What Is Vasi Yogam Powerful Gayatri Mantra ?

Gayatri Mantra is Valai Meditation Gayatri is a mantra prayed to many deities and among them the foremost and most well known. Surya Gayatri is the highest form of Brahma Rishi Siddhas blessed by Vishwamitra but the word Surya is nowhere in this mantra nor is the word Gayatri anywhere let’s take a deeper look at this mantra

Om pur puvassuvu 

Dutt Savidur Varenyam

Barko Devasya Thimahi Deo Yona Prasodayat”

Etymology :- The Tamil meaning of this Sanskrit hymn is ‘Om’ as Pranava, and Phu. Let us be the best effulgence of the omnipresent Lord, who inspires our intellect, who is the Viyakriti (Phuva, Suva and Akara, Ugara Makara, Shaktivati).

Commentary :- The dot of ‘O’ Lord became the pranava Om, this pranava expanded into the powers of Akaram, Ugaram Maharam. Expanded into this universe. This Panchabhuta divine power makes our intellect work. This divine power exists in this universe in many forms. Let us meditate on the Lord in the form of light, the best of them. There is neither Gayatri nor Surya in this interpretation Vedantic interpretation: How Gayatri came about

This mantra says that the Lord was in the form of Shakti “Bhu Puva Suhu” before becoming the universe and that is Vyakriti that form of Shakti was embodied by the Vedantists as Adi Shakti, God, and this Adi Shakti gave power to Shiva, Vishnu and Brahma. So they do the work of destroying, preserving and creating and thus the universe functions. This Adisakti- is known as Savitu or Savita-Kayatri. This Gayatri is cosmically expanded and luminous.

Lord Gayatri is Shakti, the Lord’s best form in many forms. Let’s Meditate on the Lord in Light Form This mantra tells us to meditate on God in light form, considering that it is the sun that gives us bright light, and this is called Surya Gayathri. Those who do not understand its meaning take Gayatri to mean sun meditation.

The manner in which the tails of the Siddhas came in this mantra: In the book ‘Bogar Jananasagaram’, it is said that Lord Valayasu is Paranjothi in the universe.

In this mantra the tail of the Siddhas came:

Bhogar says in ‘Jananasagaram’ that the Lord is the gate, Paranjothi in the universe.

உரைக்கிறேன் ஆதி சித்தன் ஒருவனப்பா

ஒருவனுமே வல்லவட பரமப்பிரம்மம்”

             போகர் ஜனனசாகரம், பாடல் 3

“சிருட்டித்த கலையதுதா னெத்தனையோ சொல்லும்

திரண்டதொரு விபரமது தெரியச் சொல்லும் 

மட்டித்த கலை யதுதான் ஐமூன்றப்பா 

அதிகார மோகமதால் சிருஷ்டித்தேனே.           

                           போகர் ஜனனசாகரம், பாடல் 7

வட்டித்த கலையதுதான் வாலையாகி

வந்ததடா முகம்ஐந்து கையும் பத்தாய் 

எட்டித்த உனக்கும் எனக்கும் மூலமப்பா

ஏகபரஞ் சோதியடா எண்ணிக் கொள்ளே

 போகர் ஜனனசாகரம் பாடல் 7

I cant translation English’s siddhar songs

 

Commentary :- In the beginning there is a God named Adi Siddha (Oh – Om there is one He is Paribrahamm He created Shakti as the Pranava of Om Shakti – Savidu Gayatri – Tail) Its Shakti is threefold (Bhu Bhu Suva) The size of art is this Shakti is the art of tail This tail is pancha of five faces. Lord Paranjyothi, who is the source of me and you, is this tail, which is the Buddha and the Dasa Vayus of ten arms.

Adhisidtha named Parribrammam. In his Shakti form, the tail is Paranjyothi. This evening. The Lord is in the cosmic space in the form of light called Valai as the light of Panchabhutas, which means that the first power of God in the creation of the universe is Savidu Gayathri = Valai = light.

Hence the Gayatri Mantra. It is a doctrine of the Siddhas that tells us to meditate on the Lord in the form of light called Valai Dhyana, which was told by Vishwamitra Siddha that this cosmic tail is the light within man. It is the Lord, and this is called ‘Vailipena’ and ‘Manonmanitai’ and the Siddhas call it ‘puranam’ as a hidden object. Siddhas worship or meditate on the Lord who is in the form of light within us In Vasi Yoga we meditate and see the Lord who is in the form of light called Valai within us This is also a form of salvation.

 

காயத்திரி மந்திரம்

காயத்திரி மந்திரம் என்பது வாலை தியானம் ஆகும் காயத்திரி என்பது பல தேவதைகளுக்கும் ஜெபிக்கப்படும் மந்திரங்களாகும் இவற்றுள் முதன்மையானதும் அனைவராலும் அறியப்பட்டதும் பிரம்ம ரிஷி சித்தர்களின் மிக உயரநிலை, விசுவாமித்திரர் அருளிய சூரிய காயத்திரியாகும் ஆனால் இந்த மந்திரத்தில் சூரியன் என்ற வார்த்தை எங்கும் இல்லை காயத்திரி என்ற வார்த்தையும் எங்கும் இல்லை இந்த மந்திரத்தை ஆழமாகப்பார்ப்போம்

“ஓம் பூர் புவஸ்ஸுவ

த்த எஸவிதுர் வரேண்யம்

பரகோ தேவஸ்ய தீமஹி

தியோ யோந பரசோதயாத்” சொற்பொருள்:- இந்த சம்ஸ்கிருதச் சுலோகத்திற்குத் தமிழ்ப் பொருள் ஓம் என்ற பிரணவமாகவும், பூ புவ ஸுவ என்ற வியகிருதியாகவும் அகார உகார மகார சக்திவடிவாகவும்) இருக்கின்ற யார் நம்முடைய புத்தியைத் தூண்டுகிறாரோ, அனைத்துமாய் இருப்பவரான அந்த இறைவனின் சிறந்த ஒளிவடிவைத்தியானிப்போம்

விளக்கவுரை:-‘ஓ’ என்ற புள்ளியாகிய இறைவன் ‘ஓம்’ என்ற பிரணவமாக பெரு வெடிப்பானான் இந்த பிரணவம் அகாரம் உகாரம், மகாரம் என்ற சக்திகளாக விரிவானது. இந்த ஓங்காரம் விரிவடைந்து அகார உகார, மகார, நாத, விந்து சக்தியானது இது பஞ்ச வித்துகளாக பஞ்ச பூதங்களாக விரிவாயின பஞ்சபூதங்கள் நால்வகை யோனி எழுவகைப் பிறப்பாக, இப்பிரபஞ்சமாக விரிவாயின இந்த பஞ்சபூத இறை சகதி நமது புத்தியைச் செயல்படவைக்கிறது இந்த இறை சக்தி பல வடிவங்களாக இந்த

பிரபஞ்சத்தில் உள்ளது அவற்றுள் மிகச்சிறந்த படிவான ஒளிவடிவத்தில் இறைவனைத்

தியானிப்போம் இந்த விளக்கத்தில் காயத்திரியும் இல்லை. சூரியனும் இல்லை.

வேதாந்த விளக்கம்: காயத்திரி வந்தவிதம்.

இந்தமந்திரம் இறைவன் பிரபஞ்சமாக உருவெடுப்பதற்கு முன் ‘பூ புவ ஸுவ” என்ற சக்தி வடிவங்களாக இருந்தான் என்கிறது அதுவே வியாகிருதி அந்த சக்தி வடிவினை ஆதி சக்தியாக. தெய்வமாக வேதாந்திகள் உருவகப்படுத்தினர் இந்த ஆதி சக்தி சிவன், விஷ்ணு பிரம்மா ஆகியவர்களுக்குச் சக்தியை வழங்கியது அதனால் இவர்கள் அழித்தல் காத்தல் படைத்தல் ஆகிய தொழில்களைச் செய்கின்றனர் இதனால் பிரபஞ்சம் இயங்குகிறது இந்த ஆதிசக்தி சவிது அல்லது சவிதா காயத்திரி என்று பெயர்பெற்றது. இந்த காயத்திரி பிரபஞ்சமாக விரிந்தது ஒளிவடிவானது

இறைவன் காயத்திரி என்ற சக்தியாக, இறைவனின் பல வடிவங்களில் சிறந்த ஒளிவடிவில் இருக்கிறான் இறைவனை ஒளிவடிவில் தியானிப்போம் இறைவனை ஒளிவடிவில் தியானிக்கும்படி இந்த மந்திரம் சொல்கிறது நமக்குப் பிரகாசமான ஒளியைத் தருவது சூரியன் என்று கருதி இதைச் சூரிய காயத்திரி என்று அழைக்கிறார்கள் இதன் பொருள் புரியாதவர்கள் காயத்திரி என்பது சூரிய தியானம் என்று பொருள் கொள்கிறார்கள்

இம்மந்திரத்தில் சித்தர்களின் வாலை வந்தவிதம்

போகர் ‘ஜனனசாகரம்’ என்ற நூலில், பிரபஞ்சத்தில் இறைவன் வாலையாக பரஞ்சோதியாக இருப்பதாகச் சொல்கிறார்

உரைக்கிறேன் ஆதி சித்தன் ஒருவனப்பா

ஒருவனுமே வல்லவட பரமப்பிரம்மம்”

             போகர் ஜனனசாகரம், பாடல் 3

“சிருட்டித்த கலையதுதா னெத்தனையோ சொல்லும்

திரண்டதொரு விபரமது தெரியச் சொல்லும் 

மட்டித்த கலை யதுதான் ஐமூன்றப்பா 

அதிகார மோகமதால் சிருஷ்டித்தேனே.           

                           போகர் ஜனனசாகரம், பாடல் 7

வட்டித்த கலையதுதான் வாலையாகி

வந்ததடா முகம்ஐந்து கையும் பத்தாய் 

எட்டித்த உனக்கும் எனக்கும் மூலமப்பா

ஏகபரஞ் சோதியடா எண்ணிக் கொள்ளே

 போகர் ஜனனசாகரம் பாடல் 7

விளக்கவுரை ஆதியில் ஆதி சித்தன் என்ற இறைவன் (ஓ-ஓம் ஒருவன் உண்டு அவன் பரப்பிரம்மம் அவன் ஓம் என்ற பிரணவமாகச் சக்தியைப் படைத்தான் சக்தி – சவிது – காயத்திரி – வாலை) அதன் சக்தி மூவைந்து (பூ புவஸுவ) கலை அளவு இந்த சக்தி என்ற கலைதான் வாலை இந்த வாலை ஐந்து முகங்கள் என்ற பஞ்ச பூதங்களாகவும் பத்து கைகள் என்ற தச வாயுக்களாகவும் இருக்கிறது இந்த வாலைதான் எனக்கும் உனக்கும் மூலமான பரஞ்ஜோதி ஆகிய இறைவன்,

பரப்பிரம்மம் என்ற ஆதிசித்தன் அவன் சக்திவடிவில் வாலை என்ற ஒளியாக. பரஞ்ஜோதியாக உள்ளான் இந்த வாலை பஞ்சபூதங்களாக இப்பிரபஞ்சமாக உருவானது ஆக இறைவன் வாலை என்ற ஒளிவடிவாகப் பிரபஞ்சவெளியில் இருக்கிறான். அதாவது பிரபஞ்சம் உருவாவதில் இறைவனின் முதல் நிலை சக்தி சவிது காயத்திரி வாலை ஒளி இந்த இறைவனை மௌன யோகத்தில் உயர்நிலை வாசி யோகம்) பரவெளியில் காணலாம் இது பிரபஞ்ச வாலை. இதைச் சித்தர்கள் உண்மணித்தாய் என்பார்கள் பரவெளியில் இறைவனை ஒளிவடிவில் காண்பது ஒருவகை முக்தி ஆகும்.

எனவே காயத்திரி மந்திரம் இறைவனை வாலைத் தியானம் என்ற ஒளிவடிவில் தியானம் செய்யச் சொல்கிறது இது சித்தர்களின் கோட்பாடு விசுவாமித்திர சித்தனால் சொல்லப்பட்டது இந்தப் பிரபஞ்ச வாலை மனிதனுக்கு உள்ளே ஒளியாக, இறைவனாக உள்ளது இதை வாலைப்பெண் என்றும் மனோன்மணித்தாய்’ என்றும் சித்தர்கள் மறைபொருளாகச் சொல்லுவார்கள். இதைப் பூரணம் என்றும் அழைப்பார்கள் சித்தர்கள் வணங்குவது அல்லது தியானிப்பது நம்முள் ஒளிவடிவில் இருக்கும் இறைவன் வாசி யோகத்தில் நம்முள் வாலை என்ற ஒளிவடிவில் இருக்கும் இறைவனைத் தியானிப்போம் காண்போம் இதுவும் முக்தியில் ஒருவகை ஆகும்.

 

vinodhan 

#vasiyogam #vinodhan  #vasi #Gayathri #mantra 

Shopping Cart