உங்கள் சந்தோஷ உணர்வு தான் உங்கள் தெய்வீக உணர்வு
Post Views: 462 சந்தோஷ உணர்வு தான் உங்கள் தெய்வீக உணர்வு…. இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஜீவராசிகள் அனைத்தும் ஏதோ ஒன்றிற்காக வாழ்ந்து பிறகு வாழ்வை மடிக்கின்றது. ஆனால் யாருக்கும் மனத் திருப்தி என்பது அறவே கிடையாது ஏனெனில் அவைகள் தினம் தினம் ஒருவித கவலைகள் செல்கின்றன. கவலை என்பது உங்களுக்குள் இருந்து தோன்றுகின்றது நீங்கள் வாழும் முறையில் பலரை பார்த்தும் சில எதிர்பார்ப்புகள் சில ஏமாற்றங்கள் நீங்கள் வாழ்ந்து உங்களுக்கு ஏழும் பெரும் பிரச்சனை விடை தெரியாமல் போவதால் கவலை உங்களை ஆட்கொள்கிறது. சரி சந்தோஷ உறவு உணர்வினை எப்படி அதிகப்படுத்துவது என்பதை பார்ப்போம் ஆனால் இதற்கிடையில் இவ்வித உணர்வுகளையும் நாம் தெரிந்து கொண்டும் புரிந்து கொண்டு வந்தால் ஒழிய நாம் சந்தோஷம் உணர்வினை அடைய முடியும். ஏனெனில் நாம் அனைவரும் சந்தோஷம் உணர்வின் மூலம் தான் இங்கு பிறப்பெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் குழந்தையிலிருந்து அந்த உணர்வு நாம் முதிர்ச்சி அடைய முதிர்ச்சி அடைய நம்மை விட்டு போய் விடுகிறது. இதற்கு காரணம் நாம் அனைவரும் சந்தோஷம் என்பது மனிதன் மூலமாகவோ பஸ் மூலமாகவோ இருப்பின் அதன் மூலமாகவும் அவை வெளியில் கிடைக்கிறது என்று நாம் நம்பி இருக்கிறோம் உண்மையில் சந்தோஷம் என்பது உங்களுக்குள்ளேயே தான் இருக்கிறது வெளியில் தோன்றும் பிறரின் மூலமும் சந்தோஷம் கிடைக்கிறது என்பது ஒருவித உங்களின் மனம் செய்யும் தந்திரம். ஆனால் உண்மையில் சந்தோஷம் என்பது நீங்கள்தான் உங்களுக்குள் தான் இருக்கிறது அதனை நீங்கள் உணர வேண்டும் அதை உணர்வதற்கு முன்பாக பிற உணர்வுகள் நம்மை வாழ்நாள் முழுவதும் ஆட்கொண்டு இந்த சந்தோஷம் என்கிற உணர்வை சிறிதாக நமக்கு கொடுப்பதால் நாம் அதை மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வெளியே தேடி அதை பெற நாம் கஷ்டப்படுகிறோம். பிற உணர்வுகளில் சிக்கி உள்ள நாம் இந்த சந்தோஷம் உணர்வில் எப்போதும் இருக்க நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும் இந்த உணர்வினை புரிந்து கொள்வதற்கு பதிலாக முதலில் நாம் நம் மனதை புரிந்துகொள்ள வேண்டும் ஆம் மனதை புரிந்து கொள்ள வேண்டும் அனைத்து வித உணர்வு ஏற்படுவதற்கு காரணம் நம் மனமே மனம் தான் இவை அனைத்தும் ஏற்படுத்துகிறது நம் உடலில் உள்ள மனதின் உணர்வுகளை மாற்றினால் ஒழிய நாம் வாழ்வை மாற்ற முடியும் இல்லையெனில் நமது வாழ்க்கை பாராது ஏனெனில் வாழ்க்கை என்பது உண்மையான அர்த்தம் வாழுதல் வாழ்தல் என்பது உங்களின் உணர்நிலை எவ்வித உணர்வில் நாம் இப்போது வாழ்கிறோமோ இந்த நொடி அந்த உணர்வு நிலையை நாம் வாழ்க்கை ஆகையால் உணர்வினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகுஅவ் உணர்வுநிலையை கையாலள நமக்கு தெரிந்தால் நாம் முழுமையான வாழ்க்கையை வாழ்வோம். சரி சந்தோஷ உணர்வு நமக்கு தடைபட என்ன காரணம் ஏன் இவை எப்போதாவது நமக்கு கிடைக்கிறது என்பதை நாம் முதலில் அலசுவோம். முதன்மையான ஒன்று ஆசை ஆசை என்கிற ஒன்றை நாம் எதில் வைக்கிறோமோ நம்முடைய சந்தோஷ உணர்வு அங்கு தடைபடுகிறது ஏனென்றால் ஆசையே துன்பத்திற்கு காரணம். https://www.youtube.com/results?search_query=vinodhan நம் மனம் ஆசை ஒன்றை உருவாக்கி அதை அடைந்தால் தான் நமக்கு சந்தோஷம் என்கிற நிலை உருவாக்கப்படுகிறது அதனால் சந்தோஷம் இல்லாமல் நாம் அலைகிறோம். இவ்வுலகில் ஆசையை நோக்கியே தான் நாம் வாழ்கிறோம் நாம் எந்த அளவுக்கு ஒரு நபரின் மீது பொருளின் மீதோ அல்லது இல்லாத ஒன்று ஏதோ பணத்தின் மீது ஆசை கொள்ளும் போது அதை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றுகின்றது. எப்படி ஆசை உருவாக்கப்படுகிறது என்றால் பிரிந்து செல்வதைத் தவிர்ப்பதன் மூலமாகவும் அதை நாம் உருவாக்கிக் கொண்டு அந்த ஆசையை நாம் உருவாக்கிக் கொள்கிறோம் அல்லது நம் பார்ப்பதன் மூலமாகவும் ஆசை என்ற ஒன்றினை நம் மனம் உருவாகிறது. நம் ஆசை வைக்கும் போது நமக்கு சந்தோஷமே கிடைக்காது பிறகு இதன் மூலம் உருவாக்கப்பட்டது தான் கவலை கோபம் வெறுப்பு உணர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. இவ்வித உணர்வுகள் நாளடைவில் தீய பழக்கங்களுக்கு வழிவகுத்து நம்மை அடிமைகளாக்கி விடுகிறது. ஆம் நம் மனதிற்கு ஆசை என்கிற ஒரு வார்த்தை மிகவும் பிடித்த வார்த்தை அதை இதை யாரிடம் சொன்னாலும் அவர்களுக்குப் பிடிக்கும் மனிதன் ஆசையை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலகில் மாயையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆகவே ஆசை நிறைவேறினால்தான் நான் சந்தோஷமாக இருப்பேன் என்ற நிலைக்கு மனிதன் வந்துவிடுகிறான். அதை நான் அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறுகிறார்கள் நம்பிக்கை ஒன்றே இங்குதான் அணு அளவு உருவாகிறது. ஆசையிலிருந்து எந்த மனிதன் விடுகிறானோ அவனே சந்தோஷம் உடையவன் ஆசை உருவாக என்ன காரணம் என்றால் மனம் ஒரு குழந்தை அதுதான் காரணம் குழந்தைக்குத் தேவை எது அசை எது என்று புரியாது. இரண்டிற்கும் நாம் வேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும் தேவைக்காக நாம் உழைக்க வேண்டும் அப்போது மனம் எவ்வித சலிப்பும் இல்லாமல் இருக்கும் ஆனால் ஆசையை நோக்கி சென்றால் மனம் தேவை இல்லாத உணர்வினை உருவாக்கும். தேவை என்பதை கொண்டு நிறைவாக வாழ ஆரம்பித்தால் சந்தோஷ உணர்வு நம்மிடத்தில் இருப்பதை உணர முடியும். இரண்டாவது கவலை உணர்வு ஏன் கவலை உணர்வு வருகிறது ஒரு உணர்வின் பாதிப்பில் வருகிறது ஒரு உணர்வை நம்மால் அல்லது வெளியே உள்ள நபர்கள் அதை சிதைவுபடுத்தும்போது கவலை வருகிறது பிறகு எதிர்பார்ப்பு நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை கையாள தெரியாததால் கவலை என்கிற உணர்வு ஏற்படுகிறது பிறகு முக்கியமாக நம்முடைய கடந்த கால நினைவலைகளையும் எதிர் கால நினைவலைகளையும் நமக்கே தெரியாமல் நம் மனம் நம்மை முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றி எடுத்து செல்வதால் நிகழ் காலத்திலிருந்து கொண்டு கடந்ததை நடப்பதை எண்ணி நிகழ்காலம் என்கிற பொக்கிஷத்தை அனுபவிக்காமல் நிகழ்காலம் கவலை காலமாக நம்மை நம் மனம் பாடு படுத்துகிறது ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஒரு உணர்வானது குட்டிபோடும் நம்மில் யாருக்காவது தெரியுமா நாம் எந்த உணர்வில் அதிகமாக இருக்கிறோமோ அந்த உணர்வானது குட்டி போட்டு நம்மை அதன்கீழ் ஆழ்படுத்திவிடும். ஆகையால்தான் எவ்வித உணர்வாக இருந்தாலும் அதிலிருந்து வெளியே வர வேண்டும் ஆனால் ஒரே ஒரு உணர்வைத் தவிர அது தான் நம்முடைய சந்தோஷ உணர்வு அந்த உணர்வு போடுகின்ற குட்டிதான் தெய்வீக உணர்வு. அந்த உணர்வில் நாம் வாழும் போதுதான் நாம் யாரென்று ஒரு காலத்திற்கு மேல் தெரியவரும். ஆகவே அந்த உணர்வைத்தான் நம் மனம் நம்மை அடைய விடாமல் எப்போதாவது கொடுத்துவிட்டுப் போகிறது உணர்விலேயே நாம் வாழ்ந்தால் நாம் யார் என்று தெரிந்து விடும் அது தெரியக்கூடாது என்பதற்காக தான் நம்முடைய மனம் அதை எப்போதாவது கொடுத்துவிட்டு சென்று விடுகிறது சரி கவலை என்கிற உணர்வை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் கவலை வருகிறது இதனால் கவலை உருவாகிறது என்கிற கேள்வியை மட்டும் கவலை வரும்போது கேட்டால் கவலைக்கு பயம் வந்துவிடும் இவன் நம்மை நோண்ட ஆரம்பிக்கிறான் என்று அந்த கேள்வியை கேட்டு காரணத்தை கண்டு பிடியுங்கள் காரணம் கிடைக்கும் அதற்குத் தீர்வு அதிகபட்சம் 24 மணி நேரம் எடுத்துக் கொண்டு அதை முடித்து விடுங்கள் யாரிடத்திலும் போகாதீர்கள் யாரிடமாவது போய் கேட்கலாம் என்று நினைத்தால் நம்முடைய கவலை வளர ஆரம்பித்துவிடும் ஏனெனில் நமக்கான தீர்வு நம்மிடத்தில் தான் உள்ளது வெளியே ஒரு போதும் இல்லை புரிந்து கொள்வோம் நம் மேல் கல் பட்டவுடன் அதற்கான வைத்தியம் என்ன என்று அறிந்து அதை சரிப்படுத்த மருந்து போட்டால் காயம் வலி குறைந்து ஆற ஆரம்பித்துவிடும். அதுபோன்று கவலையும் ஒரு குளத்தில் கல்லெறிந்தால் அதன் அதிர்வுகள் ஏற்படும் அலைவரிசை குளம் முழுவதும் பரவும் அதுபோன்றுதான் நம்மை பாதிக்கும் உணர்வுகளும் அவ்வித உணர்வுகளை நாம் ஆட்கொள்ள படும்போது அதை ஏன் வருகிறது அதன் காரணம் என்னவென்று கண்டுபிடித்து அதை அப்போவே நாம் அழித்துவிடவேண்டும் நம்மை பாதிக்கும் சில உணர்வுகள் கோபம் கவலை ஏக்கம் ஆசை அறியாமை தாழ்வுமனப்பான்மை பயம் அகங்காரம் ஆணவம்போன்ற உணர்வுகள் நம் மனதையும் நம் உடலையும் பாதிக்கிறது இவ்வித உணர்வுகள் சந்தோஷத்தை அடைய தடைக் கற்களாக உள்ள உணர்வுகள். இதை நாம் புரிந்து கொண்டால் போதும் இதிலிருந்து நாம் விடுபடலாம் எதை எதையோ புரிந்துகொள்கிறோம் வெளியில் உள்ளதை ஆனால் நமக்கு உள்ளே நடக்கும் இந்த நாடகத்தை தான் புரிந்துகொள்ள மாட்டிகிறோம். சரி இவ்வித உணர்வுகளில் நமக்கு எழும் பிரச்சனைகள் வித விதமாக இருக்கிறது அதற்கு நாம் எப்படி தீர்வினை கண்டுபிடிப்பது இதற்கு நல்ல ஆலோசகரிடம் சென்று தீர்வினை கேட்கலாம் என்று நாம் நினைப்போம் சரிதான் ஆனால் நமக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு நம்மிடத்தில் தான் உள்ளது என்னதான் ஆலோசகர் சொன்னாலும் நாம் அதை செய்வோம் ஆனால் அதில் திருப்தி இருக்காது பாதி அளவே இருக்கும். ஏனென்றால் நம்முடைய பிரச்சனைக்கு நாம் தீர்வினைக் கண்டு பிடித்தால் கிடைப்பது முழுமையான திருப்தி கொண்ட சந்தோஷம் நமக்கு கிடைக்கும். சரி அதுதான் எப்படி உண்மையை சொல்கிறேன் இப்போதுதான் சந்தோஷத்தின் நுழைவாயிலில் நாம் நுழைகிறோம் அதுதான் நம்மிடத்தில் உள்ள அலாவுதீன் பூதம் விளக்கு என்பது நீங்கள் என்பது நம்முடைய ஆழ்மனதை கடந்து உள்ளுணர்வு நிலை (super conscious 🤩🌟).https://www.youtube.com/results?search_query=vinodhan இதுதான் நம்முடைய மிக அற்புதமான புனிதமான மனம் ஆழ்மனம் நமக்கு பிரச்சனையை ஈட்டித்தரும் ஆனால் நம்முடைய உள்மனம் நம் பிரச்சனையை சரிசெய்து நமக்கு அமைதியான சந்தோஷத்தை தரும் சரி உள்ளுணர்வு பிரச்சனையை தீர்க்கும்
உங்கள் சந்தோஷ உணர்வு தான் உங்கள் தெய்வீக உணர்வு Read More »