கருவூராரின் அற்புத மந்திரங்கள் இந்த மந்திரங்களை நாம் வாழ்க்கையில் பயன்படுத்தும் பொழுது அதி அற்புத விசேஷங்கள் நடக்கும் என்று உறுதியாக சொல்கிறார் கருவூரார் இவர் ஒரு அற்புதமான சித்தர் இவரைப் போன்ற ஒரு அற்புதமான சித்தரை காண முடியாது காரணம் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொன்னவர் இந்த அற்புதமான மந்திரங்களை பலமுறை உருவேற்றி கொள்ளுங்கள் நிச்சயமாக எல்லா விசேஷங்களும் சித்திக்கும்கருவூரார் சித்த அருளிய மந்திரங்கள் சிவாலயங்களில் சிவலிங்கத்தை தங்கத்தால் உருவாக்கு வதும் பாசுரம் பாடி பக்தி நெறி வளர்ப்பதுமாக ஊரெங்கும் அலைந்த சித்தர் கருவூரார் ஆவார். தேவதச்சன் விஸ்வகர்மா வின் மகனான மயன் குலத்தில் பிறந்தவர் கருவூரார். எண்ணற்ற மந்திரங்களை இவ்வுலக நன்மைக்காக உரைத்தவர் கருவூரார்.கருவூரார் உபதேசித்த மந்திரங்களில் குறிப்பிடத்தக்கது தற்புருஷ மந்திரங்களாகும். தற்புருஷம் என்பது சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றாகும். ‘ஓங் அங்கிஷ சிவாய நம’ என ஓதினால் பூமியில் சஞ்சாரம்செய்யலாம்.
‘லங்கிரியும் நமசிவாய’ என்று உச்சரித்தால் தானியங்கள் பெருகி வரும். ‘ஊங்கிறியும் நமசிவாய நமா’ என்ற மந்திரத்தை செபித்தால் மோட்சம் கிடைக்கும்.
‘ஓம் நமசிவாய’ என்று உச்சரித்தால் காலனை வெல்லலாம்.
‘சவ்வும் நமசிவாய நமா’ எனும் மந்திரத்தை உச்சரித்தால் ராஜபோகம் சித்திக்கும்.
ஓங் ஊங் சிவாயநம உங் நமா’ என்ற மந்திரத்தை செபித்தால் குட்டம் பதினெட்டும் தீரும்.
‘வநமசிவாய’ என்று உச்சரித்தால் தேக சித்தியாகும்.
‘நமசிவாய ஊம் நமசிவாய’ என்று செபித்தால் பதினெட்டுவகைச் சுரமும் தீரும்.
‘நமசிவாயம் லங்க நமசிவாய’ எனும் மந்திரம் செபிக்க மழை பொழியும்.
‘நமசிவயங்செலகை நமசிவாய’ என மந்திரம் உச்சரித்தால் அறுபத்து நான்கு பாஷாணங்களினால் ஏற்படும் விஷம் நீங்கும் இந்த எட்டு வித மந்திரங்களை பயன்படுத்துங்கள் ரகசியமாக வைத்து பயன்படுத்தினால் அற்புத விளைவை சித்திக்க முடியும்
vinodhan 7010054619