இந்தப் போலி சித்தர்கள் தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொண்டு தான் ஞானி என்றும் தான் மனோ சக்தி உடையவன் என்றும் மக்களை ஏமாற்றிக் கொண்டும் திரிந்து கொண்டிருக்கிறார்கள் மனோ சக்தியே இல்லாமல் சித்திகள் செய்பவராகக் காட்டிக் கொண்டு பெரிய யோகி மாபெரும் துறவி, மடாதிபதி பீடாதிபதி எனப் பலர் இக்காலத்தில் தோன்றித்திரிகின்றனர். சாதாரண வேத சாத்திர, தத்துவ அறிவும் புலனடக்க ஒழுக்கமும் கூட இல்லாத போலிகள் அவர்கள். ஆகமப்படி அமையாத நடைபாதைக் கோயில்கள் போல அவர்களாலும் புண்ணியமில்லை இதெல்லாம் ஆன்மிக வளர்ச்சியும் இல்லை. ஆகமப்படி கட்டப்பட்ட கோயில் போல, மனோசக்தியுள்ளமகான்களே பயன்படுவது. சில சர்க்கஸ் வித்தைகளைப் போன்றவற்றைப் பழகி, ஹதயோக முறை நுணுக்கங்களைக் சுற்று, அவற்றையும் தந்திரங்களால் சிலவற்றையும், மனோசக்தியால் விளையாடும் சித்திகளைப் போலக் காட்டித் தங்களைப் பெரிய யோக சித்தர்களாகப் பெருமை பேசச் செய்து விளம்பரப்படுத்திக் கொண்டு ஓர் அமைப்பை உண்டாக்கிக் கிளைகளை வேறு தொடங்கி ஒரு தொழிலாகச் செய்து பணம் பண்ணும் போலிகளே இப்போது அதிகம், ஆசனங்களையும் சில பிராணாயாமங்களையும் மட்டும் தெரிந்து கொண்டு தியானத்திலிருப்பது போல கண்களை மூடி அமர மட்டும் அறிந்து ஏதோ பூஜை செய்யும் பக்தராகவும் காட்டிக்கொண்டு, புரோகிதர்களைக் கொண்டு யாகம் செய்து ஹோமம் செய்து பரம ஆன்மிகவாதிகளாகத் தோற்றம் ஏற்படுத்திப் பிழைப்போரே அதிகம் உளர். இவர்களுக்கு வசூலே முக்கியம்.
ஆசனமும், சித்த வைத்தியமும் அறிந்து சித்தர் என்று மருந்துகளைச் செய்து கொள்ளை விலைக்கு விற்று ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் சொத்து சேர்த்து அறக்கட்டளைகளில் பதுக்கி வாழ்வோர் மக்களுக்காகப் போராடுவதாக அரசியலும் செய்ய வந்து விட்டனர். இவர்களுக்குப் பிரபலமும் புகழுமே தேவை. பணமும் பாதுகாப்பாக இருந்தாக வேண்டும். இன்னும் சிலர் எதுவுமே தெரியாவிட்டாலும், ‘நான்தான் கடவுள்’ என்று அவதாரமாக ஆகிவிடுகிறார்கள். ‘வீட்டிற்கு வந்து வாழ்த்தினால் பத்து லட்சம், இருக்குமிடத்திற்கு வந்து வாழ்த்துப் பெற்றால் ஒரு லட்சம்’ என்று வாங்குகிறார்கள். இவர்கள் தொடங்கிய அமைப்பு பல நாடுகளில் கிளைகளுடன் இருக்கும் குறுகிய காலத்தில் நூறு, ஆயிரம் கோடிக் கணக்கில் சொத்துக்கள் குவிந்துவிடும். இவர்கள் பித்தலாட்டம் வெளியே அம்பலம் ஆனாலும், போலீஸ் பிடித்தாலும் பணபலத்தால்
மீண்டும் மக்களை இம்சிக்க வந்துவிடுவர்.உண்மையில் பொருளை வரவழைத்துத் தரும் சித்தி
உடையவரானால் லிங்கம், வாட்ச், மோதிரம் போன்றவற்றை வாயிலிருந்து எடுத்து எச்சில் பொருளாகத்தான் தர வேண்டுமா? அல்லது கல்லுரலை, கடப்பாரையை வரவழைத்துத் தரலாகாதா? ஒரு துறவி, (காவி தந்த குருயாரோ?) பின்னால் சிறைக்கும் சென்று இப்படிச் செய்து வயிறு கெட்டுப் போனது’ என்று கூறிச் செத்தும் போனார்.
பின்னால் கருந்திரை இருக்க, அதன் பின்னிருந்து வீசி மேலே போட்ட செயின் அது போன்ற பொருளை லாகவமாகப் பிடித்து சித்தியால் வரவழைத்துத் தருவது போலக் கொடுப்பார். லிங்கம், வாட்ச், மோதிரம் போன்றவற்றை வாயிலிருந்தும் எடுத்துத் தருவார். பூ வரச் செய்து தருவது விபூதியை வெறுங் கையால் தருவது செய்து கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் மேஜிக் செய்யக் கூடியவரும் தந்திரங்களால் செய்துகாட்டி விட்டனர். இவர் பற்றிய பலர் கூறிய பற்பல சித்திகளை அடக்கிய நூல்களும் உண்டு. இவர் இறந்ததும் இவரது அறையில் கிலோ கணக்கில் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும் செய்தியாயிற்று.
பிறரைக் குறை கூறுவது நம் நோக்கமில்லை. மக்களைப் போலிகள் பற்றிக் கூறி எச்சரிப்பதே நம் நோக்கம். நாம் கூறியவை செய்தியாக வெளிப்பட்டவையே.
இவர்களை உடனுக்குடன் நேரே யாரும் கேள்வி கேட்காமைக்கும் வாதிட்டு மடக்காமைக்கும் அவர்களுக்குப் பின்பலமாக இருந்த பணமே, புகழே தடை, அறியாமையும் அச்சமும் கொண்ட மக்கள் போலிகளைத் தோலுரிக்க முடியாமல் தோற்றுப் போகிறார்கள். கண்டுபிடிக்கப்பட்ட ஓரிரு சமயங்களிலும் பணமும் அதிகார வர்க்கமும் அவர்களுக்குத் துணை செய்கின்றன.
ஓரிருவர் மாட்டிக் கொண்டு கம்பி எண்ணுகின்றனர்.
ஆனாலும் இப்படிப்பட்டவர் புதிது புதிதாக இன்னும் தோன்றிக் கொண்டுதானுள்ளனர். ஒருவர் நெருப்பில் இறங்கி எழுந்து வருகிறாராம். இன்னொருவர் மக்களைப் பறக்க வைப்பதாகச் சவால் விட்டு எதுவும் முடியாமல் திட்டு வாங்கினார். இவர்களுக்குஉண்மையாகவே இப்படிப்பட்ட சித்திகள் விளையாட முடிந்தாலும் கூட அதை வெளிக்காட்டிப் பயன் என்ன? முடியாதவர்தானே ‘முடியும்’ என்று வெறும் தம்பட்டம் அடித்துக்கொள்ளுவர்! நெருப்பில் இறங்குபவர் எங்காவது தீவிபத்து ஏற்பட்டால்
உள்சென்று உயிர்களைக் காப்பாற்றப் பயன்படுத்தினால் அப்போது மக்களறிந்து கொள்வதோடு மெச்சவும் செய்வர். சித்திகளைக் காட்டிப் பாமர மக்கள் தம்மைப் பாராட்ட விரும்புகிறவர், பாமர மக்களின் கைதட்டலை வேண்டுபவர், அவர்களை விடச் சின்னவர்தானே? மேலும் அந்த சித்திகளை ஆத்மா செய்யவில்லை. பிரக்ருதி தான் செய்கிறது என்ற அறிவற்றவர்தானே ‘நான் பறப்பேன்’, ‘நான் உங்களைப் பறக்க வைப்பேன்!” என்று கூறுவர்? செய்வது இறைவன்தான். உடலில்லை. ஆத்மன்’ என்ற அறிவற்றவர் எப்படி மேலானவர் ஆவார்?இதனால் உண்மையான சித்தர்களை பார்க்க முடிவதில்லை காரணம் பார்க்க முன்பே இந்த போலி சித்தர்களிடம மாட்டி கொண்டு விடுகிறோம் நானும் இதற்கு சான்று இதை போன்ற ஒரு போலி சித்த னிடம் மாட்டிக்கொண்டு பாடத பாடு பட்டு விட்டேன் ஜாக்கிரதையாக செல்லுங்கள் நம் முன்பு குரு என்று போலித்தனம் வேஷம் போட்டு திரிந்து கொண்டு வர கூட்டம் மிக அதிகம் ஆதலால் ஆன்மீகம் என்பது வெளியே அல்ல உங்களுக்குள்ளே இருக்கிறது என்பது அல்ல யாராவது உங்களுக்கு தீட்சை தந்தால் மட்டும் தான் நீங்கள் உயர முடியும் என்பது இல்லை எல்லோரும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் மக்களை ஆதலால் நீங்கள் உங்கள் உள்ளே செல்ல முயற்சி செய்யுங்கள் அது மட்டும்தான் சித்தனை அடையும் வழி சித்தர்கள் நம்மோடு கூட என்றென்றும் அவர்களின் ஆசீர்வாதங்கள் இருக்கிறது நாம் தான் தவறான பாதையில் மாட்டிக் கொள்கிறோம் ஒரு நல்ல சிந்தனைகள் கண்டு விட்டால் நீங்கள் சிறந்த ஞானியாகவும் சிறந்த சுத்தமாகவும் மாற்றப்படுவார்கள் ஆனால் நாம் போலி சித்தர்கள் இடம்தான் சிக்கிக் கொண்டிருக்கிறோம் ஜாக்கிரதை மீண்டும் வெளியேறுங்கள் உங்களுக்கான வாழ்க்கை உங்கள் மனதில்தான் இருக்கிறது உங்களுக்கான சிறந்த சித்தர் யார் என்றால் உங்கள் மனம் தான் உங்களுக்கான சிறந்த குரு யார் என்றால் உங்கள் மனம்தான் இதைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு நல்ல விஷயத்தையும் அற்புதமான விஷயங்க ளையும் சொல்லித்தர முடியாது அந்த சித்தர்கள் சித்த புருஷர்கள் உங்கள் மனதில் வாழ்கிறார் கொண்டு எழுச்சி நநடையோடு நடந்து செல்லுங்கள் சித்தர்களை நீங்கள் கண்டிப்பாக சந்திப்பீர்கள் உங்கள் மன திடம் நம்பிக்கை கொள்ளுங்கள் நன்றி
vinodhan,