விந்து இதைக் குறித்து பலருக்கு தெரியும் ஆனால் அது எப்படி மறுபடியும் ஜெனிப்பிக்கிறது என்கிற விஷயம் நாம் அறியாமல் இருக்கிறோம் இதை தான் வள்ளலார் மிகவும் அழகாக சொல்கிறார் அவர் சொல்லும் அந்த அற்புத கதையை பார்ப்போம்முதலில் ஒரு குழந்தை எப்படி உருவாகிறது ஆணும் பெண்ணும் சேர்ந்து உடலுறவு கொண்டு ஆணின் விந்தும் பெண்ணின் சுரோனிதமும் இணைந்து ஒரு புதிய பொருள் கிடைக்கிறது. அதுவே அழகான குழந்தையாக பிறக்கிறது இதுதான் நமக்கு தெரியும். பிறகு அவை வளர்ந்து உலக வாழ்க்கையை அனுபவித்து பிறகு இழக்கிறது. இறந்தபின் நம் முன்னோர்கள் அல்லது சமூகம் கூறுவதுபோல் அந்த உயிர் மேலே சென்று அவை செய்த பாவ புண்ணியத்தை கொண்டு கடவுள் அதற்கு அடுத்த பிறவியை கொடுக்கிறார் என்று நமக்கு தெரிந்த ஒரு கதை இவ்வளவுதான். அதாவது அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்று நமக்கு தெரியும். பஞ்சபூத சக்திகளை கொண்டு நம் உடல் செயல்படுகிறது.
வள்ளல் பெருமான் இதை மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.அணுவானது எப்படி விந்துவாக மாறி குழந்தையாக பிறக்கிறது என்பதை.முதலில் மனித உடலில் உள்ள உயிரானது இறந்த பிறகு அணுவாக ஆகாயத்தில் சென்றடைகிறது அதாவது space ல் பிறகு வேறு ஒரு மனித உடம்பிலே இன்னொரு தாயினுடைய கர்ப்பப் பையிலேயே தந்தையினுடைய விந்துத்துளி வழியாக போய் சேருகின்ற வரை அவை எப்படிதான் ஆகாயத்தில் அணுவாக இருக்கின்றது. சரி பூமிக்கு எப்படி வருகிறது என்றால் மழை வரும்போது அந்த உயிரானது அணு அளவாக மழைத்துளியின் வழியாக பயிர்கள் அல்லது தானியங்களில் சேருகிறது. பிறகு நாம் உண்ணுகின்ற தானியம் பயிர்கள் உணவின் மூலம் நம் உடலுக்கு உள்ளே சென்று தந்தையினுடைய வயிற்றில் இரண்டு மாத காலம் இருக்கின்றது.அம்மாவின் உடைய வயிற்றில் பத்துமாதம் இருக்கின்றோம் ஆனால் அதற்கு முன்பே தந்தையின் வயிற்றில் இரண்டு மாத காலம் அந்த உயிரானது இருக்கின்றது. பிறகு இரண்டு மாத காலத்தில் அவை வளர்ச்சி அடைகிறது. ஆனால் இரண்டு மாத காலத்தில் அவை வளர்ச்சி அடையவில்லை என்றால் குழந்தை பிறக்காது.இதன் மூலம் தான் ஆண் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது என்று வள்ளல் பெருமான் தெளிவாக கூறுகின்றார். பிறகு வளர்ச்சி அடைந்த உயிரானது தந்தையின் சுற்றில் கலந்து பிறகு தாயின் உடைய வயிற்றில் உள்ள கர்ப்பப் பையிலேயே சென்று பின் கரு வளர்ச்சி அடைந்து பிறகு நாம் குழந்தையாக பிறக்கின்றோம். அணுவின் மூலம் நாம் இப்படி தான் பிறக்கின்றோம்.
உயிரின் உடைய தன்மை என்னவென்றால் ஆகாய கூறு ஆகாயம் என்றால் ஆன்மா காயம் என்றால் உடம்பு ஆன்மாவின் உடைய உடம்பு எனவே அனைவரும் பெறுகிறோம் அதனால்தான் அணுவானது செல்களாக மாறி பின் உறுப்புகளாக மாறி பின் உடம்பாக மாறுகிறது. இவை நமக்குத் தெரிந்தவை ஆனால் இந்த முறையானது அதற்கும் அப்பாற்பட்ட இயற்கையின் செயல் முறையாகும். இவை எப்படி மனிதனுக்குள்ளே செல்கிறதோ அதே போல்தான் விலங்குகளுக்கும் நடக்கும் அதுவே அணுவினுடைய செயல் முறை என்னவென்றால் அணுக்கள் ஆனது ஏதாவது ஒரு இடத்தில் சென்று செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கிறதாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த முறையை வள்ளல் பெருமான் மிக அழகாக கூறியுள்ளார். இதனால்தான் நாம் விந்துவினை உயிரணுக்கள் என்கிறோம் இந்த நுட்பமான விஷயத்தை மட்டும் நாம் இதில் தெரிந்துகொண்டோம்.நன்றி…மகிழ்ச்சி
Hipnotist Sivaganesh,