முருகனைக் குறித்த ரகசியம் அவரை இதுவரை அறியாத சித்தரகசியம்
முருகன் ஒரு அற்புதமான சக்திவாய்ந்த ஒரு மாமனிதன் இந்த உலகுக்கு முதல் சித்தனாக அவதரித்தவர் என்று பலர் அறிந்த ஒரு உண்மை ஆனால் என் வாழ்க்கையில் நான் அவரை என் குருவாக ஏற்றுக் கொண்டு அவரைக் குறித்து நான் அறிந்த பல புத்தகங்களை சித்தர்கள் உடைய பாடல்களை அறிந்த விஷயங்களை உங்களோடு கூட நான் இப்பொழுது பகிர்ந்து கொள்ள போகிறேன் என்னை மாற்றின என் முருகன் உங்களையும் அற்புதமான பயணத்திற்கு என்னுடன் கொண்டு வருவார் என்று நான் நம்புகிறேன்
இதில் பல சந்தேகங்கள் வரும் பல கேள்விகள் எழும் நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன? முருகன கடவுளா?
சிவனின் மகனா? மனிதனா? முப்பாட்டனா?
முருகன் இன்றும் வருவான் என்றால் அவன் எப்படி இருக்கிறான்? எப்படி வருவான? இவை அனைத்திற்கும் விடை காண்போம்
முருகனைப் பற்றி நாமறிந்த விதங்கள்

ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் முருகனைக் கடவுளாகக் காண்கிறார்கள் சிலர் அவதாரமாகப் பார்க்கிறார்கள். செயற்கரிய செயல்களைச் செய்தவர்களை நமது கலாச்சாரம் கடவுளாகவும் அவதாரமாகவும் சித்தரிக்கிறது இவை புராணங்களாகவும் ஆகம் நூல்களாகவும் இயற்றப்பட்டுள்ளன இதன்படி கந்தபுராணம் இயற்றப்பட்டு அது பதினெட்டு புராணங்களில் ஒன்றாக உள்ளது முருகனை அவதாரமாகச் சொல்கிறது ஐயா வைகுண்டர் செய்த அகிலத்திரட்டு ஆகம நூல பல முருக பக்தர்கள் இந்த நூல்களை ஆதாரமாகக் கொண்டு பல நூறு பக்தி இலக்கியங்களைத் தமிழில் இயற்றியுள்ளனா சித்தர்கள முருகனை முதல் தமிழ்ச் சித்தனாகக் காணகிறார்கள் தமிழ் இலக்கணமான தொலகாப்பியத்திற்கு முந்தையத் தமிழ் இலக்கணநூல் அகத்தியம் அதற்குமுன்பு அகத்தியா செய்த சித்தா இலக்கிய நூல்களில் முருகனிடம் தமிழும் சித்தாகல்வியும் கற்றதாகப் பல நூல்களிலும் சொல்லியுள்ளார் அகத்தியா முருகனைக் குருவாகக் கொண்டவா அகத்தியரும் பல சித்தர்களும் முருகனைக் குருவாகக்கொண்டு பல்லாயிரம் நூல்களை இயற்றியுள்ளனர் அதற்குமுன் முருகனும் பல சித்தர் இலக்கியங்களை இயற்றியுள்ளார் முருகன இயற்றிய பல நூலகளில் இயற்றிய பல இலட்சம் பாடல்களில் வெகு சில பாடலகளே நமக்குக் கிடைத்துள்ளன முருகனைப் பற்றி பிற சித்தர்களும குறிப்பாகச் சிவனுக்கும் முந்தைய தமிழச் சித்தனான காகபுசுண்டர் கூறிய நூல்களிலும் பல செய்திகள் இருக்கிறது
எனக்குத் தெரிந்தவரை முருகனின் முதல் அவதாரம் ஒரு சக்தி வாய்ந்த ஒரு அவதாரமாக இருந்தது. அந்த அவதாரம் என்னவென்றால் இந்த ஆதாரங்களைக் கொண்டு நாம் முருகனை கந்தபுராணத்தில் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்
1 முருகனின் அவதாரம்
சூரபத்மன் என்ற அசுரன் சிவதவம் செய்து பலவரங்களைப் பெற்றான ஐந்து தலை கடவுள்களால் மரணம் நேரக்கூடாது என்றும் பெண்ணிடம் பிறந்தவர்களால் மரணம் நேரக்கூடாது என்றும் வரம் பெற்றான அதன்பின் இந்திர லோகத்தை வென்றான தேவர்களைச் சிறைபிடித்து அடிமை ஆக்கினான் அப்பொழுது, இந்திரன் தப்பிச்சென்று சூரபத்மனை அழிக்கச் சிவதவம் செய்தான் சிவன இந்திரனுடைய தவத்திற்கு இறங்கி ஆறு தலைகளுடன் தோன்றினார் அவரின் ஒவ்வொரு தலையில் இருந்தும் ஒரு சுடர் தோன்றியது இந்த சுடர்களின் வீரியத்தால் சக்தியின் பாதங்களிலிருந்து வீரபாகு உட்பட ஒன்பது வீரர்கள் தோன்றினர் சக்தியால் சுடர்களின் வெப்பத்தையும் விரியத்தையும் தாங்கமுடியவில்லை எனவே, சிவன் ஆறுசுடர்களையும் வாயு பகவானிடம் ஒப்படைத்தார் வெப்பம் தாங்காத வாயு அக்கினி பகவானிடம் ஒப்படைத்தார் அக்கினி பகவானும் வெப்பம் தாங்காமல் கங்கையிடம் ஒப்படைத்தார் கங்கையும் வெப்பம் தாங்காமல் சரவணப் பொய்கையில் கொண்டுசோத்தார் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகள் தோன்றின விஷ்ணு ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்களிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார் குழந்தைகள் சிறுவர்களாயினா வளாந்த சிறுவர்களைக் கண்ட சகதி அறுவரையும் ஒன்றாக அணைத்தார் இதனால் ஓர் உடலும் ஆறுதலைகளும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட முருகன் அவதாரம் செய்தார் சரவணப் பொய்கையில் பிறந்ததால் சரவணன என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், கங்கை கொண்டு சென்றதால் காங்கேயன் என்றும் பெயர் பெற்றார் பெண்ணிடம் தோன்றாமல் ஆறுதலைகளைக் கொண்ட அவதாரமாக முருகன் உருவானார்
இந்த கதையை உலகமா அனைத்தும் புராணங்களில் இதிகாசங்களில் அறிந்த ஒரு ஒரு கதை தான் ஆனால் இந்த கதையை நிஜம் என்று ஏற்றுக்கொள்வது சாத்தியமா என்று தெரியவில்லை ஆனால் நிஜம் எது என்று அதைக் குறித்த பயணத்தில் செல்வோம் அடுத்தபடியில்
முருகன் சிறுவனாக இருந்தபோது, பார்வதியிடம் பரமசிவன் ‘ஓம்’ என்ற பிரணவத்திற்குப் பொருள் சொன்னார் இதைச் சிறுவன் முருகன் கேட்டுக்கொண்டு இருந்தார் ஒருநாள் பிரமமா சிவனைக் காணவந்தார் முருகன் அவரிடம் “நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார் “நான் பிரமமா படைத்தல் தொழிலைச் செய்கிறேன்” என்றார் முருகன் “அப்படி என்றால் ஓம் என்ற மந்திரத்திற்குப் பொருள் சொல்லுங்கள்” என்றார் பிரமமா பொருள் தெரியாமல் விழித்தார் முருகன் பிரம்மாவைச சிறையில் அடைத்துவிட்டு தானே படைத்தலைச் செய்தார் இதை அறிந்த சிவன் முருகனிடம், “உனக்கு ஓம் என்பதன் பொருள் தெரியுமா?” என்றார் முருகன சிவனுக்கு ஓம் என்பதன பொருளைச் சொன்னார் எனவே, முருகன் சிவனுக்குக் குரு ஆனார் ஆகையால சிவகுரு, பரமகுரு என்ற பெயா பெற்றார் மரபுப்படி குரு தகப்பனாவார் சீடன் மகனாவார் எனவே.
2 சூரசமகாரம் திருச்செந்தூர்
தேவர்கள் சிவனிடம் சென்று சூரபதமனிடம் இருந்து விடுதலை பெற்றுத்தருமாறு கதறினார்கள் முருகனைக் கொண்டு சூரனைக் கொல்லக கெஞ்சினார்கள் முருகன் குமரப்பருவத்தினை போரிட்டு அறியாதவன ஆகையால் சிவன் தயங்கினார் முருகன் சூரபதமனிடம் போரிடத் தான் தயார் என்று கூறினார் போர்செய்ய சிவன் அனுமதித்தார் இதை அறிந்த சகதி, தனது அனைத்து சக்திகளையும் திரட்டி அதை வேலாக்கி முருகனிடம் சகதிவேலைக் கொடுத்தார் மேலும் விரபாகு முதலான ஒன்பது வீர சகோதரர்களையும் முருகனுக்குத் துணையாகப் போருக்கு அனுப்பினார் அதனால் முருகனைச் சக்திவேல் என்றும் அழைத்தனர் தேவர்களின் படை திரட்டப்பட்டது படைத் தளபதியாக முருகன பொறுப்பு ஏற்று போருக்குப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்துசேர்ந்தார் மரபுப்படி தேவர்களை விடுவிக்கக் கோரி விரபாகுவைத் தூதனாக சூரபதமனிடம் தூது அனுப்பினார் சூரபதமன அதற்கு மறுத்ததுடன் போரிட்டு தேவர்களை மீட்டுக்கொள்ளுமாறு அறைகூவல் விடுத்தான் போர் தொடங்கியது. முதலில் கிரவுஞ்சமலை என்ற அரணைத் தூளாக்கினார் முருகன பதமாசுரன தம்பி சுஜமுகனையும் அவனது படைகளையும் அழித்தார் தொடர்ந்து போரிடவந்த சிங்கமுக அசுரனையும் கொன்றார் பதமாசுரன் பெரும்படையுடன் போருக்கு வந்தான் சூரன்மீது சக்திவேலைச் செலுத்தினார் சக்திவேல் தூனை இரண்டாகப் பிளந்தது சூரன் விழந்தான் ஆனால் முருகன் அவனைக் கொல்லவில்லை இரண்டு துண்டுகளில் ஒன்றை மயிலாக மாற்றித் தனது வாகனமாக்கினார் அதனால், ‘மயில் வாகனன் என்ற பெயர்பெற்றார் மற்றொரு துண்டைச் சேவலாக்கி தனது கொடியாக்கினார் இதனால் சேவல கொடியோன் என்றும் அழைப்பார்கள் பகைவருக்கும் இறங்கும் கருணை மிக்கோன் முருகன் சூரனை வென்றதால் வெற்றிவேல்’ என்றும், ‘ஜெயந்தி நாதர் என்றும் போற்றப்படுகிறார் தேவர்களின் படைக்குப் பொறுப்பேற்றதால் தேவசேனாதிபதி என்றும் பெயர் பெற்றார் குமரனாக இருந்து போர்செய்ததால் குமரவேல’ ஆனார் திருச்செந்தூரில் படைவீடு அமைத்து சூரசம்காரம் செய்ததால் ‘செந்தில்வேல் செந்தூரான எனவும் அழைக்கப்பட்டார்
தற்காலத்தில் நடந்த நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாகச் சமாப்பித்த வைரவேல் மற்றும் பல செல்வங்களைக் கோவில் அறங்காவலா திருடிவிட்டார் இதைக் கண்டுபிடித்த கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி, அவர் மீது புகார் செய்தார் இதனால் ஆத்திரம் அடைந்த அறங்காவலர் நிர்வாக அதிகாரியைக் கொலை செய்தார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பத்திரிகைகள் பரபரப்புச் செய்தியாக வெளியிட்டன் அறங்காவலர் தனது காரில் நீதிமன்றத்தில் இருந்து வந்துகொண்டிருந்தார் அச்சமயம் மயில்வாகனன என்ற பெயர்கொண்ட லாரி, காரில் மோதியது விபத்தில் அறங்காவலர் இறந்து போனார் இச்சம்பவம் அறங்காவலரை முருகனே தண்டித்தார் என அதிசயமாகப் பேசப்பட்டது.
திருமணம் சூரபதமனால் சிறைவைக்கப்பட்ட தேவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் இந்திரன் மீண்டும் பதவிபெற்றார் அதன் நன்றிக்கடனாக சக்தி ஆட்சிபுரியும் சிவனின் வீடான மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் இந்திரன, தனது மகளாகிய தெய்வயானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுத்தார் எனவே தெய்வயானை மணாளன் பரங்குன்றன என்ற பெயர்கள் கிடைத்தன ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திருப்பரங்குன்றம் விளங்குகிறது.