ரகசியம் என்றால் நாம் மறைத்து அதை மற்றவர்களுக்கு தெரியக் கூடாது ஒன்றாக வைத்திருப்பது ரகசியம் என்கிறோம்.ஏன் ரகசியத்தை நாம் பாதுகாக்க வேண்டும். என்றால் ரகசியம் என்றாலே வெளியே சொல்லக் கூடாது ஏன் என்றால் அதை நீங்கள் வெளிப்படையாக சொல்லும் போது அங்கு நமக்கு பிரச்சனைகளை விளைவிக்கிறது. சித்தர்கள் குருமார்கள் எல்லாம் சிலவற்றை மறைத்து வைத்துள்ளார்கள். அவர்கள் அதை வெளிப்படையாக சொல்லியிருக்கலாமே அங்குதான் அவர்கள் ரகசியத்தை பாதுகாக்கிறார்கள். ஏனென்றால் பூமியில் பலவிதமான விசித்திரமான மனிதர்கள் பூமியில் வசிக்கின்றன. அதனால் சிலவற்றை கூறினால் நமக்கு சில பிரச்சினைகள் வரும். எப்படி என்றால் பலவிதமான மனிதர்கள் அவர்கள் வாழும் சூழ்நிலையை கொண்டு வெவ்வேறு கண்ணோட்டத்தில் இருக்கிறது. இப்போது மனிதர்களிடம் இருக்கும் கெட்ட பழக்கம் என்னவென்றால் ஒருவரிடம் ஒன்று சொன்னால் போதும் அதை அப்படியே மற்றவரிடம் போய் சொல்லிவிடும் ஆர்வம் அதிகமாக உள்ளது. முதலில் இந்த பழக்கம் நம்மை நாளடைவில் நம்முடைய மதிப்பு குறைய ஆரம்பிக்கிறது ஏன் என்றால் சில விஷயங்கள் வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்னென்ன விஷயங்கள் என்று பார்ப்போம் தனது குடும்ப கஷ்டத்தையும் குடும்ப விஷயத்தையும் வெளியே சொல்ல கூடாது.
தனது நோயினையும் வெளியே சொல்லக்கூடாது

    தெய்வீக அனுபவத்தை வெளியே சொல்லக்கூடாது மனவேதனை மனக்கஷ்டங்களை வெளியே சொல்லக்கூடாது. தனது பலவீனத்தை வெளியே சொல்லக்கூடாது. வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களை வெளியே சொல்லக்கூடாது.
ஒருவனுக்கு செய்த உதவியையும் வெளியே சொல்லக்கூடாது ஒருவன் நமக்குச் செய்த துரோகத்தையும் வெளியே சொல்லக்கூடாது.
ஒருவனின் சொத்து மதிப்பினை வெளியே சொல்லக்கூடாது. இது போன்ற நம் வாழ்க்கையில் நடந்த சிலவற்றை சில சம்பவங்களை யாரிடமும் சொல்லாமல் இருப்பது நமக்கு மிகவும் நன்றி இதையெல்லாம் வெளியில் சொல்லாத அளவுக்கு நம் மனதை சரியாக பயன்படுத்த தெரிய வேண்டும் ஏன் இதை எல்லாம் வெளியே சொல்லக் கூடாது என்றால் நம்மை கீழ்நிலையான மனிதனாக காட்டும். எனவே நாம் எப்போதும் உயர்ந்த குணத்துடன் வாழ இதையெல்லாம் யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது அதேபோன்று ஒருவரைப்பற்றி நல்லதாக இருந்தால் பரவாயில்லை கீழ்த்தனமாக மற்றொருவரிடம் சொல்லக்கூடாது இப்படிப்பட்ட செயல் நமக்கு தனமாக காண்பிக்கும் இன்றைக்கும் அனைவரிடமும் இருக்கும் தீய குணம் அதில் இதுவும் ஒன்று ஒருவரை குறை சொல்வது ஒருவரை மட்டம் தட்டுவது பின்னால் இழிவாக பேசுவது இதையெல்லாம் தீய குணங்கள் ஆகும்.எனவே இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ரகசியம் என்றால் இதுதான் நமக்கு இந்த விஷயங்கள் எல்லாம் மனதிற்கு சம்பந்தப்பட்ட ஒன்னு மனதால் நாம் படுகின்ற இன்பமோ துன்பமோ எதுவாக இருந்தாலும் மற்றவர்களிடம் பகிரும் மனப்பான்மை நமக்கு அதிகம் உண்டு. அந்த பழக்கத்தை இன்றிலிருந்து விட்டுவிடுங்கள். பகிருங்கள் ஒருசிலவற்றை பகிருங்கள் ஏனென்றால் மனிதன் ரொம்ப மோசமானவன் அவனுக்குள் இருக்கும் அந்த மனதிற்கு எல்லையே கிடையாது. வாழ்க்கை என்னும் நாடகத்தில் மனிதன் காட்டும் நடிப்பு அவன் நல்லவனா கெட்டவனா புரிவதில்லை நமக்கு இது முடிவில்லாத கணக்கு.

     மனிதர்களிடம் பார்த்துப் பழகுங்கள் ஏனெனில் இதுதான் முறையான ஒரு பழக்கம் இது .ஏனெனில் மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நாம் வெளியே சொல்லும்போது அந்த மனம் உள்வாங்கும் விஷயமானது கஷ்டப்படுவது போல் பின் அந்த மனம் நம்மை கீழ்த்தனமாக எடைப்போட்டுவிடும். ஆகவே ரகசியம் என்பது இதுதான்.இந்த புரிதல் வந்தாலே போதும் ரகசியம் என்பதை நாம் எளிமையாக கையாள முடியும் வெளியில் சொன்னால் நம் மனம் ஆறுதல் அடையும் அதே அளவிற்கு மற்றவர்கள் நம்மை குறைவாக எடை போட்டு விடுவதும் உண்டு. நீங்கள் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்து மனிதர்கள் நம்மை எடை போட்டுவிடுவார்கள். அதாவது மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மட்டும் உதாரணம் என்னிடம் பணம் அதிகமாக உள்ளது என்றால் உயர்வான மதிப்பும் அதுவே வறுமை என்றால் குறைவான மதிப்பு வைப்பார்கள்.ஏழை பணக்காரன் யாராக இருந்தாலும் சரி. நம்முடைய குணாதிசத்திற்கு மயங்காத யாரும் கிடையாது.நல்ல குணாதிசயம் இருக்குமேயானால் நம்முடைய மதிப்பு எப்போதும் உயர்ந்ததாக இருக்கும். அதனால் ரகசியம் என்பது முக்கியம்… மகிழ்ச்சி…

Hipnotist Sivaganesh 

Shopping Cart