முருகன் தன்னுடைய சுப்பிரமண்ய ஞானக்கோவை என்ற சுத்த ஞானத்தில் விவரிக்கிறார் எதை விவரிக்கிறார் என்றால் தம்மிடம் யார் வந்தது எதற்காக வந்தார் என்ற ஒரு விஷயத்தையும் ரகசியத்தையும் மும்மூல ரகசியத்தையும் விவரிக்கிறார்
“காட்டுகிறேன் அகத்திய மாமுனியேகேளு கருத்தொன்றாய் தானிறுத்திக் கபடமற்று
நாட்டுகிறேன மௌனத்தால் தினமுமாக நந்திகொலு சிஙகார நடனமகண்டு
வீரேழு மனிதனையும் அறுவதாக்கி விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்தது
சூரேநீ அசுரர்தமை வதைத்தாலே சுப்பிரமணியா என்றெமக்குப் பெயரிட்டாரேப்
பேரிட்டே எனைஅணைத்தாள் எந்தனாத்தாள் பிரணவத்தோடு ஆதாரம் தன்னைக்காட்டி
சீறிட்டே எனைஅணைத்து முத்தமிட்டாள தித்திக்கும் பாலமுதம் செலுத்திவைத்தாள்
விறிட்டே ஆங்காரம் போகச்செய்தாள விந்தினிலே விற்றிருந்து வாழ்ச்செய்தாளந்த
பாரிட்டே நாலவேத மார்க்கம் சொன்னாள பஞ்சவாண பதிதனிலே பாயந்தேன் பாரே”
சுப்பிரமணியா ஞானக்கோவை சுத்தஞானம் பாடல் 3
இந்தப் பாடல் உடைய அர்த்தம் என்ன சொல்லுகிறது என்றால்மாணவராகிய அகத்திய மாமுனியை நோக்கிச் சுபபிரமணியா தனது குரு தனக்கு அருளியவற்றை விவரிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது முருகன மௌனயோகம் புரிந்தபோது பிரபஞ்சத்தில் திகழும் பரவாலையாகிய காயத்திரியைக் கண்டார் பராபரனாகிய அப்பனையும் பராபரியாகிய ஆத்தாளையும் தரிசித்தார் யோகசித்தி பெற்ற முருகன சூரன் முதலாகிய அசுரர்களை அழித்தார் அதனால் சுப்பிரமணியர் என்ற பெயரும் முருகனுக்கு சூட்டப்பட்டது சூரன் என்பதை முருகன் தெளிவுபடுத்துவதைப் பின்பு காண்போம் பராபரனும் பராபரியும் ஒருங்கிணைந்த நிலையே பரம ஆகும் ஆத்தாளாகிய பராபரியும் அப்பனாகிய பராபரனும் சேர்ந்தே முருகனுக்கு யோகத்தினைப் போதித்தனர் ஓம் எனும் பிரணவத்தின் பொருள் விளக்கி, அகாரம், உகாரம் மகாரம், நாதம் விந்து ஆகிய பஞ்சவித்துக்களின் தன்மைகளைச் சொல்லி பன்னிரண்டு ஆதாரங்களையும் ஆத்தாள் காட்டுவித்தாள் பராபரியான ஒளியோடு முருகன் ஒன்றியமையை அணைத்து முத்தமிட்டாள் எனும் அடி குறிக்கிறது தித்திக்கும் பாலமுதமாகிய அமிர்தத்தை முருகனுக்குக் சுரக்கச் செய்தாள் அகங்காரம் கோபம், மகிழ்ச்சி, ஆணவம் போன்ற உணர்வுகள் அற்றவனே யோகியாக முடியும், ஞானியாக முடியும் நிக்கவேண்டிய இந்த உணர்வுகளை ஆத்தாள் போக்கினாள் ஏழாவது தலமாகிய விந்து எனும் சகஸ்ராரத்தலத்தின் மாமத்தை ஆத்தாள் விளக்கி அருளினார் அந்தகம் முருகனை சகஸ்ராரத்தலத்திலேயே விற்றிருக்கவும் அருள் புரிந்தாள் நால் வேத மார்க்கம் என்பது ரிக், யஜூர், சாம், அதாவணமாகிய நான்கு வேதங்களைக் குறிப்பதன்று நான்குவித மார்க்கங்களான சரியை, கிரியை, யோக, ஞானத்தை விளக்கியுரைத்தாள் இவற்றின் பயனாக முருகன் பஞ்சவாண பதியாகிய பரவெளியில வியாபித்தார் மேற்கண்ட முருகனின் தன்னிலை விளக்கங்கள் மூலமாக, பராபரனும் பராபரியும் இணைந்த பரமாகிய இறைவனே முருகனுக்குக் குருவாக அமைந்து, அனைத்தையும் போதித்தமை தெளிவாகிறது.
முருகனின் மும்மூலம் அதாவது முருகன் அறிந்த காயகல்பங்கள் என்னென்ன தெரியுமா? இதை சாப்பிட்டதால் தான் அவர் ஒளி உடலாக மாறினார் எப்படி இந்த பாடல் அதை விவரிக்கிறது
மும்மூலம் என்பது சித்தர்களின் இரகசிய பரிபாசை ஆகும் மும்மூலத்தை விஞ்சை மூன்றெழுத்து என்பர் முப்பு என்றும் சொல்லுவர் அகார உகார மகாரமாகிய மூன்று எனவும் அழைக்கப்படும் விஞ்சை என்பது மரணத்தை வெல்லும் இரகசியமான சக்தி மிக்க சூத்திரம் ஆகும். இத்தகைய மும்மூலத்தை வெளிப்படையாகக் கூறக்கூடாது என்பது சித்தர்களின் கட்டளை எனினும் மும்மூலம் குறித்த இப்பாடலின் பொருளை மட்டும் அறிந்துகொள்வோம்
“பாரடா வெண்சாரை யுண்ணும்போதும் பாலகனே கருநெல்லி அருந்தும்போதும்
ஆரடா நாகமதை மைந்தா நீயும் அப்பனே பணவிடைதா னரையே கொள்ளு
ஏரடா பதின்மூன்று வருடம் மைந்தர் இடைவிடா திம்மூன்றை உண்டாயானால்
வேரடா வினையகலும் பாவம் போகும் விஞ்சையெனு மூன்றெழுத்தை விரும்பிப்பாரே”
சுப்பிரமணியா ஞானம் 500 பாடல் 115
இப்பாடலில் வெண்சாரை கருநெல்லி, நாகம் என்று குறிப்பிடப்படுபவைதான் மும்மூலம் ஆகும் இவை பரிபாசையாகக் கூறப்பட்டுள்ளன வெண்சாரை கருநெல்லி, நாகத்தைத் தேடி காடு மலையெல்லாம் அலையவேண்டாம் என்றும், இவை வாழும் பகுதியிலேயே கிடைக்கும் என்றும் சித்தர்கள் அறிவுறுத்துவா இந்த மும்மூலங்கள் கொடிய நச்சு என்பதால் நாகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகைய சக்தி மிக்க சிவ கல்பங்களாகிய மும்மூலத்தினைத் தான் உண்டதாக முருகன் கூறுகிறார் முமமூலங்கள் பற்றி முழுமையாக, சிவயோகம் செய்யத் தகுதி படைத்தோர் மட்டுமே அறிந்து கொள்ளலாம்
இப்பொழுது புரிந்திருக்கும் எல்லோருக்கும் இந்த கல்பத்தை உண்ணாமல் சிவயோகம் செய்ய தகுதி இல்லவே இல்லை ஆனால் பல பேர் இன்று வரை வாசியோகத்தில் மையத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் அதுவும் இந்த வாசி யோகம் அந்த வாசியோகம் அந்த வாசியோகம் என்று ஆனால் நம்முடைய முப்பாட்டன் முருகன் அனைத்தையும் உணர்ந்தவன் அனைத்தையது ரகசியத்தையும் அறிந்தவன் இதுதான் மிகச்சிறந்த தகுதி என்று நான் சொல்லவில்லை முருகனே தன்னுடைய பாடலில் சுப்பிரமணிய ஞானத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்
அடுத்த பதிவில் முருகனுக்கு பல பெயர்கள் உண்டு அதில் ஒன்றுதான் சூரசம்காரம் என்று சொல்வார்கள் சூரியன் என்றால் என்ன எதற்கு இந்த சூரசம்காரம் நடந்தது இதை சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் இதனுடைய ஆழம் என்ன இதனுடைய புராணங்கள் இதிகாசங்கள் இதைதான் சொல்கிறதா இல்ல வேறு ஏதாவது இருக்கிறதா என்ற பல ஆராய்ச்சிகளுக்கு உட்பட்ட ஒரு விஷயத்தை குறித்து நாம் பார்க்க போகிறோம் தொடர்ந்து இணைந்திருங்கள்
உங்கள் வினோதனுடன் மறக்காமல் இந்த பதிவை SUBCRIBE செய்து கொள்ளுங்கள்