Perception and Conservation of Impressions in States other than Normal Waking State

     

  மனம் என்பது ஒரு அற்புதமான படைப்பு இறைவன் படைத்த திலேயே ஒரு அற்புதம் எதுவென்றால் அது தான் மனம் அந்த மனதை சரியான முறையில் பக்குவப்படுத்திக் கொண்டால் அவன் வாழ்க்கை சொர்க்கம் இல்லை என்றால் நரகம் நீங்கள் நரகத்தில் வாழ்கிறீர்களா அல்லது சொர்க்கத்தில் வாழ்கிறீர்களா என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் மனம் என்பது ஒரு அற்புத நிலை அது ஒரு குழந்தைத்தனமான ஒரு தன்மை வாய்ந்தது அந்த குழந்தையை மேய்க்க தெரிந்த பெற்றோர்கள் அவசியம் ஆனால் நாம் அப்படி செய்வதில்லை காலங்காலமாக அதோடு போராடிக் கொண்டுதான் இருக்கிறோம் இதை குறித்து ஒரு மனிதன் தெரிந்து கொண்டால் அவன் விழிப்பு நிலையில் வாழ ஆரம்பித்து விடுவான் அந்த மனிதனுக்கு இந்த உலகில் வேறு யாரும் தேவையில்லை.

     இந்த உலகில் எப்படி பிறந்தானோ அதேபோன்று செல்வான் அவன் வாழ்நாள் முழுவதும் தன் வாழ்க்கையை சொர்க்கத்தில் மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருப்பான் அதுதான் மனதை குறித்ததான ஒரு புரிதல் ஒரு சிலர் இந்த மனதை தவறாக புரிந்து கொள்வதற்காகவே பல குருமார்களிடம் செல்வார்கள் அவர்களுக்குத் தெரிந்த பலருக்கு அவர்கள் சொல்லுவார்கள் ஆனால் இந்த மனதிற்கு அது ஒருபோதும் புரியாது காரணம் சொல்பவனுக்கு மனதை குறித்த அறிவும் இல்லை வேறு யாரோ சொன்னதை எல்லாம் அவன் சொல்லிக் கொண்டிருப்பான் அதை நம்பி நம் வாழ்நாள் சென்று கொண்டிருக்கும் ஆகவே மனதை குறித்து அதிக அக்கறை கொள்ளுங்கள் அது குறித்து அதிக ஆர்வத்தில் ஈடுபட்டு மனதை தெரிந்துகொள்ளுங்கள் ஒரு மனிதன் தன் மனதை ஆராய்ந்து அறிந்து கொண்டாள் அவன் ஞானி, மகான், சித்தர் ,பாபா, போன்ற பல பட்டங்களை பெறுவான் மனிதன் ஆனால் இப்ப இருக்கும் காலத்தில் ஒருபோதும் அந்த விழிப்பு நிலையை அறிந்து கொள்ளவே முடியவில்லை காரணம் விஷய ஞானத்தை மட்டுமே நாம் ஒன்றுமில்லாத அந்த நிலையில் நிரப்பிக் கொண்டு இருக்கிறோம் அதனால் மனதை ஒரு போதும் அறிய முடியாது முதலில் சுற்றியிருப்பவர்கள் இடம் ஒதுக்கி வையுங்கள் அவர்கள் சொல்லும் கேட்பதை கேட்பதை நிறுத்துங்கள் அப்போதுதான் மனம் தெளிவடையும் தெளிவடைந்த ஆள் போதும் .

     நீங்கள் விழிப்பு நிலைக்கு வந்துவிடுவீர்கள் இப்போது விழிப்பு நிலை அல்லாத இதர நிலைகளில்மனது அறிவதும், அறிந்ததைப் பதிந்து வைத்துக் கொள்வதும்”மனது விழிப்பு நிலையில் இருக்கும் போது மட்டுந்தான் தன்னை சுற்றிலுமுள்ளவைகளைத் தெரிந்து கொண்டிருக்கும். இதர சமயங்களில் அவ்விதம் தெரியும் ஆற்றல் மனத்துக்குக் கிடையாது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். விழிப்பு நிலை அகன்று மனது தூக்க நிலையில் இருக்கும் போதும், ஏதாவது அதிர்ச்சியின் காரணமாக மனம் தன்னிலை மாறியிருக்கும் போதும், குளோராபாம் போன்ற மயக்க மருந்துகளினால் சுயஉணர்வு இல்லாமல் இருக்கும் போதும் மனது வேலை செய்துக் கொண்டு தான் இருக்கிறது.

தூக்க நிலை : (NORMAL SLEEPING STATE)

      தூங்கும் போது நாம் பற்பல கனவுகளைக் காணுகிறோம். அவற்றில் சிலவற்றை நாம் தூங்கி எழுந்த பின் நினைவிற்குக் கொண்டு வரமுடிவதில்லை. இதை வைத்துக் கொண்டு சிலர் தாம் அந்நாட்களில் எவ்விதக் கனவும் காணவில்லை என எண்ணுகின்றனர். உண்மை அவ்வாறல்ல. தூங்கும் போதும் கூட நமது மனம் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது. நாம் காணும் கனவுகள் அத்தனையும் மனத்திலே பதியப்படுகின்றன. இவ்விதம் பதியப்படும் தன்மை விழிப்பு நிலையில் பதியப்படுவதைப் போன்றே இருக்கிறது. தூங்கிக் கொண்டிருப்பவனின் கனவுகள் பதியப்படுவதைப் போலவே தூங்கும் மனிதனின் இயற்கையான காதுகள் எவ்வளவு தூரத்திலுள்ள நிகழ்ச்சிகளை அவன் தூங்கும் போது கிரகிக்குமோ அவ்வளவு தூரத்தில் அவன் தூங்கும் போது நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் அவனின் மனத்தில் பதியப்படுகின்றன. அவனை ஆழ்தூக்க நிலையில் (Deep Hypnosis) வைத்து அல்லது தானே எழுதும் முறையை புகுத்தி விசாரித்தால் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது நடந்த அத்தனை செய்திகளையும் அவனிடமிருந்து நாம் பெற முடியும்.

நிலை தடுமாறிய நிலைகள் : (ABNORMAL STATES) அதிர்ச்சி, விபத்து, காயம், போதைப் பொருட்களை உட்கொள்ளல் போன்றவற்றால் மனிதன் தன்நிலையை இழக்கிறான். அவனுக்கு அச்சமயம் சுயஉணர்வு (Consciousness) இருப்பதில்லை. அவன் தன்னிலைக்கு வந்ததன்பின், தனது நிலை மாறியிருக்கையில் என்னென்ன நடந்தன என்று கேட்டால் அவனால் சொல்ல முடியாது ஆனால் ஹிப்னடிஸ்ட்கள் செய்த சோதனையின் மூலம் மனிதன் மேற்குறித்த நிலைகளிலும் கூட மனது வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அத்தகைய மனிதர்களை பிறகு ஆழந்த தூக்கநிலைக்கு அல்லது தானே எழுது நிலைக்குக்கொண்டு வரும்போது முன் நடந்தவை அனைத்தையும் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அக வாழ்க்கை : (INNER LIFE)

     உலகிலுள்ள அத்தனை மனிதர்களும் அறிஞர்களல்ல அன்புமயமாகவே வாழ்கிறார்கள் என்றும் கூறமுடியாது. மனிதர்கள் பற்ப பண்பினர். விரோதம், குரோதம், பொய்யுடமை, நடத்தைப் பேதகம் போன்ற எத்தனையோ விதமான தீய பண்புகளையுடைவரும் பலர் இருக்கிறார்கள். மனிதன் தன்னுடைய பிறப்பு, வளர்ப்பு, சூழ்நிலை, கல்வி. பழக்க வழக்கங்கள் முதலியவற்றிற்கேற்ப மாறுபட்டவனாக இருக்கின்றான். இவ்விதம் மனிதனின் வெளியுலக வாழ்க்கையில் நாம் காணும் மாறுபாடுகள் அவனுடைய அக வாழ்க்கையையும் பாதிக்கின்றன. இந்நிலையில், மனிதனின் மனத்தில் பதியப்படும் பதிவுகளும் அவனின் மனம் எந்த அளவு வெளியுலகப் பண்புகளைப் பெற்றதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைகின்றன.

     ‘நினைவாற்றல்’ (ஞாபக சக்தி – Memory Power) என்பது மனிதனின் பழைய பழக்க வழக்கங்கள். பழைய பழக்க வழக்கங்கள் (Past Experiences) முழுவதும் ஒருவனிடத்திலிருந்து எடுக்கப்பட்டுவிட்டால், ‘நினைவாற்றல்’ என்று ஒன்றும் இருக்காது. நினைவாற்றலுள் பழைய பழக்கங்கள், அவனுடைய சூழ்நிலைகள். நற்குணங்கள். தீயகுணங்கள் கல்வி, முதலியன அனைத்தும் கலந்து இருக்கின்றன. இதற்கேற்ப மனத்தில் நடந்துகொண்டிருக்கும் பதிவுகளும் அமைகின்றன. இவ்விதம் அமையும் மனப்பதிவுக்கேற்ற முறையில் மனிதனின் வாழ்க்கை ள்ளல் அமைகிறது. வேறொரு முறையில் சொல்வோமானால், ஒரு மனிதனின் னுக்கு மனத்திலுள்ள இம்மொத்தப்பதிவு அம்மனிதனை ஆட்டிப்படைக்கிறது.

    இப்போது இதுவரை மனதை குறித்த சொன்ன முறைகள் சற்று குறைவுதான் இன்னும் அதிகமான தன்மைகள் மனதிற்கு உண்டு அதைக்குறித்து அடுத்த பதிவில் இனி வரப் போகிற பதிவில் மனதை குறித்ததான ரகசியங்களை வெளிப்படுத்த போகிறேன் அந்த மனம் என்னும் மாயையை அந்த மனம் என்னும் பிசாசை பார்த்துவிடுவோம் வாருங்கள் தொடரும். …..

Vinodhan, 7010054619

Shopping Cart