இப்படிப்பட்ட அரவணைப்பில் உன் புலன்கள் அனைத்தும் இலை
போல அசைக்கப்படும் போது, இந்த அசைவில் உட்செல் “
இப்படிப்பட்ட அரவணைப்பில் – இப்படிபட்ட ஆழமான பரிமாற்றத்தில் உன் காதலன் அல்லது காதலியோடு உன் புலன்கள் இலைகளைப் போல ஆட்டுவிக்கப்படும் போது, இந்த அசைவில் உட்செல்
நாம் பயமடைந்து விடுகிறோம் –
கலவியில் இயங்கும் போது நம் உடல்களை அதன் விருப்பத்திற்க்கேற்ப இயங்க அனுமதிப்பதில்லை,
ஏனென்றால் உடலை அதன் விருப்பப்படி இயங்க அனுமதிப்பதில்லை.
ஏனென்றால் உடலை அதன் விருப்பப்படி இயங்க அனுமதித்தால் கலவி உடல் முழுவதும் பரவிவிடும்.
அது பிறப்புறுப்புகளைச் சுற்றி மட்டும் இருக்கும் போது நீ அதை கட்டுபடுத்த முடியும்.
ஆனால் உடல் முழுதும் பரவி விட்டால் நீ அதைக் கட்டுபடுத்த முடியாது.
நீ நடுங்க ஆரம்பித்துவிடுவாய் ; நீ கத்த ஆரம்பித்துவிடுவாய்;
உன் உடல் கட்டுபாட்டை எடுத்துக் கொண்டு விட்டால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.
நம் இயக்கத்தை நாம் அடக்கி வைக்கிறோம் –
பெண்களின் அசைவுகளை உலகம் முழுதும் கட்டுபடுத்தி வைத்துள்ளது.
அவர்கள் உயிரற்ற உடல்களைப்போல இருக்கிறார்கள்.
ஏன் உலகம் முழுவதும் ஆண்கள் பெண்களை இப்படி அடக்கி வத்துள்ளார்கள் ?
பயம்- இருக்கிறது- ஒரு முறை பெண்ணின் உடல் ஆட்கொண்டுவிட்டால், ஒரு ஆணால் அவளை திருப்தி செய்ய முடியாது .
ஏனெனில் பெண்களுக்கு சங்கிலித்தொடாரான உச்ச நிலை உள்ளது.
ஆண் ஒரு முறைதான் உச்ச நிலைக்குச் செல்ல முடியும்.
ஆனால் பெண்ணால் பல முறை தொடர்ந்து உச்சநிலை அடையமுடியும் ,
பல உச்சநிலைகளை அடைந்த பெண்களைப்பற்றி செய்திகள் வந்துள்ளன.
எந்த ஒரு பெண்ணும் மூன்று முறை தொடர்ந்து உச்ச நிலை அடைய முடியும் .
ஆனால் , ஒரு ஆனால் ஒரு முறைதான் முடியும் .
எனவே ஒரு ஆண் பெண்ணின் உச்சநிலை உணர்வுகளை தூண்டி விட்டுவிட்டால் பிறகு கஷ்டமாகிவிடும் . பிறகு சமாளிப்பது எப்படி ?
உடனே அவளுக்கு வேறு ஒரு ஆண் தேவைப்படுகிறான்;
ஆனால் குழுப்புணர்ச்சி தடைவிதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்ப அமைப்பை நாம் ஏற்படுத்தி உள்ளோம்.
எனவே பெண்களை அடக்கி வைப்பதே மேல் .
எண்பதிலிருந்து , தொண்ணூறு சதவிகிதப் பெண்களுக்கு உச்சக்கட்டம் என்பது என்னவென்றே தெரியாது.
அவர்களால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கண்வனை திருப்தி செய்ய முடியும் இதெல்லாம் வேறு விஷயம்.
ஆனால் , அவர்கள் நிறைவடைவதில்லை.
எனவே , பெண்களிடத்து வெறுப்பையும் விரக்தியையும் , கசப்பையும் உலகம் முழுவதும் காண முடிகிறது.
ஏனென்றால் அதற்க்குக் காரணம் இதுதான்
அடிப்படை த் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை.
அதிர்தல் அழகானது ஏனென்றால் , நீ கலவியின் போது அதிர்ந்தால் உன் உடல் முழுவதும் சக்தி பரவுகிறது;
உடல் முழுவதும் சக்தி துடிக்கிறது;
உடலின் ஒவ்வொரு அணுவும் பங்கேற்கிறது.
ஒவ்வொரு அணுவும் செக்ஸ் அணுதான் .
நீ பிறந்த போது , இரண்டு காம உயிரணுக்கள் சேர்ந்து சந்தித்து உன்னை உருவாக்குகின்றன,
அந்த இரண்டு காம உயிரணுக்கள் உன் உடல் முழுவதும் பரவி கிடக்கின்றன.
உன் உடலை நீ காதலியுடன் சேர்ந்து இருக்கும்போது அதிரச்செய்தால், உன் உடலுக்குள் ஒவ்வொரு உயிரணுவும் அதன் எதிர்மறையான அணுவுடன் சந்திக்கிறது.
இந்த அதிர்வு அதை காட்டுகிறது.
இது விலங்கு தன்மை உடையதாகத் தோன்றும் .
ஆனால் , மனிதனும் விலங்குதான்-ஏதும் தவறு இல்லை.
இந்த இரண்டாவது சூத்திரம் சொல்கிறது. “ இப்படிபட்ட அரவணைப்பில் உன் புலன்கள் இலைகளைப் போல அதிர்ந்தால்…..
ஒரு பெருங்காற்று வீசி மரத்தை அசைக்கின்றது.
வேர்கள் கூட அசைகின்றன-
ஒவ்வொரு இலையும் அசைகிறது– ஒரு பெரிய மரத்தைப் போல ;
ஒரு பெருங்காற்று வீசுகிறது, காமம் ஒரு பெருங்காற்று ;
பெரும் சக்தி உன் வழியாகப் போகிறது-அதிர் ; அசை ; உன் உடலின் ஒவ்வொரு உயிரணுவையும் ஆட விடு, அதிர விடு , அப்பொழுதுதான் நீங்கள் இருவரும் சந்திக்க முடியும் .
அந்தச் சந்திப்பு மனதளவில் நிகழ்வதாக இருக்காது- உங்களின் உடற் சக்திகளின் சந்திப்பாக இருக்கும்.
இந்த அதிர்வில் உட்செல் , அதிரும் போது பார்வையாளனாக இருக்காதே;
மனம்தான் பார்வையாளனாக இருக்கிறது.
அந்த அதிர்வாக மாறிவிடு , உன் உடல் அதிர்கிறது என்பதல்ல- நீயே அதிர்வாக மாறி உன் முழுமையும் ஈடுபட வேண்டும் .
அப்பொழுது நீங்கள் இரண்டு உடல்களாக , இரண்டு மனங்களாக இருக்க மாட்டீர்கள், முதலில் இரண்டு அதிரும் சக்திகள் பிறகு இரண்டும் மறைந்து ஒரு வட்டம் மட்டுமே எஞ்சி நிற்கும்.
இந்த வட்டத்துள் என்ன நிகழும் ?
ஒன்று நீ இந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாகி விடுவாய்- ஒரு சமுதாய மனமாக இல்லாமல் இயற்கை சக்தியின் அங்கமாகி விடுவாய்.
நீ இந்த அண்டத்தின் ஒரு பகுதியாகிவிடுவாய்.
இந்தக் கணம் ஒரு பெரும் படைப்பு ஆகும். மனம் மறைந்து விடுகிறது –பிரிவுகள் இல்லாது போய் விடுகின்றன்-நீங்கள் ஒன்றாகி விட்டீர்கள
- இதுதான் அத்வைதம்-பிரிவில்லாத தன்மை .
இந்தப் பிரிவின்மையை நீங்கள் உணராவிட்டால் எல்லா அத்வைத தத்துவங்களும் பயனற்றதாகிவிடும் .
ஒரு முறை இந்தப் பிரிவு படாத ஒருமையின் கணத்தை நீங்கள் அறிந்து கொண்டுவிட்டால் , பிறகுதான் நீ உபநிடதங்களை , ஞானிகளை , அவர்கள் கூறுகிற அண்டத்தின் ஒருமையை, முழுமையை உண்ர்ந்து கொள்ள முடியும்.
நீ உலகத்திலிருந்து வேறு அல்ல, அதற்க்கு வித்தியாசமானவன் அல்ல இந்த அண்டம் முழுவதும் உன் வீடு.
இந்த அண்டம் என் வீடாகி விட்டது என்னும் எண்ணத்தால் உன் கவலைகள் எல்லாம் மறைந்து விடும்.
பிறகு கவலைகள் , போராட்டம், பிளவு ஏதுமில்லாமல் போய்விடும்.
லாவோத்சூ இதை தாவோ என்கிறார் .
சங்கரர் அத்வைதம் என்கிறார்.
நீ உனக்கு இஷ்டப்பட்ட வார்த்தையைத் தேர்ந்தேடுத்து கொள்ளலாம்,
ஆனால் இதை ஆழமான அன்பின் அரவணைப்பில் உண்ர்வது எளிது.