சித்தராய் இருந்த முருகருக்கு மௌன யோகத்தை எப்படி கற்றார் மௌனயோகமும் முருகனும்
பாரப்பா வெங்கெங்கு மோடினாலும் பலபலவாய மந்திரங்கள் படித்திட்டாலும்
ஆரப்பர் மௌனமென்ற ஆதிபீடம் அதினாலே சகலசித்து மாட்டிவைக்கும்
நேரப்பா மற்றதினா லாவதென்ன நிலைகண்ட பெரியோர்கள் நீஞ்சுவார்கள்
ஊரப்பா கோடியிலே யொருவனுண்டு உற்றுணர்ந்த பெரியோர்க ளுணமைதானே
சுப்பிரமணியா ஞானம் 500, பாடல்371
எங்கெங்குச் சென்றுத் திரிந்தாலும் பலவகையான மந்திரங்கள் ஓதினாலும் அதனால் எந்தவிதப பயனும் கிட்டாது மௌன யோகம் செய்தால் மட்டுமே சகலவிதச் சித்தாடல்கள் செய்ய இயலும் வாத சித்தி காயசித்தி, ஞானசித்தி வேதைசித்தி, அஷ்டகர்மம் போன்ற 64 சித்திகளும் மௌன யோகத்தினால் எளிதில் கிடைத்திடும் உலகில வாழும் மனிதருள் கோடியில ஒருவர்தான சிவயோகம் சித்தியடைந்து, மௌன யோகம் செய்யும் தகுதியைப் பெறுவார் சிவயோகம் சித்தியடைந்த பெரியோர்கள், மௌன யோகம் புரிந்து இறைநிலை அடைவார்கள்
முருகப்பெருமானின் குரு யார் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது ஆனால் அதை அவரே தன் வாயில் வார்த்தையாக சொல்கிறார் சுப்பிரமணிய ஞானத்தை பார்ப்போம் வாருங்கள்
பகாந்திட்டார் பராபரமான சோதி பதிவான மெய்ஞ்ஞானம் பகர்ந்தே செய்தார்
அகாந்திட்டார் மும்மூலம் உபதேசித்தார் ஆறுவரை யூடுருவி அறியச் சொன்னார்
இகாந்திட்டார் ஈராறுதலமும் சொன்னார் இரவிமதி சோலையிலே இருக்கச் சொன்னார்
தகாந்திட்ட விந்துவையும் கூட்டச் சொன்னார்சணமுகந்தானென்று சொல்லிச் சாற்றினாரே”
சுப்பிரமணியர் ஞானம் 500, பாடல் 19
முருகனுக்குப் பராபரமான இறைவனே சோதிவடிவில மௌன யோகத்தைக் கற்றுக் கொடுத்தார். இயேசு கிறிஸ்துவுக்கு இறைவன் எப்படி விவிலியத்தை புதிய விவிலியத்தை அருளினார் அதைப்போல இவ்வாறாக முகம்மது நபிகளுக்கு (ஸல) இறைவன் குரானை அருளினார் எனினும் முருகனுக்கு அருளியது பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகும் மும்மூலம் என்னவென்று சோதிவடிவிலான குருவான இறைவன் விளக்கி அருளினார் இதனையே முருகன் உலகோர்க்கு உபதேசித்தார். ஆறுவரையாகிய ஆறு ஆதாரங்களை ஊடுருவிக் கடக்கும்படியும் இறைவன் அறிவுறுத்தினார் அடுத்து ஈரறுதலங்கள் என்பது உடலில் உள்ள ஆறு சட ஆதாரங்கள் மற்றும் உடலுக்கு வெளியிலுள்ள ஆறு நிராதாரங்கள் ஆகிய பன்னிரண்டு தலங்களையும் விவரித்தார் இரவியாகிய பிங்கலையும் மதியாகிய இடகலையும் கூடும் சோலையாகிய ஆகஞாவில் ஊன்றி இருக்கும்படி கூறினார் அடுத்து விந்து என அழைக்கப்படும் சகஸ்ராரத்தைக் கட்டும்படிப் பராபரமாகிய சோதிச் சொன்னார் அத்துடன் சண்முகம் என்ற பெயரும் அளித்தார் சண்முகம் என்பது சரவணபவ மந்திரம் (ஷ்டாட்சர மந்திரம்) என்னும் மௌன யோகத்திற்கான மந்திரம் இவை அனைத்தையும் சோதிவடிவிலாகிய இறைவன் குருவாக அமைந்து முருகனுக்கு அருளினார்
நாம் இதுவரையில் பார்த்தது முருகனைக் குறித்த மவுன யோகத்தையும் அவருடைய குருவையும் குறித்த ரகசியத்தை குறித்து நாம் பார்த்தோம் இப்பொழுது இன்னும் ஆழமாக குரு உடைய மாணவர் யார்? அதாவது முருகனுடைய மாணவர் ஒன்று யாருக்காக யாராவது இருக்க வேண்டும் அல்லவா அது யார் என்று நமக்கு தெரியாது இதுவரை நாம் வேறு விதமாக நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அது அல்ல அது எப்படி என்று அடுத்த பதிவில் நாம் பார்ப்போம் தொடர்ந்து இணைந்திருங்கள்
உங்கள் வினோதனுடன்