிரிவிற சோந்தவை செங்கழுநீர்ப்பூ நிறத்தைப் பெற்றிருக்கும். 3. முன்றாம் பிரிவிற் சேர்ந்தவை பவளத்தின் நிறத்தையும் அரிசி நிறத்தையு பெற்றிருக்கும். நான்காமவை பச்சை நிறமும் எலுமிச்சைபழ நிறமும் பெற்றிருக்கும். நாளைய பதிவில அட்டைகளில் ஆண், பெண் வேறுபாடுகளை கண்டறிவது மற்றும் சிகிச்சைக்கு தகுதியான அட்டையை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம் அட்டைகளை இனம் காணுதல்!, பாதுகாத்தலஅட்டை விடல் அவற்றில் நல்ல அட்டைகள் என வகைப் படுத்தப் பட்ட அடடைகளே இந்த அட்டைவிடல் சிகிச்சைக்கு பயனாகும் சிகிச்சைக்கு தகுதியான நல்ல அட்டைகளை எப்படி இனம் காணுவது, அவற்றை எப்படி பாதுகாப்பது அட்டைவிடல் சிகிச்சைக்கு வரையறையை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார். தகுதிய அட்டைகளின் அஞ்சுவிரல் நீளத்தில் அடடை விடலாகும் மிஞ்சவே அட்டை விட வேண்டாம் மிஞ்சி கடிவாய் தினவின்
எல்லாவித நோய்களையும் குணப்படுத்தும் அட்டை விடல் அகத்தியரின் சிறப்பு சித்தமருத்துவம் Read More »









