எல்லாவித நோய்களையும் குணப்படுத்தும் அட்டை விடல் அகத்தியரின் சிறப்பு சித்தமருத்துவம்

அட்டை விடல் (Leech Therapy) ஓர் அறிமுகம்!

அனைவருக்கும் வணக்கம் என்னுடைய வினோதனின் கருத்துக்களை இங்கே பதிவு செய்து கொண்டிருக்கும் என்னுடைய ஒவ்வொரு பதிவையும் படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் இன்று நாம் பார்க்கப் போகிறது அட்டை விடல் பயிற்சி அதாவது அட்டையை குறித்த முழு தகவல் இதை சொன்னது நான் அல்ல நம்முடைய அகத்தியர் மாபெரும் மகா சித்தர் இவர் தான் இதை முழுமையாக நமக்கு சொல்லி இருக்கிறார் சித்த மருத்துவத்தில் அற்புதமான விதிமுறைகள் உள்ளன அதை சுலபமான முறையில் இருக்கிறது ஆனால் இந்த அட்டை விடல் என்பது சற்று யோசித்து செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் இதை குறித்து முழு தகவல்களையும் நாம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் அப்போதுதான் இதை குறித்து முழு விஷயத்தை நாம் செய்ய முடியும் அதை குறித்த முழு தகவல்களை இந்த பதிவில் கொடுத்திருக்கிறேன் மறக்காமல் இதை ஒவ்வொன்றாக படியுங்கள் இது பழமையான ஒரு மருத்துவ முறையாகும். ஐ உடலில் வைத்தால், அது ரத்தத்தை மெது வாக உறிஞ்சும். இதை சித்த மருத்துவம் (Siddha medicine) மற்றும் ஆயுர்வேதம் (Ayurveda)-ல பயன்படுத்துவாங்க. எப்படி வேலை செய்கிறது? அட்டைப் புழு ரத்தத்தை குடிக்கும் போது: ரத்தத்தை மெல்ல உறிஞ்சும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் அதின் உமிழ்நீரில் இருக்கும் enzyme (hirudin) ரத்தம் அடைப்பு ஆகாமல் தடுக்கும் எதற்கெல்லாம் பயன்படுத்துவார்கள்? வீக்கம் (swelling) வலி (pain relief) ரத்தக் கட்டி (blood clot) தோல் நோய்கள் சில சமயம் plastic surgery பிறகு கவனிக்க வேண்டியவை மருத்துவர் மேற்பார்வையில் மட்டும் செய்ய வேண்டும் infection வர வாய்ப்பு இருக்கு எல்லாருக்கும் பொருந்தாது

அகத்தியர் சொன்ன அட்டை விடல் மருத்துவ முழு ஆய்வு

ஆச்சாயமும், பாரம்பரிய மருத்துவ முறைகளில் அருவெறுப்பும் தரக் கூடிய சில மருத்துவ முறைகள் உள்ளன. அப்படியான ஒரு மருத்துவ முறை பற்றியதே இந்த தொடா. தமிழில் “அட்டை விடல்” என அறியப் படும் இந்த மருத்துவ முறையினை ஆயாவேதத்தில் “ரக்த மோக்ஷ்ன்” என்றும சித்தர்கள்  ஐரோப்பிய கண்டத்தில் “Hirudotherapy” என்றும் அறியப் படுகிறது.

 

அட்டைகள் என்பவை புழு இனத்தை சேர்ந்தவை. மழைக் காலங்களில் நமது வீட்டோரங்களிலும், நீர் நிலைகளின அருகாமையிலும் இவற்றை காணமுடியும். தற்போதைய அறிவியல் வகைப்பாட்டின் படி 500 க்கும் மேற்பட்ட அட்டைகள் கண்டறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் குறிப்பிட்ட சிலவகை மட்டுமே இந்த வகை மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது. அதென்ன அட்டைவிடல் என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கும். மருத்துவ சிகிச்சை என்பது இரண்டு பெரும் பிரிவுகளாய் அறியப் படுகிறது.

ஒன்று அக வைத்தியம், மற்றது புற வைத்தியம்

 

அக வைத்தியம் என்பது மருந்தினை உள்ளுக்குள் உண்ணக் கொடுப்பதன் மூலம் சிகிச்சை அளிப்பது, மற்றது புற வைத்தியம் மேற்பரப்பில் சிகிச்சை செய்வது இது உலகில் உள்ள எல்லா வகை மருத்துவ முறைகளுக்கும் பொருந்தும் அந்த வகையில் சித்த மருத்துவத்தில் பல்வேறு புற சிகிச்சை முறைகள் கூறப் பட்டிருக்கிறது அவற்றில் அட்டை விடல் என்பது ஒரு வகை சிகிச்சை முறை இந்த இடத்தில் ஒரு தகவலாக சித்த மருத்துவத்தின புற சிகிச்சை முறைகளையும் பட்டியலிட விரும்புகிறேன்.

 

அவை கட்டிகை, வர்த்தித்தல், நீர், சீலை, களிப்பு, தொக்கணம், பொட்டணம், வேதுகாட்டல், பூச்சு, ஒற்றடம், பற்றிடல், கட்டுதல், பிச்சு, புகை, மையிடல், பொடியிடுதல், நசியம், கலிக்கும், ஊதல், நாசிகாபரணம், முறிச்சல், கீறல், காரம், அறுவை, பட்டை கட்டல், உறிஞசல், அசுதத ரத்தத்தை வாங்குதல், அட்டைவிடல் பசை, களி, சலாகை, சிட்டிகை என்பனவாகும். இவற்றில் அட்டை விடல் என்பது ரத்தத்தை உறிஞசக கூடிய அட்டைகளை உடலின் மேற்புறம் விட்டு கடிக்க விடுவதன் மூலம் அளிக்கப் படும் சிகிச்சை முறையாகும். நோயின தன்மை மற்றும் தீவிரத்தை பொறுத்து இந்த அட்டை விடல் உடலின் குறிப்பிட்ட பகுதியில் விட்டு அந்த இடத்தில் இருக்கும் இரத்தத்தை உறிஞ்சிடச் செய்யும் முறையே அட்டை விடல் ஆகும்.

 இந்த முறையில் இரத்தக் கட்டு, வீக்கம், அடிபட்டதால் ஏற்படும் காயங்கள், தலைவலி, வாந்தி, மூட்டுவலி, தோல் வியாதிகள், பெண்களுககான மாதவிலக்கு பிரசசினைகள் போன்றவைகளை குணமாக்குகின்றனர். எல்லாம் சரிதான், இதில் சித்தர்கள் எங்கே வருகிறார்கள் என்ற கேள்வி நியாயமானதே…. இந்த வினோதன் தளத்தில் தளத்தின் உங்களுக்குப் பிடித்த மொழிகளில் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்கலாம்

 

அட்டை விடல் சித்தமருத்துவமே!

அட்டை விடல் சித்த மருத்துவம் அட்டை விடல் என்பது தற்போது பலவேறு மருத்துவ முறைகளின் ஒரு அங்கமாக இருக்கிறது. எனவே இது எந்த மருத்துவ முறையை சேர்ந்தது என்பது விவாதத்திற்கு உரியது. எனினும் தற்போதுள்ள மருத்துவ முறைகளில் காலத்தால் மிகவும் பழைமையானதான சித்த மருத்துவத்தில் இது பற்றிய தெளிவான விளக்கங்களும் வரையறைகளும் காணக கிடைக்கின்றன. அந்த வகையில் நாம் இதனை தமிழரின் மருத்துவ முறையாகவே கருதிடலாம். அட்டை விடல் பற்றி அகத்தியர் தனது “அகத்திய நயனவிதி 500” என்ற நூலில விரிவாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார்

 

 இந்த அட்டை விடல் வைத்தியத்தின் நோக்கத்தை அகத்தியர் பின் வருமாறு கூறிப்பிடுகிறார்.

அடடையின விதிதனை யறிய யாவருந் திட்டம் தாகவே செப்ப வுள்னினேன் மட்டமா குழலி னாள வரன ளித்திடும் இட்ட விநாயகன் இணையடி போற்றியே முன்னமே கேளட்டையின் குணந்தான மொய்குழல் மாதே நீ கேளாய் அந்நா என்னம பால்பருகும் அது போல வாங்கும் விஷநீரை நன்னாள் பார்த்து நோயறிந்து நயனந் தன்னில் விடுவாயால் சொன்னோஞ் சொன்னோம் நாற்றிசையுந துலங்கச் சொன்னோஞ் சொன்னோமே     

 

அன்னப் பறவையானது பாலில் கலந்திருக்கும் தண்ணீரை பிரித்து எடுத்து விடுவதை போல அட்டையானது நமது உடலில் உள்ள நஞ்சு நீரை பருகி குருதியை தூயமை செய்கிறது என்கிறார். எனவே நோயின் தன்மை அறிந்து அதற்குண்டான நாளில் அட்டை விடல செயதால நோய் தீரும் எனகிறார் அகத்தியா அட்டை விடலின் நோக்கத்தை தெளிவாகச் சொன்ன அகத்தியா, வரையறுத்திருக்கிறார்.

 

 

அட்டையின் வடிவத்தையும் ஆதியோ தியவே தத்தில அட்டைக்கு மேனி யுந்தான ஏதெனில் பல்லு மூன்று  மியன்ற அஞ் சடுக்குத் தோலும் ஓதிய முகமும் பச்சை உதிரமுஞ் சிவப்பாய் பின்னை தீதிலாப் பக்க மிரண்டும் பருத்திடும் நரம்பு சேரும். அரவின் வாய்த் தேரை போன்றும் அணிமழுத் தலையே போன்றும் பருதியின் பைங்கண் போன்றும் பல மணி சிதறி நாறபோல விரவியே பல நே கிழ்ந்து மெத்ததெனக் கடிக்கும் அட்டை கருதியே காலன தன்னைச் கட்டிடுங் காய் தானே.     அகத்தியர்.

அட்டையின் உடலானது ஐந்து அடுக்கு தோலினால் ஆனது. மூன்று பற்களை உடையதாக இருக்குமென கூறுகிறார். மேலும் அதன் இரு பக்க ஓரங்கள் தடித்திருப்பதுடன் அதன் இரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்குமாம். இப்படி பட்ட அட்டையானது உடலை கடிக்க விட்டால் உடலை நோயின்றி காத்து எமனை நெருங்க விடாது செய்யலாம் என்கிறார் அகத்தியர்

 

  • எத்தனை வகை அட்டைகள் இருக்கின்றன? (Leech Therapy)

சித்த மருத்துவம் தற்கால அறிவியல் ஆய்வேடுகளுக்கு சற்றும் குறையாத தரத்தில், அகத்தியர். தனது நூலில் அட்டைகளின் வகைப்பாட்டியலை விவரித்திருக்கிறார். இந்த தகவலகளை நாம் எந்த அளவு மேம்படுத்தி செயலாக்கத்தில் வைத்திருக்கிறோமா என்பது கேள்விக்கும், விவாதத்திற்கும் உரியது.

 

அகத்தியரின் நயனவிதி 500ல் அடடைகள் மூன்று பெரும் பிரிவுகளாய் பிரித்துக் கூறப் பட்டிருக்கிறது அவை முறையே

 1-தீய அட்டைகள்

2 சாதாரண அட்டைகள்

3- நல்ல அட்டைகள் என்பதாகும்.

இனி இவற்றை கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம் 1-தீய அட்டைகள் ஆகா வட்டை யது கேளாய் அலவன் தவளை நீர்ப்பாம்பு மேகா சலத்தில் பிறத்தனவும் வேண்டா சருகிற பிறந்தனவும் போகாச் சுனையில் பிறந்தனவும் பொல்லா வட்டையிவையென்றே பாகார் மொழிகொள் பைந்தொடியே பாரா யடடை வருப்பினையே இவை தவளை, நீர்ப்பாம்பு, பதனழிந்த இலைகள், புற்கள் நிறைந்துள்ள குளங்கள், குழிகள் ஆகிய இடங்களில் இருக்கும். அத்துடன் இவை இவை கருத்த நிறத்துடனும் கருஞசெமமை நிறத்துடனும் வான வில்லைப் போல பல நிறத்தையும் உடையனவாகவும் காணப்படுமாம்.

 

2-சாதாரண அட்டைகள் இவை பொன்னிறத்தில் சற்றுக் கருமைநிறம் சேர்ந்த நிறத்துடனிருக்கும்.

 

 3-நல்ல அட்டைகள் I ‘

 

நன்னட்டை தனக்குள்ள அழகான லட்சணத்தைத திட்ட முடன நடுவேசெப்பக்கேள் – குட்டிக்குப் பாலமுத மென்னுமொழி பாவைநல் லாயுருக்கள் நாலுவகை யுண்டென்றே நாட்டு வெள்ளைநிற மொன்று மிகுநீலந் தானொன்று கள்ளமிலாப் பொன்மை கருப்பொன்று – எள்ளியதாம் வாசமிகும் பூங்குழலீர் மற்று மிவைகளெலாந் தேசகுண மாமென்று செப்பு. அழுகா சலத்தில் பிறந்தவுரு அறவே மேனி சரசரக்கும் மெழுகா நிலை சீர்ச்சுனையிலுறு உருவை யொழிய அடைகாக்குங் கழியா நீரில் பிறந்தவுருக கழுநீ ரான நிறமதுபோல ஒழியா வயிறு சிவந்திருக்கும் உண்மை யிதுவென றுணர் வாயே, நீர் ஊற்றுக்களிலும் அருவிகளிலும் மணலின் மறைவாகவுமிருக்கும். கீழ் இதன் வயிற்றுப் பக்கம் பெரும்பகுதிசெங்கழுநீர்ப் பூவின் நிறத்தை ஒத்திருக்கும்.   அகத்தியர்.

 

நல்ல அட்டை நான்கு வகைகளாய் பிரித்துக் கூறுகிறார் அவை.

  1. முதற் பிரிவில் சேர்ந்தவை வெண்மையும் சற்றுப் பொன நிறமும பெற்றிருக்கும்.
  2. இரண்டாம் பிரிவிற சோந்தவை செங்கழுநீர்ப்பூ நிறத்தைப் பெற்றிருக்கும். 3. முன்றாம் பிரிவிற் சேர்ந்தவை பவளத்தின் நிறத்தையும் அரிசி நிறத்தையு பெற்றிருக்கும்.
  3. நான்காமவை பச்சை நிறமும் எலுமிச்சைபழ நிறமும் பெற்றிருக்கும். நாளைய பதிவில அட்டைகளில் ஆண், பெண் வேறுபாடுகளை கண்டறிவது மற்றும் சிகிச்சைக்கு தகுதியான அட்டையை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்

அட்டைகளை இனம் காணுதல்!, பாதுகாத்தலஅட்டை விடல்

அவற்றில் நல்ல அட்டைகள் என வகைப் படுத்தப் பட்ட அடடைகளே இந்த அட்டைவிடல் சிகிச்சைக்கு பயனாகும்

 

 சிகிச்சைக்கு தகுதியான நல்ல அட்டைகளை எப்படி இனம் காணுவது, அவற்றை எப்படி பாதுகாப்பது

 

அட்டைவிடல் சிகிச்சைக்கு வரையறையை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார். தகுதிய அட்டைகளின்

அஞ்சுவிரல் நீளத்தில் அடடை விடலாகும் மிஞ்சவே அட்டை விட வேண்டாம் மிஞ்சி கடிவாய் தினவின் கடுத்து வலி விங்குந் துடியாரு நல்லிடையாய்ச் சொல் இந்த மருத்துவத்திறக்குப் பயன்படுத்தப்படும் அட்டடைகள் ஐந்து விரறுகடை நீளம் உள்ளனவாக இருக்க வேண்டும் என்கிறார்.

இந்த வரையறைக்கு உட்படாத அட்டைகளை அடிக்க விட்டால் அவை ஆபத்தை உணடாக்குமாம். அட்டைகளில் ஆண் பெண் அறியும் விதம்…

 

அட்டையில் பெண்ணும் ஆணும் அறிந்திட வேணு மாகில கொட்டியும் பதுமந் தானுங் கூடவே நீரில போட்டால அட்டையை விட்ட வாறே ஆண்பது மத்திற சேருங் கொட்டியிற் பேசு சேருங் குறியதனை யறிந்து கொள்ளே தாமரையும், கொட்டியும் கலந்துள்ள நீரில் இவ்வட்டைகளை விட்டால் ஆண அட்டைகள் தாமரையில் போய் ஒட்டிக கொள்ளுமாம். பெண் அட்டைகள் கொட்டியைச் சேருமாம். இந்த செயல்களைக் கொண்டு அட்டைகளின் பால் வகையை அறியலாம். இப்படி இனம் கண்டு சேகரித்த அட்டைகளை எப்படி பாதுகாப்பது விளக்கியிருக்கிறார் என்பதை பற்றியும்     அகத்தியா….

 

அட்டை தோற்றும் வகையதனை அறியக் கேளாய் அரக்காம்பால கொட்டிக் கிழங்கு பசுமஞ்சள கோல கழுநீர் வாரத்தரைத்து மட்டி தாகக் கரைத்ததிலே வாய்த்த உருவைத் தேற விட்டுக் கட்டிக் கொண்டுபோய்விடுவிர் காலன் தவிர்க்குங் கண்டீரே அகத்தியர்.

 

அடடைகளைச் செவ்வல்லி, கொட்டி, பசு மஞ்சள் இவைகளின் கிழங்கை அரைத்துக் கலந்த நீரில் விட்டு பாதுக்காக்க வேண்டும் என்கிறார். இதுவரை அட்டைகளைப் பற்றிய தகவல்களை பார்த்தோம் இனி வரும் நாட்களில் இந்த சிகிச்சை முறை பற்றிய தகவல்களை பார்ப்போம்

 

 

அட்டைவிடல் நோயாளியை தயார் செய்வது எப்படி?

 

சித்த மருத்துவம் அடடை விடல வைத்திய முறையில்,

 

 இந்த சிகிச்சையின் துவகக நிலையான நோயாளியை தயார் செய்வது எப்படி என்பதை பார்ப்போம் நவீன மருத்துவதுறையில் நோயாளியை தயார் செய்வது என்பது தனியொகு தனியொரு பெரும் பாடப் பிரிவாகவே இருக்கிறது. அகத்தியரும் கூட தனது அட்டைவிடல் மருத்துவத்தில் நோயாளியை தயார் செய்யும் முறையினையும், அதன அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கிறார்

 

அடடை விடக் கொம்புவைக்க ஆன்சிலை யாறிந்தத ஒட்டிச்சு வாங்க முள்ளுதிரம் பட்டினிதான ஆகாதே யென்று மவனிதனி லுள்ளோர்க்குப் பாகார் மொழியாய பகர் சத்தியில் மாந்த ருக்குந் தையல்பிள் ளையாத மக்கும் ஒத்துநின் றூட்டி வித்து உறக்கமுந் தவிரப் பண்ணி மத்தியா னத்து மேலோய மண்கொண்டு சுத்தி பண்ணிப் பற்றிய நோய்கள் தன்னைப் பார்த்துநீ அட்டை கட்டே  அகத்தியர்.

 

அட்டை விடல் சிகிச்சைக்கு முதலில் நோயாளிக்கு முறைப்படி வாந்திக்கும் பேதிக்கும் கொடுத்து அவருக்கு வியாவை உண்டாக்கக் கூடிய ஏனைய பரிகாரங்களைச் செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அட்டையை விடும் நாளில் ஏற்ற அளவில் உணவையளித்து அவரை தூங்காவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இவை பொது தயாரிப்புகள். இனி உடலில் அட்டை விட வேண்டிய இடத்திற்கான தயாரிப்புகளை அகத்தியா பின் வருமாறு கூறுகிறார்.

 

அட்டை விட வேண்டிய இடத்தை உவாமண கொண்டு சுத்தம் செய்து, அவ்விடத்தில் காவி மண்ணை ஈரமாகப் பூசி, எந்த இடத்தில் நோய் அதிகமாக இருக்கிறது என்று அறிந்து அந்த இடத்தில் அட்டை விடுவதே சிறந்த பயனைத்தரும் என்கிறார்.

 

பிற்பகலில் அட்டை விடுதல் நன்று. எனினும் குழந்தைகட்குக் காலையில் விடுதல் நலம் மாலைக் காலத்தில் விடுவது நல்லதல்ல ஏன் எனில் இரவில் அட்டை கடித்த கடிவாயினின்றும் இரத்தம் அதிகளவில் வெளியேற்க கூடும் அப்போது அதை கவனத்தில் கொள்ளாது தூங்க நேரிட்டால அதிக இரத்த இழப்பால் நோயாளி உயிர் இழக்க நேரிடுமாம். இந்த எல்லா நாளும் அட்டைவிடல் சிகிச்சையை எந்த நாளில் செய்வது?

அட்டைவிடலும், நாட்களும்! மருத்துவம் அட்டைவிடல் மருத்துவமானது. மற்றெந்த மருத்துவ முறைகளைப் போலவே தனித்துவமான அலகுகளை கொண்டிருக்கிறது.

 

 

அட்டைகளை தெரிந்தெடுப்பதில் துவங்கி நோயாளியை தயார் செய்வது வரை ஒவ்வொன்றும் பிரத்யேசு கவனிப்புடன் செய்திட வேண்டுமென பார்த்தோம். அந்த வகையில் அட்டை விடுவதற்கான தினஙகளைப் பற்றிய தகவல்களை

 

உடலின் பலவேறு பாகங்களில் நோயின் தன்மைக்கேற்ப அட்டை விடல சிகிச்சை பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. எந்த பாகத்தில் என்று அட்டைவிடலாம் என்பதைப் பற்றிய தகவல்களை தேடினால், எந்த தினத்தில் எந்த பாகத்தில் அட்டை விடக்கூடாது என்கிற தகவலையே அகத்தியா குறிப்பிட்டிருக்கிறார். இந்த விவரங்கள் “அகத்தியா நயனவிதி 500” என்கிற நூலில் பின்வருமாறு கூறப் பட்டிருக்கிறது.

 

சீர்திரு பிரதமை சேர்ந்திடும் பெருவிரல் நேர்பெறு முள்ளங் காலது துதியை திரிதியை முழங்கால சோந்திடு மெனக சதுர்த்தி பெருந்துடை தாவிய பஞ்சமி குய்யத் திடத்தே குடியிருந் திடுமாம் ஐயமே சஷ்டி அமாநதிடும் நாபி சபதமி முலையில் தானிருந் திடுமால ஒத்திடு மஷ்டமி ஓதினோங் கரத்தில் மெச்சிடும் நவமி மேவிய கழுத்தில் அதரந் தசமி ஆகுமவ விடத்தே ஏகாதசியில் இருந்திடும் நூவில் துவாதசி தன்னில் துயின்றிடும் நெற்றி திரயோதசியில சேர்ந்திடும் புருவம் சதுர்ததசி பிடா தானிருந் திடுமால உதித்திடும் பூரணம் உச்சியி லுறையும் செப்பிய அமிர்தம் நிலைநின் றதனால சஸ்திரம் பண்ணிகல தானெழும் நோய்கள் கொப்புளித் திடினுங் குத்துப் படினுங் தப்பிலா அரவந் தாங்கடித் திடினும் அட்டை கடிக்கினும் அடிதடிச் சிலந்தியும் வயிற்றிற் பிணியென மரணம தாமே காசினி தனிலே கைவிட தாரி திதிகளை யறிந்துசெய்திடப் பலிக்கும் மலைதிகழ முனிவா மகிழ்ந்துரைத் தனரே. யாக இதன் படி கீழே குறிப்பிட்டுள்ள நாடகளில், குறிப்பிட்ட இடங்களில் அட்டை விடலை தவிர்கக வேண்டுமென் கூறுகிறார்  அகத்தியர்.

திதி. இடம்.

பிரதமை -பெருவிரல துதியை –

உள்ளங்கால திரிதியை – முழங்கால் சதுர்த்தி தொடை

பஞ்சமி – குய்யம் சஷ்டி -நாபி சப்தமி மார்பு

அஷ்டமி கை நவமி கழுத்து தசமி கீழுதடு

ஏகாதசி நாக்கு காப்

துவாதசி – நெற்றி திரயோதசி -புருவம் Cmyfreeco REGISTEREO

சதுர்த்தசி – பிடரி அமாவாசை அல்லது பெளர்ணமி உச்சி இது தவிர நமது கழுத்தில் விம்மிக் காணும் காரிரத்தக் குழாயிலும், நாடி உணரப்படும் வீக்கங்களிலும் அட்டையை விடக்கூடாது என்றும், நாடி உணரப்படும் பகுதியில் உள்ள வீக்கங்களில், அந்த வீக்கத்திலிருந்து நான்கு அல்லது ஐந்து அங்குலம் தள்ளி அட்டையை விடலாம் என்கிறார். எல்லாம் சரிதான்,

 

இனி அட்டையை எப்படி விடுவது?

எப்படி அட்டை விடுவது சித்த மருத்துவம் அட்டை விடல சிகிச்சை முறையில் இதுவரை முன் தயாரிப்புகள் மற்றும் அதற்கான பக்குவங்களை பார்த்தோம். இன்றைய பதிவில் சிகிச்சையின் முக்கிய கட்டமான அட்டையை பாதிக்கப் பட்ட உறுப்பில் எவ்வாறு விடுவது என்பதைப் பற்றி பார்ப்போம்  பாதிக்கப் பட்ட உறுப்பின் பாதிப்பு மற்றும் அதன் வீக்கத்தை பொறுதது அட்டைவிடலை தீர்மானிக்க வேண்டும். இந்தபாகத்தில் எப்படி அட்டையினை கடிக்க விட வேண்டும் என்பதைப் பற்றி அகத்தியா பின் வருமாறு கூறுகிறார்.

 

 அமிரத பாகம் விஷபாகம் அறிந்தே யடடை தனைவிடுக அமிர்தபாகத் தான் வட்டை தனை யிப்பால்நீ தானவிடுக குமுத மலர்வாய் மடமானே கொடிய விஷப்பர் கத்தேற்றித் திமிர மாக பெண்ணுருவைத் திறந்தே விடுக செப்பினரே முன்னே சொன்னோம் முழுவதும் மொய்குழல் மாதேதி கேளாய் அன்னம் பாலில் நீர்பெய்து அயின்றாற் போல் விஷமகலும் இன்னஞ் சொல்லி வெணவிரலில உதிர மெய்லாம் வாங்கிவிடும் பொன்னை யணியும் மேனியளே மேலும் புகலக் கேளாயே  அகத்தியர்.

 

நீர் நிறைந்த ஒரு சிறு குடுவையில் அட்டையை விட்டு அந்த குடுவையின் வாயை அட்டை விட வேண்டிய இடத்தில் கவிழதது நீர் வெளியேறாத வண்ணம் பிடித்தல் வேண்டும். அப்போது அட்டை நோயுள்ள இடத்தைப் பிடித்துக் கொள்ளும். ந ந நா நீர U ஒரு வேளை மேற்சொன்ன முறையில் அட்டை கவ்விப் பிடிக்காவிட்டால் அந்த அட்டையை ஒரு சுத்தமான வெண் துணியில் எடுத்து விட்டு, பாதிக்கப் பட்ட உறுப்பினை மறுபடியும் துடைத்துப் பாலைத் தடவி அதன் மேல அட்டையை விட அது பற்றும் என்கிறார். I

ஒருவேளை இந்த இரண்டு முறையிலும் அட்டை பிடிக்கா விட்டால் பாதிக்கப் பட்ட இடத்தில் சிறு கூரிய கத்தியால மேலாகக் கீறிவிட குருதி சற்றே கசியும். அவ்வாறு கசிகின்ற குருதியை அவ்விடத்திலேயே தடவிவிட்டு அதன்மீது அட்டையை விட விரைவில் பற்றிக் கொள்ளுமாம். அட்டை விட்டாயிற்று,

 

இனி இந்த சிகிச்சை நிறைவேறியதை அறிவது எப்படி?, சிகிச்சை முடிந்த பின்னா அட்டையை எடுப்பது எப்படி?

 சித்த மருத்துவம் அட்டைவிடல சிகிச்சையில் அட்டையானது பாதிக்கப் பட்ட இடத்தில் இருக்கும் கெட்ட இரத்தத்தை உறிஞ்சுவதன் மூலமும், அப்போது அட்டையின் வாயில் இருந்து சுரக்கும் திரவம் இரத்தத்தோடு கலப்பதன் மூலமும் சிகிச்சை நடைபெறுகிறது. பாதிக்கப் பட்ட இடத்தில் உள்ள வீக்கம் வற்றுதல் அல்லது வலி குறைதல் போன்றவையே இந்த சிகிச்சை பூர்த்தியானதற்கான அடையாளமாய கருதப் படுகிறது. இதனை அகத்தியா பின் வருமாறு கூறுகிறார்.

 

 துட்டரத்தம் போனாக்கால் சோக முன்கூடிய திட்டமுடன் வேதனையும் தீருமே – வட்டதன் மானே உருவினுக்கு மற்றொன்றும் வாராது தானே தனக்குநிகா தான. பொரித்தவெள ளரைத்துப் பூகம் போகுமவ விரணங் கேளாய் கருத்துடன் மந்த வாதம் கலந்தபித்தத்தால் வந்த வருத்தமாம் வலிபெருக்கில வாதமாஞ் சோபந் தீர்த்து திருத்தமா யட்டையுண்ணுந் திறந்திருந் திண்ணந தானே.  அகத்தியர்.

 

  இனி சிகிச்சை முடிந்த பின்னா உடலில் கடித்திருக்கும் அட்டையை எடுக்கும் விதம் பற்றி பார்ப்போம்.

 

 குடித்துவீழட்டைதனைக் கொள்தவிட்டி லிட்டுப் பிடித்ததினவாய் எள்ளதனைப் பெய்து பிடித்து விட்டூரத்தம் போனால் துலைநீரில் நீந்தவிட்டுக் கட்டுவது மண்குடுவைக் காண் பாதிக்கப் பட்ட உறுப்பின் வீக்கம் அல்லது அங்கு இருக்கும் வலி குறையும் வரை ஒன்றில் இருந்து இரண்டு நாளைக்கு அட்டைவிடல் சிகிச்சையை செய்ய வேண்டியிருக்கும். இயற்கையாக ஒன்று முதல் இரண்டு நாளைக்குள் நல்ல அட்டை வேண்டிய அளவு இரத்தத்தை உறிஞசி எடுத்துவிடும். அதன் பின் தானாகவே விழுந்துவிடும். ஒரு வேளை நிரம்பக் குடித்த பின்னும் கவ்விப் பிடித்துக் கொண்டிருக்குமாயின் கடிவாயில் காடி நீரைப் பெய்தல் வேண்டும். அல்லது பொடி செய்த கறியுப்பைத் தூவ அட்டை கீழே விழுந்து விடும் என்கிறார். இரத்தம் குடித்து கீழே விழுந்த அட்டையைத் தவிட்டிலிட்டு புரட்ட வேண்டும். பிறகு பொடி செய்த எள்ளை அதன் வாயில் தேய்க்கவேண்டுமாம். அதன் பின் சுத்த நீரில் விட்டு குருதி வெளி வரும்படி செய்ய வேண்டுமாம். பின்னா அதைப் புற்று மண கரைத்த தெளி நீரில் விட்ட பிறகு, அந்த அட்டைகளைச்

 

செவ்வல்லி, கொட்டி, பசு மஞ்சள் இவைகளின் கிழஙகை அரைத்துக் கலந்த நீரில் விட்டு பாதுகாகசு வேண்டும்.

 

முக்கியமாக பயன்படுத்திய அடடைகளையும் பயன்படுத்தாத அட்டைகளையும் தனித் தனியே வைக்க வேண்டும் என்கிறார். அட்டையை நீக்கிய பின்னா கடிவாயில் இருந்து இரத்தம் பெருகினால் அல்லது புண் ஏற்பட்டால் அதைத் தடுக்கும் விதம் பற்றியும் அகத்தியா பின வருமாறு கூறுகிறார்.

பொன்னிற முதிர்ந்த எள்ளைப் பொருகுபோ லரைத்த இன்னுஞ் சென்னிற வெண்ணெய் தன்னைச் சிகரத்தே நொக்கக் கொண்டு மின்னனை யாய்நீ கேளாய் விரைந்துட நுதிரம் பாயந்தால் புன்னைப்பூ நிறம் தாகப் போற்றேள் வரைத்துப் பூசே. சாதிரந தன்னை கற்றுந் தவத்தினிற் பொருளைக் கேட்டுங் காத்திரந் துய்யனாகில் கைவந்த தோர் கையைக் கண்டு பார்த்திடு மிவையே யென்று பரிவுட நிவனைப் பற்றித் தீர்த்து நோய் தவிர்க்க வேண்டிச செகந்தனில் விடுவித் தாரே.  அகத்தியர்.

 

கடி வாயில இருந்து இரத்தம் வெளியேறினால் படிகாரம் பொடி அல்லது வெங்காரப் பொடியைத் தூவ நின்று விடும். மேலும் அட்டை கடித்த இடத்தில் புண் ஏற்பட்டால் காரௌ, கற்றாழை இவ்விரண்டையும் காடி நீரில் அரைத்து மேலுக்கு பூசலாம். அல்லது கற்றாழை மடலைச் சுட்டு இரண்டாகப் பிளந்து மஞ்சட பொடியைத் தூவி புண்ணில் வைத்துக் கட்டலாம் என்கிறார். இத்துடன் அட்டைவிடல் சிகிச்சை தொடர் நிறைவடைந்தது. தொடரின் நீளம் கருதி கத்தரிக்கப் பட்ட சில தகவல்களை நாளைய பதிவில் பிறசோக்கையாய் பகிர்ந்து கொள்கிறேன்.

அட்டைவிடல் –

 

சித்த மருத்துவம் அட்டைவிடல் தொடருக்காக திரட்டிய தகவல்கள் சிலவற்றை பதிவின் நீளம் மற்றும் தொடர்ச்சி கருதி தவிர்க்க வேண்டியதாயிற்று அந்த தகவலகளை  பதிவில தொகுத்திருக்கிறேன்.

 

தகுதியில்லாத அல்லது தவறான அட்டைகளை சுடிக்க விடுவதால் உண்டாகும் விளைவுகளை அகத்தியா பின் வருமாறு விளக்குகிறார்.

 

 விட்டவருத் தானும் விழவுருவே யானக்கால வெட்டுருவாய் விங்குமது வேதனையா திட்டஞ் சுரமாங் கலக்கமாஞ் சூழ்தினவுங் கானும் உரமாகும் புண்ணு முதிர்ந்து  அகத்தியர்.

 

 

தவறான அடடைகளை சிகிச்சைக்கு பயன்படுத்தினால் நோயாளிக்குக் காய்ச்சல் மயக்கம் வேதனை உண்டாகும். மேலும் அட்டைவிட்ட இடத்தில் எரிச்சல் நமைச்சலுண்டாகிக் கடிவாயும் விங்கும்

 

விட்டவுருத் தன்னில் விஷகதிரந்தான் சிக்கிய பட்ட வுருவைப் பலகாலும் விட்டு விடு மத்தா லுருவடைய மான விஷமாகும் முத்தான ததை தாய மொழி திரம்பக குடித்துருவும் நித்திரை போய் மீள வரம்பில் கடிகடிக்கி தனத்திரும்ப புளியிட்டு வாங்கும் பிடித்திருந்தால் மீளக கருவற்று தான கடிக்கும் காண்  அகத்தியர்.

 

 

அட்டைதனை விட்டு அதன்மீதிலே சிவை விட்டுறையு மல்லாக்கால் ஈயிருந்துமுட்டக குடியாது பூசீகலந்துவிடு மென்றே துடியாடு மெல்லிடையாய் சொல் வீக்கம் விதனமிகு வேதனை தாங்கடினம் தாக்குவிஷம் வேற்றுநிறந் தானணுகில்போக்கி விடுமட்டை தானென் றவனியிலுள் ளோர்க்குத் திடமாக வேயிதனைச் செப்பு  அகத்தியர்.

தேவைக்கு அதிகமாய அட்டைகளை விட்டால் அதிக ரத்தம் உறிஞ்சிவிடும்.அதனால் நோயாளி நீரில்லாப் பயிர் போல வாட்டமடைந்து உயிர் துறப்பதற்கு வழியுண்டு. வேண்டிய அளவு இரத்தம் வெளிப்படாவிட்டால் மீண்டும் அட்டையை விடலாம். ஆனால் நோயாளி மயக்க மடைந்தால் நிறுத்தவேண்டும். பிறகு மறுநாள் அட்டையை விடலாம். மேலும் சுடுநீர் கொண்டு ஒற்றடமிட கடிவாயினின்றும் இரத்தம் வெளிவரும். ஒரு முறை பயன்படுத்திய அட்டையை குறைந்தது ஏழு நாட்களுககுள திரும்ப சிகிச்சைக்கு பயன்படுத்தக் கூடாது. அதற்கு தேவையான ஓய்வு கொடுக்க வேண்டும், மாறாக அடுத்தடுத்து உபயோகித்தால் அது நச்சுத் தன்மையுடையதாகி விடுமாம். அதைப் போலவே அட்டையைப் பாதுகாக்கும் நீரானது மூன்று அல்லது நான்கு நாடகளுககொரு முறை மாற்றப்பட வேண்டும் அல்லாவிடில் அவ்வட்டை சோம்பலடைந்து நாளடைவிற் பயன்படாற போயவிடும் என்கிறார்.

 

அட்டையைக் கடிக்க விட்டிருக்கும்போது அதன் மீது ஈரத்துணியை போடவேண்டுமாம் இன்றேல் மொய்க்கும். அதனால் அட்டையானது செம்மையாய்க் குடிக்காது அட்டைகள் தவறுதலாக மூக்கு, எருவாய், கருவாய் க்குள் சென்றுவிட்டால் அவ்வழிகளில் காடி நீரைப் பாய்ச்சினாலும், உப்புப் பொடியைத் தூவினாலும் அட்டை வெளி வந்து விடுமாம்

அட்டைகளினால் தீரக்கூடிய சில முக்கிய நோய்களும் அந்நோய்களில் விடுவதற்குரிய இடங்களும்

 

  1. சுரத்துடன் கூடிய மார்பு அல்லரு வயிற்று நோயில், நோய காணுமிடததின மேல் விடலாம்.
  2. குருதி மூலத்தால் வருந்துகிற ஒருவனுக்குக் குருதி தடைபடுவதினால் ஏற்படும் தலைவலியை நீக்குதற்கு அட்டையை எருவாயைச் சுற்றி விடலாம்

 

. 3. கருப்பையில் ஏற்படும் கோளாறுகளுக்கும், சூதக வலியைத் தீர்ப்பதற்கும் தொடையின் உட்புறத்தில் அட்டையை

  1. அடிபட்ட வீக்கங்கள், கட்டிகள், கிரந்தி, வீக்கங்கள் ஆகிய நோய்களுக்கு அட்டைகளை பாதிக்கப் பட்ட இடத்தில் விடலாம்
  2. குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமல் இருந்தால் அட்டையை முதுகு நடுவின் மேல்புறத்தில் விடலாம்

 

courtesy All Books and reference to all website and thamarai books

 

வினோதனின் எழுத்துக்கள் தொடரும்……………………………………………………..

 

#SattaimuniNathar #aanmeegam #vasiyam #manthiram #sivan #ஆன்மிகம் #spirtual #spiritualchannel #aanmeega_thagaval #tamil #parikaram #devotional #power #spiritual_channel#aanmegam #spirtual #spiritualchannel #aanmeegathagaval #tamil #parikaram #devotional #power #மாயமாய்_மறையும்_மனிதர்கள் #மறைவு-மை_வித்தை #ஆதாளை#சித்தர்கள்#மனோவசியம்#Nithyananda#KAILASA’sSPHNithyananda#Sadhguru#sadhgurutamil,#ravishankerguruji#ZenYoga #Exercise #DietPlan#Behindwoods02##hypnotismtamil#Shortfilm #thehypnotist #மாயமாய்_மறைய #சித்தர்_மந்திரம் #இலவச_மாந்திரீக_பயிற்சி #spiritual_world #spiritual #manthrigam #mantrigam #மாந்திரீகம் #மலையாள #வசியம் #Manthrigam class#ragasiyam,#ஆன்மீககுறிப்புகள்#anmegam#thagaval#sitharkal#vinodhan#love#book#bookreview#secret#manifestaion#rasamani,#rasamanimaking #rasamanisales #rasamaniwebsite,#youtubechannel,#youtube,#youtuber,#subcribe,#youtubevideos,#youtubevideo,#follow#meme,#tamilvideos,#live,#bhfyp,#viraltamil,#vlogger,#youtubelife,#consciousness,#higherconsciousness,#sprituality,#meditation,#metaphysical,#englightment,#spirtualgrowth,#spiritualhealing,#spiritual,#spirtualawakening,#lawofattraction,#mind#wisdom,#yoga,#life#sadhguru#sagakalai#சகாக்கலை#மனம்#ரசமணி#உண்மையானரசமணி#சக்திவாய்ந்தரசமணி#ஹப்னாட்டிசம்#காதல்##காமம்#ஞானி#மிஸ்மரிசம்#திருப்பதி,

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart