பாம்புகள் பற்றி நாம் பலரும் அறிந்ததுண்டு. பாம்பு என்றாலே படையும் நடுங்கும், என்பார்கள் அல்லவா. பொதுவாக, உயிரினங்கள் மரபணு இரட்டைமயமாதல் காரணமாக இருதலை, மூன்று அல்லது நான்கு கைகள், கால்கள் போன்றவற்றுடன் பிறக்கும் (மனிதர்களில் சில சமயம் இரட்டையர் ஒட்டிப் பிறப்பது போல) இது ஒரு அபூர்வமான நிகழ்வு.

         பாம்புகளில் சில சமயம் இரு தலைகளுடன் பிறக்கும். ஆனால் இவை சாதாரண பாம்புகள் போல நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதில்லை. ஆனால் தொன்று தொட்டே ஐந்து தலை, பத்துத்தலை நாகப் பாம்பு பற்றிய நம்பிக்கைகள் உலவி வருகின்றன. இதுபோன்ற விஷயங்களை நம்புவதும் இதைப் திகழ்கிறது. பற்றி விவாதிப்பதும் நகைப்புக்குரிய விஷயமாகத் ஆனாலும் சிலர் இதனை நம்புகின்றனர்.
ஐந்து தலை நாகம் இருக்கின்றது என பழங்காலத்து புராணங்கள் பலவற்றில் நாம் படித்ததுண்டு. ஒருவேளை ஐந்து தலையுடன் ஒரு பாம்பு பிறந்தால் அதற்கு ஐந்து தலை, ஐந்து மூளை, ஐந்து வாய் இருக்கும் அப்படியானால் அந்த பாம்பின் உடல் எந்த மூளையின் கட்டளையை ஏற்று செயல்படும்? ஒரு இரையை வேட்டையாடினால் எந்த வாய் அதை விழுங்க வேண்டும் என்ற குழப்பம் வரவேண்டுமே?

       

ஐந்து தலை பாம்பு என்று இருக்கிறதா? இல்லையா? என்ற விவாதங்கள் ஆன்மீக ரீதியாக பலர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் ஐந்து தலை நாகம் என்பது உருவகமாக மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்வழியில் நடக்க கூறப்பட்ட ஒரு விஷயமாகதான் இருக்கிறது. அதை மனிதர்கள் ஆன்மீக வழியாக அறியவே சிவபெருமானின் ஆபரணமாக ஐந்து தலை நாகம் என்ற கூற்று கூறப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணர், புத்தர் போன்ற தெய்வங்களுடனும் ஐந்து தலை நாகம் தொடர்பு பட்டிருப்பது என்பதை நாம் காணமுடிகிறது. மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ள இந்த நம்பிக்கை இன்று நகைப்புக் குரியதாக இருந்த போதிலும் இவை உள்ளன என்பதே தெய்வாதின நம்பிக்கை எனலாம். எப்படியிருந்த போதிலும் ஐந்து தலை நாகம் என்பது ஒரு மர்மமான விஷயம்தான்.

                     ஐந்து தலையுடன் ஒரு நாகப்பாம்பு இருப்பது போலவும் அதன் முன்பாக  ஒரு நபர் நின்று கொண்டிருப்பது போன்ற படமும்ஐந்து தலையுடன் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவது போன்ற படமும் திருச்செங்கோடு பகுதியில் செல்போன்களில் வலம் வந்து கொண்டுள்ளது.இந்த பாம்பு திருச்செங்கோடு பகுதியில் பிடிபட்டதாகவும் கூடுதல் தகவல் பரவியது. இதனால் திருச்செங்கோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த பாம்பு திருச்செங்கோட்டில் எந்த பகுதியில் பிடிபட்டது என்பது குறித்தும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து nkl4u  செய்தியாளர்கள் நடத்திய விசாரணையில் ஐந்து தலை நாகப்பாம்பு குறித்த செய்தி புரளி என்பது தெரியவந்தது.மேலும் செல்போன் களில் பரவி வரும் ஐந்து தலை பாம்பு புகைப்படம் உண்மையானது அல்ல என்பதும் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. உண்மையில் அந்த படத்தில் உள்ளது ஒரு தலையுடன் கூடிய ராஜ நாகமாகும் (பார்க்க படம்). இந்த பாம்பு 2003 ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் பிடிபட்டதாகும்.பிடிபட்ட இந்த ராஜநாகத்தை தாய்லாந்த் நாட்டைச் சேர்ந்த டைய்ன் சூயி என்பவர் தனது கேமிராவில் பதிவு செய்தார்.மேலும் இந்த பாம்பு குறித்த விவரங்களை புகைப்படத்துடன் தனது ப்ளாக்கில் வெளியிட்டுருந்தார். இதிலிருந்து படத்தை சுட்ட யாரோ ஒருவர் ஒரு தலை உள்ள பாம்பிற்கு கிராபிக்ஸ் மூலம் ஐந்து தலையை உருவாக்கி புரளியை கிளப்பிவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

                                                                                                       

                                                                                                                              ஐந்து தலை நாகத்தை கண்ட மக்கள்

          தர்மபுரியில் ஐந்து தலை நாகமொன்று பல வருடங்களாக வசிப்பதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள் இது ஒன்று தான் ஐந்துதலை நாகம் இருக்கிறது என்பதற்கான ஒரு நம்பிக்கையும் சான்றாக இருக்கிறது தர்மபுரியில்.ஐந்து தலை நாகமொன்று பல வருடங்களாக வசிப்பதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள் இது ஒன்று தான் ஐந்துதலை நாகம் இருக்கிறது என்பதற்கான ஒரு நம்பிக்கையும் சான்றாக இருக்கிறதுதருமபுரி மாவட்டத்தில் உள்ள நெருப்பூர் என்ற கிராமத்தை ஒட்டி ஒரு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதிக்குள், பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இருண்ட குகை ஒன்று உள்ளது. அந்த குகைக்குள் ஓடும் வற்றாத நீரூற்றில் எழுந்தருளியிருக்கும் சாமி சிலைகளின் வரலாறு 500 ஆண்டுகள் கடந்தவை என்று கூறப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக பல மர்மங்கள் புதைந்துகிடக்கும் இந்த முத்தையன் குகை கோயிலில் திகிலுக்கு பஞ்சமில்லை. வெறும் 20 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட இந்த குகைக்கோவிலில் ஒரே சமயத்தில் 6 பேர் மட்டுமே வழிபாடு செய்யமுடியும்.இந்த குகைக்குள் பல நூறு வவ்வால்கள் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருக்கிறது. அவை எல்லாம் தவம் செய்துகொண்டிருப்பதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். அதோடு அந்த வவ்வால்கள் அனைத்தும் எப்போது குகையை விட்டு வெளியே போகிறது எப்போது திரும்பி வருகிறது என்பதெல்லாம் மர்மமாகவே உள்ளது என்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.அதோடு இந்த குகை கோவிலில் ஐந்து தலை நாகம் ஒன்று வசித்து வருகிறதாம். சாமிக்கு பின்னல் இருட்டான ஒரு இடத்தில் தான் இது பெரும்பாலும் இருக்கிறதாம். அதோடு அவ்வவ்போது அந்த நாகம் குகையை சுற்றி சுழன்று வருவதாகவும் அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். அந்த ஊரில் வாழும் வேறு சிலரோ அங்கு ஐந்து தலை நாகம் எதுவும் இல்லை என்றும் மாறாக ஐந்து நாகங்கள் இருக்கின்றது எனவும் அதை தான் ஐந்து தலை நாகம் என்று சிலர் கூறிவருகின்றனர் எனவும் கூறுகின்றனர்.இதுகுறித்து கோவில் பூசாரி கூறுகையில், அங்கு ஐந்து நாகங்கள் வாழ்வது உண்மை தான். அதை நான் அடிக்கடி பார்த்ததுண்டு. அது பக்தர்களை எதுவும் செய்யாது என்று கூறியுள்ளார். இந்த கோவில் சந்தன கடத்தல் வீரப்பனுக்கு  இஷ்டமான கோவில் என்றும் அவ்வப்போது அவர் இங்கு வந்து தெய்வத்தை வணங்கி சென்றார் என்றும் ஊர் மக்கள் கூறுகிறார்கள்.

                                                                                                                     

                                                                                                                        ஐந்துதலை நாகத்தை புகைப்படம் எடுத்த நபர்

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் என்ற ஒரு பகுதி உள்ளது அதை சேர்ந்த கடம்பூர் ஒன்று உள்ளது இங்கு வசிப்பவர் தசரதன் என்ற ஒருவர் ஒரு நாள் இவர் கடம்பூர் என்ற வனப் பகுதியை சேர்ந்த சின்ன சாசட்டி பகுதிக்கு ஒரு சில புகைப்படம் எடுக்க சென்று உள்ளார் அவர் சென்று இருக்கும்பொழுது தன்னுடைய நண்பனுடன் அவர் வந்திருந்தார் அப்பொழுது தன்னுடைய நண்பனுடைய பைக்கில் இருந்து ஒரு சில புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது அந்த பகுதியில் சாலை ஓரத்தில் ஒரு பாம்பு ஒன்று இருந்ததை பார்த்தார் அந்த பைக் சத்தம் கேட்டவுடன் பாம்பு படமெடுத்து பார்த்தது திடீரென்று அவருக்கு ஒரு பயம் வந்து விட்டது அந்த நேரத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்த நேரத்தில் திடீரென்று புகைப்படம் கிளிக் ஆனது பிறகு அந்த இடத்தை விட்டு அவர் வந்துவிட்டார் வந்த பிறகு அந்த புகைப்படங்களை அனைத்தையும் கடையில் கொடுத்து நகல் எடுக்க சொன்னார் அவருக்கு வந்தது மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது அந்த அதிர்ச்சி என்னவென்றால் பிரிண்ட் போட்ட பிறகு அந்த புகைப்படத்தில் இருந்தது ஐந்து தலை நாகம் என்று தெரியவந்தது இது அபூர்வ நாகம் என பிடித்து வனத்துறையிடம் தகவல் கொடுத்துள்ளார் தசராமன் பிறகு மாவட்ட வன அதிகாரிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் கூட இருக்கும் ஏழுமலை என்ற ஒருவர் உள்ளிட்டோர் எல்லோரும் அதிசய பாம்பு குறித்து விசாரிக்க தீவிரமாக கண்காணித்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் இன்றுவரை புகைப்படம் மட்டுமே கிடைத்துள்ளது ஆனால் பிறகுதான் அது என்ன விஷயம் என்று கடைசியில் புரிந்தது அது என்னவென்றால் அவர்கள் செய்த விஞ்ஞானத்தின் தொழில்நுட்பத்தைக் கொண்டு கிராபிக்ஸ் செய்து இருக்கிறார்கள் என்று அடுத்த விஷயத்தில் பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று அதாவது கிராபிக்ஸ் எப்படி எல்லாம் செய்கிறார்கள் நீங்கள் பாருங்கள்

 
 
பொதுவாக உயிரினங்கள் மரபணு இரட்டைமயமாதல் காரணமாக இரு தலைமூன்று அல்லது நான்கு கைகள்கால்கள் போன்றவற்றுடன் பிறக்கும் (மனிதர்களில் சில சமயம் இரட்டையர் ஓட்டிப் பிறப்பதுபோல). இது ஒரு அபூர்வமான நிகழ்வு. 
பாம்புகளில் சில சமயம் இரு தலைகளுடன் பிறக்கும்அனால் இவை சாதாரண பாம்புகள் போல நீண்ட நாட்கள் உயிர்வாழ்வதில்லை.
ஆனால் சமீபகாலமாகஐந்து தலை உள்ளது போன்ற நாகபாம்பு படங்கள் இணையத்தில் உலவிவருகின்றனஇது போன்ற போலியான புகைப்படங்களை படித்த பலரும் கூட நம்புவதும் இதை பற்றி விவாதிப்பதும் நகைப்புக்குரிய விடையமாகும். இதை தமது நண்பர்களிடமும்வலைப்பங்களிலும் கூட பகிர்வது அர்த்தமற்ற / பிறரை முட்டாள் ஆக்கக்கூடிய செயல்.ஏற்கெனவே பாம்புகள் பற்றிய பல கட்டுக்கதைகள்  (ஐந்து தலை நாகம் இருக்கின்றது என பழங்காலத்து புராணங்கள் பலவற்றில் நாம் படித்ததுண்டு (பார்க்க படம்)) உலவி வருகின்ற வேளையில்தொழில்நுட்ப வளர்ச்சியில் உருவான சமீபத்திய கட்டுக்கதை இது.ஒருவேளை ஐந்து தலையுடன் ஒரு பாம்பு பிறந்தால், அதற்கு ஐந்து தலை, ஐந்து மூளை, ஐந்து வாய் இருக்கும் ! அப்படியானால்  அந்த பாம்பின் உடல் எந்த மூளையின் கட்டளையை ஏற்று செயல்படும் ? ஒரு இரையை வேட்டையாடினால் எந்த வாய் அதை விழுங்கவேண்டும் என்ற குழப்பம் வரவேண்டுமே ??? இதையெல்லாம் யோசித்தால் இதுபோன்ற வதந்திகளை நாம் நம்பவே மாட்டோம்
 
                                                                                                                              ஒரு தலையுடன் உள்ள ராஜநாகம்
(அடுத்தபடம்)கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஐந்து தலை ராஜநாகம் 
படத்தில் காணும் ராஜநாகம் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட ஒன்றாகும், இதை அவர் தனது வலை பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். ஒரு சமயம் அவர் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது இந்த படத்தை காண நேர்ந்தது. யாரோ ஒருவர், அவரது புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து அதை கிராபிக்ஸ் மூலம் மாற்றம் செய்து ஐந்து தலை உடையது போல இணையத்தில் பரப்பிவிட்டது தெரியவந்தது. இது விளையாட்டாக செய்திருக்கலாம், அனால் இதன் விளைவுகள் பலர் இந்த வதந்தியை உண்மை என நம்பக்கூடிய வாய்புகள் அதிகம்.
ஒற்றை தலை ராஜநாகமும், அதிலிருந்து போலியாக போட்டோஷாப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட புகைப்படம்இங்கே எப்படியெல்லாம் கிராபிக்ஸ் மூலம் ஒரு புகைப்படத்தை மாற்றியமைக்கமுடியும் என்பதை அந்த போட்டோஷாப் கலைஞர்நிரூபித்துள்ளார்.
படத்தில் சிறிய கட்டத்தில் காண்பது கேரளாவில் புகைப்படக்கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம். பெரிய அளவில் இருப்பது அந்த உண்மையான படம் கொண்டு நகைச்சுவையாக/ ஐந்து தலை நாகம் போலியானது அவ்வாறு உலகில் உயிரினம் இல்லை என்பதை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட புகைப்படம். 
உள்ளே வட்டமிட்டு காட்டப்பட்ட மனிதனின் தலையை உற்று நோக்குங்கள், அவரின் தலையை கூட பாம்பின் தலைகொண்டு மாற்றியுள்ளார். இதுகூட ஐந்துதலை நாகம் போலியானது என்பதையும், தொழில்நுட்பத்தை கொண்டு 100 தலை நாகத்தினை கூட உருவாக்கமுடியும் என்பதையும் நிரூபித்துள்ளார். போட்டோஷாப் கொண்டு போலியாக உருவாக்கப்பட்ட சில புகைப்படங்கள், இதோ உங்கள் பார்வைக்கு
இதில் உள்ள அனைத்துமே போலியானவை, ஒற்றை தலை கொண்ட பாம்பின் படத்தைக்கொண்டு போட்டோஷாப் தொழில்நுட்பத்தினால்உருவாக்கப்பட்டு இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் புகைப்படங்களில் சில.
vinodhan,
 
Shopping Cart