இந்தியாவில் மெஸ்மெரிஸம், ஹிப்னிஸம் MESMERISM AND HYPNOTISM IN INDIA
மெஸ்மரிசம் என்ற கலையை உலகம் முழுவதும் பரப்பியது மிஸ்மர் என்று யாவருக்கும் தெரியும் ஆனால் அதை இந்தியாவுக்குள் கொண்டுவந்து ஊடுருவ செய்தது யார் என்று யாருக்கும் தெரியாத ஒரு புதிர் ஆனால் இந்தக் கலை இந்தியாவுக்கு மிக மிக பழமையான கலை ஒன்றே ஆயக்கலை 64 கலைகள் இதுவும் ஒரு கலைதான் அந்தக் கலையை இந்தியாவிற்குள் ஒரு வெளிநாட்டவர் கொண்டு வந்தாரா என்ற ஒரு கேள்வி இருக்கிறது ஆனால் இங்கே வந்த பிறகு தான் தெரிந்தது ஆதிகாலத்திலிருந்து இந்த கலை இங்கு இருந்துதான் உலகத்தில் எல்லா இடத்திலும் பரவியது என்ற உண்மையை பலர் புரிந்து கொண்டனர் இந்த கலையை கற்றுக்கொள்ள நோக்கத்தோடு பலர் இந்தியாவுக்கு வந்து சித்தர்களை மகான்களை சந்தித்து இருக்கின்றனர் அதை பார்த்தவர்கள் நம் நாட்டிலேயே தங்கி தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர் அதாவது எதுவும் ஆன்மீக வாழ்க்கை தான் ஹிப்னாடிஸம் மெஸ்மரிசம் என்று சொல்லக்கூடிய இந்தக் கலை முழுக்க முழுக்க ஒரு அற்புதமான ஆன்மீகம் வாருங்கள் பார்ப்போம் முதன்முதலில்இந்தியாவில் கடந்த 9-ம் நூற்றாண்டிலேயே மெஸ்மெரிஸ ஹிப்னடிஸக் கலைகள் கையாளப்படத் தொடங்கிவிட்டன. இக்கலைகளைப் பரப்புவதிலும், பயன்படுத்துவதிலும் முன்னிலையில் நின்றவர்கள் வடஇந்தியர் ஆவர்.
இவர்களில் வங்காள நாட்டை சார்ந்தவர்கள் இக்கலைகளுக்காக அரும்பாடு பட்டிருக்கின்றனர், கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலைபெற்று கல்கத்தா வந்தடைந்த, டாக்டர் ஜேம்ஸ் எர்ஸ்டெய்லின் (Dr. James Ersdail) அரிய தொண்டு மிகவும போற்றுதற்குரியது. இவர் ஹூக்ளி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றியபோது விரைவாதத்துக்காக (Orchits) அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு நோயாளி கொண்டு வரப்பட்டார். அந்நோயாளி தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி. டாக்டர் அவரை ஹிப்னடைஸ் செய்து எவ்வித நோவுமின்றி நல்ல வெற்றியான முறையில் அந்த ஆபரேசனை செய்து முடித்தார். இவரது இம்முதல் வெற்றி மேலும் மேலும் ஹிப்னடிஸம் மூலம் அறுவை சிகிச்சைகளைக் கையாள இவரைத் தூண்டியது. சுமார் 75நோயாளிகளை ஹிப்னடிசம் மூலம் ஆபரேஷன் செய்து வெற்றி கண்டு, அவ்விவரங்களை மெடிக்கல் போர்டுக்கு தெளிவாக எழுதி அனுப்பி வைத்தார்.
மெடிக்கல் போர்டிலிருந்து இவரது குறிப்புகள் கிடைத்ததாக கூட இவருக்கு பதில் அனுப்பப்படவில்லை. இருந்தும் இவர் மனம் தளரவில்லை. பின் தமது முடிவுகளை வங்காள அரசுக்கு எழுதி அனுப்பினார். அப்போது வங்காள கவர்னராக இருந்த ஹெர்பர்ட்மேடாக் மகிழ்ச்சியடைந்து, இவருக்கு கல்கத்தாவிலேயே ஒரு மருத்துவமனையை அளித்து அங்கு அவரை தீவிரமாக செயல்படச் செய்தார். இந்த ஆஸ்பத்திரியிலேயே இவர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று 300 பிரமுகர்கள் கையெழுத்திட்டு ஒரு வேண்டுதலை அரசுக்கு அனுப்பினார்கள் என்றால் இவரின் தொண்டு மக்களை எவ்விதம் சிறப்பாக கவர்ந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற போது வங்காள மாகாணம், மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் என இரு பிரிவுகளாக்கப்பட்டன.
கிழக்கு வங்காள மாநிலத்தில் இக்கலைகளில் வல்லுனராக விளங்கும் பலர் இங்கும் அங்கும் வாழ்ந்து வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் இக்கலைகளைப் பரப்புவதில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர்களில் புரோபஸர் M.S.ராவ் (Prof.M.S. Rao) மிகவும் குறிப்பிடத் தக்கவராவார். இவருக்கு இந்தியா, சிலோன். இந்தோனேஷியா, ஐரோப்பிய நாடுகள் முதலியவற்றில் பல மாணவர்கள் இருக்கிறார்கள்.
இந்த அற்புதமான கலையை நம் நாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் சிலர் ஆனால் இந்த கலை இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் மக்கள் அறியாமையில் இதை தெரிந்து கொள்ளாமல் பல குருமார்கள் என்று சொல்லக்கூடிய பலரிடம் சென்று தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள் இந்த மனோவசிய கலையை கற்றுக் கொண்டால் போதும் நம்முடைய மனதை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம் அதாவது முக்தி அடைய முடியும் ஏனென்றால் இந்தக் கலையில் மனதை குறித்ததான அதிக விழிப்புணர்வு உணர்வு நிலை இருக்கிறது எதிர்காலத்தில் இந்த கலைக்கு அற்புத வரவேற்பு இருக்கிறது இந்த உலகமே நம்பும் ஒரு நாள் வரும் நிச்சயமாக வரும் காரணம் இந்த உலகில் நடக்கும் அனைத்து சம்பிரதாயம் போன்ற எல்லா விஷயங்களிலும் ஹிப்னாடிஸம் மெஸ்மரிசம் கலந்து இருக்கிறது எல்லா மதங்களிலும் ஹிப்னாடிஸம் மெஸ்மரிசம் கலந்திருக்கிறது எல்லா கடவுள்களும் ஹிப்னாடிஸம் மெஸ்மரிசம் கலந்து இருக்கிறது இதை தெரிந்து கொள்ளாமல் மக்கள் தங்கள் அறிவையும் தங்களுக்கு இருக்கக் கூடிய இயற்கையாக வரக்கூடிய ஆன்ம அனுபவத்தையும் ஒரு சில தாங்கள் குருமார்கள் என்று சொல்லக்கூடிய அவர்களிடம் சென்று சீரழிந்து போகிறார்கள் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் அடுத்த பதிவில் ஒரு மனிதரிடம் செல்லும்பொழுது நம்மை எப்படி ஹிப்னாடிசம் ஒரு மனிதன் செய்கிறான் என்று பார்ப்போம் நன்றி
Vinodhan, 7010054619