கடவுளை வீட்டில் வைத்துவிட்டு வெளியே தேடும் மூடர்களே
எல்லோருக்கும் வணக்கம் என்னுடைய பதிவை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி நாம் இன்று பார்க்கப் போகிற ஒரு பதிவு இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அந்த கடவுள் எங்கு இருக்கிறார் என்று தேடுகிறார்கள் ஒரு நாள் என்னுடைய குரு சமணன் என்கிற சாமி கண்ண அவர்கள் சொன்னார் கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேள்வி கேட்டார் சீடர்கள் அனைவரும் என்ன சொன்னார்கள் ஆனால் கடவுள் சொர்க்கத்தில் இருப்பார் கடவுள் நம்மை சுற்றி இருப்பார் கடவுள் நமக்குள் இருப்பார் இதை போன்ற பல பதில்கள் சொன்னார்கள் ஆனால் என் குரு என்ன சொன்னார்
வீட்டிலே வைத்துவிட்டு கடவுளை வெளியே தேடும் மூடர்களே என்று சொன்னார்கள் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை அது என்னவென்று கடைசி முடியும்போது நாம் பார்ப்போம்
என் வாழ்க்கையில் நான் ஒரு குடும்பத்தை சந்தித்தேன் அந்த குடும்பத்தில் குடும்பத்தை நடத்தும் மனிதன் பெயர் ஆறுமுகம் குடும்பத்தை நடத்தும் குடும்ப ஸ்திரியின் பெயர் மாலிகா இவர்களுக்கு பிறந்த நான்கு பிள்ளைகள்
முதல் பெண் பெயர் ஜோதி இரண்டாவது பெண் பெயர் தேவயானி மூன்றாவது பெண் பெயர் மோகினி நான் நான்காவது பையன் சச்சின் டெண்டுல்கர்
இந்த குடும்பம் இந்த குடும்பத்தை நடத்தும் ஆறுமுகம் பல ஆண்டுகளாக குடும்பத்தை நல்ல முறையில் வழி நடத்தினார் ஆனாலும் அந்த பெற்றோர்களுக்கு தன்னுடைய கடைசி மகனை மிகவும் பிடிக்கும் ஆனாலும் தாய்க்கு எல்லாம் சமம் எல்லாம் குழந்தையும் ஒன்றுதான் சரி காலம் சூழல் காலம் போனது அந்த தந்தை தன்னால் முடிந்த வரைக்கும் முயற்சி செய்தார் பிள்ளைகளை உயர்த்துவதற்கு
1 முதல் பிள்ளைக்கு மாமன் மகனை திருமணம் செய்தார்
2 இரண்டாவது பிள்ளை திருமணம் செய்து கொண்டது
3 மூன்றாவது பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தார்
4 பிறகு நான்காவது பையனுக்கு திருமணம் செய்து வைத்தார்
இந்த தந்தை கடமை இந்த இடத்தில் முடிகிறது அவருக்கு அவர்கள் குடும்பம் பிரிந்து போனது அவர்கள் குடும்பமாக உருவானார்கள் இந்த ஆறுமுகம் என்கிற ஒருவருக்கு பல பேரன்களும் பல பேத்திகளும் பிறந்தார்கள் அவர் தாத்தாவாக மாறிவிட்டார் அவர்கள் பாட்டியாக மாறிவிட்டார்கள் இதில் என்ன கேள்வி என்றால் ஒரு சிறப்பான குடும்பம் இதே போன்று தான் இந்த உலகத்தில் உள்ள எல்லா குடும்பங்களும் இருக்கிறது ஆனால் ஒரு கேள்வி இந்த தாய் தந்தையர்கள் பிறந்தவுடன் நம்மை பத்திரமாக பார்த்து வளர்த்து தம்மை ஆளாக்குறார்கள் ஆளாக்கின பிறகு அவர்கள் அவர்களுக்குள் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது
உதாரணமாக இந்த 1 ஜோதி 2 தேவையானி அவர்கள் வேலையை பார்க்கிறார்கள் மோகினி அவர்கள் வேலையை பார்க்கிறார்கள் இந்த சச்சின் டெண்டுல்கரும் அவர்கள் அவளையை பார்க்கிறார் ஒரு காலத்துக்கு பிறகு அந்த தந்தை ஆறுமுகம் சொத்துக்களை வைத்திருக்கிறார்
மாலிகா அவர்களுக்கும் மனநிலை பாதிப்பு ஏற்படுகிறது இந்த நிலைமையில் இருக்கும் பொழுது அந்த கணவன் மனைவியும் பிரிகிறார்கள் காரணம் மாலிகாவுக்கு மனநிலை சரியில்லை என்பதால் பிரிந்து செல்கிறார்கள் இதைப் போன்று பல குடும்பங்களிலும் நடந்திருக்கும் ஆனால் நான் என் வாழ்க்கையில் சந்தித்த ஒரு குடும்பத்தின் கதையை உங்களோடு கூட பகிர்ந்து கொள்கிறேன்
இந்த தாய் வழி தந்தை வழி இருக்க கூடிய அந்த சொந்த பந்தத்தை விட்டு விட்டு மாமியார் சொந்த பந்தங்களிடம் ஒட்டி உறவாட ஆரம்பித்து விட்டு அங்கே சென்று விடுகிறார் அப்போது இந்த உறவெல்லாம் வீண் என்னுடைய மனைவியின் குடும்பமே மேல் என்று நினைத்து விட்டு அங்கே சென்று விடுகிறார் இது இயல்பு தான் போகட்டும் ஆனாலும் இங்கு ஒரு கேள்வி என்னவென்றால் அக்கா தம்பி சண்டை போட்டுக் கொள்கிறார்கள் ஒன்றும் இல்லாத சண்டை சொத்துக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள் இதை நான் ஒரு குடும்பத்தில் பார்த்து சந்தித்தேன் உண்மையை சொல்ல போனால் நான் வெறுத்துப் போய்விட்டேன் அந்த குடும்பத்தை பார்த்து காரணம் இதை நான் நேரடியாக என் வாழ்க்கையில் அந்த குடும்பம் எப்படி வாழ்கிறது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை என் வாழ்க்கையில் நான் சந்தித்தேன்
என் குரு சாமி கண்ணு ஒரு விஷயத்தை அற்புதமான விஷயத்தை சொன்னார் தெய்வத்தை வீட்டில் வைத்துவிட்டு வெளியே தேடுகிறாய் என்று அந்த சச்சின் டெண்டுல்கர் கடவுளை வெளியே தேடிக் கொண்டிருக்கிறார் அந்த மோகினி வெளியே தேடிக் கொண்டிருக்கிறார் ஆனால் வீட்டிலேயே தன்னுடைய தாய் தந்தை தான் கடவுள் என்று அவர்களுக்கு புரியவில்லை இன்னும் சில பேர் தாய் தந்தையர்களை ஆசிரமங்களில் விட்டு சென்று விடுகிறார்கள் காரணம் அவர்களுக்கு ஒத்துப் போகவில்லை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் வயது ஆக அவர்கள் குழந்தையாக மாறுகிறார்கள் இது இயற்கை
நீங்களும் ஒரு நாள் அந்த நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள் அப்படி தள்ளப்படும் பொழுது நம்மை சூழ இருப்பவர்கள் அனைவரும் நம்மை ஏளனமாக பார்ப்பார்கள் நம் வாழ்வில் நம் வாழ்க்கை என்ன ஆனது ஏன் இப்படி இருக்கிறது என்று நீங்களே உங்களுக்குள் கேள்வி கேட்கும் நிலைமை ஏற்படும் வாழ்வே வீணாகிவிடும் ஒரு விஷயத்தை கூறிக் கொள்கிறேன் இந்த தெய்வத்தை நீங்கள் மதிக்க தவறினால் இந்த தெய்வத்தை பாதுகாக்க தவறினால் வாழ்வில் நாசம் விளையும் இதை என்னுடைய குரு சாமிக்கண்ணு சமணம் சொன்னார்
இந்த உலகத்தில் எந்த கலையை கற்றுக் கொள்கிறாயோ அதற்கு முன்பு உன் தாய் தந்தையை அனுமதியை பெற்றுக் கொள் என்று சொல்லுவார் தாய் தந்தை தான் முதலில் முதல் கடவுள் முதல் குரு அவர்கள் தான் அவர்களை நீ பார்க்கவில்லை என்றால் வீண் அந்த சச்சின் டெண்டுல்கர் சார் தன்னுடைய மனைவி சொல்வதை எல்லாம் கேட்டு மாமியார் வீட்டில் வேண்டாம் அனுப்பிவிடு அதுதான் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் பெண் பிள்ளைகள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் மகன் பார்த்துக் கொள்ளக்கூடாது என்று புதிய சட்டத்தை அந்த மருமகள் விதிக்கிறாள் அந்த சச்சின் டெண்டுல்கர் மனைவி பெயர் ஐஸ்வர்யா ராய் இந்த குடும்பத்தில் நான் பார்த்த வரை ஒவ்வொரு நாளும் சண்டை சச்சரவுகள் மட்டுமே நடந்து கொண்டே இருக்கிறது காரணம் என்னவென்று கூர்ந்து பார்த்தால் யாரிடம் சொத்து இருக்கிறதோ அவர்களை தான் பார்த்துக் கொள்கிறார்கள் அப்படி இருந்தும் அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு விட்டு விடுகிறார்கள் உதாரணம் தந்தையிடம் சொத்து இருந்தால் தந்தையை மட்டும் பாதுகாப்பது தாயிடம் செத்து இருந்தால் தாயை மட்டும் பாதுகாப்பது இதைப் போன்ற பல நிகழ்வுகள் உண்டு ஒவ்வொரு குடும்பத்திலும் நான் ஒன்று உங்களிடம் கூறிக் கொள்கிறேன் தாய் தந்தையர்களை பார்க்க வேண்டும் யார் பார்க்க வேண்டுமானால் மகன்தான் பார்க்க வேண்டும் மகள் பார்க்க வேண்டிய அவசியமில்லை இது என்ன புது கதை தாய் தந்தையை பார்க்க வேண்டியது மகன் தான் மகன் தான் பார்த்த பார்க்க வேண்டும் யார் ஒருவர் தாய் தந்தையை பார்க்கிறார்களோ அவன் தான் ஆண்மகன் .
இல்லை என்றால் அவன் ஒரு ஆணும் அல்ல பெண்ணும் அல்ல பிறகு ஒரு காலம் வந்தது அந்த மாலிகா வின் கணவர் உடல் நிலை காரணமாக பாதிக்கப்பட்டார் அதை பார்த்துக் கொண்டிருந்தது மோகினி ஆனால் மோகினி பணம் செலவாகும் என்று கைவிட்டால் சச்சின் டெண்டுல்கர் என்ன செய்தார் என்றால் தன் தந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூப்பிட்டு கொண்டு வந்து விட்டு பார்த்துவிட்டு சில மாதங்களுக்கு கழித்து அவர் இறந்து விட்டார் பிறகு. இரண்டு பிறகும் அந்த அக்கா தம்பி சண்டை மாளவில்லை இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது பிறகு பிறகு அந்த மல்லிகா என்னும் அந்த தாயை யார் பார்த்துக் கொள்வது என்ற ஒரு கேள்வி மோகினி சிறிது காலம் பார்த்தால் ஜோதி சிறிது காலம் பார்த்தால் தேவயானி சிறிது காலம் பார்த்தால் பிறகு சச்சின் டெண்டுல்கர் பார்த்தார் ஆனால் இதில் ஒரு கேள்வி என்னவென்றால் மோகினி சச்சின் டெண்டுல்கருக்கும் மிக சண்டை அக்கா தம்பிகளுக்கும் என்ன சண்டை என்றால் என் தாயிடம் இருந்து நீ பல சொத்துக்களை அபகரித்து விட்டாய்
தந்தையிடமிருந்து பல சொத்துக்களை அபகரித்து விட்டாய் ஆனால் அந்த சச்சின் டெண்டுல்கர் தன் தந்தையிடம் இருக்கக்கூடிய வீட்டை யாருக்கும் தன்னுடைய சக சகோதரிகளுக்கும் தராமல் அவரே அபகரித்து விட்டார் இதையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால் தாய் தந்தையை யார் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு கேள்வி மகன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் அவனை மகன் மகளும் பார்த்துக் கொள்ள விரும்பினால் பார்த்துக் கொள்ளுங்கள் அனால் ஒரு ஒரே ஒரு கேள்வி ஒரே ஒரு பதில் நீங்கள் கடவுளின் மிதுன நம்பிக்கை இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலோ முதல் கடவுள் தாய் தந்தை தான் அவர்களை நீங்கள் மதித்தாக வேண்டும் அவர்கள் வாழ்வு முடியும் வரை நீங்கள் கர்வத்தோடு அவர்களை பாதுகாக்க வேண்டும் அவர்களை அவர்கள் வாழ்வு முடியும் வரை அவர்கள் மகிழ்ச்சியோடு இந்த உலகத்தை விட்டு அனுப்பி வைக்க வேண்டும் ஏனென்றால் இந்த உலகத்தில் மகிழ்ச்சியோடு உங்களைப் பெற்றெடுத்தார்கள் அதே போன்று அவர்களுக்கும் நீங்கள் கடைசி வரைக்கும் மகிழ்ச்சியை தந்து விடை பெற செய்ய வேண்டும் அதுதான் தாய் தந்தையை முழுமையாக பார்த்துக்கொள்ளும் அழகு
இந்த தாய் தந்தையை கவனிக்காமல் போவதற்கு மூல காரணமாக அமையும் நபர்கள் யார் யார் என்றால் முதலில் மருமகள் பிறகு மகன் பிறகு மகள் இந்த மூவருக்கு உண்மையாகவே புத்தி என்பது இல்லவே இல்லை என்னை பொருத்தவரை தன்சுயம் மேல் அதிக ஆதிக்கம் கொண்ட நபர்கள்
கடைசி வரைக்கும் யார் ஒருவர் பார்த்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு எல்லை இல்லாத ஆசீர்வாதங்கள் வந்து சேருமா இது என்னுடைய குரு எனக்கு கொடுத்த மிகப்பெரிய வாக்கு என் குரு தலைமை குரு இருக்கக்கூடிய கன்னியாகுமாரி ஊரில் தலைமை ஆசான் குரு சமணர் என்கிற சாமி கண்ணு அவர்கள் சொன்ன ஒரு உபதேசம் விலையில்லா உபதேசம்
இந்த உபதேசத்திற்கு விலையே இல்லை யார் ஒருவர் கை கொள்கிறார்களோ அவர்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும் நீங்கள் இந்த தாய் தந்தையர்கள் விட்டு விட்டீர்களானால் உங்களுக்குள் நோய் வரும் பிறகு பணத்தால் பாதிக்கப்படுவீர்கள் மனதால் பாதிக்கப்படுவீர்கள் சுற்றுச்சூழலையால் பாதிக்கப்படுவீர்கள் இந்த இயற்கையை உங்களுக்கு விரோதமாக செயல்படும் காரணம் இந்த கடவுளை மதிக்கவில்லை என்றால் நீ இறைவனை எப்படி மதிப்பாய் பார்க்கிற கடவுளையும் மதிக்கவில்லை என்றால் அந்த காணாத ஒருவனை எப்படி உன்னால் பார்க்க முடியும் மதிக்க முடியும் உணர முடியும் தாய் தந்தையை கவனிப்பது கடமை மட்டுமல்ல கடமைக்கு கவனிக்காமல் உன் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே தாய் தந்தையின் சொத்தை யார் ஒருவன் சொத்தை எனக்கு அந்த சொத்து முக்கியம் என்று சொத்தில் மேல் நம்பிக்கை வைத்து தாய் தந்தையை பாதுகாத்துக் கொள்கிறானோ உன் வாழ்விலும் அதே திருப்பம் வந்து சேரும் ஒரு நாள் நீயும் அதற்காக கடினப்படுவாய்
தெய்வத்தை வீட்டில் வைத்துவிட்டு வெளியே தேடும் ஆன்மீகவாதிகளோ கடவுள் மீது நம்பிக்கை வைத்தீர்கள் ஆனால் சரி நம்பிக்கை இல்லாத கடவுள் நம்பிக்கையற்ற கொள்கை உடையவர்களாய் இருந்தாலும் சரி இது உன்னுடைய கடமை நீ செய்தாக வேண்டும்
வினோதனின் கருத்து
இந்த மாதிரி கேவலமான பிள்ளைகளை பெற்றெடுத்த தாய் தந்தையர்களுக்கு என்னுடைய வணக்கம் முதலில் தன் பிள்ளைகளுக்கு சொத்துக்களை தாய் தந்தையர்கள் தரவே தராதீர்கள் இந்த சொத்துக்கள் அனைத்தும் உங்களுக்கு கிடையாது என்று உரிமை கூறாதீர்கள் என்று சொல்லிவிடுங்கள் தன் உழைப்பால் உயர்ந்தவர்கள் தான் உலகத்தில் சிறந்தவர்களாக மாற முடியும் என்று கற்றுக் கொடுங்கள் உங்கள் சொத்து மேல் நம்பிக்கை வைக்கக்கூடிய மகன்களையும் மகள்களையும் உருவாக்காதீர்கள் அதனால் பல விளைவுகளும் பிரச்சனைகளும் ஏற்பட்டு கொண்டே இருக்கும் தாய் தந்தையர்களுக்கு என்னுடைய. என்னுடைய உபதேசம் ஒன்று உங்களுக்கு சொத்துக்கள் இருந்தால் நீங்கள் மட்டும் சந்தோஷமாக சுயநலமாக அனுபவியுங்கள் பிள்ளைகளுக்கு தராதீர்கள் அவர்களுக்கு அறிவை புகட்டுங்கள் அவர்களாகவே சம்பாதிக்க வையுங்கள் அவர்களை சம்பாதித்து அவர்களாக தங்களை பார்த்துக் கொள்ளட்டும் நீங்கள் அவர்களை நம்பி இருக்காதீர்கள் பிள்ளைகளை நம்பி இருக்காதீர்கள் மருமகனையும் மருமகளையும் என் சொந்த பந்தங்களையும் யாரையும் நம்பி இருக்காதீர்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொழுதே சொல்லிக் கொடுங்கள் என் சொத்தெல்லாம் நான் சம்பாதித்தது எல்லாம் உனக்கு அல்ல என்று சொல்லி சொல்லி கொடுங்கள் அவர்களாக தன்னைத்தானே செதுக்கிக் கொள்ள கற்றுக் கொடுங்கள் கடைசியாக நீங்கள் போகும்போது கூட அவர்களுக்கு எழுதி வைக்கும் உணர்வையும் அவர்களுக்கு தராதீர்கள் நீங்கள் ஆக முடிவு செய்யுங்கள் இப்போது இருக்கும் காலத்தில் உலகம் முழுக்க அதிகமாக ஆசிரமங்களும் தாய் தந்தையை விரிபதியாக விட்ட முதியோர் இல்லமும் தான் அதிகமாக உள்ளது அங்கே பல நல்ல உள்ளங்கள் வேதனையும் வாடிக் கொண்டிருக்கிறது என் பிள்ளை வருமானின் மகள் வருவாள் என்று தவித்துக் கொண்டிருக்கிற ஒரு இடமாக இருக்கிறது என்னை பொறுத்தவரை அந்த இடமெல்லாம் இந்த உலகில் மறைந்து போக வேண்டும் முதியோர் இல்லம் என்பது யாருக்கு இருக்க வேண்டும் என்றால் யாருமே இல்லாத ஒரு நபராக தன்னந்தனியாக இருக்கும் ஒருவருக்குத்தான் முதியோர் இல்லம் இருப்பவர்களுக்கு முதியோர் இல்லம் அல்ல ஆனால் இப்போது இருக்கும் காலத்தில் இருப்பவர்களுக்கு தான் முதியோர் இல்லம் சொந்த பந்தங்கள் மகன் மகள் மருமகள் அனைவரும் இருப்பவர்கள் தான் முதியோர் இல்லத்தில் வாழ்கிறார் வேதனை அளிக்கிறது
முதியோர் இல்லத்தில் வாழும் தாய் தந்துகளுக்கு சமர்ப்பணம்
இந்த உலகில் பல பேர் பல கருத்துகளை சொன்னாலும் நானும் சொன்னாலும் இந்த உலகம் கேட்க வா போகிறது திருந்தவா போகிறது மாரவா போகிறது எவ்வளவு எழுத்துக்கள் எழுதினாலும் திருந்தாத இந்த உலகம் கடைசி வரை தெரிந்தது மாறப்போவதில்லை




