Post Views: 504 சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதேபட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதேபல்லி சொல்பவனிடம் பதில் பேசாதேஎன்பது பெரியோர் வாக்குவாகும். நம்முடைய விதியை நாமே மாற்றிக் கொள்ள முடியும் அதற்கு ஒன்று மட்டும் தேவை பஞ்சபட்சி சாஸ்திரமும் சரசாஸ்திரம் இதை தெரிந்து கொண்டால் நாமும் நம் வாழ்க்கையில் நம் விதியை மாற்றிக் கொள்ள முடியும் சித்தர்கள் இந்த விதியை மாற்ற கூடிய நேரத்தையும் கணப்பொழுதும் கொடுத்து இருக்கிறார்கள் ஆதலால் இந்த முறையை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் இந்த சர சாஸ்திரத்தை பலர் சரியான முறையில் சொல்லிக் கொடுப்பதில்லை காரணம் அவர்களுக்கு அது தெரியவில்லை என்னால் முயன்ற அவரை நான் உங்களுக்கு இந்த பதிவை அளித்துக் கொண்டே இருப்பேன் பகுதிக்குச் செல்வோம் வாருங்கள்பஞ்சபட்சியில் தன்னுடைய பட்சி எதுவென அறிந்து – அந்த பட்சியின் மூலிகையை பஞ்சபட்சி முறைப்படி பூஜை செய்து எடுத்து ( அரசு வேளையில் எடுக்கலாம் ) ஊண் வேளையில் தாய்த்தாக்கி கொடுக்கலாம் . பஞ்சலோக தாயத்து நலம் பயக்கும் . இது மிகவும் அற்புதமான தாந்திரீக பரிகாரமாகும் . நன்கு பஞ்சபட்சி சாஸ்திரம் ! அனுபவம் பெற்றவர்கள் பட்சிகளின் சூட்சுமத்தில் எடுத்து – அணிந்து கொள்ள வாழ்வில் எதிலும் வெற்றிதான் , தொட்டுதெல்லாம் பொன்னாகும் ஆயுள் முழுவதும் நற்பலனைத் தரும் , அனுபவமுறைபஞ்சபட்சியில் தங்கள் பட்சிக்குரிய பட்சிகளின் சிறகுகளை அரசு நேரத்தில் தாயத்து செய்து அணிய சர்வ வெற்றியாகும். எதிரி இல்லை. கையாலும் முறைதான். பஞ்சபட்சிமனித உடலில் இயங்க கூடிய உள் உறுப்புகளுக்கு பல்வேறு வழிகளிலிருந்து சக்தி கிடைக்கும் வகையில் மனித உடல் அமைப்பு அமைந்துள்ளது.மனிதனின் உடல் உறுப்புகளில் இருந்து வரும் நரம்புகளின் தொடர்பு மற்றும் நரம்புகளின் முடிச்சுகள் மனிதனின் கண், காது உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வந்தடைகிறது. மனிதனின் அகத்தை வெளிப்படுத்தும் புறவழி உறுப்பே கண்கள்தான் இயற்கையின் தோற்றத்தையும், மற்றவையையும் ஊர்ஜிதப்படுத்துவதும் கண்கள்தான்.எதையும் முதலில் அங்கரிப்பது கண்கள் மூலமாகத்தான். அழகான உறுப்பே கண்கள். மனிதனின் உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் மற்றும் நோய்களுக்கும் நாடி பார்த்து நோயை கணிப்பது போல மனிதனின் கருவிழியை வைத்தும் நோயை கணிக்கலாம்.கருவிழித் திசுக்களில் ஏற்படும் புள்ளிகள், கோடுகள், நிற மாற்றங்கள் கருவிழித் திசுக்களின் ஒருங்கிணைப்பு மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடல் உறுப்புகளின் பாதிப்புகளை துல்லியமாக கண்டு தீர்வு காணலாம். கண்களின் கருவிழிக் கொண்டு நோய் அறிந்து காது, உள்ளங்கை, கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுவதின் மூலமாக நோயினை குண்படுத்த முடியும். கருவிழியில் மருத்துவம் எப்படி உருவானது? பஞ்சபட்சிகளில் ஒன்றான ஆந்தையை மையமாகவும் இதன் கண்களின் கருவிழியில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டும் தான் கருவிழியில் மருத்துவம் உருவானது. கால் உடைந்த ஆந்தைக்கு காலில் கட்டு போடுவதற்கு முன் ஆந்தையை வைத்தியர் பார்த்தபோது அந்த ஆந்தையின் கண்ணின் கருவிழியில் ஒரு புள்ளி இருப்பதை கண்டறிந்தார். அதை வைத்து சிகிச்சை அளித்தார். இதில் ஆந்தையின் கால் குணமானது. உடனே அப்புள்ளி மறைந்தையும் கண்டார்.அதே போலவே ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட விபத்தின் போது அவன் கருவிழியில் இதைப்போன்ற மாற்றம் ஏற்பட்டதையும் பின்பு அந்த மனிதனின் காயம் சரியானதும் அவன் கண்ணின் கருவிழி சரியானதையும் கண்டார்.இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நோயை நிர்ணயம் செய்ய ஒரு புதிய யுத்தியை கண்டறிந்து கையாண்டார்கள்.கருவிழியின் மூலம் நோய் அறியும் மருத்துவம் கி.பி. 1837-ம் ஆண்டில் இருந்து இன்று வரை நடைமுறையில் உள்ளது.அதே போல பஞ்சபட்சி சாஸ்திரம் ஓர் மனிதனின் வாழ்க்கை முறையையும், வசதி வாய்ப்பையும் மற்றும் அவனின் நோய் தன்மையையும், உள் உறுப்புகளில் எந்த உறுப்பு பாதித்துள்ளது என்பதையும், அவன் உடலில் எந்த சக்கரம் சரியாக இயங்கவில்லை என்பதையும் கூற முடியும். மகாபாரத்தில் சாகதேவன் சோதிட சாஸ்திரம் கையாண்டார்.கிருஷ்ண பகவான் பஞ்சபட்சி சாஸ்திரத்தை கையாண்டார் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதே போல ராமயணத்தில் பலவகை கலைகளையும் அறிந்த ராவணனும் பஞ்சபட்சி சாஸ்திரம் அறிந்தவர் ஆவார்.இவர்கள் பஞ்ச பட்சிசாஸ்திரம் அதிகம் கையாண்டுயுள்ளனர்இந்த அபூர்வ சாஸ்த்திரங்களையோகிகள்”ஞானிகள்” முனிவர்கள்”சித்தர்களும்பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்துகுருவின் திருப்பாதமே கதிஎன இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்குமட்டும் இக் கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.இதில் பஞ்சபட்சி சாஸ்திரம்எனப்படும் மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்திஉமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும்.தமிழ்க் கடவுளாகியசுப்பிரமணியர்சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனைசம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகியமகாசக்தியால் சுப்பிரமணியருக்குஉபதேசித்த உன்னத கலையாகும் “பஞ்ச பட்சி சாஸ்திரம்” இதனையே சூரனை வதம்செய்ய முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனி யாகியஅகத்திய முனிவருக்குமுருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும்.நவக்கிரகங்கள்,பன்னிரு இராசிகள்,இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் – 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.பஞ்சபூதம் எனப்படும்நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும்வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்,என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதேபட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதேபல்லி சொல்பவனிடம் பதில் பேசாதேஎன்பது பெரியோர் வாக்குவாகும்.மேற்கண்டபடி பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும்வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான்.இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம் அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை,சிலம்பம் ,பிரச்சனை வழக்குகள்,போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர்.அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரைவாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான்,அவனை எவரும்வெல்ல முடியாது என்பது உறுதியிட்ட உண்மையாகும்.இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம்,செய்தொழில்,காரியங்கள்,வாழ்க்கையில் முன்னேற புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.மேலும்நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு.நாள் ,திதி ,நட்சத்திரம் ,யோகம் ,கரணம் ,நேரம் ,லக்கினம் ,போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும்.அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும்.அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ,அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும்.எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்திபெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன், தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச்செய்யலாம்……பஞ்ச பட்சி சாஸ்திரம் பற்றிய திரட்டுஒரு சிறிய விளக்கம்பஞ்ச பட்சி சாஸ்திரம்இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும் நமக்கு கைவராது.பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.பட்சிகள் மொத்தம் ஐந்து. அவை முறையேவல்லூறுஆந்தைகாகம்கோழிமயில்முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம்.ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-வல்லூறுஅஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்ஆந்தைதிருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்காகம்உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்கோழிஅனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்மயில்திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதிஇதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.வளர்பிறைஅ, ஆ – வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.)இ, ஈ – ஆந்தைஉ, ஊ – காகம்எ, ஏ – கோழிஒ, ஓ – மயில்தேய்பிறைஅ, ஆ – கோழிஇ, ஈ – வல்லூறுஉ, ஊ – ஆந்தைஎ, ஏ – மயில்ஒ, ஓ – காகம்ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்அரசு – 100% பலம்ஊண் – 80% “நடை – 50% “துயில் – 25% “சாவு – 0% “ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் – Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள்