வெள்ளிக்கிழமை என்பது ஒரு அற்புதமான நாள் அந்த நாளில் நல்ல விஷயங்கள் நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை அதைப்போன்று பலருக்கு வெள்ளிக்கிழமை என்று என்ன என்று தெரியாது அது ஒரு கதை அந்த வெள்ளிக் கிழமைக்கு ஒரு கதை உண்டு நாம் அந்த கதையை இப்போது பார்க்கப் போகிறோம் நாகூர் நாகப்பட்டணம் என்னும் ஊரில் நாராயண அய்யர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு வேதம், ஆறு சாஸ்திரம் அறுபத்துநான்கு கலைஞானம், தேவி பூஜை, அக்னி கோத்திரம், வைசுவ தேவம் எல்லாம் உண்டு. அவர் 64 கலைஞானத்தையும் ஆராய்ந்து பார்த்து அன்று செய்த http://பாவத்தை அன்று போக்கி காலம் நடத்தி வந்தார். அவர் மிகவும் பரம ஏழை. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. அந்தக் குழந்தைகளுக்கு அல்லசலில் துணி வாங்கிப் போட்டு எண்ணை வாங்கி தேய்த்து வளர்த்து வந்தார். அந்தக் குழந்தைகள் பெரிதாகி விட்டன. அவருடைய பத்தினியாகப்பட்டவள் அவரைப் பார்த்து நம்முடைய குழந்தைகள் பெரிதாகிவிட்டனவே அதற்கு கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டுமே என்று வருத்தப்பட்டாள். அவர் சரி என்று செர்ல்லிவிட்டு அன்று போக மறுநாள் அந்தக் குழந்தை களை அழைத்துக் கொண்டு பெரியவூர் பெரியபட்டணம் என்னும் ஊருக்குப் போனார்.

அந்த ஊரில் பெரிய ஸோமாஜியார் என்று ஒருவர் இருந்தார். http://அவருக்கு 4 வேதம், 6 சாஸ்திரம், 64 கலைஞானம், தேவிபூஜை, சிவபூஜை, அக்கினி கோத்ரம், வைசுவதேவம் எல்லாம் செய்வதுண்டு. அவர் பூஜை எல்லாம் முடித்துக்கொண்டு உச்சி உருகும் வேளையில் வாசலில் வந்து உச்சியை அண்ணாந்து பார்த்து கிழக்கே, மேற்கே, தெற்கே, வடக்கே நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்து இச்சார் உண்டா, எளியார் உண்டா, அதிதி உண்டா,பரதேசி உண்டா யார் இருந்தாலும் போஜனத் திற்கு வாருங்கள் என்று கூப்பிட்டார்.

அதற்கு இந்த பிராமணர் இச்சார், எளியார், அதிதி, பரதேசி எல்லாம் நான்தான் என்று சொன்னார். நீரே ஆனால், வாரும் என்று சொல்லி உள்ளே அழைத்துக் கொண்டு போய் கால அலம்ப ஜலம் கொடுத்து அக்ஷய பாத்திரம் கொடுத்து தலைவாழை இலை போட்டு தாம்பிர பஞ்ச http://பாத்திரத்தில் தீர்த்தம் வைத்து பசும்பால் பாயஸம் வைத்து பசும் யிர் பச்சடி வைத்து பசும் நெய்யில் 18 பக்ஷணங்கள் செய்து பாலிட்டு, பழமிட்டு, தேங்காய்,தேன் எல்லாம் விட்டு ஏதோ என்னால் ஆனது ரஸம் அன்னம் அளிக்கிறேன். இருந்து சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு திருப்தியாய் போஜனம் அளித்து கை அலம்ப ஜலம் கொடுத்து, தாம்பூலம் தக்ஷினைகொடுத்து தாங்கள் எந்த ஊர், எந்த தேசம், தாங்கள் வந்த காரணம் என்ன என்று கேட்டார்.

அதற்கு இவர் எனக்கு நாகூர் நாகபட்டணம், என் பெயர் நாராய்ண அய்யர். நான் மிகவும் பரமஏழை எனக்கு 2 பெண் குழந்தைகள், அந்தக் குழந்தைகளுக்கு என்னிகாதானம் செய்யும் காரணமாய் கிளம்பி வந்திருக்கிறேன் என்று சொன்னார்.

அதற்கு அந்த பிராமணர் எங்கள் மூத்த குமாரனுக்கு உங்கள் மூத்த குமாரியை கன்னிகாதானம் செய்து கொடுங் கள் என்றார். அதற்கு இவர் சரி என்று சொல்லிவிட்டு அன்றுபோக மறுநாள் இரண்டு குழந்தைகளுக்கும் மங்கள ஸ்நானம் செய்து பட்டாடையுடுத்தி துளசியும், தீர்த்தமும் விட்டு ஓம் தத்ஸத் ப்ரும்மார்ப்பண மஸ்து என்று சொல்லி கன்னிகாதானம் செய்து கொடுத்தார்.

இந்த கன்னிகாதானம் செய்த புண்ணிய பலத்தால் 18 தலைமுறை பிதுருக்கள் கரையேறினார்கள். அந்தப் பெண்ணை அங்கே விட்டுவிட்டு சிறிய பெண்ணோடு சிறிய ஊர் சிறிய பட்டணம் என்னும் ஊருக்குப் போனார்.

அந்த ஊரில் சின்ன ஸோமாஜியார் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு 4 வேதம், 6 சாஸ்திரம், 64 கலை ஞானம், தேவி பூஜை, சிவபூஜை, அக்கினிகோத்ரம். வைசுவதேவம் எல்லாம் செய்வதுண்டு. அவர் பூஜை எல்லாம் முடித்துக் கொண்டு உச்சி உருகும் வேளையில் வாசலில் வந்து உச்சியை அண்ணாந்து பார்த்து கிழக்கே, மேற்கே, தெற்கே.வடக்கே நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்து இச்சார் உண்டா, எளியார் உண்டா, அதிதிஉண்டா பரதேசி உண்டா யார் இருந்தாலும் போஜனத் திற்கு வாருங்கள் என்று கூப்பிட்டார்.

அதற்கு இந்த பிராமணர் இச்சார், எளியார், அதிதி, பரதேசி எல்லாம் நான்தான் என்று சொன்னார். நீரே ஆனால் வாரும் என்று சொல்லி உள்ளே அழைத்துக் கொண்டு போய் கால் அலம்ப ஜலம் கொடுத்து அக்ஷ்ய பாத்திரம் கொடுத்து தலைவாழை இலை போட்டு தாமிர பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் வைத்து பசும்பால் பாயாஸம் வைத்து பசும் தயிர் பச்சடி வைத்து பசும்நெய்யில் 18 பக்ஷணங்கள் செய்து பாலிட்டு, பழமிட்டு, தேங்காய், தேன் எல்லாம் விட்டு ஏதோ என்னால் ஆனது ரஸம் அன்னம் அளிக்கிறேன். இருந்து சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டு திருப்தியாய் போஜனம் அளித்து கை அலம்ப ஜலம் கொடுத்து தாம்பூலம் தக்ஷிணை கொடுத்து தாங்கள் யார், எந்த ஊர், எந்த தேசம், தாங்கள் வந்த காரணம் என்ன என்று கேட்டார்.

அதற்கு இவர் எனக்கு நாகூர் நாகப்பட்டணம், என் பெயர் நாராயண அய்யர், நான் பரம ஏழை, எனக்கு இரண்டு பெண் குழந்தைகள், அந்தக் குழந்தைகளுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டிய காரணமாய் பெரிய ஊர் பெரியபட்டணம் போனேன். அந்த ஊரில் பெரிய ஸோமாஜியாரின் http://மூத்த குமாரனுக்கு, என் மூத்தகுமாரத்தியை கன்னிகாதானம் செய்து கொடுத்தேன். இளைய குமாரத்தியோடு இங்கே வந்து இருக்கிறேன். என்று சொன்னார். அதற்கு அவர் அப்படியானால் என் இளைய குமாரனுக்கு உங்கள் இளைய குமாரத்தியை கன்னிகாதானம் செய்து கொடுங்கள் என்று சொல்லிட்டு அன்று போக மறுநாள் அந்தக் குழந்தைக்கு மங்கள ஸ்நானம் செய்து பட்டாடையுடுத்தி துளசியும், தீர்த்தமும் விட்டு ஓம் தத்ஸத் ப்ரும்மார்ப்பணமஸ்து என்று சொல்லி கன்னிகாதானம் செய்து கொடுத்தார்.

இரண்டாவது கன்னிகாதானம் செய்து கொடுத்த புண்ணிய பலத்தால் 21 தலைமுறை பிதுருக்கள் கரை யேறினார்கள். அந்தப் பெண்ணை அங்கே விட்டுவிட்டு அவர் திரும்பி ஊருக்கு வந்து கொண்டு இருக்கார். இது இங்கே இப்படியிருக்க.

கைலாசத்தில் பரமசிவனிடத்தில் லெக்ஷ்மி. சரஸ்வதி, பார்வதி மூவரும் போய் நமஸ்காரம் செய்து ஸ்வாமி ஸ்திரிகளை கேவலமாக சொல்கிறார்களே. ஸ்திரிகளுக்கு மோக்ஷார்த்தம் என்றால் என்ன? காம்யார்த்தம் என்றால் என்ன? இவற்றின் அர்த்தங்களை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க, அதற்கு பரமசிவன் மோக்ஷார்த்தத்திற்க வழி வேண்டும் என்றால் தை மாதத்தில் ஸப்தமி தினத்தில் சாம்பல் பூசணிக்காயைக் கொண்டு வந்து வஜ்ர வைடூரிய ஆபரணங்களை பூட்டி ஐந்து உழக்கு அரிசி போட்டு அவிக வைத்து கும்பம் வைத்து, வடை, பாயாஸம், மோதகம் எல்லாம் செய்து ஒரு நல்ல ஸத் பாத்திரமான ஒரு பிராமணனுக்கு தானம் செய்தால் மோர்ர்த்தம் உண்டு. காம்யார்த்தத்தக்கு வழி வேண்டும் என்றால் 10-12 வயதுக்குள் தாய் தகப்பனுக்கு அடங்கி நடக்கவும், யௌவன காலத்தில் புருஷனுக்கு அடங்கி நடக்கவும் அதற்கு மேலிருந்தால் புத்திரனுக் குள்ளாவது சகோதரனுக்குள்ளாவது அடங்கி நடக்கவும், அப்படி இருக்குங் காலத்தில் பகவானை தியானித்துக்கொண்டு இருக்கவும் என்று கூறினார். உடனே லெக்ஷ்மி தேவி தை மாதத்தில் ஸப்தமி தினத்தில் அந்தரமான காட்டில் இந்திராவளி பட்டாடை கொண்டு நான்கு பக்கமும் திரை கட்டி மாவிலை தோரணம் வாழை கட்டி எலுமிச்சம் பழத்தை ரசகுண்டாக கட்டி மெழுகி பெருக்கி முத்துமுத்தாய் கோலமிட்டு சாம்பல் பூசணிக்காயை கொண்டு வந்து வஜ்ர வைடூரியங்கள் பூட்டி ஐந்து உழக்கு அரிசி போட்டு அவிசு வைத்து கும்பம் வைத்து வடை பாயாஸம் மோதகம் எல்லாம் செய்து குடலை குடலை யாக புஷ்பங்கள் கொண்டு வந்து கூடை கூடையாக பலவித பழங்கள் கொண்டு வந்து ஊதுபத்தி சாம்பிராணி எல்லாம் கொழுத்தி வைத்து பூஜைக்கு சித்தமாயிருந்தாள்.

இது இப்படியிருக்கும்போது இந்த பிராமணர் நாம் போகும்போது வெறும் காடாய் இருந்ததே இப்போது. இவ்வளவு வைபோகமாக இருக்க வேண்டிய காரண மென்ன என்று நினைத்து திரையை நீக்கிப் பார்த்தார்.

அப்போது லெஷ்மி இச்சார், எளியார், பரதேசி யார் வேண்டுமானாலும் பார்க்கலாமென்று சொன்னாள். அதற்கு அவர் இச்சார், எளியார், பரதேசி எல்லாம் நான் தான் என்று சொன்னார். நீரே ஆனால் வாரும் என்று சொல்லி விட்டு பூஜை எல்லாம் முடித்துக் கொண்டு பூசணிக்காயை தானம் கொடுக்கப் போனாள். அப்பொழுது ஸரஸ்வதியும் பார்வதியும் பார்த்து என்ன காரியம் செய்கிறாய். நாம் தேவர்கள் அல்லவா, கேவலம் பூலோக மனிதனுக்குத் தானம் கொடுக்கிறாயே என்று சொன்னார்கள்.

அதற்கு அவள், இவர் பெரிய மஹானுபாவர். இரண்டு பெண் குழந்தைகளை கன்னிகாதானம் கல்யாணம்

செய்து கொடுத்து 21 தலைமுறை பிதுருக்கள் கரையேறி இருக்கிறார்கள். அதனால் அவரையே தானத்திற்கு வருத்தி இருக்கிறேனென்று சொல்லிவிட்டு சாம்பல் பூசணிக்காயை தானம் கொடுத்துவிட்டு சொல்ல லானாள்.

சந்திர சூரிய கதையுண்டு. பட்டினி இருந்து சொல்ல வேண்டும். பசித்து இருந்து கேட்க வேண்டும். இதைக் கேட்ட பேருக்கு கேட்ட பொருளும் கைக்கூடும். கங்க ஸ்நானம் செய்த பலன், பட்ட பசுவும் பால் கறக்கும், பகையான பேர்களும் உறவாவார்கள், அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காதுவழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூரவழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை, எதை மறந்து சாப்பிட்டாலும் கதை மறந்து சாப்பிடாதே, கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய் என்று சொல்லிவிட்டு லெக்ஷ்மி தேவி அந்தர்த்யானம் ஆகிவிட்டாள்.

இந்த பிராமணன் அந்தப் பூசணிக்காயை யானை மேல் வைத்துக் கொண்டு மேளதாளத்துடன் ஊர் கோலமாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

இது இப்படியிருக்கும் போது அவருடைய பத்தினி யாகப் பட்டவள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போனாரே வரக்காணோமே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும்போது அடுத்த வீட்டு தோழியானவள் அரிசி கொண்டு வந்து தருகிறேன், சமையல் செய்து சாப்பிடு என்று சொன்னாள்.

அதற்கு அவள் என் கணவர் நாலு ஊருக்குச் சென்றால் நாலு உழக்கு அரிசி கொண்டு வருவார். ஐந்து

ஊருக்குச் சென்றால் ஐந்து உழக்கு அரிசி கொண்டு வருவார். அதைக்கொண்டு நாங்கள் அன்றாடம் ஜீவனம் செய்து வருகிறோம். கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க முடியாது. அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

அதற்கு தோழி என்கூட ஒத்தாசையாக வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு அரிசி வாங்கிக்கொள் என்று சொன்னாள். சரி என்று சொல்லிவிட்டு அவள்கூட வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள். இது இப்படி இருக்கும்போது லெக்ஷ்மி தேவி தானம் கொடுத்த தினம் ராத்திரியில் ஒரு சொப்பனம் கண்டாள். அதே கவலையில் அடுத்தநாள் தோழி வீட்டுக்குப் போகவில்லை. தோழி வந்து என்ன சமாச்சாரம் என்று கேட்டாள்.

அதற்கு அவள் நேற்று இரவு ஒரு ஸ்திரி தீபமும், தீர்த்தமும் கொண்டு வந்தாற் போல் சொப்பனம் கண்டேன். அதே கவலையாய் இருக்கிறது என்று சொன்னாள்.

அதற்கு தோழி எல்லாம் நன்றாய் இருக்கிறது. தோழி அரிசி கொண்டு வந்து தருகிறேன் சமையல் செய் என்று சொன்னாள். அரிசி கொண்டு வந்து கொடுத்தாள். சாலில் கொட்ட வேண்டுமென்று போனாள். சால்நிறைய அரிசி இருந்ததால் அரிசி கொட்டிவிட்டது. அரிசி கீழே சிந்தினால் ஐச்வரியம் குன்றிப் போகும் என்பார்களே. (ஐச்வரியம் போய்விடும் என்று சொல்வார்களே) இந்த ஐச்வரியம் கூட ஒட்டலாகாதா என்று கவலைப் பட்டாள்.அதற்கு தோழி எல்லாம் சரியாகத்தான் இருக்கும். அடுப்பு மூட்டி சமையல் செய் என்று சொல்லிவிட்டு வாசலில் வந்தாள். இந்தப் பிராமணர் மேளதாளத்துடன் வருவதைப் பார்த்து உள்ளே போய் நீ கண்ட சொப்பனம் நல்ல சொப்பனம்தான். உன் புருஷர் குசேலர் போல் மேளதாளத்துடன் வருகிறார் பார் று சொன்னாள். அவள் வந்து பார்த்தாள். அவர் வந்தவுடன் அவர் கால்களை அலம்பி அந்த தீர்த்தத்தை தலையில் ப்ரோக்ஷித்துக் கொண்டு அவரை உள்ளே அழைத்து வந்து உட்கார வைத்து அக்ஷதை இருக்கிறது சமையல் செய்யட்டுமா என்று கேட்டாள். சமையல் செய்வது இருக்கட்டும் நான் ஒரு கதை சொல்கிறேன் கேள் என்று சொன்னர். சரி என்றாள். அவர் சொல்லலானார்.

சந்திர சூரிய விருத கதையுண்டு. பட்டினியிருந்து சொல்ல வேண்டும். பசித்திருந்து கேட்க வேண்டும். இந்த கதையை கேட்ட பேருக்கு கேட்ட பொருளும் கைகூடும். கங்கா ஸ்நானம் செய்த பலன், பட்டபசுவும் பால் கறக்கும், பகையான பேர்களும் உறவாவார்கள், அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காதவழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூரவழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை, எதை மறந்து சாப்பிட்டாலும் கதையை மறந்து சாப்பிடாதே. கற்று மற்ற மூன்று பேருக்க உபதேசம் பண்ணு. தேவர்களிட்ட கதை, தேவ கதை என்று எல்லோருக்கும் சொல்லவும் என்று சொல்லிவிட்டு லெக்ஷ்மி தேவி அந்தர்த்யானமாகி விட்டாள் என்றார்.இந்த கதையை சிரத்தையுடன் கேட்டாள். அதிலிருந்து அவள் அஷ்ட ஐஸ்வரியமும் உண்டாகி தரித்திரம் இல்லாமல் நன்றாய் இருந்தாள். இப்படி இருக்கும்போது ஒரு நாள் அவள் தன் புருஷரைப் பார்த்து நாம் தரித்திரமாய் இருக்கும் போது நம்முடைய குழந்தைகள் நம்மோடு இருந்தனர். நாம் ஸௌகரியமாய் இருக்கும்போது குழந்தைகளை பத்த நாளைக்கு இங்கு அழை ருங்க என்று சொன்னாள்.

என்ன இருந்தாலும் ஸ்திரி புத்திதானே என்று சொல்லிவிட்டு பெரியவூர் பெரியபட்டணம் என்னும் ஊரில் பெரிய பெண்வீட்டிற்குப் போனார். பெரிய பெண் அப்பாவிடம் நீங்களும் அம்மாவும் சௌக்கியம் தானே என்று கேட்டாள். சௌக்கியம் தான் அம்மா என்றார். இலை போடுகிறேன் சாப்பிட வாருங்கள் என்று சொன்னாள்.

சாப்பிடுவது இருக்கட்டும் நான் ஒரு கதை சொல்கிறேன் கேள் என்றார். அதற்கு அவள் அடுப்பில் பால் இருக்கிறது, வாசலில் ஆள் காத்திருக்கிறான், கொட்டிலில் மாடு கத்துகிறது. இந்தமாதிரி வேலை தொந்திரவு இருக்கும் போது நான் எப்படி கதை கேட்பேன். என் கதைதான் பெரியதாயிருக்கிறது என்று அலுத்துக் கொண்டாள்.

சரி என்று சொல்லி விட்டு சிறியவூர் சிறிய பட்டணம் என்னும் ஊருக்கு சிறிய பெண் வீட்டிற்கு வந்தார். சிறியபெண் அப்பாவிடம் அம்மாவும் நீங்களும் க்ஷேமம் தானே என்று கேட்டாள். க்ஷேமம்தான் என்று சொன்னார். இலை போடுகிறேன். சாப்பிட வாருங்கள்அப்பா என்று சொன்னார். சாப்பிடுவது இருக்கட்டும் நான் ஒரு கதை சொல்கிறேன் கேள் என்றார். அவள் சரி என்றாள். அவர் கதை சொல்லலானார்.

சந்திர சூரிய விருத கதையுண்டு. பட்டினியிருந்து சொல்ல வேண்டும், பசித்திருந்து கேட்க வேண்டும். இந்த கதையை கேட்ட பேருக்கு கேட்ட பொருளும் கை கூடும். கங்கா ஸ்நானம் செய்த பலன், பட்டபசுவும் பால் கறக்கும், பகையான பேர்களும் உறவாவார்கள், அரண் டாலும் கதை, புரண்டாலும் கதை, காதவழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூரவழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை, எதை மறந்து சாப்பிட் டாலும் கதையை மறந்து சாப்பிடாதே. கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய். தேவர்கள் இட்ட கதை, தேவகதை என்றார்.

இந்தக் கதையை சொல்லிவிட்டு அவர் திரிகால ஞானியாய் தபத்திற்கு போய்விட்டார். இந்த பெண் இந்த கதையை கேட்ட மறுநாள் அஷ்ட ஐச்வரியங்களும் உண்டாகி நன்கு இருந்தாள். பெரிய பெண் இந்த கதையை கேட்காததினால் தேவர்களிட்ட சாபத்தினால் வீட்டில் ஒன்றும் இல்லாமல் போய் குழந்தைகள் எல்லாம் பசி, தாகம் என்று கதற, கொல்லையில் இருந்த குருத்த மூங்கிலில் அடிக்கணுவை எடுத்து கொண்டு தங்கை வீட்டுக்குப் போய் மோராவது வாங்கி தாகத்தை தீர்க்கலாமென்று வந்தாள்.

தங்கை அவளைப் பார்த்து அக்கா உனக்கு இவ்வளவு வறுமை வரவேண்டிய காரணமென்ன என்று கேட்டாள். அதற்கு அவள் சில காலத்திற்கு முன்பு மஹாசத்ரு போல்நம்முடைய தகப்பனார் வந்து ஒரு கதை சொல்கிறேன் கேள் என்றார். நான் கேட்க மறுத்தேன். அதன்பின் இவ்வளவு வறுமை வந்து நான் கஷ்டப்படுகிறேன் என்று சொன்னாள்.

அதற்கு அவள் நம்முடைய தகப்பனாரைப் பற்றி அவ்வாறு சொல்லாதே. அவர் மஹானுபாவர். அவர் ஒரு கதை சொன்னார். அதைக் கேட்டதிலிருந்து அஷ்ட ஐச்வரியங்களும் உண்டாகி நன்றாக இருக்கிறே நீ மோரைக் கொண்டு போய் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு வா.நான் உனக்கு அந்தக் கதையை சொல்லு கிறேன் என்றாள். பெரிய பெண்ணும் மோரை கொண்டுபோய் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு உச்சி உருகும் வேளையில் தங்கை வீட்டிற்கு திரும்ப வந்தாள். தங்கை கதையைச் சொல்லலானாள்.

சந்திர சூரிய விருத கதையுண்டு. பட்டினியிருந்து சொல்ல வேண்டும் பசித்திருந்து கேட்க வேண்டும். இந்த கதையை கேட்ட பேருக்கு கேட்ட பொருளும் கைகூடும். கங்கா ஸ்நானம் செய்த பலன், பட்டப்பசுவும் பால் கறக்கும், பகையான பேர்களும் உறவாவார்கள். அரண் டாலும் கதை, புரண்டாலும் கதை, காதவழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூரவழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை, எதை மறந்து சாப்பிட் டாலும் கதையை மறந்து சாப்பிடாதே. கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய். தேவர்கள் இட்டகதை, தேவ கதை என்று சொல்லி விட்டு, இந்தக் கதையை இன்றைய தினம் அஸ்தமனத்திற்குள் எந்த ஜாதியாய் இருந்தாலும் மூன்று பேருக்கு உபதேசம் செய் என்று சொன்னாள்.உடனே பெரிய பெண் தங்கை வீட்டிலிருந்து கிளம்பி வெகுதூரம் போனாள். வழியில் ஒரு வாணி யனைக் கண்டாள். அவனைப் பார்த்து நான் ஒரு கதை சொல்கிறேன் கேள் என்றாள்.

அதற்கு அவன் நான் அரசர் வீட்டிற்கு எண்ணெய்க் குடம் கொண்டு போகும்போது கீழே விழுந்து எண்ணெய்க் குடம் உடைந்துவிட்டது. அரசர் என்ன செர்ல்வாரோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நான் எப்படி கதை கேட்பேன் என்றான். அதற்கு அவள் நீ கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி நான் சொல்ல வேண்டிய கடமை சொல்கிறேன் என்று கதை சொல்லலானாள்.

சந்திர சூரிய விருத கதையுண்டு. பட்டினியிருந்து சொல்ல வேண்டும. பசித்திருந்து கேட்க வேண்டும். இந்த கதையை கேட்ட பேருக்கு கேட்ட பொருளும் கைகூடும். கங்கா ஸ்நானம் செய்த பலன், பட்டபசுவும் பால் கறக்கும், பகையான பேர்களும் உறவாவார்கள், அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காதவழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூரவழி போனாலும் கதை, துக்கம் வந்தாலுங்கதை, எதை மறந்து சாப்பிட்டாலும் கதைதைய மறந்து சாப்பிடாதே. கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய். தேவர்கள் இட்ட கதை, தேவ கதை என்று கதையைச் சொன்னாள்.

இக்கதையைச் சொன்னவுடன் அவனைச் சுற்றிலும் எண்ணெய்க் குடங்கள் உண்டாயின. அவன் நீயாரம்மா பரதேவதை போல் கதை சொல்ல வந்தாய். நான் கேட்க மறுத்தேன். இவ்வளவு எண்ணெய்க் குடங்கள் வரவேண்டிய காரணமென்ன? எனக்கு ஒரு குடம் எண்ணெய் போதும் என்று சொன்னான்.

அதற்கு அவள் லெக்ஷ்மி தேவி அனுக்கிரகத்தினால் இவ்வளவு எண்ணெய்க் குடங்கள் உண்டாயின. இவைகளை வைத்துக் கொண்டு நீ சௌகரியமாகயிரு என்று சொல்லி விட்டு இன்னும் கொஞ்சதூரம் போனாள்.

வழியில் ஒரு குயவன் அழுது கொண்டு இருந்தான். அவனைப் பார்த்து ஒரு கதை சொல்கிறேன் கேள் என்று சொன்னாள். அதற்கு அவன் நான் ஆறுமாதமாக சூளை போட்டு சூளைவேகாமல் வியாபாரமே இல்லை. குழந்தைகள் எல்லாம் பட்டினியாக இருக்கின்றன. இப்படி இருக்கும்போது நான் எப்படி கதை கேட்பேன் என்று சொன்னான். அதற்கு அவள் நீ கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி நான் சொல்ல வேண்டிய கடமை சொல்கிறேன் என்று கதை சொல்லலானாள்.

சந்திர சூரிய விருத கதையுண்டு. பட்டினியிருந்து சொல்ல வேண்டும். பசித்திருந்து கேட்க வேண்டும். இந்த கதையை கேட்ட பேருக்கு கேட்ட பொருளும் கைகூடும். கங்கா ஸ்நானம் செய்த பலன், பட்ட பசுவும் பால் கறக்கும். பகையான பேர்களும் உறவாவார்கள், அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காதவழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூரவழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை, எதை மறந்து சாப்பிட்டாலும் கதையை மறந்து சாப்பிடாதே.கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய். தேவர்கள் இட்ட கதை, தேவ கதை என்று கதையைச் சொன்னாள்.இக்கதையைச் சொன்னவுடன் அவன் வீட்டில் தங்கமும், வெள்ளியுமாக பாத்திரங்கள் உண்டாயின. அவன் நீ யாரம்மா ஈஸ்வரி போல் கதை சொல்கிறேன் கேள் என்று சொன்னாய். நான் கேட்க மறுத்தேன். இவ்வளவு பாத்திரங்கள் வரவேண்டிய காரணமென்ன? எனக்கு வேண்டியது மண் பாத்திரங்கள்தான் என்றான்.

லெக்ஷ்மி தேவி அனுக்கிரகத்தால் இவ்வளவு பாத்திரங்கள் உண்டாயின. இவைகளை வைத்துக் கொண்டு நீ செளகரியமாய் இரு என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்ச தூரம் போனாள். ஒரு அக்கிரகாரத்தில் ஒரு வீட்டில் ஒரு பெண்மணி அழுது கொண்டிருந்தாள். விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. அவளைப் பார்த்து நான் ஒரு கதை சொல்கிறேன் கேள் என்றாள்.

அதற்கு அவள் நான் அஸ்தமனத்திற்குள் பால் கறந்து கொண்டு வந்து பாயாஸம் வைத்து பகவானுக்கு நிவேதனம் செய்து என்னுடைய 9 குழந்தைகளுக்கும் கொடுத்தேன். குழந்தைகள் இறந்து கிடக்கின்றன. இந்த விதமாக பாயாஸத்தை பகவானுக்கு நிவேதனம் செய்த தினால் பகவான் என்ன பாடுபடுகிறாரோ என்று கவலைப்பட்டு கொண்டு இருக்கும்போது எப்படி கதை கேட்பேன் என்றாள்.

அதற்கு நீ கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி நான் சொல்ல வேண்டிய கடமை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு தீபத்தை தூண்டி விட்டு, தீப நாச்சியாரே கதை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு தீபத் தினிடத்தில் உட்கார்ந்து கதை சொல்லலானாள்.18

சந்திர சூரிய விருத கதையுண்டு. பட்டினியிருந்து சொல்ல வேண்டும். பசித்திருந்து கேட்க வேண்டும். இந்த கதையை கேட்ட பேருக்கு கேட்ட பொருளும் கைக்கூடும். கங்கா ஸ்நானம் செய்த பலன், பட்டபசுவும் பால் கறக்கும், பகையான பேர்களும் உறவாவார்கள், அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காதவழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூரவழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை, எதை மறந்து சாப்பிட்டாலும் கதையை மறந்து சாப்பிடாதே. கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய். தேவர்கள் இட்டகதை தேவகதை என்று இவ்வாறு சொன்னவுடன், லெக்ஷ்மிதேவியானவள் ஒரு செம்பில் தீர்த்தமும் ஒரு கையில் பிரம்பும் எடுத்துக் கொண்டு வந்து குழந்தைகள் மேல் தெளித்து ஒரு தட்டுதட்டி கிளப்பி விட்டாள்.

குழந்தைகள் எல்லாம் தூங்கி விழித்தன போல் எழுந்தன. நீ யாரம்மா? லெக்ஷ்மியோ, சரஸ்வதியோ, பார்வதியோ கதை சொல்ல வந்தாய், நான் கேட்க மறுத்தேன். குழந்தைகள் எல்லாம் எழுந்திருந்த விதத்தை எனக்கு சொல்ல வேண்டும் என்று சொல்ல, நான் இந்தக் கதையை சொல்ல வேண்டும் என்று சொன்னேனே தவிர, லெஷ்மியும் அல்ல, சரஸ்வதியும் அல்ல, பார்வதியும் அல்ல, உன்னைப் போன்றவள்தான்.

லெஷ்மிதேவி அனுக்கிரஹத்தால் குழந்தைகள் எல்லாம் பிழைத்து விட்டன. இவர்களை வைத்துக் கொண்டு சௌகரியமாயிரு என்று சொல்லிவிட்டு, வீடு திரும்புவதற்குள் அவள் வீட்டில் அஷ்ட ஐச்வரியங்களும்உண்டாகி இவளை எதிர்கொண்டு அழைக்க வந்தார்கள். அதற்கு மேல் தரித்திரம் இல்லாமல் நன்றாயிருந்தாள்.

இந்தக் கதையை பக்தியுடன் சொன்னபேரும் கேட்ட பேரும் க்ஷேமமாய் இருப்பார்கள் என்று பெரியோர்கள் கூறியுள்ளார்கள். பாலாதேவி நமஸ்காரம், லலிதாதேவி நமஸ்காரம், லெக்ஷ்மிதேவி நமஸ்காரம், பார்வதிதேவி நமஸ்காரம், சரஸ்வதிதேவி நமஸ்காரம், சாயிதேவி நமஸ்காரம், ஸர்வாப்யோ தேவாப்யோ நமஹ. ஸமர்ப்பயாமி.

வெள்ளிக்கிழமை குளித்துவிட்டு விளக்கு முன் இந்தக் கதையை பக்தியுடன் சொல்லிவிட்டு ஒரு சுமங்கலிக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமம் கொடுக் கவும். எல்லாம் தேவி அருளால் ஸர்வ பாக்யமும் உண்டாகும்.இதுவரை நீங்கள் பார்த்தது வெள்ளிக்கிழமை பிறந்த கதையின் சுவாரசியம் நாமும் இந்த வெள்ளிக்கிழமையை கொண்டாடுவோம்

vinodhan,

Courtecy refer to வெள்ளிக் கிழமை பிறந்த கதை ,Friday book,sanskrit skanda,amman 

Shopping Cart