ரசமணி சுத்தி முறை
ரசமணி சுத்தி முறை மூணு கிலோ உப்பை 100 கிராம் புரதத்தையும் கொண்டு சுத்தி செய்ய வேண்டும் பிறகு செங்கல் தூள் நவச்சாரம் படிகார தூள் மஞ்சள் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி மணி சுத்தம் செய்ய வேண்டும் சுத்தி செய்யும் பொழுது
ஏழுவிதமான சட்டைகள்
1. நாகம் – நாகம் எனும் சட்டை கழற்றப்படாத இரசத்தைப் பயன்படுத்தும்போது அது மூலநோயை உண்டாக்கிவிடும்.
2.வங்கம்-வங்க சட்டை கழற்றாத இரசம் பெருநோய் எனும் குஷ்ட நோயை ஏற்படுத்தும்.
3. அக்கினி – அக்கின சட்டை கழற்றப்படாத இரசம் உடலில் தோல்நோயை உண்டுபண்ணும்.
4. மலம் – மலம் என்னும் சட்டை கழற்றப்படாத பாதரசத்தைப் பயன்படுத்துமபோத அறிவாற்றல்பாதிப்பு ஞாபகமறதி எனும் நினைவாற்றல் குறைபாடு உருவாகும்.
5. விடம் – விடம் என்ற சட்டை கழற்றப் பெறாத பாதரசத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த
இரசம் மரணத்தை உண்டுபண்ணிவிடுமல். 6.கிரி – கிரிசட்டை கழற்றாத ரசம் சாட்டியத்தை உண்டாக்கும்.
7. சபலம் – சபலச்சட்டை கழற்றப்படாத இரசம் உடலின் வீரியத்தில் குறைபாட்டை உண்டாக்கும். இந்த குறைபாடுகளை நீக்குவது உள்ளுக்கு உண்ணக்கூடிய இரச மருந்துகளுக்கான கட்டுப்பாடு என நினைக்க வேண்டாம். உடலில் மணியாக அணிந்து பயன்பெற நினைப்பவர்களுக்கும் இதுவே கட்டுப்பாடாகும்.
எட்டுவிதமான தோஷங்கள்
1.உண்பீனம் – தாங்க இயலாத வயிற்றுநோயினைத் தரக்கூடிய தோஷமாகும் இது.
2. கௌடில்யம் – தலைசம்பந்தமான நோய்கள், தலைக்குத்தல், ஒற்றைத்தலைவலி, மண்டையிடி போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும்.
3. அனவர்த்தம்- மூளை சம்பந்தமான நோய்கள், பைத்தியம், மயக்கம், வாய்ப்பிதற்றல் போன்றவற்றை இந்த தோஷம் உருவாக்கும்.
4.சண்டத்வம்-சன்னியினால் உண்டாகக்கூடிய உடற்கோளாறுகளை இந்த தோஷம் உண்டாக்கும்.
5.பங்குத்வம் பெருநோய் என்றழைக்கப்படும்
குஷ்டம் மற்றும் தீராத தாகம் போன்ற நோய்களை இந்த தோஷம் ஏற்படுத்தும்.
6. சங்கரம் – பயம் படபடப்பு இவைகளை உண்டாக்கி மனபாதிப்புகளை உண்டாக்குதல் மற்றும் உடலிலுள்ள ஏழுவித தாதுக்களையும் பலமிழக்கச் செய்தல், வீரியத்தின் தன்மையை
வீணாக்குதல் போன்றவற்றை இந்த தோஷம் செய்துவிடும். ஏழுவித தாதுக்குறைபாடுமல், வீரியத்தின் குறைபாடும் அவரது வாரிசு – வம்ச வளர்ச்சியை பாதிக்கும். அல்லது வாரிசு இல்லாத மலட்டுத்தன்மையை உருவாக்கிவிடும். இதைத்தான் பெரியோர்
மறைமுகமாக சிவன் சொத்து குலநாசம் (வாரிசு நாசம்) என்று கூறினார்கள். 7. சமலத்வம் – பலவித சுரங்கள், கிறுகிறுப்பு போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும்.8.சவிவிஷத்வம் – உடல் நடுக்கம், உடல் இளைத்தல், இரைப்பு நோய் போன்றவற்றை இந்த தோஷம் ஏற்படுத்தும்
ரசமணி சுத்தி முறை ஒரு எளிய அனுபவ முறை.
தேவையான ரசத்தை அது மூழ்கும் அளவிற்கு எருக்கம் பால் விட்டு மண் சட்டியில் போட்டு மூடி வைக்கவும். 3 நாட்கள் கழித்து துணியில் பிழிந்து பத்திரப்படுத்தவும். தேவைக்குஉபயோகப்படுத்தி கொள்ளலாம்
ஒரு பலம் ரசத்தை பீங்கான் கிண்ணியில் போட்டு 1 கிராம் வீரம் பொடித்து போட்டு உப்பு கிணற்று தண்ணீர் 200 மில்லி விட்டு 3 நிமிடம் விரலால் துழாவவும். ரசத்தில் உள்ள கழிவு வெளியாகும். பிறகு நீரை வடித்து ரசத்தை துணியில் பிழிந்து எடுக்கவும்.
ரசமணி செய்முறை
பாதரசம் – 100 கிராம்
நவச்சாரம் – 50 கிராம்
மயில் துத்தம் (துருசு) – 300 கிராம்
எலும்பிச்சம் பழம் -8
அலுமினிய பாத்திரம் -1
முதலில் மயில் துத்தத்தையும் நவாச்சாரத்தையும் நன்கு நுனுக்கி பவுடராக்கி கொள்ளவும். பின் அவற்றை அலுமினிய டம்ளரில் போடவும். பின் அதில் சுத்தி செய்த பாதரசத்தை விடவும். அதன் பிறகு 3 எலும்பிச்சம் பழங்களையும் கொட்டை நீக்கி சாறு எடுத்து அந்த டம்பளரில் விடவும். பின் டம்பளரை அப்படியே வெளியே மண் தரையில் வைக்கவும். சுமார் 10-15 நிமிடத்தில் டம்ளரில் உள்ள சரக்குகள் உறவாகி நுரை, நுரையாக பொங்கும். அது சமயம் டம்பளரை தொட்டால் மிகவும் சூடாக இருக்கும். எனவே சுமார் அரை மணி நேரம் கழித்து சூடு ஆறியபின் டம்பளரைஎடுத்து அதன் உள்ளே இருக்கும் சரக்கை ஒரு மண் பாத்திரத்தில் கரண்டியால் வழித்து போடவும். டம்பளரின் உள்ளே அழுக்காக ஒட்டிக்கொண்டு இருக்கும் கலவையை நான்கு சுரண்டி எடுத்து மண் பாத்திரத்தில் போடவும்.இப்போது கலவை உள்ள மண் சட்டியில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு அலசி, அலசி அழுக்கை எல்லாம் நீக்கிவிட்டு பார்த்தால் உள்ளே ரசம் இறுகியும் இறுகாமலும் வெண்ணெய் போல் இருக்கும். இதனை அப்படியே ஒரு துணியில் கீழே ஒரு பாத்திரம் வைத்து பிழிய வேண்டும். இறுகிய இரசம் துணியிலும், இறுகாத்த இரசம் பாத்திரத்திலும் வந்து விழும். இறுகிய இரசத்தை மேலும் தண்ணீர் விட்டு கழுவ வெள்ளி போன்று பிரகாசிக்கும். இதை எந்த வடிவம் வேண்டுமோ அப்படி செய்து கொள்ளலாம். மணியாக உருட்ட வேண்டும் என்றால் தேவையான அளவில் உருட்டி கொள்ளலாம். அந்த நிலையிலேயே ஒரு தீ குச்சியை அதில் சொறுகி (ஓட்டை போடுவதற்கு) மண் சட்டியில் அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு அதில் மணியை மூழ்கும்படி போட்டு வைத்து விடவும். தண்ணீரில் கிடக்கும் மணி நேரம் ஆக ஆக இறுக ஆரம்பிக்கும். எனவே அடிக்கடி சில நிமிடங்களுக்கு ஒரு முறை மணியில் சொருகப்பட்ட தீக்குச்சியை அசைத்து விட வேண்டும். இல்லாவிட்டால் தீக்குச்சியை எடுக்க முடியாது. ஓரளவு மணி இறுகியபின் தீக்குச்சியை எடுத்து விட வேண்டும். பிறகு அதில் நூல் கோர்த்து அணியலாம். சுமார் 3 முதல் 5 மணி நேரம் மணி தண்ணீரில் கிடந்தால் இறுகிவிடும். 24 மணி நேரம் கிடந்தால் நல்லது. மணியின் நிறம் பளபளப்பு போய் சிமென்ட் நிறத்தில் இருக்கும். அதனை சோப்பு போட்டு நான்கு கழுவி சுத்தப்படுத்தியபின் ஒரு சொட்டு இரசத்தில் இந்த மணியை போட்டு பிரட்ட அதை மணி இழுத்து கொள்ளும். பின் மணியை துடைத்தால் நல்ல பளபளப்பாக இருக்கும். இரசம் உருட்ட வராமல் திடமாக இருந்தால் சிறிது பாதரச துளிகளை சேர்க்க வேண்டும். இளகளாக இருந்தால் துணியில் பிழிந்து கொள்ள வேண்டும்.
சாரணை ஏற்றும் முறை
- ஒரு ஊமத்தங்காயை கொண்டு வந்து அதனை அரைத்து உருண்டை செய்து அதன் உள்ளே ரசமணியை வைத்து களிமண் தடவப்பட்ட துணியல் மேற்ப்படி உருண்டையை, பொதிந்து 3 எருவில்(வரட்டி) புடம் போடவும். அதாவது ஒன்றரை எருவை பொடித்து போட்டு அதன்மேல் மேற்ப்படி உருண்டையை வைத்து மீதமுள்ள ஒன்றரை எருவை பொடித்து போட்டு நெருப்பிட்டு விடவும். ஆறியபின் மணியை எடுத்து முன் சொன்னபடி ஊமத்தங்காயில் வைத்து முன் போல புடம் போடவும். இவ்வாறு 3 முறை செய்யவும். புடம் கூட கூட பவர் அதிகரிக்கும். ஆனால் குறைந்தது 3 புடம் போட வேண்டும். பின் மணியை எடுத்து சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். பளபளப்பு வேண்டுமெனில் பச்சை ரசத்தை உறிஞ்ச செய்து வைத்து கொள்ளலாம்.
- புடம் இடுவதற்கு பதிலாக சுருக்கு கொடுப்பது எளிது. இது தான் நல்ல முறையும் கூட. சில நேரங்களில் புடம் போடும் பொது நெருப்பு அதிகமாகிவிட்டால் ரசமணி சிவப்பாக பயனற்றதாகிவிடும். தேவையான மூலிகையை கொண்டு வந்து இடித்து சாறு சுமார் 300 மில்லி எடுத்து கொள்ளவும். ஒரு சிறிய மண் சட்டியை அடுப்பில் வைத்து அதில் 3 ஸ்பூன் அளவு சாறு விட்டு அதனுள் மணியை போட்டு அடுப்பில் தீ எரிக்கவும். சாறு வற்ற வற்ற மணியின் மீது கொஞ்சம் கொஞ்சமாக சாறை விட்டு வரவும். இவ்வாறு மேற்படி சாறு முழுவதும் காலியாகும் வரை விட்டு எடுத்து கொள்வது சுருக்கு கொடுத்தல் எனப்படும். (கீழாநெல்லி சுருக்கு கொடுக்க தெய்வ வசியம் செய்யும்)
உருவேற்றும் முறை
சாரணை ஏற்றிய ரசமணியை எதாவது இஷ்ட தெய்வத்தின் மந்திர உரு செய்து உருவேற்ற வேண்டும். வடக்கு முகமாக உட்கார்ந்து 1018 முதல் 1008 உரு தினம் 41 நாட்கள் (1) மண்டலம்)செய்யவேண்டும். ரசமணி செய்யும் காலங்களிலும் மந்திர உரு செய்யும் காலங்களிலும் பிரம்மச்சர்ய விரதத்துடன் இருந்து செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பலன் தரும்.பாதரசத்தில் இறை உருவங்கள் பாதரசத்தில் இறை உருவங்கள் குறிப்பாக ரச பிள்ளையார், ரசசிவலிங்கம் போன்ற உருவங்கள் செய்து நாம் வழிபட்டோம் என்றால் நாம் வணங்கும் பொது கூறப்படும் மந்திரங்களை அது கிரகித்து அதிக பவர் உள்ளதாக இருக்கும்.நமக்கு எந்த உருவம் எந்த சைசில் தேவையோ அந்த அளவில் லேத்தில் கொடுத்து டை செய்து வைத்து கொள்ளவேண்டும். இரசம் உருட்டும் பக்குவத்தில் இருக்கும் போது அதனை டையில் வைத்து அழுத்தி அப்படியே எடுத்து கொள்ளவேண்டும். டையில் எண்ணை தடவி கொண்டால் எடுக்க எளிதாக இருக்கும்
கிரக தோஷங்களுக்கான ரசமணி
ஜோதிட ரீதியாக உடல்நிலை, தனம், வாக்கு, சொத்து, நோய், கடன், தைர்யம், பூர்வ புண்ணியம், கூட்டுத்தொழில், திருமணம், பூர்வீக சொத்து, ஆன்மிகம் மேற்கண்டவற்றில் பிரச்சனை இருந்தால் ஜாதக ரீதியாக எந்த கிரகம் பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த கிரகத்திற்கு உண்டான மந்திரத்தை ரசமணிக்கு உருவேற்றி அணிந்து கொள்ளலாம். மந்திரங்களை 21 நாட்களுக்குள் உருவேற்றி முடிக்க வேண்டும்.கிரகங்களுக்கு உண்டான மந்திரங்கள்
சூரியன் (1000 தடவை
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சஹ சூர்யாய நமஹ:
சந்திரன் (2,000 தடவை):
ஓம் ஷ்ராம் ஷ்ரீம் ஷ்ரூம் சஹ சந்திரமஸே நமஹ:
செவ்வாய் (1000 தடவை)
ஓம் க்ராம் க்ரீம் க்ரூம் சஹ பௌமாய நமஹ:
புதன் 1000 தடவை)
ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரூம் சஹ புதாய் நமஹ:
குரு (11,000 தடவை.
சஹ குருவே
சுக்கிரன்(100 தடவை).
ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் சஹ சுக்ராய நமஹ:
சனி ( 1000 தடவை)
ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம்
சஹ சனிஸ்சராய நமஹ:
ராகு(1000 தடவை)
ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராகவே நமஹ;
கேது(1800 தடவை)
ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம்
சஹ கேதுவே நமஹ:
எடுத்துகாட்டாக குருவின் மந்திரத்தை ரசமணிக்கு சாரணை கொடுக்கின்றோம் என்றால் குருவிற்கு உரிய நாள், நட்சத்திரம், திதி, ஹோரை போன்ற நேரங்களை தேர்ந்தெடுத்து அந்த நேர்த்தில் பூஜை அறையில் மணியை வைத்து மந்திரம் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். 21 நாட்களுக்கு உள்ளாக குறிப்பிட்ட எண்ணிக்கையை கூறி முடித்து 21 நாட்களுக்கு பிறகு ரமணியை பயன்படுத்தலாம்.
முக்கிய குறிப்பு * பளபளப்பு உள்ள மணியை எக்காரணம் கொண்டும் வாயில் போடவோ, இடுப்பில். கழுத்தில் அணியவோ கூடாது. பச்சை ரசம் உள்ளதாலேயே மணி பளபளப்பாக உள்ளது.ரசம் நவபாஷாணத்தில் ஒன்று எனவே பச்சை ரசத்தை உறிஞ்சிய மணியை வாயில் போட்டால் அதில் உள்ள ரசபாசான நஞ்சால் உடல்நிலை பாதிக்கப்படும். கை,கால் கூட முடங்கிவிடக் கூடும், பளபளப்பு உள்ள மணியை பூஜை அறையில், வியாபார ஸ்தலத்தில் வைக்கலாம். பளபளப்பு இல்லாத மணியை கழுத்தில். இடுப்பில் அணிந்து கொள்ளலாம்