சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு உடலில் மறைமுகமாக இருந்து இயங்கும் அத்தனை பாகங்களையும்
அதை இயக்கும் ஆற்றலையும் ஒளிக்கண்களால் அறிந்து அதை சாதாரண மனிதனுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
அந்த வரிசையில்
திருமூலரும், யோகிமுனி போன்றவர்கள் என்பது குறிப்பிடதக்க செய்தி,
பொதுவாக பித்தம், கபம், வாயு என மூன்று நாடிகளைக்கொண்டு நோய்களை கண்டறிந்துள்ளார்கள்
அதாவது வாதம் என்பதை வாயு நாடி காற்றையும்,
பித்தம் என்பதை வெப்பநாடி என்றும்,
கபம் என்பதை நீர் நாடி என்றும் பிரிக்கின்றர்கள்
இந்த மூன்றில் ஒரு நாடி குறைந்தாலும் சரி அல்லது அதிகரித்தாலும் சரி,
அது தான் நோய்கள்.
அதுபோக பத்துவகையாக நாடிகளை பிரித்து
அதை என்னென்ன பணிகளை செய்கிறது என்பதையும் நமக்கு கண்டறிந்து கூறியுள்ளார்கள்
அபானன், பிராணன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருக்கரன், தேவதத்தன், தன்ஞ்செயன் என பத்து நாடிகள்
அவை செய்யும் வேலைகள் என பிரித்து பிரித்து வைத்துள்ளார யூகிமுனிவர்.
1.அபனான் வாயு
மலம் மற்றும் சிறுநீரை வெளியே தள்ளும் பணியை செய்கிறது
2. வியணன் என்கிற வாயு
தோளில் இருந்துகொண்டு உடம்பில் உள்ள 72000 நாடிகள் வழியாக தசைகளை இயக்கும் வேலையை செய்கிறது.
3. பிராணன் வாயு என்பது
உடலுக்கு தேவைப்படும் முதன்மையான வாயு என்று தான் கூறவேண்டும்,
ஒரு நாளைக்கு இந்த வாயுவானது 21600 மூச்சி ஓட்டத்தை நடைபெற செய்கின்றது
அதில் 14400 மூச்சி ஓட்டமானது மூலதாரத்தோடு அடங்கிவிடும்
மீதி 7200 மூச்சிகள் வெளியே சென்றுவிடும் இந்த அற்புத வேலைகளை பிராண வாயு செய்கிறது
இந்த மூச்சி கணக்கிட்டு ஒரு மனிதனின் ஆயளையும் தீர்மானிக்க முடியும்.
4. உதானன் வாயு.
இது வயிறு பகுதியிலுள்ள ஜடாராக்கினியை தூண்டும் வேலையை செய்கிறது.
அதாவது
ஜடராக்கினி.
ஜடரா என்றால் வயிறு அல்லது ஜீரணத்தின் நெருப்பு. வயிற்றில் கொஞ்சம் நெருப்பு இல்லாவிட்டால் உண்ணும் உணவை உங்களால் ஜீரணிக்க முடியாது. உணவென்பது, நீங்கள் உடைத்து சக்தியை எடுத்துக்கொள்ளவேண்டிய எரிவாயுவாக செயல்படுகிறது. இந்த ஜீரணத்தின் நெருப்புக்குத் தேவையான எண்ணெயும் சரியான ஊட்டமும் வழங்கப்பட்டால், அது இனப்பெருக்கத்திற்கான நெருப்பாகவும் மாறுகிறது. செரிமானமும் இனப்பெருக்கமும் ஜடராக்கினி என்கிறோம்.
5. சமானன் வாயு.
இதுஅடி வயிறு முதல் பாதங்கள் வரை சென்று வாய்வை ஒரே சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
6. நாகன் என்கிற வாயு
உடலிலுள்ள முடிகளை அசைக்கவும், கண் சிமிட்டவும் உதவி செய்கிறது.
7. கூர்மன் வாயு.
வாய் திறந்து மூடவும், கண் திறந்து பார்க்க, கண்ணீர் வரவைக்க உதவும்.
8. கிருகரன்
இந்த வாயு நாக்கில் நீர் சுரக்க, மூக்கில் நீர் சொட்ட, தும்மல், இருமல் ஏற்படுத்தவும் இது உதவும்.
9. தேவதத்தன்.
இந்த வாயு சண்டை,கோபம், வெறி, சோம்பல் போன்றவைக்கு காரணமாக இருக்கின்றது.
10. தனஞ்செயன் வாயு.
இந்த வாயு கன்னத்தில் இருக்கும் அதனால் தான் நம்மால் வேகமாக சப்தமிட்டு பேசமுடிகின்றது
இந்த வாயுவுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால்
ஒரு மனிதன் இறந்து மூன்று நாள் வரை அந்த உடலில் இருக்கும்
மூன்றாம் நாள் தலையை பிளந்துக்கொண்டு வெளியே போகும் என்கிறார்கள்.
அதாவது இந்த வாயு தான் ஆன்மா என்றும் சொல்லலாம்
இவ்வளவு பெரிய இரகசியங்களை எப்படி சித்தர்கள் கண்டுபிச்சாங்க என்றால் அது தான் 7ம் அறிவு
(vinodhan,)