முருகனின் அவதார நோக்கத்தின் சூரசம்காரம் என்பது என்ன அதனுடைய சித்தர்கள் நினைத்து இருப்பது என்ன PART 6

சூரன் யார்? சூரசம்காரம்  என்பது என்ன?

       சூரன் என்பது பதமாகரன் சிங்கமுகாகரன் கஜமுகாசுரன் முதலான அசுரர்களைக் குறிப்பதாக புராணங்கள் கூறுகின்றன ஆனால் சூரன் என்று முருகன் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதைப் பின்வரும் பாடல்வழியாக விளங்கிக்கொளவோம்

நில்லடா மும்மூலம் கொண்டுதானும் நிலையான வாசியைத்தான் நினைத்துப்போற்று

அல்லடா கற்பமுந்தான் கொள்ளாமற்றான் அறிவான வாசியைத்தான் ஏற்றினாக்கால

மெல்லடா தேகமுந்தான் ஒத்துப்போகும் மேன்மையுள்ள வாசியுந்தான் குத்துவோடும்

வல்லடா வல்லவனாயக் கற்பங்கொண்டு வாய்வான வாசியைத்தான் வாங்குவாயே”

சுப்பிரமணியர் ஞானம் 200. பாடல் 55

வாங்கியிட ரவிகுளிகை மதியில் கட்டும் வாரிவிடும் பிரமத்தில் வளர்ந்தே நிற்கும்

ஏங்கியிட மனக்கண்ணும் தீர்ந்துபோகும் எல்லையில்லாப் பேரொளியும் ஒன்றும்வாய்க்கும்

தாங்கியிட தமந்திரஙகும் அமிர்தம்பாயும் சண்டனென்ற சூரனையும் சண்ணிக்கொள்ளும்

மூங்கியிட மும்மூல மற்றுப்போகும் முக்கியமாய சிவயோகம் வாய்க்குந்தானே”

சுப்பிரமணியர் ஞான்ம 200 பாடல் 56

   

சிவயோகம் செய்யும்போது மும்மூலத்தையும் தவறாமல் உடகொண்டு நித்தமும வாசியோகம் செய்துவர வேண்டும் மும்மூலம் கற்பங்களை உடகொள்ளாமல் வாசியை மட்டும் செய்தால் தேகம் முதுமையில் அழிந்துவிடும் தேகம் அழிந்தால் யோகமும் அழிந்துபடும் எனவே மும்மூலத்தைத் தெளிவாக அறிந்துகொண்டு தவறாமல் வாசியோகத்தை அப்பியாசம் செய்துவரவேண்டும் இவ்வாறாக மும்மூல கற்பங்களை உடகொண்டு வாசியோகம் செய்வதனால் கிடைக்கும் பயனகள் அடுத்து விவரிக்கப்படுகிறது இவ்வாறு மும்மூலக கற்பங்களை உடகொண்டு.

 

வாசியோகம் புரியும்போது, ரவியும் மதியும் சுழுமுனையில் ஒன்றும் மனக்கிலேசம் தீர்ந்து பிரம்மத்தில் ஒன்றலாம் தன்னுள் இருக்கும் வாலை ஒளியையும், காயத்திரி என்ற பரவெளியில் உள்ள பரவாலையாகிய ஒளியையும் தெளிவாயக காணும் பேறு வாய்க்கும் தமா என்ற பத்தாம் வாசல் திறந்து அமிர்தம் இறங்கும் அதன்பின் சூரனாகிய சண்டனை அதாவது மரணத்தினை வெல்ல்லாம்

    இங்கு சூரன் என்று குறிப்பிடுவது யாரென்றால் சண்டனாகிய மரணத்தைத்தான் என்று தெளிவுபடுத்துகிறார் பன்னிரண்டு வருடங்கள் வாசியோகம் செய்து மும்மூலங்களை உடகொண்டு 96 தத்துவங்களைச் சுட்டெரிக்க வேண்டும் 96 தத்துவங்களைச் சுடுதல என்பது சாதாரண செயலன்று ஒவ்வொரு தத்துவத்தினையும் கடக்கும்போதும் அது மரணத்திறகுச் சமமான துன்பத்தைத் தரும் ஆக 96 முறை மரணத்திற்கீடான துன்பத்தை அனுபவித்து, 96 தத்துவங்களைக் கடக்கவேண்டும் இதுவே சூரனாகிய மரணத்தை வெல்லுதலாகும் வாசியோகம் புரிந்து, மும்மூலங்களை உட்கொண்டு 96 தத்துவங்களைச் சுட்டெரித்து, சூரனாகிய மரணத்தை வெல்லுதலே சூரசமகாரமாகும் ஆனால் இந்த சூரசமகாரம், புராணங்களில் கதையாகப் புனையப்பட்டுள்ளது.

  எளிய மக்களுக்கு விளங்கும் வகையில் தத்துவங்களை அசுரர்களாகவும். மரணத்தை சூரனாகவும் வாசியை மயிலாகவும் வடிவேலாகவும் உருவகப்படுத்திப் புராணக் கதையாகிவிட்டது அரிய கருத்துகள் அனைத்து மக்களையும் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் வேதவியாசா வேதங்களையும் புராணங்களையும் உருவகங்களுடன் புனைந்து அளித்துச் சென்றார் மும்மூலங்களை உடகொண்டு 96 தத்துவங்களைச் சுட்டெரித்து, பன்னிரண்டு வருடங்கள் அப்பியாசம் செய்து, சிவயோகம் சித்தியானபின் மௌனயோகம் புரியத் தொடங்கலாம்.

      சூக்குமமாகப் பாடலில் பொதிந்துள்ள கருத்துகள் தேவையான அளவு இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிவயோகம் செய்யுமளவு உடலாலும் மனதாலும் உணாவாலும் பக்குவப்பட்டவர்களுக்கு இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மூலம் என்ற வார்த்தையின் செயல் சக்தி என்னவென்று புரியும் இல்லாதவர்களுக்கு புரியாது 

இப்பொழுது புரிகிறதா சூரசம்காரம் என்பது என்னவென்று நாம் நினைத்துக் கொண்டது வேறு சித்தர்கள் சூரசம்காரம் என்பது சொல்லப்பட்டது வேறு என்று இப்பொழுது உங்களுக்கு தெளிவாக புரியும் சூரன் என்றால் யார் என்று தெரியும் அது எங்கிருந்து தொடர்பு உள்ளது என்று தெரியும் புராண இதிகாசங்கள் நமக்கு எதையெல்லாம் புதைக்கப்பட்டது என்று நமக்கு புரிந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன் இப்பொழுது அடுத்த பதிவில் நாம் என்ன பார்க்க போறேன்னா இந்த முருகன் என்பவர் யார்? முருகன் என்பவர் ஒரு குரு வா அல்லது வேறயாரா இவர் எப்படி இப்படி இருக்கிறார் அதை குறித்த அடுத்த பதிவில் நாம் பார்க்க போகிறோம் தொடர்ந்து இணைந்திருங்கள்

உங்கள் வினோத் வினோதனுடன் மறக்காமல் இந்த பதிவை subscribe செய்யுங்கள் என்னுடைய blog உங்களுக்கு அடுத்த பதிவு உங்களுக்கு வரும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart