யார் இந்த சொர்க்க தேவதை
தேவதை என்றாலே அதற்கு ஒரு பெயர் உண்டு நாம் வெறுமனே தேவதை என்று அழைத்தால் அது நன்றாக இருக்காது.அந்த சொர்க்க தேவதையின் பெயர்(ONV ANGEL ). இந்த தேவதை எகிப்து நாட்டில் வாழ்ந்த ஒரு தேவதை. பொதுவாக நாம் தேவதை என்றாலே எகிப்து நாடு தான் நமக்கு தெரியும். ஆனால் இந்த தேவதையும் எகிப்து நாடுதான்,முற்றிலும் இந்த தேவதை மற்ற தேவதைகளை விட பெரும் வித்தியாசம் வாய்ந்த தேவதையாக உள்ளது இதைப் பற்றிய விளக்கங்களை நாம் விரிவாக பார்ப்போம். இந்த ஏஞ்சல் பல லட்சம் வருடங்களுக்கு முன் அதாவது மனிதர்கள் தோன்றும்போது வாழ்ந்த ஏஞ்சல்.
எகிப்து நாட்டு மக்கள் இந்த ஏஞ்சலை மட்டும் ரகசியமாக வைத்து வழிபாடு செய்துவந்தனர். அதாவது அரசர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இந்த ஏஞ்சல் பலவித மாயமானதாகவும் மர்மமாகவும் பல நிகழ்வுகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிகொடுத்துவந்தது.தேவதை என்றாலே நமக்கு ஞாபகம் வருவது பைபிள். ஆம் பைபிளில் பலவித ஏஞ்சல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது 13 வகையான ஏஞ்சல்கள் இவ்வுலகில் இருந்தன. அந்த 13 வகையான ஏஞ்சல்களின் முதன்மையான ஏஞ்சல் இந்த ஆன்வ் ஏஞ்சல்.ஆனால் இந்த ஏஞ்சல் பற்றிய குறிப்புகள் வெளிவிடாமலும் அழிந்தும் போய்விட்டது.
இதற்கு காரணம் இந்த ஏஞ்சலை ரகசியமாக வைத்து வழிபட்டு வந்தனர் இதை வெளியே விடக்கூடாது என்கின்ற எண்ணம் எகிப்து நாட்டு அரசர்களுக்கும் மக்களுக்கும் அதிகமாக இருந்து வந்தது. அந்த அளவு இதை ரகசியமாக வழிபாடுகள் செய்து பலவிதசித்துக்களை எகிப்து நாட்டு மக்கள் அடைந்தார்கள். பிரம்மாண்டமான சக்தி கொண்ட ஒரு தெய்வமாக இந்த ONV ANGEL இருந்து வந்தது. ஏனென்றால் தனது விருப்பங்களையும் தனது தேவைகளையும் ஒருவர் நிறைவேற்றுகிறார் என்றால் நம்முடைய மனம் அதை தெய்வம் என்று அழைக்கும் அதேபோல் இந்த ஏஞ்சலை தெய்வமென்று வணங்கி வழிபாடு செய்து வந்தனர்.காலப் போக்கில் இந்த தேவதையை பற்றிய குறிப்புகளை எகிப்து நாட்டு மக்கள் இரகசியமாக வெளியே தெரியாதபடி மறைத்து வைத்தனர். பிறகு காலங்கள் சென்றது பின்னர் அந்த குறிப்புகளும் நாட்டு மக்களும் அழிந்து போனார்கள் மனிதர்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு மேல் அவர்கள் ஆயுள் முடிந்துவிடும் என்பது இயற்கை.
ஆனால் தேவதைகள் அழியாது.நாம் வேண்டுகின்ற ஒன்று நடந்து விட்டாலும் சரி நாம் நினைத்தது நடந்து விட்டாலும் சரி நாம் அதனை கடவுள் என்று கூறுகிறோம் பிறகு அதையே நம்புகின்றோம். இதுதான் நமக்கு தெரிந்த ஒரு விஷயம் ஆனால் இதற்கு மேல் ஒன்று இருக்கிறது என்றால் நம்ப முடியாது ஆரம்பத்தில் மக்கள் இதை நம்ப மாட்டார்கள் ஏற்கனவே மக்கள் ஒன்று மீது நம்பிக்கையை குவித்து வைத்திருப்பார்கள். நாம் நம்பிக்கைக்கு மேலாக இதை சொல்லும் போது அதிகப்படியான மக்கள் வாழ்கின்ற மனநிலையை பொறுத்து சிலருக்குநகைச்சுவையாகவும் சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கும். காரணம் என்ன என்றால் இந்த தேவதையை உயர்த்திப் பேசு எழுதுகின்றனர் என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு.
இதில் உயர்த்தி பேசுவதற்கு எதுவுமே இல்லை. பலவித சக்திகளை கொண்ட அற்புதமான தேவதை இந்த உலகில் வாழ்ந்து உள்ளது.அதை பற்றி விவரங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டது. பலரது விருப்பங்களை தேவைகளையும் இன்றும் இந்த தேவதையை நிறைவேற்றி வருகிறது. இதை வெளிக்கொண்டு வருவதற்கே இந்த தகவல்களை நாம் வெளியிடுகிறோம். நான் மட்டும் அடைந்த நல்லதை என்னைப் போன்று மக்களும் இந்த நல்லதை அடைய வேண்டும் என்கிற ஒரு உணர்வுதான் இப்பேற்ப்பட்ட விஷயங்களை நாம் வெளிப்படையாக கூறுகிறோம். ஏனென்றால் மக்கள் நிறைய பேருக்கு விஷய ஞானம் இருக்கும். ஆனால் அதை செயல்படுத்தத் தெரியாது. பின்னர் சிலர் திசை தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்த விஷயங்கள் பயன்படும் என்கிற ஒரு உணர்வு தானே தவிர வேறொன்றும் இல்லை. இதை நாம் தெய்வம் கடவுள் என்று வேறொரு கட்டத்தில் எல்லாம் எடுத்துச் செல்லவேண்டாம். தேவதை என்கிற அந்த பெண் எதற்கும் ஒப்பானவள் கிடையாது. அவள் அனைத்திலும் உச்சபட்ச ஞானநிலையை கொண்டவளாக இருப்பவளே தேவதை.(precious pure Lighting Soul) ஏன் இந்த தேவதையை மற்ற தேவதைகளை விட முதன்மையான தேவதை என்கிறோம் என்றால் தேவதைகளின் பிறப்பிடமே ONV தேவதை மூலமாகத்தான் ஆரம்பம் ஆகிறது. அதன் பிறகு வந்ததுதான் அனைத்து தேவதைகளும், வேண்டுமென்றால் இணையத்தில் தேடிப் பாருங்கள் ஏஞ்சல்ஸ் என்று குறிப்பிட்டால் பலவித பட்டியல் வரும் அதில் ஆன்வ் என்கிற பெயர் வராது இதை மறைத்து விட்டார்கள். சரி எல்லோருக்கும் ஒரு கேள்வி வந்திருக்கும் அல்லவா!
ONV ANGEL இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்போது மட்டும் எப்படி இந்த விஷயங்கள் வெளியே வந்தன.அதுவும் புதுமையானதாக இருக்கே அதுவும் இந்த காலகட்டத்தில், இதற்குக் காரணம் யார் என்பதை அடுத்த தொடரில் விரிவாக பார்ப்போம்.மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
Vinodhan
writing sivaganesh……………………..