காமம் என்பது என்ன நம் உடம்பில் ஏற்படக்கூடிய உணர்வுகளில் அதுவும் ஒரு உணர்வு. நம்முடைய உடலில் பல்வேறு வகையான உணர்வுகள் உள்ளன அதில் ஏன் காம உணர்வை மட்டும் நாட்டு மக்கள் தவறாக கருதுகின்றனர். காமம் என்றாலே அனைவரும் மறைத்து வைத்து தான் பேசுவார்கள் வெளிப்படையாக அந்த உணர்வை பேசினால் நாம் மக்கள் பார்வைக்கு தவறாக கருதப்படுகின்றோம். அப்படி இதில் என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் ஒருவனை உருவாக்குவதும் காமமே அழிப்பதும் காமமே. ஆம் இந்த உணர்வு நிலைக்கு இவ்வளவு பெரிய சக்தி உண்டு. இப்பேர்ப்பட்ட உணர்வின் மதிப்பு நமக்குத் தெரியவில்லை. சரி மனிதன் குறிப்பிட்ட வயது வரம்பை கடக்கும் போது அவனின் உடலில் பல்வேறு வகையான மாற்றம் நிகழ்கிறது.
இந்த காம உணர்வின் ஆரம்பம் அங்கு தான் ஆரம்பிக்கிறது. அதாவது இயற்கையில் இவன் காம உணர்வோடு பிறக்கிறான். பிறகு அதில் தான் இருக்கிறேன் ஆனால் அவன் நினைவுக்கு அது தெரியாது. பிறகு அவன் குறிப்பிட்ட வயது வரம்பு வரும் பொழுது அவன் நினைவுக்கு அவை புதிதான ஒரு உணர்வு போல் தோன்றுகிறது. பிறப்பிலேயே அனுபவித்த ஒன்று நினைவுக்கு வரும் போது அவனுக்கு ஏதோ ஒன்று போல் தெரிகிறது. தானாகவே பிறப்பு உறுப்பை தொடும்போது அவனுக்கு சுக்கிலம் வருவதற்கு முன்பு ஏதோ ஒரு சுகம் காண்கிறான். அந்த சுகமோ அவனுக்கு அதிக இன்பத்தை கொடுக்கிறது. வேறு எந்த இன்பம் அவன் அனுபவித்தாலும் கூட இந்த இன்பத்திற்கு ஈடு இணையாக இல்லை. அதுவே மனிதன் இந்த இன்பத்தை முதலில் அனுபவித்தான். பிறகு சுக்கிலம் வெளியேறும்போது வரும் இன்பமும் அதிகமாக இருந்தது.பின் சுக்கிலம் வெளியேறிய பிறகு திருப்திக் கொள்கிறான். திருப்தி என்ற பொருளின் உண்மையான அர்த்தம் யாருக்காவது தெரியுமா விந்து வெளியான பிறகு வரும் ஒருவித அமைதி கொண்ட மனம் அப்பொழுது மனிதனுக்கே தெரியாத ஒரு உணர்வு வெளிப்படுத்தும் ஓசை ஆஆஆ இதுதான் உண்மையான அர்த்தம் அதாவது satisfaction என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். சரி காமம் எப்படி கத்தியாக ஆக மாறியது. இங்கு தான் ஆசை என்கிற ஒன்று உருவாக்கப்படுகிறது. இதைத்தான் காமம் என்று கூறுவார்கள் ஆசையே காமம். மனிதன் முதலில் இந்த உணர்வு அடைந்து நினைவுக்கு வந்த அந்த சுகத்தை அடைந்து திருத்திக் கொள்கிறான் . அப்போது அவனது மூளை இந்த சுகத்தை மட்டும் மிக ஆழமாக உள்வாங்கி வைத்துக்கொள்கிறது. பிறகு அவன் அதையே திரும்ப செய்ய ஆரம்பித்தான்.
இந்த இடத்தில் காமம் ஓர் கத்தியாக மாறுகிறது. மனிதன் ஒருவித இன்பம் என நினைத்து அதை பயன் படுத்த ஆரம்பிக்கிறான். அப்போது அவன் சுகம் என நினைத்து செய்யும் செயலால் அடிமையாகிறான். பிறகு ஆசை கொள்கிறான் ஏன் இதை கத்தி என்கிறேன் என்றால் கத்தியை அழகாக பயன்படுத்த தெரிந்தால் அது நம்மை காக்கும் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் நம்மை அழிக்கும். சரி மனிதன் வயதுக்கு வருகிறான் அப்போது அவனின் குரல் குணம் நடத்தை இவை எல்லாம் மாறுபடுகிறது. இவை அனைத்தும் இந்த உணர்வு நிலையில் வேலைதான். இந்த மாற்றம் இந்த வயதிற்கு வந்த நிலையை அடைந்த பிறகு மனிதன் அந்த சுகத்தை மீண்டும் மீண்டும் அடைகிறான். அதன் பிறகு அவனுக்கு இந்த உணர்வு கல்யாணம் செய்வதற்கும் குழந்தை பெற்றெடுப்பதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் வருகின்றது என யார் முலமாக தெரிந்து கொள்கிறான். இங்குதான் சமூகம் தனது செயல்களை அந்த மனிதனுக்கு இதற்கு இந்த உணர்வு என்று கூறுகிறது. இதன்பிறகு நாம் அதை நம்பி மேலும் சுகத்தை காண்கிறோம். ஒரு கட்டத்திற்கு மேல் பெண் என்கிற ஆசை தோன்றுகிறது பிறகு காதல் என்கிற காமத்தை அடைகிறான்.
பெண்ணுக்கு ஆண் என்கிற ஆசை தோன்றும். அவளும் காதல் என்கிற காமத்தை அடைகிறாள் ஏன் இங்கு காதல் காமம் என்கிறேன் என்றால் காம உணர்வு வந்த பிறகுதானே பெண் என்கிற ஆசை உருவாகிறது பிறகு காதல் அங்கு உருவாக்கப்படுகிறது. காமத்தால் தான் காதல் உருவாயிற்று ஆகையால் தான் கூறுவார்கள் இளமைப் பருவத்தில் வருவது காதல் என்று ஆனால் இது காதல் அல்ல காமம். பிறகு எங்கிருந்து தான் அன்பு என்கிற மனம் உருவாக்கப்படுகிறது. நீங்கள் கூறலாம் காதல் என்றால் இரு மனமும் ஒன்றாக இணைகிறது என்று தவறு காமம் வந்ததால்தான் பருவமடைந்து பெண் தேவை தோன்றுகிறது.பிறகு காதல் வருகிறது பிறகு அன்பு உணர்வு உருவாக்கப்படுகிறது. இதைவிட தெளிவாக எவரும் கூற முடியாது வயது வருவதற்கு முன்னாடி நமக்கு மனசு என்றால் யாருக்காவது என்ன என்று தெரியுமா பிறகு வயது வந்த பிறகு காதல் தோன்றி பிறகு அன்பு தோன்றுகிறது.அப்போது மனக்கஷ்டம் என்கிற ஒன்று தோன்றுகிறது. பிறகு தானே நாம் கூறுகிறோம் மனசே ஒரே கஷ்டமா இருக்கு என்று இங்குதான் காமம் கட்டில் மேல் உள்ளது இந்த வயதில் நாம் அதிக காம உணர்ச்சியுடன் இருப்போம் சுகம் என நினைத்து கத்திமேல் காலை வைத்திருக்கின்றோம்.
அதிகமான பெண்ணாசை பிறகு சமூகம் சிலவற்றை நம் மீது திணித்து இந்த உணர்வை மறைத்து வைத்து பேசுகிறோம் மறைக்க மறைக்க அதில் உள்ளதை நாம் இன்னும் ஆர்வமாக அதை நாம் செய்கிறோம் மறைக்க மறைக்க தான் அதில் உள்ளதை நாம் ஆர்வத்துடன் அறிய முயற்சிக்கிறோம். அதுவே அதை வெளிப்படுத்தினால் அங்கு எதுவுமே இல்லாத வெற்றிடமாக தான் காணப்படும் அது போலத்தான் காமமும். ஏன் இதை கத்தி என்று கூறியதை காண்போம். இளம் வயதில் எந்த அளவுக்கு அதிகமாக காமம் சுகம் கொள்ளுவதால் நாளடைவில் அவை நமக்கு பாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் விந்து விரயம் அதிகமாக செய்யப்படுகிறது ஏதாவது ஒரு பெண்ணை ஆபாச கொள்ள வேண்டும் என்கிற உணர்வு தூண்டப்படுகிறது நடக்கவில்லை என்றால் கோபம் வெறுப்பு ஏற்படுகிறது ஒரு பக்கம் இந்த சமூகம் நமக்கு சிலவற்றை சொல்லும் காமம் கொள்ளக் கூடாது எந்த பெண்ணையும் பார்க்கக்கூடாது ஆபாச படம் பார்க்க கூடாது இதை செய்தால் தீய வழியில் செல்லுவாய் என்று சொல்லி காம உணர்வை தீய ஒன்றாக மாற்றியுள்ளது. பாவம் சமூகத்தை குறை கூற முடியாது அவர்களுக்குத் தெரிந்த அறிவு அவ்வளவுதான் தெரிந்ததை தான் அவர்கள் சொல்கிறார்கள் ஏனென்றால் காம உணர்வு ஏதோ ஒரு இடத்தில் எல்லைமீறி கடக்கும் போது அவன் ஏதோ ஒரு பெண்ணை பலவந்தமாக கற்பழிக்கிறான் அந்தச் செய்தியானது எல்லோருக்கும் பரவுவதால் அவர்கள் இதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு காமம் ஒரு தவறு என்று கூறுகிறார்கள்.
இந்த உணர்வைப் பற்றி புரிந்தவர்கள் சிலரே. யாருக்கும் இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை. இதற்குதான் ஆசை துன்பத்திற்கு காரணம் என்று ஞானிகள் கூறுகிறார்கள் ஒரு பக்கம் என்னவென்றால் அனைத்திற்கும் ஆசைப்படு என்றும் கூறுகிறார்கள் இன்னொரு பக்கம் காம உணர்வுகளை அடக்கினால் அவையே நம்மை கொன்றுவிடும் தணிக்க படாத காமம் ஆனது பெரும் ஆபத்தை உண்டாக்க கூடியது அதனால் இதை அடக்கக் கூடாது என்றும் கூறுகிறார்கள் அதேபோல் காமத்தை அடக்க வேண்டும் இல்லை என்றால் உடல் பலம் இழக்கும் அறிவும் மந்த படும் என்றும் கூறுகிறார்கள் அதற்கேற்றால் போல் பழமொழியும் சொல்லிவிட்டார்கள் விந்தை விட்டவன் நொந்து கெட்டான். நீங்களே இதை உற்றுக் கவனித்தால் நீங்களே குழப்பம் அடைவீர்கள் அதாவது அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்கிற ஒரு விஷயம் இதில் உள்ளது. அதாவது காமத்தை அடக்கவும் கூடாது அதேபோல் அதிகமும் வெளியேற்றக் கூடாது இந்த இரண்டிற்கும் இடையில் நாம் இதை எப்படி கையாள வேண்டும் என்கின்றவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இதனை நாம் நன்றாக பயன்படுத்த தெரிந்தால் நம் வாழ்வில் சிறந்த அழகான இன்பங்களை கொண்ட அனுபவத்தை பெறமுடியும். இளமைப் பருவத்திலேயே அந்த உணர்வு தோன்றும் போது நீங்கள் அனைவரும் இதைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
இதில் முக்கியமான சூசகமான விஷயத்தை நான் கூறிவிட்டேன். நீங்கள் இதை தக்க குருவிடம் சென்று முறையாக இதைப் புரிந்துகொண்டு வாழ்க்கையில் ஆசை துன்பம் அன்பு இதனை கையாள வேண்டும். இளம்பருவ ஆண்-பெண் இதனை புரிந்துகொண்டு கையாண்டால் உங்கள் வாழ்வில் எல்லாவிதமான விஷயத்தை நீங்கள் சுலபமாக எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் பிறகு நீங்கள் அந்தப்புர ராஜாவாகவும் திகழ முடியும் பெண்கள் ராஜாவை கையாளும் ஒரு ராணியாகவும் திகழ முடியும் நீங்கள் நினைக்கலாம் இதையெல்லாம் வெளியில் சொல்லி கொடுப்பார்களா இதனை அழகாக புரிய வைக்கும் குருமார்கள் இருக்கிறார்கள். காமத்துடன் கடவுள் என்கிற பூதத்தை வெளிப்படுத்துவார்கள் அதாவது அற்புத விளக்கை தேய்த்தாலும் பூதம் வந்து வேண்டியதை தருவதுபோல் அவர்கள் உங்களுக்கு அழகாக இதை சொல்லித் தருவார்கள். இதைப் புரிந்துகொள்ள புத்தகங்களும் நிறைய உள்ளது. ஆனால் புத்தகங்களில் 50 சதவீத உண்மைகள் மட்டுமே இருக்கிறது பல உண்மைகள் குருமார்களிடம் மட்டுமே உள்ளது நீங்கள் சென்று அந்த ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் காமம் என்கிற கத்தியின் மேல் நடந்து நிங்கள் வித்தை காட்ட முடியும் வித்தைக்காரர் ஆக மாறுங்கள். அதற்கும் தவறாக நினைக்க வேண்டாம் உடனே மந்திரவாதி என்று. வித்தைக்காரன் என்றால் அறிவு மிகுந்தவன் அவ்வளவுதான் நன்றி…
Hipnotist Sivaganesh