தமிழ்நாட்டில் மெஸ்மெரிஸம் ஹிப்னடிஸம் எப்படி பரவியது தெரியுமா?இதுவரை யாரும் சொல்லாத தகவல்
Mesmerism and Hypnotism in Tamilnadu
இந்த அற்புதமான கலை உலகம் முழுவதும் உள்ளன ஆனால் தெளிவு இல்லை நம் தமிழ்நாட்டில் எப்படி இந்த வளர்ந்து இது வரை இந்த கலையை மேல் நாட்டு கலை என்று தான் நீனைத்ததோம் இது இந்தியா ஒரே நாடு என்ற நிலையில் வட இந்தியாவில் பரவி வந்த இக்கலைகளைத் தென்னாட்டிலுள்ளவர்களில் சிலர் கற்றனர் தென்னாட்டில் ஒரு சில இடங்களில் இக்கலைகளைப் பரப்பும் நோக்குடன் அங்குமிங்கும் சபைகள் அமைக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வருகிறது. திருநெல்வேலியில் ‘தி லேடண்ட் லைட் கல்ச்சர்” (The Latent Light Culture) என்னும் பெயருடன் இதே நோக்கில் ஒரு அமைப்பு ஏற்பட்டு இருபதாம்
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் செயல்பட்டு வந்திருக்கிறது. இச்சபையின் மூலம் இக்கலைகள் போதிக்கப்பட்டு வந்தன. தமிழ் நாட்டில் வாழ்ந்த சில ஆன்மீகப் பெரியோர்கள் இக்கலைகளிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். இவர்களில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, வழுத்தூரில் வாழ்ந்த ஹஸரத் முகம்மது தாஹிர் பாவா (ரழி)அவர்களின் அரிய தொண்டு எல்லோராலும் நினைவுகூறத்தக்கது.
அவர்கள் மெஸ்மெரிஸம், ஹிப்னடிஸம் முதலிய கலைகளில் பயிற்சி பெறுவது ஆன்மீக வழியில் செல்வோருக்கு பேருபகாராமாக இருக்கும் என்ற கருத்துடையவர்களாக இருந்ததோடு அதை ஆதரித்து பல இடங்களில் சொற் பெருக்காற்றியும் வந்தார்கள். இதனால், அக்காலத்தில் வாழ்ந்த பல இஸ்லாமிய குருமார்களுடையவும், மௌலவிகளுடையவும் கடுமையான எதிர்ப்புகளுக்குள்ளாக நேர்ந்தது. மெஸ்மெரிஸம், ஹிப்னடிஸம், பிறர்மனம் அறிதல் (Telepathy) தொலைவிலுள்ளவற்றை தெரிதல் (Clairvoyance) முதலிய கலைகளிலும், ஆன்மீக உயர்விலும் சிறப்புற்று விளங்கிய முகமது தாஹிர் பாவா (ரழி) அவர்களின் அபார சக்திகளுக்கு முன் அவ்வெதிர்ப்புகள் தோற்றுப்போய்விட்டன. இக்கலைகளின் சிறப்பையும், மக்கள் இதனைப்பயிற்சியுற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி தமிழில் பல நூல்களை எழுதி வெளியிட்டார்கள் . இவர்கள் எழுதிய நூல்களுள் மெஸ்மெரிஸம்I, மெஸ்மெரிஸம்II, ‘சுயப்பிரகாசம்’ போன்றுநூல்கள் அக்காலத் தமிழ் மக்களிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தன. இவர்களால் எழுதப்பட்ட நூல்கள் தற்சமயம் கிடைக்கப்பெறவில்லை.
தற்காலத்தில் நமது இந்திய நாட்டில் மெஸ்மெரிஸ ஹிப்னடிஸ் கலைகள் இங்கும் அங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் பிற நாட்டினர் இக்கலைகளின் பயன்களை நுகர்ந்து வருவதுபோல் நம் தாய்நாட்டினர் நுகரவில்லை. பழமை முறைகளைப் பெரிதும் பாராட்டிப் பின்பற்றுவதில் பேரார்வம் கொண்டுள்ளவர் நம் நாட்டில்நிறைந்திருக்கின்றனர். இவர்களிடம் புதுமையை கைகொள்ளுவதற்கு தயங்கும் சுபாவம் மிகுதமாக அமைந்திருக்கிறது. பேத்தியார் அரைத்த அம்மியையே, அரைப்பதில் இவர்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சி அளப்பரிது. துணிந்து இக்கலைகளைக் கற்றவர்களில் பலர் தம்மோடு இக்கலைகளின் பலனைப்பெறுவதை நிறுத்திக் கொள்கின்றனர். பிறருக்காக உரியகலைகளைப் பயன்படுத்துவது இல்லை. பிறர் தம்மைப் பற்றித் தவறாக எண்ணுவாரோ அல்லது தம்மைக் கண்டு அடுத்தவர்கள் பயந்து ஒதுங்குவாரோ என்ற எண்ணங்கொண்டவர்களின் எண்ணிக்கை இவர்களில் அதிகம். ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற விரிந்த மனப்பான்மை இவர்களிடத்தில் கிடையாது. இக்கலைகளைக் கற்று துணிந்து செயலாற்ற முற்படுபவர்களில் பலர் தாம் பயன்படுத்தும் முறைகள் மெஸ்மெரிஸம், ஹிப்னடிஸம் முதலியமுறைகள் என்று சொல்லுவதில்லை. மாறாக, இது மலையாள மாந்திரீகம், காளி வசியம், கூளி வசியம், மந்திர ஜாலம் என்பன போன்ற பெயர்களைக் கூறி மக்களைப் பயங்காட்டி, இல்லாததையும், பொல்லாததையும் கூறி வயிறு வளர்த்து வருகின்றனர். இதனால், பொதுமக்களிடத்திலே மெஸ்மெரிஸ, ஹிப்னடிஸ கலைகள் மனிதனுக்கு தீங்கிழைக்கக் கூடியவைகள், இக்கலைகளை பயின்றவர்கள் ‘சூனியம் செய்பவர்கள், மற்றவர்களுக்கு தீங்கிழைக்கக் கூடியர்கள். இக்கலைகளை பயிலுவோருக்கு வமிச விருத்தி இருக்காது. இவர்கள் தரித்திரத்திலேயே வாழ்வார்கள்’ என்ற தவறான எண்ணங்கள் நம் நாட்டிலே வேரூன்றி இருக்கின்றன. இக்கலைகளைப்பற்றி தமிழிலும், இதரமொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள பல நூல்கள் இக்கலைகளின் உண்மைத் தத்துவங்களைச் சரியாக விளக்கக் கூடியனவாகவோ அன்றி இக்கலைகளைத் பயில்வோருக்கு நல்ல முறையில் துணைபுரியக் கூடியனவாகவோ அமையவில்லை. இதுதான் இன்றைய தமிழ்நாட்டில் மெஸ்மெரிஸ, ஹிப்னடிஸகலைகள் பெற்றிருக்கக் கூடியவர்கள் சிலர் மட்டுமே அதில் அவர்கள் செய்து காட்டுகிறார்கள் ஆனால் பிறருக்கு இதை சொல்லி தர முடியவில்லை காரணம் அவர்களுக்கு அது வரவில்லை இந்த கலையின் நுன் முலம் என்னவென்றால் பயிற்சி கொடுக்கவும் தான் அதை செய்து காட்டாவும் தெரிய வேண்டும் இது பலருக்கு தெரியாது நம் தமிழ்நாட்டில் இந்த கலையை வாழ்வியல் கலையாக மாற்றி நான் பலருக்கு பயற்சி அளிக்கிறேன் வெறும் வித்தை காண்பிக்கிறது மெஸ்மெரிஸம் ஹிப்னடிஸம் அல்ல அதை நம் சொந்த வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் அப்போது தான் வாழ்வில் உயர முடியும்
குருநாதர் முகமது தாஹிர் பாவா (ரழி) அவர்கள் தலைமை சீடர் முலமாக கற்றேன் இந்த கலையை இதை கலை எல்லோருக்கும் புரிந்து கொள்வதில் சற்று கடினம் காரணம் புத்தகம் படித்தால் வரவே வராது அது அறிவு மட்டுமே செயல் படுத்த முடியாது இதை கற்று கொள்ள ஆசை இருக்கும் உன் மனதை புரிந்தவரால் மட்டுமே இந்த மெஸ்மெரிஸம் ஹிப்னடிஸம் கற்க்க முடியும் ஒவ்வொரு மனதிற்கு வேறு முறைகள் உள்ளன இந்த கலையை கற்று கொள்ள பவன் ஜகதாலன்…….
இந்த கலையை கற்க தமிழ் நாட்டில் உள்ள மெஸ்மெரிஸ்ட் ஹிப்னடிஸ்ட் Contact 7010054619 Online Class/Direct Class…….
Vinodhan,