முருகன் எல்லோருக்கும் குருவானவர் அதனால் அவர் பெயர் காரணகு உருவாக இருக்கிறார் காரிய குரு அல்ல முருகன் யார் என்பதை வருகிற பாடல் விவரிக்கிறது
“தானவனாய்த் தானாக நிலைத்து வாழந்து காயக்குமே கருவிகளைக் கழற்றிப் போட்டு
காரண சற்குருவைநீ கண்டுகொள்ளே’
“காட்டினேன் கருநெல்லி உண்டதாலே
சுப்பிரமணியர் ஞானம் 200 பாடல் 57
காரண சறகுருவென்று கருதலாசசே
சுப்பிரமணியா ஞானம் 200 பாடல 61
தான் அவன் ஆவதற்கு அடிப்படை நீ நீயாக இரு அதற்கு காரண சற்குரு என்ற சிவயோக குருவைக் கண்டறியவேண்டும் அதன்பின் அகக்கருவி, புறக்கருவிகளாகிய தொண்ணூற்றாறு தத்துவங்களைச் சுட்டெரித்துக் கடக்கவேண்டும். அந்த குருவின்மூலம் மௌனயோகம் செய்து தான் அவனாக இயலும் பின் காரண சற்குரு யாரெனக் கண்டறியவேண்டும் கருநெல்லி முதலாகிய மும்மூலங்களைத் தானும் உடகொண்டு உலகிற்கும் வெளிப்படுத்தியதால் முருகனே காரணகுரு ஆவார் சகஸ்ராரமாகிய விந்தைக் கட்டிய முன்னோடியான முருகனே யோகநெறியில் செல்பவர் அனைவருக்கும் காரணகுருவாக இருந்து அருள்புரிகிறார்
“கொல்லவே கருவிகளைக் கொன்றுபோட்டேன் கோளற வாசியைத்தான் கூர்ந்துபார்த்தேன்
அல்லவே அறுமனையை அறிந்துகொண்டேன் அப்புறம் பனிரெண்டு தலமும்கண்டேன்
வல்லவே பனிரெண்டை அடக்கிச்சென்றேன். வாய்வான சுழற்காற்றில் மருவிச்சென்றேன்
மெல்லவே பூமலர்கள் வாசங்கண்டேன மேதினியைத் தான்படைத்தேன் விரித்துக்கொள்ளே”
சுப்பிரமணியா ஞானம் 200. பாடல் 58
முருகன சிவயோகத்தில் நிலைத்து மும்மூலங்களை உட்கொண்டு அகக்கருவி, புறக்கருவிகளாகிய தொண்ணூற்றாறு தத்துவங்களைச் சுட்டெரித்துக் கடந்தார் எனினும் வாசியோகம் செய்வதை நிறுத்தவில்லை வாசியோகத்தைத் தொடர்ந்து புரிந்து ஆதாரத்தலங்களைக் கூர்ந்துப் பார்த்தார் அறுமனைகளாகிய சட ஆதாரங்கள் ஆறையும் கூர்ந்து நோக்கினார் பின் ஆறு சடாதாரங்கள். ஆறு நிராதாரங்கள் எனப் பன்னிரண்டு தலங்களையும் கூர்ந்துநோக்கிச் சமாதிநிலை நின்றார் அந்தத் தவ வலிமையால் பன்னிரண்டு ஆதாரத்தலங்களும் கைவரப்பெற்று, அவற்றைச் சித்தி செய்தார் மனமடங்கி வாயுவடங்கி பரவெளியில் ஒன்றித் தான் அவன் ஆனார் தாமே இறைநிலை பெற்றமையால், இப்பிரபஞ்சமாகவே மாறினார்
முருகனை குருவாக ஏற்றுக் கொள்வதற்கு 100 சதவீதம் அதற்கு தகுதியானவர் என்று இப்பொழுது நாம் அறிந்து கொண்டிருப்போம் காரணம் அவர் சாதாரணமாகமான ஒரு இறைநிலை தத்துவத்தோடு இல்லை அவர் பிரபஞ்சமாகவே இருக்கிறார் இப்பொழுதும் அவர் பிரபஞ்சமாகவே மாறி இருக்கிறார் அதனால் ஒரு முறை முருகா என்று கூப்பிட்ட உடன் பரமகுருவன் நம்மிடம் வந்து நம் வாழ்க்கைக்கு தேவையானதையும் அனைத்தையும் நம் வாழ்க்கையும் நோக்கத்தையும் நமக்கு செய்து முடிப்பார் காரணம் அவர் மும்மூலங்களையும் எடுத்து சமாதி நிலையில் நின்றவர் தன்னுடைய தவ வலிமையில் சித்தி அடைந்தவர் பிரபஞ்சமாகவே என்றும் இருந்து கொண்டிருக்கிறார் குரு இல்லாதவர்களுக்கு இன்று முருகனை குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள் அவர் உங்களுக்கு பாதை இல்லாத இடத்தில் பாதையை கொண்டு வருவார் வாழ்க்கைக்கு தேவையான பாதையை காண்பிப்பார் முருகன் என்றென்றும் உங்களோடு கூட இருப்பார் இது ஒரு அற்புதமான பதிவு முருகன் என்பவர் சாதாரணமானவர் அல்ல என்று புரிந்து இருக்கும் காரணம் நான் கொடுத்திருக்கிற அத்தனை பதிவும் புராண ரீதியா இதிகாசங்கள் ரீதியாக இல்லாமல் சித்தர்கள் என்று நினைக்கிறார்கள் தன்னுடைய பாடல் மூலமாக என்கிற பதிவை மட்டும் தான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன் அடுத்த பதிவில்http://VINODHAN வடிவேல் என்றால் என்ன அப்படி என்ற ஒரு கேள்வி இருக்கு வடிவேல் என்று கூப்பிடுகிறோமே அப்படின்னா என்ன அவரை சுவாமிநாதன் என்று நம்முடைய புராணங்கள் அளிக்கிறது அப்படின்னா என்ன இது சித்தர்கள் பார்வையில் என்ன இருக்கிறது என்ற தகவலை உங்களோடு கூட பகிர்ந்துக்க போகிறேன் அதனால மறக்காம இந்த பதிவை SUBCRIBE செய்யுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு அடுத்த பதிவு வரும்
தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோதனுடன்