வெள்ளிக் கிழமை பிறந்த கதை தெரியுமா?
Post Views: 379 வெள்ளிக்கிழமை என்பது ஒரு அற்புதமான நாள் அந்த நாளில் நல்ல விஷயங்கள் நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை அதைப்போன்று பலருக்கு வெள்ளிக்கிழமை என்று என்ன என்று தெரியாது அது ஒரு கதை அந்த வெள்ளிக் கிழமைக்கு ஒரு கதை உண்டு நாம் அந்த கதையை இப்போது பார்க்கப் போகிறோம் நாகூர் நாகப்பட்டணம் என்னும் ஊரில் நாராயண அய்யர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு வேதம், ஆறு சாஸ்திரம் அறுபத்துநான்கு கலைஞானம், தேவி பூஜை, அக்னி கோத்திரம், வைசுவ தேவம் எல்லாம் உண்டு. அவர் 64 கலைஞானத்தையும் ஆராய்ந்து பார்த்து அன்று செய்த http://பாவத்தை அன்று போக்கி காலம் நடத்தி வந்தார். அவர் மிகவும் பரம ஏழை. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. அந்தக் குழந்தைகளுக்கு அல்லசலில் துணி வாங்கிப் போட்டு எண்ணை வாங்கி தேய்த்து வளர்த்து வந்தார். அந்தக் குழந்தைகள் பெரிதாகி விட்டன. அவருடைய பத்தினியாகப்பட்டவள் அவரைப் பார்த்து நம்முடைய குழந்தைகள் பெரிதாகிவிட்டனவே அதற்கு கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டுமே என்று வருத்தப்பட்டாள். அவர் சரி என்று செர்ல்லிவிட்டு அன்று போக மறுநாள் அந்தக் குழந்தை களை அழைத்துக் கொண்டு பெரியவூர் பெரியபட்டணம் என்னும் ஊருக்குப் போனார். அந்த ஊரில் பெரிய ஸோமாஜியார் என்று ஒருவர் இருந்தார். http://அவருக்கு 4 வேதம், 6 சாஸ்திரம், 64 கலைஞானம், தேவிபூஜை, சிவபூஜை, அக்கினி கோத்ரம், வைசுவதேவம் எல்லாம் செய்வதுண்டு. அவர் பூஜை எல்லாம் முடித்துக்கொண்டு உச்சி உருகும் வேளையில் வாசலில் வந்து உச்சியை அண்ணாந்து பார்த்து கிழக்கே, மேற்கே, தெற்கே, வடக்கே நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்து இச்சார் உண்டா, எளியார் உண்டா, அதிதி உண்டா,பரதேசி உண்டா யார் இருந்தாலும் போஜனத் திற்கு வாருங்கள் என்று கூப்பிட்டார். அதற்கு இந்த பிராமணர் இச்சார், எளியார், அதிதி, பரதேசி எல்லாம் நான்தான் என்று சொன்னார். நீரே ஆனால், வாரும் என்று சொல்லி உள்ளே அழைத்துக் கொண்டு போய் கால அலம்ப ஜலம் கொடுத்து அக்ஷய பாத்திரம் கொடுத்து தலைவாழை இலை போட்டு தாம்பிர பஞ்ச http://பாத்திரத்தில் தீர்த்தம் வைத்து பசும்பால் பாயஸம் வைத்து பசும் யிர் பச்சடி வைத்து பசும் நெய்யில் 18 பக்ஷணங்கள் செய்து பாலிட்டு, பழமிட்டு, தேங்காய்,தேன் எல்லாம் விட்டு ஏதோ என்னால் ஆனது ரஸம் அன்னம் அளிக்கிறேன். இருந்து சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு திருப்தியாய் போஜனம் அளித்து கை அலம்ப ஜலம் கொடுத்து, தாம்பூலம் தக்ஷினைகொடுத்து தாங்கள் எந்த ஊர், எந்த தேசம், தாங்கள் வந்த காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு இவர் எனக்கு நாகூர் நாகபட்டணம், என் பெயர் நாராய்ண அய்யர். நான் மிகவும் பரமஏழை எனக்கு 2 பெண் குழந்தைகள், அந்தக் குழந்தைகளுக்கு என்னிகாதானம் செய்யும் காரணமாய் கிளம்பி வந்திருக்கிறேன் என்று சொன்னார். அதற்கு அந்த பிராமணர் எங்கள் மூத்த குமாரனுக்கு உங்கள் மூத்த குமாரியை கன்னிகாதானம் செய்து கொடுங் கள் என்றார். அதற்கு இவர் சரி என்று சொல்லிவிட்டு அன்றுபோக மறுநாள் இரண்டு குழந்தைகளுக்கும் மங்கள ஸ்நானம் செய்து பட்டாடையுடுத்தி துளசியும், தீர்த்தமும் விட்டு ஓம் தத்ஸத் ப்ரும்மார்ப்பண மஸ்து என்று சொல்லி கன்னிகாதானம் செய்து கொடுத்தார். இந்த கன்னிகாதானம் செய்த புண்ணிய பலத்தால் 18 தலைமுறை பிதுருக்கள் கரையேறினார்கள். அந்தப் பெண்ணை அங்கே விட்டுவிட்டு சிறிய பெண்ணோடு சிறிய ஊர் சிறிய பட்டணம் என்னும் ஊருக்குப் போனார். அந்த ஊரில் சின்ன ஸோமாஜியார் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு 4 வேதம், 6 சாஸ்திரம், 64 கலை ஞானம், தேவி பூஜை, சிவபூஜை, அக்கினிகோத்ரம். வைசுவதேவம் எல்லாம் செய்வதுண்டு. அவர் பூஜை எல்லாம் முடித்துக் கொண்டு உச்சி உருகும் வேளையில் வாசலில் வந்து உச்சியை அண்ணாந்து பார்த்து கிழக்கே, மேற்கே, தெற்கே.வடக்கே நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்து இச்சார் உண்டா, எளியார் உண்டா, அதிதிஉண்டா பரதேசி உண்டா யார் இருந்தாலும் போஜனத் திற்கு வாருங்கள் என்று கூப்பிட்டார். அதற்கு இந்த பிராமணர் இச்சார், எளியார், அதிதி, பரதேசி எல்லாம் நான்தான் என்று சொன்னார். நீரே ஆனால் வாரும் என்று சொல்லி உள்ளே அழைத்துக் கொண்டு போய் கால் அலம்ப ஜலம் கொடுத்து அக்ஷ்ய பாத்திரம் கொடுத்து தலைவாழை இலை போட்டு தாமிர பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் வைத்து பசும்பால் பாயாஸம் வைத்து பசும் தயிர் பச்சடி வைத்து பசும்நெய்யில் 18 பக்ஷணங்கள் செய்து பாலிட்டு, பழமிட்டு, தேங்காய், தேன் எல்லாம் விட்டு ஏதோ என்னால் ஆனது ரஸம் அன்னம் அளிக்கிறேன். இருந்து சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டு திருப்தியாய் போஜனம் அளித்து கை அலம்ப ஜலம் கொடுத்து தாம்பூலம் தக்ஷிணை கொடுத்து தாங்கள் யார், எந்த ஊர், எந்த தேசம், தாங்கள் வந்த காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு இவர் எனக்கு நாகூர் நாகப்பட்டணம், என் பெயர் நாராயண அய்யர், நான் பரம ஏழை, எனக்கு இரண்டு பெண் குழந்தைகள், அந்தக் குழந்தைகளுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டிய காரணமாய் பெரிய ஊர் பெரியபட்டணம் போனேன். அந்த ஊரில் பெரிய ஸோமாஜியாரின் http://மூத்த குமாரனுக்கு, என் மூத்தகுமாரத்தியை கன்னிகாதானம் செய்து கொடுத்தேன். இளைய குமாரத்தியோடு இங்கே வந்து இருக்கிறேன். என்று சொன்னார். அதற்கு அவர் அப்படியானால் என் இளைய குமாரனுக்கு உங்கள் இளைய குமாரத்தியை கன்னிகாதானம் செய்து கொடுங்கள் என்று சொல்லிட்டு அன்று போக மறுநாள் அந்தக் குழந்தைக்கு மங்கள ஸ்நானம் செய்து பட்டாடையுடுத்தி துளசியும், தீர்த்தமும் விட்டு ஓம் தத்ஸத் ப்ரும்மார்ப்பணமஸ்து என்று சொல்லி கன்னிகாதானம் செய்து கொடுத்தார். இரண்டாவது கன்னிகாதானம் செய்து கொடுத்த புண்ணிய பலத்தால் 21 தலைமுறை பிதுருக்கள் கரை யேறினார்கள். அந்தப் பெண்ணை அங்கே விட்டுவிட்டு அவர் திரும்பி ஊருக்கு வந்து கொண்டு இருக்கார். இது இங்கே இப்படியிருக்க. கைலாசத்தில் பரமசிவனிடத்தில் லெக்ஷ்மி. சரஸ்வதி, பார்வதி மூவரும் போய் நமஸ்காரம் செய்து ஸ்வாமி ஸ்திரிகளை கேவலமாக சொல்கிறார்களே. ஸ்திரிகளுக்கு மோக்ஷார்த்தம் என்றால் என்ன? காம்யார்த்தம் என்றால் என்ன? இவற்றின் அர்த்தங்களை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க, அதற்கு பரமசிவன் மோக்ஷார்த்தத்திற்க வழி வேண்டும் என்றால் தை மாதத்தில் ஸப்தமி தினத்தில் சாம்பல் பூசணிக்காயைக் கொண்டு வந்து வஜ்ர வைடூரிய ஆபரணங்களை பூட்டி ஐந்து உழக்கு அரிசி போட்டு அவிக வைத்து கும்பம் வைத்து, வடை, பாயாஸம், மோதகம் எல்லாம் செய்து ஒரு நல்ல ஸத் பாத்திரமான ஒரு பிராமணனுக்கு தானம் செய்தால் மோர்ர்த்தம் உண்டு. காம்யார்த்தத்தக்கு வழி வேண்டும் என்றால் 10-12 வயதுக்குள் தாய் தகப்பனுக்கு அடங்கி நடக்கவும், யௌவன காலத்தில் புருஷனுக்கு அடங்கி நடக்கவும் அதற்கு மேலிருந்தால் புத்திரனுக் குள்ளாவது சகோதரனுக்குள்ளாவது அடங்கி நடக்கவும், அப்படி இருக்குங் காலத்தில் பகவானை தியானித்துக்கொண்டு இருக்கவும் என்று கூறினார். உடனே லெக்ஷ்மி தேவி தை மாதத்தில் ஸப்தமி தினத்தில் அந்தரமான காட்டில் இந்திராவளி பட்டாடை கொண்டு நான்கு பக்கமும் திரை கட்டி மாவிலை தோரணம் வாழை கட்டி எலுமிச்சம் பழத்தை ரசகுண்டாக கட்டி மெழுகி பெருக்கி முத்துமுத்தாய் கோலமிட்டு சாம்பல் பூசணிக்காயை கொண்டு வந்து வஜ்ர வைடூரியங்கள் பூட்டி ஐந்து உழக்கு அரிசி போட்டு அவிசு வைத்து கும்பம் வைத்து வடை பாயாஸம் மோதகம் எல்லாம் செய்து குடலை குடலை யாக புஷ்பங்கள் கொண்டு வந்து கூடை கூடையாக பலவித பழங்கள் கொண்டு வந்து ஊதுபத்தி சாம்பிராணி எல்லாம் கொழுத்தி வைத்து பூஜைக்கு சித்தமாயிருந்தாள். இது இப்படியிருக்கும்போது இந்த பிராமணர் நாம் போகும்போது வெறும் காடாய் இருந்ததே இப்போது. இவ்வளவு வைபோகமாக இருக்க வேண்டிய காரண மென்ன என்று நினைத்து திரையை நீக்கிப் பார்த்தார். அப்போது லெஷ்மி இச்சார், எளியார், பரதேசி யார் வேண்டுமானாலும் பார்க்கலாமென்று சொன்னாள். அதற்கு அவர் இச்சார், எளியார், பரதேசி எல்லாம் நான் தான் என்று சொன்னார். நீரே ஆனால் வாரும் என்று சொல்லி விட்டு பூஜை எல்லாம் முடித்துக் கொண்டு பூசணிக்காயை தானம் கொடுக்கப் போனாள். அப்பொழுது ஸரஸ்வதியும் பார்வதியும் பார்த்து என்ன காரியம் செய்கிறாய். நாம் தேவர்கள் அல்லவா, கேவலம் பூலோக மனிதனுக்குத் தானம் கொடுக்கிறாயே என்று சொன்னார்கள். அதற்கு அவள், இவர் பெரிய மஹானுபாவர். இரண்டு பெண் குழந்தைகளை கன்னிகாதானம் கல்யாணம் செய்து கொடுத்து 21 தலைமுறை பிதுருக்கள் கரையேறி இருக்கிறார்கள். அதனால் அவரையே தானத்திற்கு வருத்தி இருக்கிறேனென்று சொல்லிவிட்டு சாம்பல் பூசணிக்காயை தானம் கொடுத்துவிட்டு சொல்ல லானாள். சந்திர சூரிய கதையுண்டு. பட்டினி இருந்து சொல்ல வேண்டும். பசித்து இருந்து கேட்க வேண்டும். இதைக் கேட்ட பேருக்கு கேட்ட பொருளும் கைக்கூடும். கங்க ஸ்நானம் செய்த பலன், பட்ட பசுவும் பால் கறக்கும், பகையான பேர்களும் உறவாவார்கள், அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காதுவழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூரவழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை, எதை மறந்து சாப்பிட்டாலும் கதை மறந்து சாப்பிடாதே, கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய் என்று சொல்லிவிட்டு லெக்ஷ்மி தேவி அந்தர்த்யானம் ஆகிவிட்டாள். இந்த பிராமணன் அந்தப் பூசணிக்காயை யானை மேல் வைத்துக் கொண்டு மேளதாளத்துடன் ஊர் கோலமாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இது இப்படியிருக்கும் போது அவருடைய பத்தினி யாகப் பட்டவள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போனாரே வரக்காணோமே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும்போது அடுத்த வீட்டு தோழியானவள் அரிசி கொண்டு வந்து தருகிறேன், சமையல் செய்து சாப்பிடு என்று சொன்னாள். அதற்கு அவள் என் கணவர் நாலு ஊருக்குச் சென்றால் நாலு உழக்கு அரிசி கொண்டு வருவார். ஐந்து ஊருக்குச் சென்றால் ஐந்து உழக்கு அரிசி கொண்டு வருவார். அதைக்கொண்டு நாங்கள் அன்றாடம் ஜீவனம் செய்து வருகிறோம்.
வெள்ளிக் கிழமை பிறந்த கதை தெரியுமா? Read More »