மர்மங்கள் நிறைந்த அஸ்வினி நட்சத்திரம்!
Post Views: 1,004 மர்மங்கள் நிறைந்த அஸ்வினி நட்சத்திரம் இருபத்தியேழு நட்சத்திரங்களுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் அஸ்வினி நட்சத்திரத்தின் பெருமைகளும் மர்மங்களும் அதிசயங்களும், ரகசியங்களும் ஏராளம் ஏராளம். மேஷ ராசியில் அமைந்துள்ள அஸ்வினி நட்சத்திரன் அதிதேவதை அஸ்வினி தேவதைகள். மேலை நாட்டினரால் ஆல்பா, பீடா, ஏரியஸ் என இது அழைக்கப்படுகிறது. பிறருக்கு உதவி செய்வதற்கென்றே ஒரு தேவதை இருக்கு மானால் அது அஸ்வினிதான். அஸ்வினி இரட்டையரைப் பற்றிய ஏராளமான கதைகள். ரிக் வேதத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல் மஹாபாரதம் மற்றும் 16 புராணங்கள் நம் மனதைக் குளிர வைக்கும் பல ரகசியங்களை அஸ்வினி பற்றிக் கூறுகின்றன. அயோதெளம்யரின் கட்டளை: அஸ்வினி பற்றிய முக்கியமான ஒரு சரித்திரத்தை இங்கு பார்ப்போம். இந்தச் சம்பவம் நிகழ்ந்த காலம் த்வாபர யுகத்தின் இறுதிக்காலம். அயோதெளம்யர் என்ற மகரிஷிக்கு உபமன்யு, ஆருணிவேதர் மற்றும் பல சிஷ்யர்கள் இருந்தனர். தௌம்யருக்கு குருகுல வழக்கப்படி உபமன்யு உள்ளிட்ட வர்கள் உரிய முறையில் சேவை செய்து கொண்டிருந்தனர். ஒருநாள், தௌம்யர் உபமன்யுவை அழைத்து, “நீ என் பசுக் கூட்டத்தை ரக்ஷித்துக் கொண்டு வா” எனக் கட்டளை யிட்டார். அவ்வாறே உபமன்யு பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு போய் மாலையில் குருவிடம் வந்து சேர்ந்தார். குரு உபமன்யுவின் தேகம் வாடாமல் இருந்ததைக் கண்டு அவரை நோக்கி, “உபமன்யு உன் தேகம் வாடாமல் பொலிவுடன் இருக்கிறதே நீ என்ன ஆகாரம் உண்டாய்?” என்று கேட்டார். உபமன்யு, “குருவே, நான் யாசகம் செய்து அதனால் ஆகாரம் உண்டேன்” என்றார். அதற்கு குரு, “யாசகத்தினால் உனக்குக் கிடைப்பதை என்னிடம் இனி கொண்டு வந்து கொடுத்து விடு. அதை எனக்குச் சேர்ப்பிக்காமல் நீ உண்பது முறையன்று” என்றார். உபமன்யு அந்தக் கட்டளையை சிரமேற் கொண்டார். மறுநாள் பிட்சையில் தமக்குக் கிடைத்த அனைத்தையும் குரூவிடம் உபமன்யு சமர்ப்பித்தார். அதில் ஒரு கவளம் கூட உபமன்யுவுக்குத் தராமல் தௌம்யரே அனைத்தையும் எடுத்துக் கொண்டார். பிறகு மாடுகளை மேய்க்கச் சென்ற உபமன்யு மாலையில் வீடு வந்து சேர்ந்தார். அவர் உடல் வாடாமல் இருந்ததைக் கண்ட குரு, “உனக்கு நான் கவளம் கொடுக்கவில்லையே, என்றாலும் கூட நீ உடல்வாடாமல் கூடக் வந்திருக்கிறாயே! எதை ஆகாரமாக உண்டாய்?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு, ”குருவே! முதலில் யாசகம் எடுத்ததைத் தங்களிடம் கொடுத்து விட்டேன். இன்னொரு முறை யாசகம் எடுத்ததைத் தங்களிடம் கொடுத்து விட்டேன். இன்னொரு முறை யாசகம் எடுத்து அதை நான் சாப்பிட்டேன்” என்றார். தெளம்யர், “உபமன்யு நீ செய்தது சரியல்ல. உன்னுடைய இந்த செய்கையினால் பிக்ஷ ஜீவனம் செய்யும் மற்றவர்களுக்கு நீ இடைஞ்சல் செய்கிறாய். இப்படி நீ ஜீவிப்பதால் நீ துர்ஆசை உள்ளவன் என்பது நிச்சயமாகிறது” என்றார்.குரு கூறிய அனைத்தையும் மனதில் வாங்கிக் கொண்டு உபமன்யு மாடுகளை மேய்க்கச் சென்றார். அன்று மாலை வழக்கம் போல அவர் வந்ததும் அவரை நோக்கிய குரு, “என்ன உபமன்யு நீ வாடாமல் கொழுத்துத்தான் இருக்கிறாய்? என்ன உணவை உண்டாய்?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு, ”குருவே நான் இந்தப் பசுக்களின் பாலை அருந்தி ஜீவிக்கிறேன்” என்றார். உடனே தெளம்யர், “அடடா, என்னுடைய அனுமதியைப் பெறாமல் பாலை அருந்தலாமா? இனி அருந்தாதே” என்றார். குருவின் வார்த்தைகளுக்குச் சரி என்று சொல்லி விட்டு உபமன்யு திரும்பினார். மறுநாள் மாலை ஆயிற்று, உபமன்யு வந்தார். குரு, அவர் சற்றும் சோர்வடையாமல் இருப்பதைக் கண்டு. ‘உபமன்யு, இன்று எதையாவது அருந்தினாயா என்ன? பாலை அருந்தவில்லையே” என்று கேட்டார். “ஐயனே பாலை அருந்தவில்லை. ஆனால் பாலைக் கன்றுகள் குடித்த பின்னர் கீழே விழும் நுரைத்துளிகளை அருந்தினேன்” என்றார். உடனே தெளம்யர், ”இந்த கன்றுக்குட்டிகள் போதிய அளவு பாலை அருந்தாமல் விட்டு விடுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இனி நீ நுரைத் துளிகளையும் அருந்தாதே” என்று கட்டளையிட்டார். கட்டளையை உபமன்யு சிரமேற் கொண்டார். நுரைத் குருவின் துளிகளை இனி அருந்த மாட்டேன் என்று குருவிடம் உறுதி கூறினார். கன்றுகள் அருந்திய பின்னர் வந்த பாலின் மாடுகளை நுரைத்துளிகளையும் அருந்தாமல் காட்டில் மேய்த்தவாறு அலைந்த அவர் இறுதியில் பசி தாங்காமல், எருக்க இலைச் சாற்றை அருந்தினார். காரம் நிறைந்த எடுக்கஇலைச் சாறின் விஷத்தினால், அவர் கண்கள் உடனே குருடாயின. அஸ்வினி தேவர்களை நோக்கி துதி கண் தெரியாததால், காலால் நடக்க முடியாமல் உபமன்யு ஊர்ந்து செல்லத் தொடங்கினார். அப்போது வழியில் இருந்த ஆழமான கிணற்றுக் குழி ஒன்றில் விழுந்தார். மாலை நேரமாயிற்று. உபமன்யு வராததைக் கண்ட தௌம்யருக்குக் கவலை வந்தது. தனது இதர சீடர்களை அழைத்து, எங்கே?” என்றார். அவர்களுக்குப் பதில் தெரியவில்லை. “வாருங்கள். அவனைச் சென்று தேடுவோம்” என்று கூறிய தெளம்யர் காட்டை நோக்கிக் சென்றார். ”உபமன்யு நீ எங்கே இருக்கிறாய்?” என்று கூவியவாறே காட்டில் ஒவ்வொரு பகுதியாக தேட ஆரம்பித்தார். தன் குருவின் சப்தத்தைக் கேட்ட உபமன்யு, ”குருவே! நான் இதோ இந்தக் கிணற்றுக் குழியில் விழுந்து கிடக்கிறேன்” என்று பரிதாபமான குரலில் உரக்கக் கத்தினார்.”இதில் நீ எப்படி விழுந்தாய்?” என்று தௌம்யர் கேட்க, உபமன்யு தான் எருக்கஞ்சாறு அருந்தியதையும் கண்கள் குருடான விஷயத்தையும் கூறினார். உடனே தெளம்யர், “உபமன்யு, தேவர்களுக்கு வைத்தியர்களான அஸ்வினி தேவர்களை,நீ ஸ்தோத்திரம் செய். அவர்கள் உனக்கு கண் பார்வை அளிப்பார்கள்” என்று கூறி அருளினார். குருவால் கட்டளையிடப்பட்ட உபமன்யு மனமுருக அஸ்வினி தேவர் களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார். ரிக் வேதத்தில் உள்ள மிக நீண்ட உபமன்யுவின் துதி மிக மிகச் சிறப்பானது அதன் இறுதி வாக்கியங்களில் அவர்.”ஓ அஸ்வீனி தேவர்களே. நான் உங்களை வணங்குகிறேன். உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாயத்தையும் வளங்குகிறேன். தேவர்களும் கூட தப்ப முடியாத எல்லாக் காமங்களுக்கும் பலன்களை நீங்களே விதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால் உங்களின் செய்கைகளால் ஏற்படும் பலன்கள் உங்களைச் சார்வதில்லை. நீங்களே எல்லோருக்கும் பெற்றோர்களாய் இருக்கின்றீர்கள். நீங்களே ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னால் ரத்தமாகவும், ஜீவாதாரமான நிரவியமாயும் ஆகிற அன்னத்தைப் புசிக்கிறீர்கள். புதிதாய் பிறந்த குழந்தை தாயின் பாலை உண்ணுகிறது. உண்மையில் குழந்தை ரூபமாக இருப்பவர்கள் நீங்களே! ஹே! அஸ்வினி தேவர்களே என்னுடைய ஜீவனை ரட்சிப்பதற்கு ஆதாரமாக உள்ள கண்பார்வையை எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்” என்று கூறி அஸ்வினி தேவர்களை மனமுருக பிரார்த்தனை மீண்டும் கண்பார்வை கிடைத்தது எல்லோருக்கும் உடனே உதவத் துடிக்கும் அஸ்வினி தேவர்கள் தன்னை அண்டி வணங்கிய உபமன்யுவின் துதியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். உபமன்யுவின் மூன் தோன்றி, அவர்கள் “நாங்கள் திருப்தி அடைந்தோம். இதோ இந்தத் தின்பண்டத்தை உடனே உட்கொள்” என்று கூறி அவர் உண்ண தின்பண்டம் ஒன்றைத் தந்தனர். உபமன்யு, “நீங்கள் கொடுப்பதை என் குருவுக்கு முதலில் கொடுக்காமல் நான் சாப்பிடத் துணியேன்” என்றார். உடனே அஸ்வினி தேவர்கள் பழைய சம்பவம் ஒன்றை உபமன்யுவிடம் கூற ஆரம்பித்தனர். “முன்னொரு காலத்தில் உன்னுடைய குருவானவர் எங்களைப் பிரார்த்தித்தார். நாங்கள் அப்போது அவருக்கு இதே மாதிரி தின்பண்டம் ஒன்றை உண்ணுவதற்காகத் கொடுக்காமலேயே தந்தோம். அதை அவர் தன் குருவுக்குக்“யா. ஆகவே, உன குரு முன் செய்த பிரகாரமே நயும் அவருக்குக் கொடுக்காமல் உடனே இதைச் சாப்பிடலாம் என்று கூறினர். உபமன்யு, “ஓ! அஸ்வினி தேவர்களே என்னை மன்னிப்பீர்களாக இதை என் குருவுக்குக் கொடுக்காமலேயே நான் சாப்பிட மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினார். உடனே அஸ்வினி தேவர்கள், “உன் குருவின் மீது உனக்கு இருக்கும் பக்தியை மெச்சினோம். உன் குருவினுடைய பற்கள் காரிருப்பினால் ஆக்கப்பட்டுள்ளன. உன்னுடைய பற்கள் தங்கப் பற்களாகக் கடவது” என்று கூறி ஆசீர்வதித்தனர். ‘இனி நீ உன் பார்வையை அடைவாய். உனக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்” என்று கூறி அஸ்வினி தேவர்கள் மறைந்தனர். குருவிடம் உபமன்யு நடந்த அனைத்தையும் கூறி வணங்கினார். தௌம்யர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். உபமன்யுவை நோக்கி அவர், “நீ இனி அஸ்வினி தேவர்கள் கூறியபடியே சகல க்ஷேமத்தையும் அடைவாய். எல்லா வேதங்களும் எல்லா தர்ம சாஸ்திரங்களும் உன்னிடத்தில் விளங்கும்” என்று கூறி ஆசிர்வதித்தார். அதன்படியே உபமன்யு வேத சாஸ்திரங் களில் தேர்ந்து பெரும் தவம் புரிந்து பெரிய மஹரிஷியாக ஆனார். அஸ்வினி தேவர்கள் அனைவருக்கும் உதவி செய்த ஏராளமான சம்பவங்களுக்கு உபமன்யுவின் கதை ஒரு சிறந்த சான்று.
மர்மங்கள் நிறைந்த அஸ்வினி நட்சத்திரம்! Read More »









