செம்பைத் தங்கமாக்க கொங்கண சித்தர் நான்கு இரசமணிகளை கண்டறிந்தார். அவை சித்த இரசமணி, நவநீத இரசமணி, தொடுப்பு இரச மணி, சிராவண இரசமணி ஆகும்.இந்த நான்கு இரசமணிகளில் ஏதாவது ஒன்றை செந்தூர மாக்கி செம்பில் தடவி புடமிட்டு எடுக்கப் பதினெட்டு மாற்றுப் பொன்னாகும். இரசமணியுடன் லிங்கம், கந்தகம் ஒவ்வொரு பங்கும் தாளகம் ஆறு பங்கும் கூட்டி குமரி சாற்றில் ஒரு சாமம் அரைத்து வில்லை யாக தட்டி காயவைத்து காய்ந்த வில்லையை அகலிலிட்டு மூடி ஏழு சீலை மண்செய்து ஏழு எருக்கொண்டு புடமிட்டால் செந்தூரம் ஆகும்.

சாதிலிங்கம் இரண்டு பங்கும் வெடியுப்பு, நவச்சாரம் ஒரு பங்கும் தூள் செய்து துளசிச் சாறெடுத்து சேர்த்து இரும்புக் கரண்டியில் விட்டு அனலில் வைக்க உருகி வரும். அதனைத் தென்னை ஓலையில் விட லிங்கக் கட்டியாகும். பின்பு ஒரு மண் சட்டியில் வெள்ளியை உருக்கி அதில் லிங்கக் கட்டை சுருக்குக் கொடுக்க பத்தரை மாற்றுத் தங்கமாகும். சிவப்பு சித்திர மூலம் இலைகளைப் பிடுங்கி வந்து சாறெடுத்து செம்புத்தகட்டில் விட்டு கவசம் செய்து சீலை மண் செய்து புடமிட்டு எடுக்க செம்பு தங்கமாகும். தரா எனும் சஞ்சீவி மூலிகையின் சமூலத்தின் சாறெடுத்து செம்பில் சேர்த்து புடமிட செம்பு தங்கமாகும்.

கற்பூர வில்வ மர இலைகளைப் பிடுங்கி வந்து இடித்துப் பிழிந்து சாறெடுத்து இரும்புக் கம்பியை பழுக்கக் காய்ச்சி இச் சாற்றில் விட ஏழரை மாற்றுத் தங்கமாகும்.விளாரி இலைச் சாறெடுத்து மட்டமான உலோகத்துடன் அடுப்பிலிட்டுக் காய்ச்சி உருக்கின குழம்பை வார்ப்பில் ஊற்ற தங்கமாகும்.பாஷாணக் கட்டு மூலமும் செம்பை பொன்னாக்கலாம். பிறவிப் பாஷாணத்தைச் சேர்ந்த வெள்ளைப் பாஷாணம் கொஞ்சம் எடுத்து அதைச் சில்லில் வைத்து எடுத்துக் கொண்டு தொட்டாற் கருங்கி இலைச்சாறு நத்தைசூரி இலைச்சாறு எடுத்து வெள்ளைப் பாஷாணத்துடன் சேர்த்து வெள்ளைப் பாஷாணம் பாஷாணக் கட்டு ஆகும் வரை சுருக்குக் கொடுத்து பாஷாணக் கட்டை எடுத்துக் கொண்டு செம்புத் தகட்டில் சுருக்குக் கொடுக்க தகடு தங்கமாகும்.

Vinodhan, 7010054619

Shopping Cart