விதி மேல் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பதிவை படிக்கவும் விதி என்பது நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது உங்களுக்கு விதி மேல் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பதிவை படிக்கவும் காரணம் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஒருபோதும் விதி செயல்படாது இது என் அனுபவம் கூட ஆனால் அதற்குமேல் நம்பிக்கை வைத்தால் ஆழம் தெரியாத கடலை தான் கடல் ஆக மாறிவிடும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு விதி தொடரட்டும் இதோ உங்களுக்காக மாற்றி எழுதும் பிரணாயாமம் விதி பயிற்சிபஞ்சபூத சக்திகளான மண், நீர் நெருப்பு, காற்று, விண் இவைகளை தவறாக பயன் படுத்தியதால், பல நோய்களுக்குள்ளே மனிதன் இன்றைக்கு, விழுந்து கிடக்கின்றான். முக்கியமாக காற்றை, நன்கு இழுத்து, ஆழமாக தனக்குள், மனிதன் சுவாசிக்க, மறந்து விட்டான். அதனால், உடலின் அழுக்குகளை, எரிக்கவல்ல.காற்றில் இருக்கும் பிராண வாயுவை, உடலுக்கு தேவையுள்ள அளவு, ஆழமாக இழுத்து நிறுத்தி, தனது ரத்தத்தில் இருக்கும், நச்சு சக்திகளை,ரத்தத் திலிருக்கும் அழுக்குகளைக், கசடுகளை நீக்கி மனிதன், தன் உடலில் அழுக்குகளை சுத்தப்படுத்திக் கொள்ளாத காரணத்தால், மனிதனின் உடலில் அசதிகளும், சோம்பலும், ஒரு காரியத்தை, உடனே முடிக்கும் எண்ணமின்றி, அதனால் முக்கிய மனிதக் கடமைகள், நடைபெறாமல், மனிதன் அளவிலும், உள்ளத்தின் அளவிலும், அசதிகள்பலவீனம் என்று, நாளுக்கு நாள், அவனது சக்திகள் குறைந்து கொண்டே, வருகின்றன. மனிதனுக்கு, பணத்தின் மீதும்…
வசதிகள் மீதும்தான், அதிக அக்கரை, அழகை அனுபவிக்கவும், எதிலும் அளவுக்குமீறி உண்டு, அதிலும் அவஸ்தைகள், நோய்களை உடலில் வைத்துக் கொண்டு, என்ன செய்கிறோம் என்பதே புரியாமல், திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறவன், மனிதன்.அவனது அவசரமான தவறுகளால், மனம் கெடுகிறது. கண்ட உணவை சாப்பிடுவதால், அவ னின், உடல் நோய்களில், விழுந்து கிடக்கிறது. அதுவும் உயர்ந்த, படிப்பும்… விஞ்ஞான வசதிகளும், நாகரீக மோகத்திலும், மனிதன் பார்வைக்கு அழகாக, வெளியார்க்கு, ஒரு கெட்டப்புடன், தான், இருக்க மட்டுமே, மனிதன், தனக்குள்ளே ஆசைப்படுகிறான்.
உடலுக்கும், மனத்துக்கும், அவன்…தேவையானவைகளை செய்து கொள்ளும், எண்ண மின்றி, நாளுக்கு நாள், தேய் பிறையாய் தேய்ந்து, அதிக உணர்ச்சிவசப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு, உடலில் நரம்புகளை வருத்தி, அவைகளை பலஹீ னப்படுத்தி, தேய்ந்து, அவன் உணர்ச்சிகளை, ஒரு நாள் அழுத்தத்துடன், நரம்புகளில் பாய்ச்சுகையில், நரம்புகள் அறுந்து, அவனின் கைகால்கள், அதில் நடக்க வராமல், அவன் பலஹீனன் ஆகின்றான். முகம் கோணி, கோரமாகவும் ஆகின்றான்.அதாவது பிராணாயாமம், அறிவைத் தூண்டி… மனிதனிடத்தில், அது விளக்காக எரியும் போது மனிதனிடத்தில் இருக்கும், இருட்டு எல்லாம் வெல்லப்பட்டு விடும். கோபம், மூர்க்கம், பிறரை குறை காணுவது, அன்பில்லாமல் இருப்பது, இவை போன்ற, குணங்கள் மறைந்து, பிராணாயாமம் செய்யச் செய்ய, குறைகளற்ற மனிதன், மனித னுக்குள் இருந்து, வெளிப்படுவான்.
அது மட்டுமில்லை; பிராணாயாமம் செய்கின்றவன்…சிந்திக்கத் தொடங்கிவிடுவதாலும், இயற்கையின் வழியில், அவர் நடக்கத் துவங்கி விடுவதாலும், தனதுமனித ஆட்டங்களை, நிறுத்திக்கொள்ள நினைப்பதாலும், இந்த மனிதனுக்குள்ளே, ஒரு மகான் முளைக்க ஆரம்பித்து விடுகிறான். யோக மும், அவனுக்கு இப்போது, கைகூடி வந்துவிடும். மனிதன் யோகி ஆனால், அவனின்… முன் ஜென்ம பாவங்கள், யோகியான மனிதனை விட்டு மெல்ல விலகி, அவனிடத்தில் சொல்லிக் கொள்ளாமல், பின்புறம் நடையைக் கட்டிவிடும். பிராணாயாமம், என்னும் சுவாசக் கட்டுப்பாடு…
ஒரு மனிதனை புனிதமானவராக்குகிறது. அவனின் உடலில் இருக்கும், குறைகளை அகற்றுகிறது அவன் உடலில் இருக்கும், நோய்களை விலக்கி தூரப் போடுகிறது. மனிதனுக்கு, மனித நிலையில்ருந்து, சித்தர் நிலையை அடையவும், அவனுக்கு அது பேருதவி புரிகின்றது. முன் ஜென்ம வினை களும், மனிதனுக்குள் செயல்படாமல், அழிந்து போகின்றன.இந்த அற்புதமான, பிராணாயாமத்தை செய்யும்… முறை குறித்து, இனி பார்க்கலாம். உடலில் பஞ்சபூத ஆட்சியை, தலைமை ஏற்றுநடத்துகிற சக்தியே வாசி சக்தி. இதை திருப்பிப் போட்டால், ‘சிவா’ என்று வரும். எனவே சிவனே வாசி, வாசியே சிவன். எனவே, இந்த வாசி, என்னும் மூச்சு…
அப்யாசத்தையே ‘பிராணாயாமம்’ என்ற சொல் லால் குறிக்கின்றோம். பிராணாயாமம் என்பது, வெளிக்காற்றை, மனித உடலுக்குள் இழுத்து, அதை உடலைவிட்டு வெளியேற்று முன்பு, கும்பகம் என்ற ஒன்றை, நம் உடலுக்குள் செய்து, காற்றை அசையாமல், இருக்கச் செய்வதாகும்.காற்றை, ஏன் அசையாமல் செய்ய வேண்டும்? மனம் என்பது, காற்று உடலில் வந்து, வந்து செல்வதில், சலனமுற்று, அதில் எண்ணங்கள். நீரில் நீர்க்குமிழிகள் போன்று, தோன்றி, மனித மனம் என்பது, மனிதனுள் பேயாட்டம் போடுகின்றது.மனிதன், எண்ணங்களின் பின்னே, செல்ல… எண்ணங்கள், ஐம்புலன்களின் வழியே, வெளி உலகை அனுபவிக்கும்போது, அந்த அனுபவம் ஆசைகளாகி, மனிதனிடம் தள்ளாட்டம், துள்ள லாட்டம், எல்லாம் ஆரம்பித்து, அதில் மனிதனே,ஆசை என்னும் கடலுக்குள், புயலில் அகப்பட்டி ருக்கும் கப்பலாய், மூழ்கிப் போகின்றான். மண், பெண், பொன் ஆசைகளில், விழுந்த
வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள் யாரும், அதைவிட்டு எழுந்து,அவைகளின் பிடிவிட்டு, மீண்டு வந்ததில்லை. கவிழ்ந்து விழுந்து,மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள். வாளெடுத்த அலெக்ஸாண்டர், தனது 33 வயதிலேயே மண்ணை ஜெயித்து, அம்மண்ணுக்குள்ளே அடக்கமாகி விட்டான். வீராதிவீரன் ரோமன் அரசன், சீசர் கிளியோ பாட்ரா என்ற பெண்ணின் மடியில் விழுந்தவன், பின் அதைவிட்டு, எழுந்திருக்கவே, இல்லை. பொண்ணையும், பணத்தையும் தேடும், இந்த… கால மனிதன், அதுபற்றிய ஆசைகளில், படும் பாடுகள், சகிக்கக் கூடியதாக இல்லை. எனவே, ஆசைகளில்காணப்படும், மனிதமனத்தை…அடக்கும்அங்குசம்தான், இனி,அப்பியாசம். இந்த பிராணாயாம இதன்\முறைகள் பற்றி அறிவோம். வெளியிலிருந்து, உள்ளே வரும் மூச்சு ‘பூரகம்’… எனப்படுகிறது. இது சந்திர குளிர்ச்சியில் உட லுக்குள் வருகிறது. மூச்சை, மனித உடலுக்குள் இருந்து வெளியில் விடுவது ‘ரேசகம்’ இதில்சூரியனின் உஷ்ணம், கலந்து இருக்கும். உள்மூச்சு, வெளிமூச்சுக்கு, நடுவில் உள்ளேமூச்சு… சென்றதும், அதை உடனே வெளியில் விடாமல், உள்ளே, ஒரு குறிப்பிட்ட நேரம், வைத்திருப்பதற்கு பெயர்தான் ‘கும்பகம்’கும்பகத்தில் உள்ளே, இருக்கும் காற்றில்… அசைவுகள் என்பது கிடையாது. இப்படி உள்ளே காற்றை அடைத்து, அதை சலனமற்றுச் செய் கையில், மனமும், கும்பகம் செய்யும் நேரம் வரைக்கும், நம் மனம் செயலற்று நிற்கும். அந்த காற்றை, உள்ளே மனம், செயலற்று இருக்கும், நேரத்தில்… ஐம்புலன்களும்,தங்களின் செயல் இருக்கும். பிராணாயாமத்தில் உள்ள கும்பகத்தில், ஒடுங்கி ஐம்புலன்களின், செயல் திறனும் ஒடுக்கத்தில் இருக்கிறது. மனமும் சலனமின்றி, அப்போது அடங்கி, கிடக்கின்றது. மனிதன் அல்லற்படுவது, அவஸ்தைபடுவது…எல்லாம், இந்த மனம் சலனத்தில் இருக்கும் நேரத்தில்தான். கும்பகப்பிராணாயாமத்தில், மனச் சலனம் கொள்ளாததினால், மனிதன், அந்த நேரத் தில், மனமற்ற நிலையின், ஆனந்தத்தைஅனுபவிக்க முடியும்.தொடர்ந்து, தியானத்தில் இருக்கும், மனிதனுக்கு… மனத்தின், நிலை சலனமற்று, இருத்தல் அவசியம். அதுவும் நிர்விகல்ப சமாதி என்னும் ‘சமாதி’நிலை தோன்றுவதற்கும், அதை ஒட்டி, மனிதன் சித்த னாகி, பல சித்துக்களை பெருவதற்கும், மிகப் பெரிய அரிய விஷயங்களை, ஒரு சித்தனாகி, அவன் அறியும் போது, சித்தனுக்குள் மனதின் எண்ணத்தடைகள், இருக்கக் கூடாது!எனவே, பிராணாயாமத்தில், கும்பகம் செய்து… மனத்தை, சிறுகச் சிறுக செயலற்று,இருக்க வைத்து, மூச்சில் காற்றுக்கும்பகம் என்பது, கேவலக் கும்பக மாக ஆகும்போது, நிர்விகல்ப சமாதியில், மனிதன் விழுந்து கடவுளுக்கு சரிசமம் ஆகி, சமம் + ஆதி ஐ சமாதியில், அவன் அரிய வித்தைகளை, மனமற்ற நிலையில் பெறுகின்றான். இந்த நிலையில், மனித னின், பாவங்கள் முழுக்க, அவனிடத்தில் இருப்ப தில்லை. அவைகள் முற்றாக, அப்போது அழிக்கப் பட்டு விடுகின்றன.
இத்தகைய, சிறப்பு மிக்க, பிராணாயாமத்தை. செய்யும் முறையையும், அதில் உள்ள நுணுக்க கணக்கு முறைகளையும், இனி அறிவோம்.
உள்மூச்சு (பூரகம்)
உள்ளுக்குள் மூச்சை வைத்திருத்தல் (கும்பகம்)
வெளிமூச்சு (ரேசகம்)
நேரம்
4விநாடி
16விநாடி
8விநாடி
இதில், உள்மூச்சு போன்று, 4 மடங்கு நேரம்…
இழுத்த மூச்சுக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டும். பிறகு மூச்சை வெளி விடுவது, உள்மூச்சு நேரத்திற்கு இரண்டு மடங்கு, இருக்க வேண்டும். படிப்படியாக, ஒரு குருவை வைத்து பிராணாயாமம் கற்று, அதன் கும்பக நேரத்தை அதிகரித்துக் கொண்டே சென்றால், சமாதி நிலையை எட்ட முடியும். இறுதியில் இப்படி, மூச்சை மனிதன், தன் கட்டுக்குள்
தியானத்தைகொண்டு வந்து, தொடங்கி விட்டாலே மனிதன், முன் ஜென்மங்களில் செய்த மொத்த, மனிதப் பாவங்களும், இந்த தியானத்தாலும், மொத்தமாக சிறுகச் சிறுக, அழிக்கப்பட்டு விடும்.கும்பகப் பிராணனாலும்,நிற்கும்போதும், நடக்கும்போதும், அமரும்போதும்… உறங்கும் போதும், வாசி பாரு என்று சித்தர்கள் சொல்வது போல், வாசியில், மூச்சில் கவனம் வைத்து நடந்தால், கெட்டவனும் நல்லவனாகி விடுவான். இதில் பாவங்கள், மரணமடைந்தே, தீரும். அவனுள் பிராணாயாமத்தையும், தியானத்தையும் தினமும்… தொடர்ந்து செய்யுங்கள், நம்முள் இருக்கும் விதியின் பிடி, நம்மை விட்டு அகன்று விடும்.உங்களின் தலைவிதி மாற்றி எழுதி விடும். பிராணாயாமம் செய்யுங்கள்
Vinodhan,