‘நோ வகிடு எடுக்கலாமா? கோணல் வகிடா? ஒத்தை ஜடை போடலாமா? இரட்டை ஜடையர்? ஜடையை டைட்டாகப் பின்னலாமா? இரஸாகவா?’ பாப் கட் பண்ணலாமா? பாய் கட்டா? தலைமுடியை எப்படி அலங்காரம் செய்துகொள்வது?’ என்று அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை சிந்தனை செய்யாத பெண்களே இல்லை! இந்த விஷயத்தில் பெண்களுக்கு ஆண்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை!. எல்லோரும் முடிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதால்,
முடியைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம்!
சீதோஷ்ண மாற்றங்களிலிருந்து நம் உடம்பை பாதுகாத்துக் கொள்ள மனிதன் ஆடைகளை அணிய ஆரம்பித்தபின் உடம்பில் முடியின் தேவை குறைந்து போனது. அதனால், அடர்த்தியும் வளர்ச்சி வேகமும் குறைந்துவிட்டது!
உடம்பில் Follicles எனப்படும் ரோமக்கால்களிலிருந்துதான் முடி முளைக்கிறது. வளர்ந்த வாலிப வயதில் இருக்கும் மனிதனின் உடம்பில் மட்டும் 50 லட்சம் ரோமக்கால்கள் இருக்கின்றன. இதில் 10 லட்சம் ரோமக் கால்கள் கழுத்துக்குமேல் இருக்கும் பகுதியில் இருக்கின்றன. சீப்பை எடுத்துக் கொண்டு நாம் சீவுகிற மண்டையில் (Scalp) மட்டும் எத்தனை ரோமக்கால்கள் என்றால்… சுமார் ஒரு லட்சம்! முடியை வைத்து உலகத்தில் உள்ள மனிதர்களை மருத்துவ உலகில் மூன்று வகைகளாகப்
பிரிக்கின்றார்கள்… இதில் முதலாவது நீக்ரோக்கள். இவர்களின் முடி சுருட்டை சுருட்டையாக இருக்கும். இரண்டாவது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் மங்கோலிய இனத்தவர். இவர்களுக்கு முடி கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கும்.
மூன்றாவது ரகத்தில் வருவது ப்ரௌன் தோல் உடைய ஆசியர்களாகிய நாமும் வெள்ளையர்களும் – இந்தப் பிரிவினரின் முடி சாஃப்டாக இருக்கும்!
ஒரு தனிநபரின் உடம்பில் இருக்கும் முடியிலேயேகூட நிறைய வகைகள் இருக்கின்றன. ஒருவரின் தலை, மீசை ஆகியவற்றில் இருக்கும் முடி ஒரு வகை! மாமப் பிரதேசங்களைச் சுற்றி இருக்கும் முடி அடுத்த வகை! மார்பு, கை, கால் என்று உடம்பில் இருக்கும் முடி மூன்றாவது வகை!
மார்பில் கொச கொச என்று முடியுடைய வாலிபர்களுக்கு அந்த ஆசை அதிகம் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது உண்மை இடையாது. -ஆனர்ல் மார்பில் முடியுள்ள ஒரு வாலிபனைப் பென் ரசிக்கக்கூடும் இதேபோல மாமட் பிரதேசங்களில் வளரும் முடியும் மனரீநியாக செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டக்கூடியது! பற்றாக்குறைக்கு அக்குள்முடி மற்றும் முடிகால்கள் வழியாக வாசனைச் யூபிக் (Scent Glands). வெளிப்படுத்தும் வாசனையிலும் செக்ஸ் ஆசையைத் தூண்டிவிடும் மந்திரம் மறைந்திருக்கிறது.
சராசரியாக ஒரு மனிதனுக்குத்
தினமும் 0.5 மில்லி மீட்டா
நீளத்துக்கு மண்டையில் இருக்கும்.
ஒவ்வொரு முடியும் வனாகிறது!
தலையில் இருக்கும் முடியின் ஆயுள் அதிகபட்சம் 94 வாரம்… ஆனால், வயதானவர்களைப் பொறுத்தவரை தலைமுடியின் ஆயுள் வெறும் 17 வாரங்கள் அளவுக்குக்கூடக் குறைந்துபோகும்….. வயதானவர்களாக இருந்தாலும் சரி, வாலிபர்களாக இருந்தாலும் சரி, முடியின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. இதில் முதல் கட்டம் வளர்ச்சி. பிறகு தேக்கம். மூன்றாவது உதிர்தல்! ஆனால், முடி உதிர்வதற்கு முன்பே பக்கத்தில் இன்னொரு முடி வளர ஆரம்பித்துவிடுகிறது சரி, சில சந்தேகங்களுக்கான விளக்கங்கள் பார்ப்போம்.
அடிக்கடி ஷேன் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா? வளராது! அதைப்போலவே மொட்டை அடித்துக்கொண்டால் முடி கருககுவென்று வளரும் என்ற நம்பிக்கையிலும் உண்மை இல்லை! முடி நரைக்காமல் இருப்பதற்கு ஏதாவது வழி உண்டா?
இல்லை! வயதாகி ஒருவருக்கு முடி நரைத்தால், அதை மீண்டும் பழைய மாதிரி கறுப்பாக மாற்றுவதற்கு மருத்துவரீதியாக வழி கிடையாது. காஸ்மெடிக்காகத் தலையில் கறுப்புச் சாயம் வேண்டுமானால் பூசிக் கொள்ளலாம். ஆனால், வாலிப வயதிலேயே தலை நரைக்க ஆரம்பித்தால்.. இதைக் குணப்படுத்திவிட முடியும்.
வகை வகையாக வழுக்கைகள் உண்டா?
மனிதர்களைத் தவிர, சிம்பன்சிகளுக்குக்கூட வயதானால், தலையில் வழுக்கை விழும்! இதற்குக் காரணம், தைராய்டு சுரப்பி தனது சுறுசுறுப்பை இழப்பது! அடுத்த காரணம் வம்சாவழி!
ஒருவருக்கு மண்டையில் வழுக்கை விழுந்தால் திரும்பவும் அங்கேமுடி வளரவைப்பதற்கு ஒரே வழி – Hair Transplant! அதாவது, தலையிலேயே முடி இருக்கும் இடத்திலிருந்து முடியைத் தோலோடு எடுத்து, சொட்டை விழுந்த இடத்துக்குமேல் வைத்துத் தைத்து விடுவதுதான். சரி, அப்படியானால் முடி வெட்டி எடுக்கப்பட்ட இடம் என்னவாகும். ? கவலையில்லை… முடி உயிரோடு இருக்கும் பகுதி அது என்பதால், அங்கே முடி தானாகவே வளர்ந்துவிடும்.
தற்காலிக வழுக்கை என்று ஒன்றும் சிலருக்கு ஏற்படுவது உண்டு. இதற்குப் பல காரணங்கள். அதில் முக்கியமான மூன்று காரணங்களை மட்டும் இங்கே சொல்கிறேன்.
* சிலர் எழுதும்போது, சிந்திக்கும்போது அல்லது டி.வி. பார்க்கும்போது, தலைமுடியை ஒரு கையால் பிய்த்துக்கொண்டே இருப்பார்கள். இது இவர்களைப் பொறுத்தவரை ஒரு மேனரிஸம். இதற்கு Tricho Tillo Mania என்று பெயர்.
* மஞ்சள்காமாலை, அம்மை, மலேரியா என்று ஏதாவது கடுமையான
நோயால் பாதிக்கப்பட்டு, மீண்டு எழுபவர்களுக்குத் தற்காலிகமாக முடி
கொட்டும்.
* குடும்பத்தில் சண்டை, சச்சரவு, வேலையில் டென்ஷன், பரபரப்பு என்று இருந்தால்கூட தற்காலிகமாகச் சிலருக்கு முடி கொட்டும்! சில பெண்களுக்குப் பிரசவம் முடிந்த பிறகு முடி கொட்டும்! தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் முடி பழைய மாதிரி மீண்டும் முளைத்துவிடும்.
இது தவிர, பேன்-ஈறு ஆகியவற்றால்கூடச் சிலருக்கு வழுக்கை விழும்,
இதுவும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடியதே! வழுக்கைத்தலையர்கள் என்றால் ‘அறிவாளி’ என்று அர்த்தமா?
முடி வளரவைப்பதற்கு ஒரே வழி – Hair Transplant! அதாவது, தலையிலேயே முடி இருக்கும் இடத்திலிருந்து முடியைத் தோலோடு எடுத்து, சொட்டை விழுந்த இடத்துக்குமேல் வைத்துத் தைத்து விடுவதுதான். சரி, அப்படியானால் முடி வெட்டி எடுக்கப்பட்ட இடம் என்னவாகும். ? கவலையில்லை… முடி உயிரோடு இருக்கும் பகுதி அது என்பதால், அங்கே முடி தானாகவே வளர்ந்துவிடும்.
தற்காலிக வழுக்கை என்று ஒன்றும் சிலருக்கு ஏற்படுவது உண்டு. இதற்குப் பல காரணங்கள். அதில் முக்கியமான மூன்று காரணங்களை மட்டும் இங்கே சொல்கிறேன்.
* சிலர் எழுதும்போது, சிந்திக்கும்போது அல்லது டி.வி. பார்க்கும்போது, தலைமுடியை ஒரு கையால் பிய்த்துக்கொண்டே இருப்பார்கள். இது இவர்களைப் பொறுத்தவரை ஒரு மேனரிஸம். இதற்கு Tricho Tillo Mania என்று பெயர்.
* மஞ்சள்காமாலை, அம்மை, மலேரியா என்று ஏதாவது கடுமையான
நோயால் பாதிக்கப்பட்டு, மீண்டு எழுபவர்களுக்குத் தற்காலிகமாக முடி
கொட்டும்.
* குடும்பத்தில் சண்டை, சச்சரவு, வேலையில் டென்ஷன், பரபரப்பு என்று இருந்தால்கூட தற்காலிகமாகச் சிலருக்கு முடி கொட்டும்! சில பெண்களுக்குப் பிரசவம் முடிந்த பிறகு முடி கொட்டும்! தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் முடி பழைய மாதிரி மீண்டும் முளைத்துவிடும்.
இது தவிர, பேன்-ஈறு ஆகியவற்றால்கூடச் சிலருக்கு வழுக்கை விழும்,
இதுவும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடியதே! வழுக்கைத்தலையர்கள் என்றால் ‘அறிவாளி’ என்று அர்த்தமா? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது மாதிரி சிலர் வழுக்கையையும் அறிவையும் இணைத்துப் பேசுகிறார்கள். ஸாரி! மருத்துவரீதியாக அறிவுக்கும் வழுக்கைத் தலைக்கும் சம்பந்தமே இல்லை!
BY VINODHAN,