தியானத்தையும் மன ஒருமைப்பாட்டையும் பயிற்சி செய். பயிற்சி வேளையில் உன் முன் நறுமணம் கமழும் மலர்களை வை. நல்ல பத்தி கொளுத்தி வை. மனதைப் புனிதப்படுத்துவதற்கு வேண்டியவற்றை ஆரம்பத்தில் செய்.குருவின் நாமத்தையும் இஷ்டதெய்வத்தின் திருநாமத்தையும் ஜபிக்கும்போது, ‘பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் மங்கலம் உண்டாகட்டும்!’ என்று சொல்.வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, கீழே, மேலே என எல்லா திசைகளிலும் நல்லெண்ணங் களை முதலில் பரப்பு.பின்பு தியானத்தில் அமர். ஆரம்பத்தில் இவ்வாறு செய்ய வேண்டும்; பிறகு அமைதியாக இருந்து (எந்தத் திசையையாவது நோக்கி) நான் தீட்சையின் போது உனக்குக் கூறிய முறையில் தியானம் செய். ஒரு நாள்கூட விட்டுவிடாதே வேலை நெருக்கடி இருந்தாலும் கால்மணி நேரமாவது சாதனை செய்யத் தவறாதே. ஒருமுகப்பட்ட ஈடுபாட்டுடன் கூடிய முயற்சி இல்லாமல் எதை அடைய முடியும் மகனே?
பின்னர் சுவாமிஜி பின்வருமாறு கூறினார்:’உங்களுக்கெல்லாம் எளிதில் ஆன்ம விழிப்பு உண்டாகும். எப்போது இங்கே வந்துவிட்டீர்களோ, அப்போது முக்தியும் பிற எல்லாமும் உங்கள் கையில்தான்.* வெளியிலோ, உள்ளேயோ மனதை ஓரிடத்தில் நிலை நிறுத்தப் பயிற்சி அளித்துவிட்டால், இடையீடற்றுப் பாய்கிற நீரோட்டம் போல் அது அந்த இடத்தை நோக்கித் தொடர்ந்து செல்லும் ஆற்றல் பெறுகிறது.
இந்த நிலைதான் தியானம்.தியானிக்கப்படும் பொருளின் புறப்பொருளை விட்டு அகப்பொருளாகிய கருத்தை மட்டும் தியானிக்கத் தக்கபடி தியான சக்தியைத் தீவிரமாக்கினால் அந்த நிலைதான் சமாதி. தியானத்திற்கு உரிய சில வழிகள் இதோ – தலைக்கு மேல் பல அங்குல உயரத்தில் ஒரு தாமரை இருப்பதாக நினையுங்கள். தர்மம் அதன் மையம், ஞானம் அதன் தண்டு, தாமரையின் எட்டு இதழ்களும் யோகியின் அஷ்டமாசித்திகள். தாமரைப் பூவின் உள்ளே இருக்கும் மகரந்த கேசரங்களும் சூல்பைகளும் தியாகம்.புறத்திலிருந்து வருகிற சித்திகளையும் தியாகம் செய்தால் யோகி முக்தி அடைவான். தாமரையின் எட்டு இதழ்களும் எட்டு சித்திகள். அதே வேளையில் உள்ளே உள்ள மகரந்த கேசரங்களும் சூல்பைகளும் உயர்நிலை தியாகம், அதாவது இந்தச் சித்திகளைத் துறத்தல்.தாமரையின் நடுவில் பொன்னொளி வீசுபவராக, சர்வ வல்லமை உள்ளவராக, அணுக அரியவராக, ஓங்காரம் எனும் பெயரை உடையவராக, விளக்க முடியாதவராக, பேரொளி யால் சூழப்பட்டவராக இறைவனை தியானம் செய்யுங்கள்.மற்றொரு தியானமும் கூறப்படுகிறது.உங்கள் இதயத்தில் ஒரு வெளி இருப்பதாக நினையுங்கள்.அதில் சுடர் ஒன்று ஒளிவிடுகிறது. அது உங்கள் ஆன்மா. அதனுள், உங்கள் ஆன்மாவிற்கு ஆன்மாவாகிய கடவுள் ஒரு பேரொளியாக இருப்பதாக எண்ணுங்கள். அதனை உங்கள் இதயத்தில் தியானம் செய்யுங்கள்.முதலில், தியானம் எதிர்மறை நிலையில் இருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் சிந்தித்து ஒதுக்கிவிடு| மனதில் வரும் ஒவ்வொன்றையும் சங்கல்ப சக்தியின் மூலம் பகுத்தறி.அதன் பின் உண்மையில் நாம் எதுவாக இருக்கின்றோமோ அதை, அதாவது உண்மை-அறிவு -ஆனந்த வடிவமாக, இருப்பு அறிதல் – அன்பு செய்தலாக இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
தியானிப்பவரையும் தியானிக்கப்படும் பொருளையும் இணைப்பதுதான் தியானம்.மேலே உள்ளவை எல்லாம் நானே, கீழே உள்ளவை எல்லாம் நானே, இடையில் இருப்பன எல்லாம் நானே. எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன். எல்லா உயிர்களும் என்னில் இருக்கின்றன. ஓம் தத் ஸத்!அதுவே நான். மனதிற்கு அப்பாற்பட்டவன் நான்.இந்தப் பிரபஞ்ச ஆன்மாவுடன் ஒன்றுபட்டவன் நான்.நான் இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை.இந்த உடல் பருகுகிறது, சாப்பிடுகிறது மற்றும் இது போன்ற வேலைகளைச் செய்கிறது. இந்த உடல் நான் அல்ல; மனமும் நான் அல்ல; நானே அவன்.நானே சாட்சி, நான் விலகி நின்று பார்க்கிறேன். உடல் நலனுக்கு நான் சாட்சி, நோய்க்கும் நானே சாட்சி. உண்மை நானே, அறிவும் நானே, ஆனந்தமும் நானே.சாரம் நானே; அறிவமுதமும் நானே. நான் ஒருபோதும் மாறுதல் அடைவதில்லை. நான் அமைதியானவன், ஒளி மிக்கவன், மாறுதல் இல்லாதவன்.கேள்வி: சுவாமிஜி, தவம் என்றால் என்ன? பதில்: தவம் மூன்று வகை;உடல் தவம் -பிறருக்குச் சேவை செய்வது,வாக்குத் தவம் – உண்மையைக் கடைப்பிடிப்பது,மனத் தவம் – மனக் கட்டுப்பாடும் மன ஒருமைப்பாடும்.கேள்வி: எங்கு ஒருவன் தியானம் செய்ய வேண்டும்? உடலுக்கு உள்ளேயா, வெளியிலா? மனம் உள்ளே இழுக்கப்பட வேண்டுமா, வெளியே இருக்கலாமா?பதில்: உள்ளேயே தியானம் செய்ய வேண்டும். மனம்இழுக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்ற விஷயத்தைப்பொருத்தவரை, அந்த மனத் தளத்தை அடையவே நீண்டகாலமாகும். இப்போது நமது போராட்டம் உடம்புடன்தான்.தொடர்ந்து அசைவற்று அமரும் நிலை பெற்ற பிறகு மட்டுமே மனத்துடனான போராட்டத்தைத் தொடங்க வேண்டும். ஆசனம் நிலைபெற்றுவிட்டால் உடல் அசைவற்றி ருக்கும். அப்போது விருப்பப்படி நீண்ட நேரம் உட்காரலாம்.
கேள்வி: சுவாமிஜி, சில நேரங்களில் ஜபம் சோர்வைத் தருகிறது. அப்போது ஜபத்தைத் தொடர்வதா, நல்ல நூல்களை வாசிக்கலாமா? சுவாமிஜி: ஜபத்தால் சோர்வு இரு காரணங்களால் ஏற்பட லாம் – 1,மூளை களைத்துவிடுவதால்; 2, சோம்பலால்,முதல் காரணமாயிருந்தால் ஜபத்தைத் தொடர்ந்தால் போலிக் காட்சிகளில் மயங்க நேரும், சில வேளைகளில்பைத்தியம் பிடிக்கலாம். சோம்பலினால் ஏற்பட்ட சோர்வு என்றால், அதற்குப் பரிகாரம் மனதைப் பலவந்தப்படுத்தி, ஐபத்தில் தொடர்ந்து ஈடுபடச் செய்வதே. கேள்வி: சில வேளைகளில் ஜபம் செய்யும்போது ஆனந்தம்உண்டாகிறது. இந்த ஆனந்தத்தால் ஜபத்தை மேலும் செய்யத்.தோன்றாமல் போகிறது. அப்போது மேலும் ஜபம் செய்வதா? சுவாமிஜி: ஆம், இந்த ஆனந்தம் சாதனைக்கு இடையூறானது. அதற்குப் பெயர் ரஸாஸ்வாதனம் இன்பத்தைச் சுவைப்பது), இதைத் தாண்டிச் செல்,’
கேள்வி: மனம் அலைந்து கொண்டிருந்தால், நீண்ட நேரம் ஜபம் செய்வது நல்லதா? சுவாமிஜி: ஆம், முரட்டுக் குதிரையை அடக்க அதன்முதுகில் எப்போதும் உட்கார்ந்து பழக்குவது போன்றது இது. கேள்வி: தியானத்தின் உண்மையான இயல்பு என்ன?சுவாமிஜி: தியானம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது மனதைக் குவியச் செய்வது. மனம் ஒரு பொருளின் மீது ஒருமைப்பட்டு நிலைபெறுமானால் பிறகு அதனை எந்தப் பொருளின் மீதும் குவிக்கலாம். தியானத்தால் நீங்கள் அடையக்கூடிய அனைத்தையும்யோகிகளுக்கெல்லாம் யோகியாக உள்ள ஈசுவரனைத்தியானிப்பதால் அடைய முடியும்…
ஒரு மகானைத் தியானிப்பதாலும் அந்த நிலையை நீங்கள் அடைய முடியும். அல்லது வாழ்க்கையின் இயைபைப் பற்றித் தியானிப்பதாலும் அது கிடைக்கும். இவை புறச்சார்பு தியானங்கள். அதாவது உங்களுக்கு உள்ளே அல்லது வெளியே உள்ள சில பொருட்களைத் தியானிக்கிறீர்கள்.திரும்பத் திரும்ப ஒன்றைக் கூறி மனதைக் குவிப்பதேஅது. மனம் அகமுகமாகித் தன்மீது குவிவதுதான் தியானம். அங்கே மனதின் எண்ண அலைகள் எல்லாம் ஓய்கின்றன. உலகமே மறைந்து விடும். உங்கள் உணர்வு விரிகிறது. தியானம் செய்யும் போதெல்லாம் நீங்கள் வளர்கிறீர்கள்.” இன்னும் சிறிது கடினமாக உழையுங்கள். மேலும் தீவிரமாகப் பாடுபடுங்கள். தியானம் கைகூடும். இந்த நிலை யில் உடம்பையோ மற்ற எதையுமோ நீங்கள் உணர்வதில்லை. தியானம் முடிந்து நீங்கள் எழும்போது, இதுவரை நீங்கள் பெற்றிராத ஓர் அற்புதமான ஓய்வைப் பெற்றிருப்பீர்கள்.
நம் ஆசைகள், உணர்ச்சிகள் எல்லாவற்றிற்கும் முடிவிடம் இறைவனே. உனக்குக் கோபம் வருமானால் இறைவனிடம் கோபித்துக் கொள். உன் காதலனாகிய இறைவனை, உன் தோழனான இறைவனைக் கடிந்து கொள்.பயமின்றி இப்படி வேறு யாரை நீ கண்டிக்க முடியும்? மனிதன் உன் கோபத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டான்; பதிலுக்குக் கோபிப்பான். என்னிடம் நீ கோபம் கொண்டால் நானும் உடனே என் கோபத்தைக் காட்டுவேன். இது நிச்சயம். உன் கோபத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.நீ ஏன் இன்னும் என்னிடம் வராமல் இருக்கிறாய்? என்னை ஏன் இவ்வாறு தனியாகத் தவிக்க விட்டாய்?” என்று இறைவனிடம் கேள். அவனிடம் அல்லாமல் வேறு எங்கு இன்பம் இருக்க முடியும்? வெறும் மண்ணாங்கட்டிகளில் என்ன இன்பத்தைக் காண முடியும்? பேரானந்த ரசக்கட்டி அல்லவா நாம் நாட வேண்டிய இன்பம்! அது இறைவனே. நமது ஆசாபாசங்கள் எல்லாம், உணர்ச்சிகள் எல்லாம் அவனை நோக்கிச் செல்லட்டும். அவை அவனுக்காகவே அமைந்தவை. குறி தவறி அவை கீழே செல்லுமானால் தீமை ஆகிவிடும். இலக்காகிய இறைவனை நேராக அடையுமானால், மிகக் கீழான உணர்ச்சிகள்கூட உருமாறி விடுகின்றன.
உடலும் உள்ளமும் தங்கள் சக்திகளை எப்படி வெளிப்படுத்தினாலும் அவற்றின் முடிந்த முடிவாக இருப்பவன் இறைவனே (ஏகாயனன்).
மனித உள்ளத்தில் எழும் அன்பனைத்தும் ஆசையனைத் தும் இறைவனிடமே செல்ல வேண்டும். அவனே நமது அன்பிற்கும் ஆசைக்கும் உரியவன். அவனைத் தவிர வேறு யாரை நம் உள்ளம் காதலிக்க முடியும்?ஒப்பற்ற அழகுடையவன் அவன். மிக மேலானவன் அவன். அவனே அழகு. அவனே மேன்மை. இந்தப் பிரபஞ்சத்தில் அவனைவிட அழகானவர் வேறு யார்?நமக்கு அன்புக்குரியவனாக இருக்க இந்தப் பிரபஞ்சத்தில்அவனைவிடத் தகுதியுடையவர் யார்?எனவே அவனே கணவனாக இருக்கட்டும்; அவனே அன்புக்குரியவனாக இருக்கட்டும்.
vinodhan,