மூன்றாவது விழியின் ரகசிய விஞ்ஞானம்
Post Views: 291 நெற்றியில் சந்தனத் திலகமோ, குங்குமத் திலகமோ வைப்பது பற்றி உங்களிடம் பேசுவதற்கு முன்னால், இரண்டு நிகழ்ச்சிகளைச் சொல்லப் போகிறேன். புரிதலுக்கு இவை உதவும். இரண்டுமே வரலாற்று உண்மைகள்,1888ல் தென்னிந்தியாவில், ஓர் ஏழை பிராமணக் குடும்பத்தில் ராமானுஜம் என்பவர் பிறந்தார். பிற்காலத்தில் புகழ்பெற்ற கணிதமேதையாகத் திகழ்ந்தார். அவர் அதிகம் படிக்கவில்லை. என்றாலும் அவரது கணித மேதமை வித்தியாசமானதாக இருந்தது.நன்கு கணிதம் கற்ற அறிஞர் பலர் புகழ் பெற்று விளங்கியதற்குக் காரணம். அவர்களுடைய பயிற்சியும் நீண்டகாலம் அவர்களுக்குக் கிடைத்த நிபுணர்களின் வழிகாட்டலும்தான். ஆனால், ராமானுஜம் பள்ளி இறுதி வகுப்பு கூட முடிக்காதவர்! அவர் யாரிடம் பயிற்சியும் பெறவில்லை. எவருடைய வழிகாட்டலும் அவருக்குக் கிடைக்கவும் இல்லை. அப்படியிருந்தும் அவரைப்போல ஒரு கணித மேதை இருந்ததே இல்லையென்று கணித நிபுணர்கள் கூறுகிறார்கள்! ஒரு எழுத்தர் வேலை வாங்குவதற்குக் கூட அவர் படாத பாடுபட வேண்டிஇருந்தது. ஆனால், அவரிடம் அபூர்வமான கணிதத்திறன் இருக்கும் செய்தி. விரைவில் பரவிவிட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற கணிதப்பேராசிரியர் ஹார்டிக்குக் கடிதம் எழுதச் சொல்லி யாரோ ஆலோசனை கூறினார்கள். அந்தக் காலத்தில் அவர் பிரபலமானவராகத் திகழ்ந்தவர். ராமானுஜம் கடிதம் எழுதுவதற்குப் பதிலாக இரண்டு தேற்றங்களுக்கு விடை கண்டு அவருக்கு அனுப்பி வைத்தார். அவை வடிவியல் தேற்றங்கள். அவற்றைப் பார்த்து வியந்த பேராசிரியர், ராமானுஜத்தை உடனே இங்கிலாந்திற்கு வருமாறு கடிதம் எழுதினார்! அவ்வளவு சிறிய வயதுக்காரரால் எப்படி அவற்றிற்கு விடை காண முடிந்தது என்று பேராசிரியர் திகைத்துப் போனார்.ஹார்டி ராமானுஜத்தை சந்தித்தபோது, ராமானுஜருக்கு முன், கணிதத் துறையில் தான் ஒரு குழந்தை என்று உணர்ந்தார். ராமானுஜத்தின் திறமை மனதின் ஆற்றலால் விளைந்ததன்று. அறிவாளிகள் மனதில் நிதானமாகவே யோசிக்கிறார்கள். ராமானுஜரோ சட்டெனச் சொல்லி விடுகிறார் கணக்கைக் கரும்பலகையில் எழுதியவுடனே அல்லது சொன்னவுடனே, சிந்திக்க இடைவெளி எடுத்துக் கொள்ளாமல் உடனே பதில் சொல்லிவிட அவரால் முடிந்தது!அது எப்படி என்பதை, எந்தக் கணித மேதையாலும் கணித்துச் சொல்லமுடியவில்லை. ராமானுஜம் போட்ட கணக்கைப் போட ஒரு பிரபல கணித மேதைக்கு ஆறுமணி நேரம் பிடித்தது அப்போதும் கூட தம் விடை சரியானதுதானா என்பதை அவரால் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. ராமானுஜம் சட்டெனச் சொன்னார்; சரியாகச் சொன்னார். அவர் மனதின் மூலமாக விடை கண்டதாகத் தெரியவில்லை. அவர் படித்தவரும்அல்ல மெட்ரிக் வகுப்பில் தோற்றுப் போனவர்!அவரது மேதமைக்கு வேறு புறக்காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. என்றாலும் அவர் கணிதத்தில் அதிமனிதனாக விளங்கினார். அவரது மனதைக் கடந்து, அதற்கு அப்பால், அவருக்குள் ஏதோ நிகழ்வதாகத் தோன்றியது. எலும்புருக்கி நோயால் இறந்தபோது அவருக்கு வயது முப்பத்தி ஆறு. உடல் நலம் மிகவும் கெட்டு, அவர் மருத்துவமனையில் படுத்திருந்தபோது, ஹார்டி தனது நண்பர்களான சில கணித மேதைகளுடன் அவரைப் பார்க்கச் சென்றார்.அவர் தம் காரை வெளியில் நிறுத்துவதை, ராமானுஜம் தம் அறையிலிருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். ஹார்டி அறைக்குள் வந்ததும், அவருடைய காரின் எண் மிகவும் வித்தியாசமானது என்று ராமானுஜம் சொன்னார். அந்த எண்ணில் நான்கு சிறப்பு அம்சங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். ராமானுஜம் காலமான பிறகு, அவர் சொன்னதைப் புரிந்து கொள்ள, பேராசிரியருக்கு நான்கு மாத காலம் பிடித்தது! அதுவும் மூன்றுஅம்சங்களைத்தான் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது! ராமானுஜம், தமது உயிலில், அந்த எண்களைப் பற்றி ஆராயுமாறு குறிப்பிட்டிருந்தார். ஹார்டி இறந்து இருபத்தியிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்பே, கணித மேதைகளுக்கு அந்த நான்காவது சிறப்பு அம்சம் விளங்கியது! ராமானுஜம் ஒரு கணிதச் சிக்கலைத் தீர்க்க முயலும் போதெல்லாம். அவரது கருவிழிகள் இரண்டும் மேலேறி புருவ நடுவை நோக்கி உயர்ந்தன! யோகத்தில் அந்த இடத்தை மூன்றாவது கண்ணின் இருப்பிடம் என்று குறிப்பிடுவார்கள். அந்த நெற்றிக்கண் தூண்டுதல் பெறுமானால், சில அபூர்வமான மண்டலங்கள் முழுவதுமாய் தெரிய ஆரம்பித்து விடும்.நாம் நமது வீட்டிற்குள்ளிருந்து. கதவின் சிறிய துளை வழியே வெளியே பார்த்துக் கொண்டிருக்கும்போது, திடீரெனக் கதவே திறந்து விட்டால். எவ்வாறு முழு வானமும் புலப்படுமோ அதுபோலத்தான் அது! இரு புருவங்களுக்கும் நடுவில் ஒரு சிறு துளை இருக்கின்றது. அது எப்போதாவது திறக்கும், ராமானுஜத்திற்கு அப்படித்தான் திறந்தது. விழிகள் மேலேறும்போது அது நிகழ்ந்தது. அப்போது விடை கிடைத்தது, அது ஹார்டிக்கும் தெரியவில்லை; மற்ற மேலை நாட்டுக் கணித மேதைகளுக்கும் இதுவரை தெரியவில்லை. மூன்றாவது கண்ணுக்கும் குங்குமத் திலகம் இடுதலுக்கும் உள்ள தொடர்பை விளக்க, நான் இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். எட்கர் கேய்ஸ் என்பவர் 1945ல் இறந்தார். நாற்பது ஆண்டுகளுக்கு முன், அதாவது 1905ல் அவர் கடும் நோய்வாய்ப்பட்டார். நினைவிழந்து மூன்று நாட்கள் ‘கோமா’நிலையில் கிடந்தார்.அவரை நினைவிற்குத் திரும்பவும் கொண்டுவர எவ்வளவோ முயற்சிகள் செய்தும் முடியவில்லை. அவரது ஆழ்மனம் மீண்டும் மேல் தளத்திற்கு வராது என்று மருத்துவர்கள் முடிவு கட்டினார்கள். நம்பிக்கையிழந்த மருத்துவர்கள், மூன்றாம் நாள் மாலை, மரணம் நிச்சயம் என்று சொல்லி விட்டார்கள். நான்கு மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் உயிர் போய்விடும் என்று சொன்னார்கள். ஒரு வேளை அவர் சாகாமல் போனால், அது மரணத்தைவிட மோசம், மூளைஅழிந்து போகும். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களும் செல்களும்தொடர்பறுத்துக் கொண்டு சிதைந்துவிடும் என்றார்கள். ஆனால், கேய்ஸ் ‘கோமா’நிலையில் இருந்தபடியே பேசத் துவங்கினார்! மருத்துவர்களால் நம்பமுடியவில்லை! உடல் பிரக்ஞையற்றுக் கிடக்கிறது. ஆனால், அவர் பேசுகிறார்!தாம் மரத்தின் மேலிருந்து கீழே விழுந்து விட்டதாகவும் முதுகெலும்பு முறிந்துவிட்டதாகவும் அதனால்தான் நினைவு தப்பிவிட்டதாகவும் அவர் கூறினார்!ஆறு மணி நேரத்தில் தமக்குச் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் தாம் இறக்க நேரிடும் என்றும் கூறி, சில பச்சிலைகளின் பேரைச் சொல்லி, அதைச் சாறு பிழிந்து கொடுத்தால் பன்னிரண்டு மணி நேரத்தில் தாம் பிழைத்துக் கொள்ள முடியும் என்றும் கூறினார்! அவர் சொன்ன மூலிகைகளின் பெயர்கள் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமே இல்லை. அவரது மூளை கெட ஆரம்பித்து விட்டது. அதனால் உளற ஆரம்பித்து விட்டார் என்றே மருத்துவர்கள் முதலில் நினைத்தார்கள். ஏனென்றால், அவர் குறிப்பிட்ட மூலிகைகள் அதுவரை அவரது நோய்க்கு மருந்தாக அறியப்படவே இல்லை.சிரமப்பட்டு தேடிக் கொண்டு வந்ததில் அவர் பிழைத்து விட்டார்! அவர் சொன்னபடியே பன்னிரண்டு மணி நேரத்தில்! அப்புறம் அவரிடம் அதைத் தெரிவித்தபோது, அப்படிச் சொன்ன நினைவே அவருக்கு இல்லை! அந்த மூலிகைகள் பெயர்கள் அவருக்குத் தெரிந்ததாகவே இல்லை. ஆனால், அன்று முதல் அவர் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டு விட்டது.பிற்காலத்தில், குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு அவர் இயற்கை வைத்தியம் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய வாழ்நாளில், அவ்வாறு முப்பதாயிரம் பேரை அவர் குணப்படுத்தினார்! அவர் சொன்னதெல்லாம் சரியான மருந்தாகவே இருந்தது! விதிவிலக்கேஇல்லாமல் அவர் அனைவரையும் குணப்படுத்தினார்! ஆனால், அது எப்படி என்றுஅவரால் விளக்க முடியவில்லை!நோயாளி வந்து தம் நோயைத் தெரிவித்தால், அவர் கண்களை மூடிக் கொள்வார். அவரது கருவிழிகள் புருவ நடுவிடம் நோக்கிப் போகும். அவை அவ்வாறு அங்கே நிலைத்திருக்கும்போது, அவர் எல்லாவற்றையும் மறந்து விடுவார். ஒரு கட்டத்திற்குப் பிறகுதான் அவர் நினைவு திரும்பும். அந்த நினைவு மறந்த நிலை வராமல், அவரால் மருந்தைக் குறிப்பிட முடியாது. அவரது வாழ்வில் இரண்டு முறை குறிப்பிட்ட சிகிச்சை, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதை நாம் நினைவில் கொள்வது நல்லது.அமெரிக்க நாட்டின் மிகப் பெரிய செல்வர்களில் ஒருவர் ரோத்சைல்ட்ஸ் அவருடைய குடும்பத்தில் ஒரு பெண் நீண்டகாலமாக நோய்வாய்ப் பட்டிருந்தாள். எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அவளை எட்கர் கேய்சிடம் அழைத்து வந்து காட்டினார்கள், தமது ஆழ்மன நிலையில் அவர் ஒரு மருந்தைக் குறிப்பிட்டார்.அவரது ஆழ்மன நிலையில் அவர் நினைவிழந்து காணப்பட்டாலும் அவர் முழுப்பிரக்ஞை நிலையில்தான் இருந்திருப்பார் என்றே விவரம் அறிந்தவர்கள்சொல்வார்கள். உண்மையில், அந்த ஆழ்மன நிலை, மூன்றாவது விழியைஅடைகிற வரைக்கும்தான் நிலைத்திருக்கும்.ரோத்சைல்ட்ஸ், கோடீஸ்வரர் என்பதால், எந்த மருந்து எங்கிருந்தாலும் அவரால் தருவித்துவிட முடியும். ஆனால், அவரால் அப்போது முடியவில்லை. அது எங்கு கிடைக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. அப்படியொரு மருந்துஉண்மையில் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருந்தது. உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகைகளில் எல்லாம் விளம்பரம் செய்தார்கள். மூன்று வாரங்களுக்குப் பிறகு ஸ்வீடனிலிருந்து ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். தற்போது அப்படியொரு மருந்தே இல்லையென்றும். இருபது ஆண்டுகளுக்கு முன் தன் தந்தை அப்படியொரு மருந்தைக் கண்டுபிடித்தார் என்றும், ஆனால், அதை தயாரிக்கவே இல்லையென்றும், ஆனால், அதே பெயரில் அதை அரசாங்கத்தில் பதிவு செய்திருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்!தந்தையார் இறந்து விட்டதால், அவர் எழுதி வைத்திருந்த செய்முறையை அனுப்பி வைத்திருந்தார். அதன்படி மருந்து தயாரிக்கப்பட்டது. அந்தப் பெண்மணி பூரணகுணம் அடைந்தாள்!கண்டுபிடித்ததோடு நின்றுபோன, கடைக்கு வராத அந்த வெளிநாட்டு மருந்து பற்றி கேய்சுக்கு எப்படித் தெரிந்தது? இன்னொரு சமயம், அவர் ஒருவருக்கு இன்னொரு மருந்தைச் சொன்னார். ஆனால், அந்த மருந்து கிடைக்கவே இல்லை. ஓராண்டு கழிந்த பின்பு, அந்த மருந்து கிடைக்கும் என்று ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதற்கு முன்னால் அது ஆய்வுச் சாலைகளில் சோதனை நிலையில் இருந்திருக்கிறது. அதற்குப் பெயர்கூட வைக்கப்படவில்லை! அதற்கு முன்னால், பிற்காலத்தில் வைக்கப்போகும் பெயரை கேய்ஸ் எவ்வாறு கூறினார்? எப்படியோ, அந்த மருந்து கொடுக்கப்பட்டு நோயாளியும் குணமானார்!சில சமயங்களில் அவர் குறிப்பிடும் மருந்து கிடைக்காமல் நோயாளிகள் இறந்திருக்கிறார்கள், ஏன் அப்படி என்று அவரைக் கேட்டபோது, “நான் என்ன செய்யட்டும்? நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று சொன்னார்.“நான் நினைவிழந்த நிலையில் இருக்கும்போது, அந்த மருந்துகளின் பெயர்களைப் பார்ப்பது யார். அவற்றைச் சொன்னது யார் என்றே எனக்குத் தெரியாது. எனக்குள் அப்படிச் சொல்லும் ஆளுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை” என்று அவர் கூறினார்.ஒன்று மட்டும் உறுதி. அவர் அந்த நிலையில் இருந்து பேசும்போது அவரது கருவிழிகள் மேலே ஏறி நின்றன. நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, நமது கருவிழிகள் மேலேதான் போய் விடுகின்றன. உறக்கம் எவ்வளவு ஆழமோ அந்த அளவு கருமணிகள் மேலே போகும். உளவியல்
மூன்றாவது விழியின் ரகசிய விஞ்ஞானம் Read More »