மனிதன் உடலை வளர்க்கத் தெரிந்துள்ளான். அறிவை வளர்க்கவும் தெரிந்துள்ளான். ஆனால் உயிரை வளர்க்கத் தெரியவில்லை. உடம்பினைப் பெற்ற பயன் உயிரை வளர்ப்பதுதான் என்பது சித்தர்கள் அனுபவம். சித்தர்கள் பல்லாண்டு வாழ விரும்புவது உயிரை வளர்ப்பதற்கே என்பது புரிய வரும். முதலில் உயிர் என்பது என்ன என்பதை அறிவோம். அதற்கு முன்பாக இப் பகுதியில் வரும் செய்திகள் முழுவதும் எமது யோக அனுபவத்திலிருந்து தெளிந்ததே தவிர, மற்றபடி ஆகம நூல்களிலிருந்து பெறப்பட்டது அன்று. எனவே ஒத்துக் கொள்ள முடிந்ததை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை விட்டு விடவும் என்பது எமது அன்பான வேண்டுகோள் ஆகும்.
உயிர் என்பது ஒருவித வெப்பம். ஆன்மா ஒருஉடலில் தங்குவதற்கு உயிர் வெப்பம் என்பது பாதுகாப்புஉறையாகவும், உறைவிடமாகவும் செயல்படுகிறது. உயிர் வெப்பத்தை மையப்படுத்தியே ஆன்மா பிறப்பு எடுக்கிறது.உயிர் வெப்பத்தின் அடிப்படையில் அறிவும் மேம்பாடுஅடைகிறது. ஓரறிவு உயிரினத்திற்கு உயிர் வெப்பம் மிகவும் குறைவாகும். உருவத்தில் யானை பெரியதாக இருந்தாலும்மனிதனை விட உயிர் வெப்பம் யானைக்கு குறைவாகும். காரணம் இல்லாமல் இந்த ஆன்மா பிறப்பு எடுக்கவில்லை. ஆன்மாவிற்கு அறிவு உள்ளது. உடம்புக்கு அறிவு இல்லை என்ற போதிலும்; அறிவு உள்ள ஆன்மா அறிவற்ற உடலை விரும்பி அணைந்ததன் நோக்கு, இந்த அறிவற்ற உடலின் மூலமாக உயிர்வெப்பத்தை மேலும் அதிகமாக்கி, பஞ்சபூத உடலை விட்டு தூய ஒளி உடலைப் பெற்று ஆன்மா அமரத்துவம் அடைய போராடுகிறது இதற்கிடையில் மனம் புகுந்து ஆன்மாவின் நோக்கத்தை முறியடித்தும், உயிர் வெப்பத்தை உயர விடாமல் தடுத்தும், மாற்றிப் பிறக்க வகையறிய விடாமல் தடுக்கிறது.
சிலர் நினைக்கலாம், புலன்கள் இறைவன் கொடுத்தவை, பொருள்கள் இறைவன் கொடுத்தவை என்ற போது புலன்கள் பொருளோடு சேர்ந்து இன்பம் துய்ப்பது இயற்கை எனக் கருதலாம். புலனின்பம் வேண்டாம் என்று ஆன்மீகம் போதிக்கவில்லை. அதிலேயே மூழ்கி மீண்டும் பிறப்பு எடுப்பது போல பந்தத்தில் சிக்க வேண்டாம் என்றே போதிக்கிறது. திருமூலர் கூறுவார், “நெறியைப் படைத்தான், நெருஞ்சிலைப் படைத்தான்” என்பார். பல தடவை நெருஞ்சில்முள் குத்திக் காயமான பிறகும் அதே காரியத்தைத் தொடர்ந்து செய்யக்கூடாது என்பதே ஞானிகள் போதனையாகும்.புலன்கள் உலக சுகத்தில் பொருந்த உயிர் வெப்பம் குறையத் தொடங்குகிறது. உயிர் வெப்பத்தைப் பாதிக்காத உலக சுகம் எதுவுமே இல்லை என்று கூறி விடலாம். உலக சுகத்தின் மூலம் உயிர் குளிர்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் வெப்பமான பொருள் மட்டுமே நிலைத்திருக்கும். இந்தப் பூமியின் மையம் குளிர்ந்து விட்டால் பூமியும் வெடித்துதூசுகளாகி விடும். மனித உடலும் குளிர்வதால் மட்டுமே பிணமாக முடியும். சிவம் என்பது நெருப்பு. இதையே சிவ வாக்கியர் “நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே” என்றார். இந்த உயிர் உலகியலைச்சாராது சிவத்தோடு சாரும் போது சிவக்கனலால் உயிர்வளர்கிறது. ஆன்மா ஒளிர்கிறது.
பல கோடி சித்தர்கள் ஒளியுடலை எடுத்து உலகில் வாழ்வதற்குக் காரணம், சிவக்கனலை உயிர் தொடர்ந்து சார்ந்திருந்து பயிலும் குருவின் பதிபுக்கும் போதே “கயிலை இறைவன் கதிர் வடிவாமே” என்று திருமூலர் கூறுவது போல, நமது உயிர் சிவமாம் தன்மை பெற்று ஒளிர்கிறது. தவம் என்றால் நெருப்பைச் சார்தல் என்பதாகும். பிராணாயாமம் என்றால் பிராண சக்தியை நெருப்போடு இணைத்தல் என்பதாகும். யோகிகளின் தவம் என்பது சிவக்கனலைச் சார்ந்து வெப்பத்தை உயர்த்தி உயிரை வளர்ப்பதேயாகும்.குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி போதனை அளித்து சான்றோன் ஆக்க முனைவது போல, இறைவனிடம் “தனம் தரும் கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா மனம் தரும்” என்கிற தருவிக்கிற பட்டியலை அளித்து பாமரனை ஞானிகள் இறை நெறிப் பக்கம் ஈர்த்துக் கொண்டார்கள். இறைவனும் சீக்கிரமே உலகியலில் சலிப்பு வர எல்லா சுகத்தையும் கொடுத்து உயிரை வளர்க்கும் உபாயத்தையும் கொடுக்கிறான். இதில் உயிர் வளர வாழ்பவர்கள் உலக என்று பொருள். இன்பத்தில் நிறைவு கண்டு விட்டார்கள் இன்னும் உடம்பை வளர்க்கும் உபாயத்தில் மட்டுமே உலக இன்பத்தில் நிறைவு காணாதவர்கள் காரியப்ட்டு நிற்கிறார்கள். எதிலும் முழுமை பெற்றால் மட்டுமே சலிப்பு என்பது வரும்.றைவன் இரண்டு பேரிடம் மட்டுமே முழுமையான செல்வத்தைக் கொடுப்பார். ஒருவன் யோகி. மற்றவன் போகி. யோகி பெற்ற செல்வத்தால் சீக்கிரம் சலிப்பு வந்து உயிர் லாபம் பெறச் சாதனை செய்பவர். இவர்கள் பட்டினத்தார், பத்ரகிரியார் போன்றவர்கள். அடுத்த ரகம், உலகை அலங்காரம் செய்து செப்பனிட்டு விட்டுப் போக போகியின் கையில் செல்வத்தைக் கொடுத்து காடுகளைத் திருத்தி நாடாக்குவதும், தொழிற்சாலை அமைப்பதும், இப்படி உழைப்பதற்கோ செனனம் எடுப்பது போலச் செல்வம் கொடுக்கப்படும். இடைப்பட்டவர்கள் செல்வத்திலும் நிறைவு இல்லாமல், இறை பக்தியிலும் நிறைவு இல்லாமல் புலம்புவார்கள். சிந்தையில் நிறைவு என்பது தான் செல்வம். உலக சுகமும் விட்டுப் போகக் கூடாது, உயிரும் வளர வேண்டும் என்பதுதான் பேராசை ஆகும். இது நடைபெற வாய்ப்பே இல்லை.
அடியார்கள் வாழ்வை ஆய்வு செய்தால், சுந்தரமூர்த்தி நாயனார் இன்பத்துறையில் எளியராகி இன்பம் துய்த்தவர். அவருக்கு சீக்கிரமே உயிர் மீது சலிப்பு வந்து இறைவா எம்மை ஏற்றுக் கொள்’ என்று விண்ணப்பம் வைத்துவிட்டார். ஆனால் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகள் உடலில் வாழந்த போதிலும் சலிப்பு வரவில்லை. காரணம், மனதையும் புலன்களையும் வென்றவர்களுக்கு உடலின் மீதும் உயிரின் மீதும் சலிப்பு வராது. வாழ்க்கை வேண்டாம் என்று மனம் மட்டுமே சொல்லும்; ஆன்மா சொல்லாது. ஆன்மா விரும்பி அணைந்த இந்த உடலில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் சலிப்பது இல்லை.இறை நெறியாளர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகையினர், மனதில் இறைவனை வைத்துத் வகையைச் சார்ந்தவர்கள். இவர்கள் இறைவன் வாழும் கயிலை வெளியே இருப்பதாகச் சாதித்தவர்கள். அடுத்து சித்தர்கள் என்போர், தனது உடலையே சிவாலயமாகவும், அதில் சிதாகாசப் பெருவெளியே கயிலையாகவும், அங்கேயே சிவத்தை நிறுத்திச் சாதித்தார்கள். இவர்கள் உடம்பை உகுத்து விட நினைப்பதில்லை. மாறாக, இந்த சிவாலயம் பல்லாண்டு நிலைத்திருக்க முயன்று வெற்றியும் கண்டார்கள். உடல் என்கிற சிவாலயம் நெடுநாள் நிலைத்திருக்க உயிர் வெப்பம் உயர்வதுதான் முக்கியமானது.
எந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சிதிலமடையாது நிலைத்திருக்கிறதோ அதுவே சக்தி வாய்ந்ததாகப் போற்றப்படும். இதுவே சித்தர்கள் கொள்கை. சில ஆலயம் பதினாறு ஆண்டுகளில் காணாமல் போயின. சில ஆலயம் முப்பத்தெட்டு ஆண்டுகளில் காணாமல் போயின. சிலது மட்டும் எண்பது ஆண்டுகள் இருந்தன. இவைகள் இருக்கிற காலத்தில் ஏற்றம் பெற்றது என்னவோ உண்மைதான் என்றாலும், சிவம் கூத்தாடல் நடத்திய இந்த உடல் நெடுநாள் நிலைத்திருப்பதுதான் அவசியமானதாகும். ஒரு சிவாலயம் கட்டுகிறோம். அது ஆயிரம் வேண்டும் என்று ஒரு பாமரன் கூடக் கருதுவான். அதுபோல ஆ ண்டுகளாவது இடிபாடு இல்லாது இருக்க சிவத்தின் திருவடி பதித்து திருத்தாண்டவம் புரிந்த உடல் பல்லாயிரம் வருடம் நிலைத்து நிற்க வேண்டும். சிலர் மனிதர் கண்களிலிருந்து மறைத்து வாழலாம். அது தவறில்லை! பலகோடி சித்தர்கள் அப்படியேவாழ்கிறார்கள். வள்ளலார் கூட தனது உடலை மறைத்து வாழஇடமிருக்கிறது.
இறைவன் மனிதர்களுக்குக் காட்சி கொடுப்பது, தனது பிரம்மாண்டத்தைக் காட்டுவதற்காக அல்ல. ஒவ்வொரு காட்சி மூலமாக அந்த ஒளி வெள்ளத்தின் மூலம் உயிர் வளர்கிறது. ஒவ்வொரு காட்சியின் மூலம் மனம் பாதிப்பு அடைகிறது. இதில் பலரும் உன்மத்த நிலை அடைந்து பைத்தியமாகி விடுவார்கள். இதில் நாமும் முதல் காட்சியில் பைத்தியமாகி சில நாள் மருத்துவத்திற்குப் பிறகு சரியானோம். காரணம், மனதிற்குப் புலப்படாத ஒளி வெள்ளத்தைக் கண்டதும், மனம் அதிர்ச்சிக்கு உள்ளாகும். உ தகுந்த ஒருநிலைப்பாடு உள்ளவர்கள் மட்டுமே தப்பிக்க முடியும். ஆசைகளின் எச்சம் அதிகம் உள்ள மனம் இறைக்காட்சியில் பெரிதும் பாதிக்கப்படும். இதில் உன்மத்த நிலை அடைந்தவர்கள் உலகத்தின் பார்வையில் பைத்தியமாகத் தெரிந்தாலும் உயர்நிலை அடைந்தவர்களாகும். அப்புறம் வினைகள் சாம்பலாகி விடும். உடல் மட்டும் நெடுநாள் தங்காது என்பது மட்டும் உண்மையே தவிர திருவருள் காரியப்படும்.
இப்படி உயிர் பல இறைதரிசனத்தின் மூலம் பஞ்சபூதக் கலப்புப் பொருந்திய உடலை விடுத்து ஒளியுடலைப் பெற்று இறைவனைப் போன்ற தன் வயத்தனாதல் இயல்பை யோகிகள் பெறுகிறார்கள். ஒளியுடலைப் பெறுகிற தகுதி தேவலோகத்தில் தேவர்களுக்கும் கிட்டாத சலுகையாகும். சித்தர்கள் வேற்றுலகில் வாழ விரும்பாது இப்புவியில் பல்லாண்டுகள் தவம் செய்ய விரும்புவதற்குக் காரணம், இங்கு தான் அருள் வல்லபம் எளிதாகக் கிடைக்கும்.பொதுவாகத் தேவலோகத்தில் சுகங்கள் அதிகமாக மண்டிக் கிடக்கும் என்பார்கள். எந்த இடத்தில் சுகங்கள் அதிகமாக இருக்கிறதோ அங்கு ஞானமும் அருளும் குறைவாகவே இருக்கும். உதாரணமாக, மேலை நாடுகளில் அனுபோகசுகம் அதிகமாக உள்ளது. ஆனால் யோக ஞானம் குறைவாகவே உள்ளது. இதுபோல தேவலோகத்திலும் ஞானம் இருக்காது.
மனதிற்கு அறிவு உள்ளது போலவே உயிருக்கும் அறிவு உள்ளது. உடம்பில் கனல் குறையும் போது உயிரும் சலிப்பு அடைகிறது. எனவே கனல் குறையாது பாதுகாக்க வேண்டும். கனல் குறையாமல் பாதுகாக்க ஐந்தாண்டு களுக்கு ஒரு முறையாவது உடம்பின் மொத்த எடையில் பத்தில் ஒன்றைக் குறைத்து கனலைச் சரிசெய்ய வேண்டும். “பிண்டம் சுருங்கில் பிராணன் நிலை பெறும்” என்பார் திருமூலர். பிராணன் அதிகமாக உடம்பில் தங்கினால் கனல் அதிகமாகி விடும்.
பிராண சக்திதான் உயிருக்கு ஆதாரமானதாகும். பிராணனைக் கூட்டுவதற்கு உடம்பு இளைத்தால் ஆகாயப் பெருவெளி அதிகமாகும். அந்த இடத்தில் பிராணன் தங்கும். இதுவே உயிர் வளரும் உபாயமாக மாறும். எனவே உயிரை வளர்க்கிற பிராண சக்தியைக் கூட்டி உய்தி பெற வேண்டும். இதுவே சித்தர்களின் சாதனையாக அமைவதால் கடைசியாக ஒளியுடலை எடுத்து வாழ பிராண சக்தி பெரிதும் துணை நிற்கிறது
vinodhan 7010054619