
முருகனைப் பற்றி சித்தர்களின் கருத்து முருகன் கடவுளா? அல்லது மனிதனா? போகர் 7000 என்ற பெருநூலில் முருகனைப் பற்றிய பதிவுகளைப் பார்ப்போம்
செப்பலாம் சுப்ரமணியன் என்பார் பாரு சிறப்பான மனிதனல்லால் வேறொன்றில்லை
ஒப்பமுடன் நீநினைத்த சுப்பிரமணியன் ஓகோகோ நாதாந்தக் கடவுளாசசு போகா
போகர் 7000 பாடல் 5622
“புல்லவே கவிவாணர் கட்டுவாக்கியம் புகழாகப் பலப்பலவாம் நாம்மதன்னை
சொல்லவே நற்கடவுள் என்றுகூறி செம்மலுடன் மதிகெட்டும் துதிப்பார்பாரே”
போகர் 7000 பாடல் 5623
தென்திசையில் அகத்தியாக்கு உபதேசங்கள் செய்த்தொரு வடிவேலா
சித்துதாமும் பன்றிபெருச் சாளியின்மேல் சவாரியேகும் பண்பான
விநாயகருக்குத தமபியாமே தம்பியே
எந்தனுக்குக் குருவும் ஆகும் தாக்கான வடிவேலா தன்மைபாரே”
போகா போகா 7000 பாடல் 5942 5943
கடவுள் என்று நீ நினைத்த சுப்பிரமணியன மனிதனாகப் பிறந்து, வாசியோகத்தில் நாதாந்தம் என்ற இறைநிலை அடைந்து கடவுளநிலை ஆனவர் வடதிசையில் குரு முனிவர் அகத்தியாக்கு வடமொழி கிரந்தத்தில் அஷ்வினி தேவர்கள் குரு அது முழுமையுடையதாக இல்லை என்பதால் தெனதிசையில் ஞானம் பெற முருகனைத் தேடிவந்தவர் அகத்தியா (அகத்தியர் முருகனைச் சந்தித்த நிகழவைப பிறகு பார்ப்போம்) தென்திசையில் தமிழ மொழியில் அகத்தியாக்கு ஞானகுரு முருகன் ஆவார் வடிவேலா என்ற முருகன் ஒரு சித்தா ஆவார் ஆனால், முருகனைப் பன்றி போன்ற பெருச்சாளிமீது சவாரி செய்யும் விநாயகக் கடவுளின் தம்பி என்று புராணங்களும் சாத்திரங்களும் தவறாகச் சொல்கின்றன விநாயகக கடவுளுக்குத் தம்பி என்று சொல்லப்பட்ட முருகன் எனக்கு குரு இத்தகைய மகாசித்தரைப் பலபல பெயர்கள் சொல்லி இறைவன என்று கவிவாணர்கள் சொல்லியதை நம்பி மதிகெட்டுத் துதிக்கிறார்கள் போகா தனது குருவான முருகனுக்குப் பழநியில் நவபாசாணச் சிலை வைத்து அபிசேகம் செய்து, அபிசேகப் பிரசாதத்தால் தீராத நோய்களைத் தீர்த்தார் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இது நடந்தது தற்போது இச்சிலை அகற்றப்பட்டது
முருகன் உண்மையாகவே மனிதனா அல்லது கடவுளா?
முருகன் வாசியோகம் செய்து. அதில் நாதத்தின் முடிவு கண்டு நாதாநிலை பெற்ற சித்தராகி, கடவுளநிலை அடைந்தவர் புராணங்களில் முருகனைப் பரமசிவனின் மகன் என்றும் விநாயகருக்குத் தம்பி என்றும் கட்டுக்கதை மற்றும் புராணங்களைப் புனைந்தனர் முருகன் போகருக்குக் குரு ஆவார்
மூன்று யுகங்களிலும் முருகன் இருந்தாரா அதிர்ச்சி தகவல்
முருகன மனிதன் என்றால் அவர் தோன்றிய காலம் மனிதநிலையில் வாழ்ந்த காலம் எது? என்பது பற்றி போக சொலவதைப் பார்ப்போம்
“துன்னவே மூன்றுயுகம் கடந்த வேலா துப்புறவாய்ப் பிறந்ததொரு
நேர்மையப்பா சொன்னபடி ஆவணியாம திங்களப்பர் சொல்லுகிறேன்
முதற்பூசங் காலதானொன்றே” போகர் 7000. பாடல் 594!
மூன்று யுகங்களுக்கு முன்பு, ஆவணி மாதம் பூச நட்சத்திரம் முதல் காலில் பிறந்தவர் வயது மற்றும் காலத்தினை நிர்ணயம் செய்யமுடியாது முருகன வாழ்ந்த காலம் பற்றி காகபுசுண்டர் சொல்வதைப் பார்ப்போம்
பேச்சப்பா வேலவரும் தொக்கித்தக்கி பிரளயங்கள் முடிந்தவுடன் இவ்விடம் வந்தார்
மூச்சப்பா யென்னவென்று வினவிக்கேட்டேன் மூதறிவினோடு
எனக்கு முறையைச் சொன்னார் வாச்சப்பா யிருவென்று யுகங்கள்தோறும்
மறைந்துநான் வெளியேறும் வகையுஞ் சொன்னேன் காச்சப்பா யிருவென்று
யிருத்தியென்னைக் கருதிவந்த விபரமெல்லாம் கேட்டிடடாரே”
காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 பாடல் 923
வாட்டமிலாதே கேட்டுக் குமரனுந்தான் மலைமேலே சென்றுவிட்டான் மார்க்கத்தோடே”
காகபுசுண்டா. பெருநூல் காவியம் 1000 பாடல 92
முதன்முதலாக ஏற்பட்ட குமரிக்கண்டத்தில் லெமோரியா கண்டம் முதல் சுனாமி
குமரிக்கண்டம் இருந்தபோது முதல் தமிழ்ச்சங்கம் இருந்தது குமரிக்கண்டத்தில் முருகன் அரசனாகவும், தமிழ்ச்சங்கத் தலைவனாகவும் கடம்ப மாலையைத் தரித்து வாழ்ந்தார் இவர் கந்தமுருகன் என்றும் குறிப்பிடப்படுகிறார் இது பல சஙக நூல்களின் மூலம் அறியப்பட்டது இதை உறுதி செய்யும் வகையில் காகபுசுண்டர் பாடல் உள்ளது பல பிரளயங்கள் ஏற்பட்டுக் குமரிக்கண்டம் அழிந்தது பிரளயங்கள் முடிந்தபின்பு, பிரளயங்களில் இருந்து பெரும் முயற்சியால் தப்பிப் பிழைத்து, காகபுசுண்டர் வாழ்ந்த இடத்திற்கு வந்தார் வேலன் என்ற முருகன காகபுசுண்டர் முருகனிடம் “என்னைத் தேடி வந்த காரணம் என்ன?” என்று கேட்டார் அதற்கு முருகன் மூதறிவுடன் மிகுந்த ஞானத்துடன், தான் பிரளயத்தில் இருந்து தப்பிவந்தத் தொழிலநுட்ப முறையைச் சொன்னார் மேலும் நான் பிரளயத்தில் இருந்து தப்பியதைக் கேட்டார் நான் எப்படி ஒவ்வொரு பிரளயத்தின்போதும் மறைந்து, மீண்டும் பிரளயம் முடிந்தபின் வருகிறேன் என்ற தொழில்நுட்ப வகையைச் சொன்னேன் மேலும் அவர் அறிய விரும்பிய பல தொழில்நுடப் விபரங்களையும் கேட்டு அறிந்தார் அதன்பின் என்னை நான் இருந்த இடத்திலேயே இருக்கச் சொல்லி, அவர் மலைமேல் சென்று அமர்ந்தார் முருகன், இராமாயணக காலத்திற்கும் முற்பட்டவன் என்பதை, வசிஷ்டா இராமனுக்கு உபதேசம் செய்த ஞானோதயம் என்ற நூலிலிருந்து அறிகிறோம் மேலும் முருகனைப் பார்த்து, ஞானம் பெறுவதையும் சொலகிறார்
வசிஷ்டருக்கும் முருகனுக்கும் எப்படி தொடர்பு? என்ற கேள்வி எழுகிறது காகபுசுண்டர் வசிஷ்டருக்குக் குருவாக இருந்து உபதேசம் செய்தநூல்
காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 சென்ற பாடலில்
முருகனும் காகபுகண்டரும் தங்களது தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து பெற்ற யோக ஞானத்தை வசிஷ்டருக்குக் கற்பித்துள்ளார் இந்த யோக ஞானத்தை முருகனிடம் இராமன் பெறுவதைக் கீழ்க்கண்ட பாடல் சொல்கிறது
யோகமதில ரேசக பூரசும் பண்ணி உண்மையுடன் கும்பகத்தில் நின்றுகொண்டு ஏகமென்ற மனதுரமாய் செபித்தாயானால் என்மகனே வடிவேலன் பிரகாசிப்பான தாகமாய் அவர்பதமே பணிந்து போற்றி தண்மையுள்ள சிவாயகுரு சிவமே என்று வேகமுடன் பூட்டுமுனை திறகக வென்று வேண்டினால் திறவுகோல் தருவார்தானே” வசிஷ்டர் ஞானோதயம் 15 பாடல் 10
வாசியோகத்தில் ரேசக பூரகம் செய்து, கும்பக நிலையில் மனதை ஒருமுகப்படுத்தி முருகனைத் துதி அப்போது முருகன பிரகாசிப்பான சுழிமுனை திறக்கும் சூட்சமத்தை வேண்டிக்கேள அப்போது பத்தாம் வாசலாகிய சுழிமுனை திறக்கும் வழியை முருகன் சொல்வார் இப்பாடலில் அறிவது முருகன் இராமாயண காலத்திற்கும் முந்தையவன் இராமாயண காலத்தில் வேண்டியவாக்கு ஞானம் வழங்கியவன் இராமனும் முருகனின் வாசியோகத்தைக் கற்றவன் நாமும் வாசியோகம் கற்று ஞானம் பெறுவோம் முருகன் செய்தது. உபதேசித்தது, முருகனின் தற்போதைய ரூபம் மற்றும் உண்மைகளை அடுத்துக் காண் செய்த்து முருகனைப் பற்றி பிற சித்தர்கள் கூறியவற்றைக் கண்டோம் முருகனைப் பற்றி அவரே கூறிய
வருந்தியெனைப் பணிந்தவர்கள் குருவென்றார்கள் செல்லடா
செல்லனென்றுஞ் சிவனானென்றுஞ் செப்பினா ரோமென்று மாமென்றேனே?
சுப்பிரமணியா ஞானம் 500 பாடல் 362
ஆமென்ற சொற்கேட்டுச் சித்தாகூடி யாதிகுரு நீயென்று அருளைப்போற்றி
ஓமென்று குண்டலியைப் பார்த்தேயோடி யுனைபோலே சித்தாகடா னிலலையென்றார்
நாமென்று அவர்களுக்குச் சொன்னபேச்சு நாதாந்த மௌனமதை
யவாக்கேயீந்தேன் ஓமென்று மாமென்று மெழுத்தைக்காட்டி
உயர்வான வடகிரியி லிருமென்றேனே”
சுப்பிரமணியர் ஞானம் 500 பாடல் 363
இருமென்ற பேச்சாலே ஆ-ஊ-என்று ஏகினார் குறுஞ்சித்த ரனேகங்கோடி திருமந்திர மூலமெல்லாம் வெளியாயகாட்டிச் செகத்திலுள்ள மனிதர்களைச் சித்தராக்கி குருமந்தர மறியாமற சாவாரென்று குணம்வந்து மனமிரங்கிக குருபோற சொன்னேன மருமந்தர மேதுக்கு மக்காள்மக்காள் மகாரமல்லோ தீபவொளி மார்க்கம் பாரே”
-சுப்பிரமணியா ஞானம் 500 பாடல் 364
பிற சித்தர்கள் எல்லாம் கூடி முருகனை குருவாக இருந்து யோகம், ஞானம் போன்றவற்றை அருளும்படி வேண்டினர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி முருகனும் ஒத்துக்கொண்டார்? அனைத்துச் சித்தர்களும் முருகனை ஆதிகுரு எனப் போற்றி வணங்கினா.
முருகனின் யோக மார்க்கத்தைக் கற்ற சித்தாகள் குண்டலினியை எழுப்பி முகதிநிலையை அடைந்தனா சிவன் அருளிய ஆறாதாரங்களைத் தாண்டி ஏழாவது நிலையான சகஸ்ராரம் என்ற விந்துநிலையினைக் கண்டறிந்து உலகிறகு அளித்தார் முருகன் எனவேதான் முருகன பரமகுரு என்றும் போற்றப்படுகிறார் அதாவது பரமனுக்கே, குருவாக விளங்கியவர் முருகன நமது உடலின் உள்ளிருக்கும் ஆதாரங்கள் சட ஆதாரங்கள் எனப்படும் உடலுக்கு வெளியே பரவெளியில் ஆறு ஆதாரங்கள் உள்ளன அவை நிராதாரங்கள் எனப்படும் சட ஆதாரங்களைக் கடந்து நிராதாரங்களில் யோகம் புரிவதே மௌனயோகம் எனப்படும் நாதாந்தம் என்பது மௌனயோகத்தைக் குறிக்கும் அதற்கான மந்திரமே ‘ம’ ஆகும் இத்தகைய மௌனயோகத்தையும் அதற்கான மந்திரத்தையும் அருளியதால் முருகன் ஆதிகுருவாகத் துதிக்கப்படுகிறார் இந்த அ உ ம மந்திரத்தைப் பலகோடி குறுஞ்சித்தர்கள் ஓதினார்கள் முருகன் சாதாரண மனிதர்கள் அனைவரையும் சித்தராகக விழைந்தார் ஆயினும் தன்னைக் குரு என்று கூறிப் பெருமிதப்படவில்லை குருபோல சொன்னேன் என்றுத் தன்னடக்கமாக உரைக்கிறார். குருமந்திரமாகிய அ உம எனும் மந்திரம் அறியாமல் உலக உயிர்கள் மாளும் என மனமிரங்கி உலக மக்களுக்கு உரைத்தார் இந்த மௌன யோக மார்க்கமான தீபவொளி மார்க்கம் அல்லது வாலை மார்க்கத்தைச் செய்து பார்த்து முகதியடைய வேண்டுகிறார்
இப்போது கொஞ்சமாக நாம் புரிந்திருப்போம் முருகன் யார் என்று ஆனால் இது பத்தாது இன்னும் பல விஷயங்களை முருகனைக் குறித்த பல தகவல்கள் உள்ளன அது இன்னும் அடுத்தடுத்த பதிவில் நம்ம பார்த்துக்கிட்டே இருக்க போறோம் தொடர்ந்து இணைந்திருங்கள்
உங்கள் வினோதனுடன்