மந்திரச் சொற்களுக்கு மிக பலன் அதிகம் உண்டு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் போபாலில் நடந்தவிஷவாயு விபத்தில் சுமார் பதினைந்தாயிரம் பேர் விஷ வாயுவினால் இறந்தார்கள். பாதிப்பு அடைந்தவர்களின் வீடுகளில் நடுவில் இருந்த குடும்பத்தினருக்கு மட்டும் எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த செய்தி உலக விஞ்ஞானிகளையே ஆச்சரியப்பட வைத்தது. தப்பிப் பிழைக்க தினசரி அவர்கள் வீட்டில் நடத்தப்படும் அக்னிஹோத்திரம் என்ற யாகத்தை சுமார் மூன்று தலைமுறையாக காலை மாலை தவறாமல் செய்து வந்துள்ளார்கள். மந்திரசொற்களின் அதிர்வு அலைகள் அவர்களை ஒரு கேடயமாக பாதுகாத்து அவர்களை காப்பாற்றியுள்ளது.
இதன் மூலம் நமது வேதத்தின் மந்திர மகிமை உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியது. ஆகவே மந்திரச் சொற்களுக்கு மகத்தான பலன் உண்டு. கோயில் கும்பாபிஷேகம் போன்ற விழாக்களில் நெருப்பை மூட்டி இம்மந்திரங்களை பலர் கூறுவார்கள். ஒரே மந்திரத்தை ஐந்து பேர் ஆயிரம் முறை கூற அது ஐந்தாயிரம் முறை யாகிறது. இது போல் மந்திர அர்ச்சனைகளை லட்சார்ச் சனை, கோடி அர்ச்சனை என செய்வார்கள். இவற்றுக்கு பலன் அதிகம். அதுபோல் பல நன்மையான காரியங் களுக்கு டெலி தெரபி மூலம் மந்திரச் சொற்களை கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்.
1. படிக்கும் பிள்ளைகள் புத்திசாலிகளாக மாற படிப்பிற்கு அதிபதி சரஸ்வதி. ஆகவே சரஸ்வதி மந்திரமான
ஓம் ஸ்ரீ வித்யை நமஹ!
என ஒரு தாளில் சிவப்பு நிற மையால் எழுதி பேப்பரை ஸ்பீக்கர் முன்னால் அமைக்கவும். எதிரில் அந்த மாணவனின் புகைப்படம் வைத்து டெலிதெரபி பெட்டியை இயக்கவும். இந்த மந்திரமானது நிமிடத்திற்குமூன்றாயிரம் முறை அதிர்கின்றது. இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
2. புத்திக் கூர்மையை வளர்க்கவும், ஞானம் பெறவும், திறமை வளர குரு கிரக அதிபதியான தக்ஷிணா மூர்த்தியை வணங்குவார்கள். அவர்கள், ஓம் நமோமேதா தஷிணா மூர்த்தியே நமோ நமஹ! என்ற இந்த மந்திரத்தைப் பயன்படுத்தலாம். 3. செல்வத்தை விரும்புவர்கள்
ஓம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியை ஸ்ரீம் நமஹ!
4. எந்த நேரமும் ஆட்கள் வந்து குவிந்து வியாபாரம் நடக்க வேண்டும் என நினைப்பவர்கள்
ஓம் ஸ்ரீம் க்லீம் தனம் வர்ஷ்ய வர்ஷ்ய நமஹ! 5.மங்கல காரியங்கள் விரைந்து நடக்க
ஸ்ர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதகே சரண்யே திரியம்பகே கௌரி நாராயணி நமஸ்துதே
6. நடிகைகள் மற்றும் கலைத்துறையினர் அரசியல் வாதிகள் ஆகியோர் – பார்க்கும் பொதுமக்கள் கவர்ந்து பிரமித்து தம்மை நினைக்க வசிய மந்திரத்தை பயன்படுத்தலாம்.
க்லீம் மோஹுன்யை க்லீம் நமஹ!
7. மருத்துவம் செய்பவர்கள் தன்தொழில் சிறக்கவும் தன்னை நாடிவரும் நோயாளிகள் விரைந்து குணம் அடைந்து தனக்கு பெரும் புகழும் கிடைக்க வேண்டு மெனில் மருத்துவத்தை தோற்றுவித்தவர் தன்வந்திரி பசுவான். இவர் ஸ்ரீ நாராயணரின் அம்சம். இவரின் மூலமந்திரமானஓம் நமோ பகவதே தன்வந்திரியை அமிர்தகசை ஹஸ்தாந் சர்வமய வினாசனாய திரிலோக நாதாய ஸ்ரீமயை மஹாவிஷ்ணுவே நமஹ!
என்ற சிறந்த மந்திரத்தை எழுதி வைத்து தங்கள் சிகிச்சைச் சாலையில் எப்போதும் டெலிதெரபி பெட்டி வாயிலாக அதிரச் செய்யலாம். இம் மந்திரச் சக்தியால் நோயாளிகளின் நோய்கள் யாவும் குணமடைந்து பெயர் பெறலாம்.
8. ஏவல், பில்லி, சூனியம் இவற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் சுதர்சன மந்திரத்தை பயன்படுத்த தீமைகள் அழியும்.
ஹ்ரீம் சுதர்சனாய ஹ்ரீம் நமஹ!
9.நல்ல உடல் நலமும் நீண்ட ஆயுளும் ஒரு குடும்பத்தினர் வேண்டுவதற்கும் எந்த நோயிலும் விரைந்து குணம் அடைய இரண்டு மந்திரங்களைச் சேர்த்து பயன்படுத்த மிகவும் பலன் தரும். இதை தூயகல்ப மந்திரம் என கூறுவார்கள். நோயைப் போக்க இதைவிட சிறந்த மந்திரம் உலகில் கிடையாது. முக்தியை கொடுப்பதும் ஆயுளை நீக்கும் சிறந்த மந்திரமான சிவபெருமானின் ம்ருத்யஞ்சய மந்திரமும் சக்தியின் அம்ச மந்திரமும் மிகுந்த பயனும் சிறந்த மந்திரமும் ஆன காயத்ரி மந்திரமும் சேர்த்து எழுதி பயன்படுத்த அளவில்லா பயன் தரும்.
1.ஓம் த்ரயம் பகம் யஜாமஹே சுகந்தீம் புஷ்டிவர்த்தனம் உர்வாருக மிக பந்தனாம் ம்ருத்தியோர் முக்ஷிய மாம்ருதாத்
2. ஓம் – பூர்ப் புவஸ்ஸூவ: தத் ஸவிதுர்-வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந: ப்ரசோதயாத்மேற்கண்ட மந்திரங்களை சிவப்பு மையினால் பேப்பரில் எழுதி டெலிதெரபி பெட்டியின் ஸ்பீக்கரின் முன் அமைத்து இயக்க அப்பெட்டி உள்ள கட்டடத்தில் இருப்பவர்க்கு நல்ல பயனைத் தரும். ஒருவருக்கு மட்டும் வேண்டுமெனில் எதிரில் அவர் புகைப்படத்தை வைக்க வும். குடும்பம் முழுவதும் தேவையெனில் அக்குடும்பம் முழுவதும் உள்ள புகைப்படம் வைக்கலாம். புகைப்படம் இல்லாதவர்கள் அந்த வீட்டு விலாசத்தையும் குடும்ப உறுப்பினர்கள் பெயரையும் எழுதி வைத்து பயன் பெறலாம்.
vinodhan 7010054619