உடலுறவு அனுபவத்தைநினைத்தே ஞானமடைதல் தந்த்ரா..🌹
மூன்றாவது சூத்திரம்.
அரவணைப்பில்
இல்லாவிட்டாலும் சங்கமத்தை நினைவில் கொள்வதே மாற்றம் விளைவிக்கும்,
ஒரு முறை நீ அறிந்து கொண்டால், பிறகு துணைகூட தேவையில்லை ,
நீ வெறுமனே அந்த செயலை நினைவுபடுத்திக் கொள்வதன் மூலம் அதனுட் செல்ல முடியும்.
ஆனால் முதலில் நீ அதை உணர்ந்திருக்க வேண்டும்.
இது கொஞ்சம் கடினமானது ஆனாலும் இது நிகழ்ந்திருக்கிறது.
அது நிகழாதவரை நீ யாரையாவது சார்ந்து இருக்க வேண்டும் .
பல்வேறு காரண்ங்களால் இது நிகழ்கிறது.
உனக்கு அந்த உணர்வு வரப்பெற்றிருக்குமானால் நீ மறைந்து ஒரு அதிரும் அலையாக நீ மாறிவிட்ட கணத்தை நீ அறிந்திருந்தால்,
உன் துணையோடு உண்டாக்கிக் கொண்ட அந்த வட்டத்தால் உன் துணை இல்லாது போய் விடுவதையும் நீ உணர முடியும்,
நீ தான் இருக்கிறாய், உன் துணை இல்லை- அவள் இல்லை-அல்லது நீ தான் இருக்கிறாய் அவன் இல்லை.
ஒருமை உனக்குள் நிகழ்வதால் துணை மறைந்துவிடுகிறது.
இந்த அனுபவம் பெண்களுக்கு நிகழ்வது எளிது- அவர்கள் கண்களை மூடியபடி கலவியில் ஈடுபடுகிறார்கள்,
இந்த நுணுக்கத்தில் நீ கண்களை மூடியிருத்தல் நலம் பயக்கும்.
அப்பொழுதுதான் உள்ளே ஒரு வட்டத்தினை முழுமையாக உணரமுடியும் .
இதை நினைவில் கொள் கண்களை மூடிக்கொண்டு, படுத்துக்கொள்-உன் துணை அங்கே இருப்பதைப்போல உணர், உன் உடல் அதிர்ந்து அலைகளாக மாறத் தொடங்கும்.
அதை அனுமதி , அடுத்தவர் அங்கேயில்லை என்பதை முற்றிலும் மறந்துவிடு ,
அடுத்தவர் இருப்பதைப் போல இயங்கு, துவக்கத்தில் தான் அடுத்தவர் இருப்பதை போல உணரவேண்டிவரும்
– ஒரு முறை அறிந்து கொண்டால் , உண்மையிலே அடுத்தவர் அங்கே இருப்பதாக மாறிவிடும் .
நீ கலவியில் இயங்குவதைப் போல இயங்கு உன் காதலியோடு எப்படியேல்லாம் செய்ய நினைத்தாயோ , அப்படியெல்லாம் செய், கத்து , இயங்கு , குதி,
அந்த வட்டம் , மாய வட்டம், அங்கே இருக்கும், அந்த வட்டம் உருவாவதை நீ உணர முடியும்,
இந்த வட்டம் , ஆணோடோ , அல்லது பெண்ணோடோ உருவாக்கப்படுவதல்ல ,
நீ பெண்ணாக இருந்தால் இந்த அண்டமே ஆனாகி விடுகிறது.
ஆணாக இருந்தால் அண்டமே பெண்ணாகி விடுகிறது.
நீ இந்த பிரபஞசத்தோடு ஆழமான சங்கமத்தில் இருப்பாய்-
வாயிலாக இருந்த அடுத்தவர் அங்கே இருக்கத் தேவையில்லை
உன் துணையாக இருக்கும் நபர் வெறும் கதவுதான்-
புணரும்போது, பிரபஞ்சத்தோடு புணர்கிறாய்.
முழுமைக்குள் செல்வதற்க்கான கதவே அடுத்தவர்,
நீ இருக்கும் வேகத்தில் அதை உணர்வதில்லை ,
நீங்கள் ஆழ்ந்த சங்கமத்தில் மணிக்கணக்காக அரவணைப்பில் இருந்தால், நீ மற்றவரை மறந்து விடுவாய்
-அந்த நபர் இந்த பிரபஞ்சத்தின் நீட்டிப்பே என்பதை உணர்வாய்.
ஒரு முறை அறிந்து கொண்டால், நீ இந்த நுட்பத்தைப் பயன் படுத்தலாம்,
நீ தனியாக இதைப் பயன் படுத்தலாம்.
நீ தனியாக இதைப் பயன் படுத்தும் போது உனக்கு ஏராளமான சுதந்திரம் கிடைக்கிறது.
மற்றவர்களிடமிருந்து விடுதலை கிடைக்கிறது.
உண்மையில் இந்த பிரபஞ்சமே மற்றவராக மாறி விடுவதால்தான் இது நிகழ்கிறது-
இந்த முறையைத் தொடர்ந்து கடைபிடித்து, ஒருவர், இடைவிடாது பிரபஞ்சத்தோடு சங்கமிக்க முடியும்.
வேறு பரிமாணங்களிலும் நீ இதை செய்யலாம் .
காலையில் நடக்கும் போது இதை செய்யலாம்.
அப்போது நீ காற்றுடன் , உதிக்கின்ற சூரியனுடன், ஆகாயத்துடன் , மரங்களுடன் தொடர்பு கொள்கிறாய்.
இரவில் நட்சத்திரங்களிலிருந்து தொடங்கி நீ இதை செய்யலாம்.
ஒரு முறை நீ இது எப்படி நிகழ்கிறது என்று அறிந்து இந்த அண்டத்தோடு கலவியில் ஈடுபட முடியும்.
ஆனால் மனிதர்களோடு துவங்குவது நல்லது –
ஏனென்றால் அவர்கள்தான் உனக்கு அருகாமையில் உள்ளார்கள்.
ஆனால் அவர்களைத் தவிர்த்து விடலாம். நேரடியாக நீ கதவை தாண்டி சென்று விட முடியும்.
சங்கமத்தை நினைக்கும் போதே மாற்றம் நிகழும்”
நீ மாற்றமடைவாய் . புதிய மனிதனாகி விடுவாய் .
தந்திரா காமத்தை ஒரு வாகனமாகப் பயன் படுத்துகிறது.
அதுதான் சக்தி , அது உன்னை மாற்றி , கடந்து சென்றடையும் பல நிலைகளைக் கொடுக்கிறது. vinodhan,