சீனா நாட்டு மருத்துவத்தின் ஆரம்பமூலம் தாவோயிஸம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் உருவாயிற்று. 600 BC வருடங்களில் லாவோட் கு இதனை வடிவமைப்பு செய்தார். மனிதகுலம் இயற்கையின் பகுதியாக அமைந்திருக்கிறது என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தத்துவம் அமைந்துள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் நம் வாழ்க்கையிலும் நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்களிலும் ஸ்திரத்தன்மையை உண்டாக்க  முயற்சி செய்கிறார்கள். ஆனால், நடைமுறை என்பது மாறும் தன்மை கொண்டதாக இருப்பதால், இந்தத் தொடர் மாற்றங்களிலிருந்து நம்மைச் சமநிலைப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுதான் நம்முடைய நல்ல சிந்தனைகளுக்கும் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது. யின் மற்றும் யாங் என்ற சொற்கள், பொருள்களின் குணத்தையும், அவை ஒன்றோடொன்று இயற்கையோடு தொடர்பு கொண்டுள்ளதையும் குறிப்பிடுகிறது. எல்லாப்

பொருள்களிலும் யின் மற்றும் யாங் சக்திகள் இருக்கின்றன. யின்னும் யாங்கும் நேர்மாறான குணம் கொண்டவை. ஒன்றை ஒன்று சமன்படுத்தக் கூடியவை. யின் ச்சீயும் யாங் ச்சீயும், நம் “உடலில் சமநிலையில் இருந்தால்தான், உடலில் ஆரோக்கியம் இருக்கும். பொதுவாக, யின்- யாங் சமநிலை நான்கு மாறுபாடுகளைக் கொண்டிருக்கிறது.

1 சரியான சமநிலையில் அமைத்திருக்கும் யின் மற்றும் யாங் ஆரோக்கியமான உடல்நிலைக்கு வழிவகுக்கும்.

2. சரியான அளவு யின் ச்சீ, ஆனால் அதிக யாங் ச்சீ, வெப்பத்தை உருவாக்கி, அளவுக்கு அதிகமான உடல் இயக்கத்தை ஏற்படுத்தும்.

3. சரியான அளவு யாங் ச்சி. ஆனால் குறைவான யின் ச்சீ, வெப்பத்தை உருவாக்குவதோடு (குறிப்பாக இரவில்) ஜீவாதார சக்தியையும் குறைக்கிறது.

4. சரியான அளவு யின் ச்சீ, ஆனால் குறைவான யாங் ச்சீ மந்தநிலையையும்,

சீதளத்தையும், குறைவான சுற்றோட்டத்தையும் உண்டாக்குகின்றன.

அடுத்த பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் வரைபடத்தில், யின் மற்றும் யாங் சமநிலைக் குறைபாடுகள், உங்கள் உடல்நிலையை எப்படிப் பாதிக்கிறது என்பதை எடுத்துக் காட்டும். அமைதிப்படுத்துவது, அதிகப்படுத்துவது மற்றும் கலைப்பது போன்ற அக்குபிரஷர் முறைகள் பக்கம் 29இல் விளக்கப்பட்டிருக்கின்றன.

யாங் குறைபாடுகள் யின் தொடர்பான நோய்களை உருவாக்குகின்றன. யின் குறைபாடு கள் யாங் தொடர்பான நோய்களை உருவாக்குகின்றன. எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாக, யின் மற்றும் யாங் சேர்ந்தே அமைகின்றன. யின் மற்றும் யாங்கின் குணங்கள் எப்போதுமே ஒன்றுக்கொன்று தொடர்பானவை. உதாரணமாக வெந்நீர், ஐஸ்கட்டியை விட அதிக யாங் கொண்டது; ஆனால் ஆவியைவிட அதிகமான யின்னைக் கொண்டது. இவற்றின் சில குணங்கள் அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

அதிக யாங் (சரியான யின்) உடல் முழுவதும் ச்சீ அதிகமாக இருக்கிறது. இது உடல் வெப்பத்தையும், அதிக உடல் இயக்கத்தையும், இரத்தச் சிவப்பான வீங்கிய முகத்தையும், எப்போதும் தாங்க முடியாத உடல் பாரத்தையும் ஏற்படுத்தும். இதற்கு, கலைத்தோ, அமைதிப்படுத்தியோ சிகிச்சை செய்ய வேண்டும். ஏனெனில், ச்சீ அதிகமாகவும், ஒரு வேளை முடக்கப்பட்டும், அல்லது அதிக உத்வேகத்துடன் இருக்கலாம்.

குறைவான யாங் (சரியான யின்)

ஒட்டுமொத்த ச்சீ குறைவதால், சீதளம் உண்டாகும். காரணம், யாங்கின் வெம்மைப்படுத்தும் குணம் இல்லை. சோர்வும் குறைந்த சுற்றோட்டமும் இதன் அறிகுறிகள். இதனால், அடிக்கடி அதிகமான வியர்வையும், சளியும் உடலில் உண்டாகும். இதன் காரணமாக, மூக்கு ஒழுகுதல் மற்றும் கட்டிகள் உண்டாகும்.

அழுத்த மையங்களும் நாடிகளும் பலப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஒட்டுமொத்த ச்சீ குறைவாக உள்ளது. மேலும், யாங் குறைவினால், வெப்பமாக உள்ளது.

குறிப்பு: அதிக யின் ச்சீக்கும், சரியான யாங் ச்சீக்கும் உள்ள பாதிப்புகள், அதிக யாங் ச்சீக்கும் பொருந்தும், ஆனால் இந்த நிலை எப்போதாவதுதான் நேரும்.

குறைவான யாங் (சரியான யின்)

ஒட்டுமொத்த ச்சீ குறைவதால், சீதளம் உண்டாகும். காரணம், யாங்கின் வெம்மைப்படுத்தும் குணம் இல்லை. சோர்வும் குறைந்த சுற்றோட்டமும் இதன் அறிகுறிகள். இதனால், அடிக்கடி அதிகமான வியர்வையும், சளியும் உடலில் உண்டாகும். இதன் காரணமாக, மூக்கு ஒழுகுதல் மற்றும் கட்டிகள் உண்டாகும். அழுத்த மையங்களும் நாடிகளும் பலப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஒட்டுமொத்த ச்சீ குறைவாக உள்ளது. மேலும், யாங் குறைவினால், வெப்பமாக உள்ளது. குறிப்பு: அதிக யின் ச்சீக்கும், சரியான யாங் ச்சீக்கும் உள்ள பாதிப்புகள், அதிக யாங் ச்சீக்கும் பொருந்தும், ஆனால் இந்த நிலை எப்போதாவதுதான்

யின் மற்றும் யாங்கின் குணங்கள்

யின்

நிழல்

பெண்மை

நிலா

ஓய்வு

மூலப்

பொருள்

சுருக்கம்

மென்மை

யாங்

வெளிச்சம்

ஆண்மை

சூரியன்

இயக்கம்

மூலப்பொருள்

இன்மை

விரிவு

கடினம்

யின்னும் யாங்கும் உடலில் அமைந்துள்ள பாங்கு

யின்

முன்பக்கம்

யாங்

பின்பக்கம்

உறுப்பின் சக்திவழங்கும் உறுப்புகள்

சாரம்

வெளிப்புறத் உறுப்புகள் தோல், தசைகள்

உட்புற

இரத்தம், உடல் திரவம்

ஈரம்

மிதம்

குளிர்ச்சி

மூழ்குதல்

ச்சீ

வறட்சி

வேகம்

வெப்பம்

எழுதல்

யின் மற்றும் யாங்கின் அறிகுறிகள்

யின் யாங்

நீண்டகால

நோய்

மெதுவாக வரும் நோய்

வெளிர்

முகம்

தாகமின்மை

வயிற்றுப்

போக்கு

சீதளம்

தூக்கம்

குறுகியகால நோய்

வேகமாக

வரும் நோய்

சிவந்த முகம்

தாகம்

மலச்சிக்கல்

அமைதியின்மை, தூக்கமின்மை

இந்த பதிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் சிகிச்சை முறைகள், யின் மற்றும் யாங்கைச் சமப்படுத்தும் நோக்கத்திலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. கீழ்க்கண்ட 4 முறைகளில் ஒன்றைக் கையாளவும்.

1. யாங் ச்சீயை அதிகப்படுத்துங்கள்.

2. யின் ச்சீயை அதிகப்படுத்துங்கள்.

3. அதிகமான யாங் ச்சீயைக் கலையுங்கள்; அமைதிப்படுத்துங்கள் அல்லது அப்புறப்படுத்துங்கள்.

4. அதிகமான யின் ச்சீயைக் கலையுங்கள்; அமைதிப்படுத்துங்கள் அல்லது அப்புறப்படுத்துங்கள்.

vinodhan,

 

Shopping Cart