உலகின் மிகவும் மர்மம் நிறைந்த பகுதியாக அறியப்படும் ஏரியா 51. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி டிரெண்ட் ஆவது வழக்கமான டிரெண்ட் ஆகி விட்டது. அங்கு என்னதான் நடக்கிறது. என் டிரெண்ட் ஆனது போன்ற பல கேள்விகளுக்கு கூகுள் தேடுதளத்தில் கிடைத்த சில பகுதிகள் இங்கு.

 ஏரியா 51′ பகுதியின் உண்மை பெயர். ‘நெவேடா டெஸ்ட் அண்டு டிரெய்னிங்ரேன்ஜ்’ இது அமெரிக்காவின் நெவேடா பகுதியில் அமைந்துள்ளது. இரண்டாம் உலக போரின் போது இங்கு அணு ஆயுத சோதனை நடத்தப் பட்டதாம்.
அமெரிக்காவின் ஆயுத சோதனைகள், உளவு விமானங்களின் சோதனை ஓட்டம், புதுமையான ஆயுத தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகள் போன்றவை இங்கு தான் நடைபெறுகிறது. அதற்காகவே இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பலத்த பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள்.

பாலைவன பகுதி போல நீளும் நிலப்பகுதியை வளைத்து அதில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் இங்கு நடத்தப் படுகின்றன. அதனால் ஆராய்ச்சிக் கூடங்களையும், நில அமைப்பையும் குறிப்பிட இங்கு 1 முதல் 30 வரையிலான பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு ‘ஏரியா 1’ பகுதியில் புதுரக போர் விமான தயாரிப்பு நடக்கிறது. 

                     

 ஏரியா 51 எங்கே இருக்கிறது?

லாஸ் வேகாஸில் இருந்து வடமேற்கே 80 மைல்கள் தொலைவில் நிவேடாவில் உள்ள ராணுவப் பயிற்சி முகாம் தான் ஏரியா 51 எனப்படுகிறது. நிவேடா பரிசோதனை மற்றும் பயிற்சி வளாகம் என்று அதை அமெரிக்க அரசு குறிப்பிடுகிறது. அது பரவலான எட்வர்ட்ஸ் விமானப் படை தளத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பல ராணுவ முகாம்களைப் போல, இதன் முதன்மையான பயன்பாடு பற்றிய தகவல்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. Facebook  Comment  உள்ளதைப் போல அந்த இடத்தில் அத்துமீறி நுழைவது சிரமமான காரியம் – அது மக்களுக்குத் தடை செய்யப்பட்ட பகுதி. வெளி வளாகத்தில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி இல்லாமல், அந்தப் பகுதிக்கு மேலே உள்ள வான்வெளியில், நுழைவதும் கஷ்டமான காரியம். அதற்கு அனுமதி தரப்படுவது கிடையாது.

 

ஏரியா 2′ பகுதியில் ஆயுத தயாரிப்பு நடக்கிறது என பெயர் பலகைகளை கொண்டு ஆராய்ச்சிக் கூடங்களையும் ஆராய்ச்சிகளையும் குறிப்பிட்டு பேசுவார்கள். அந்த வரிசையில் ‘ஏரியா 15’ பகுதியில் தான் மர்மமான விஷயங்களை ஆராய்வதற்கான கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அங்குதான் மர்ம முடிச்சுகளில் மிக முக்கியமான தான ஏலியன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளும் நடக்கிறது. அதனால் தான் ‘ஏரியா 15’ பகுதி பிரபலமானது. ‘ஏரியா 15’ என்று அழைக்கப்பட்ட பகுதி பின்னாளில் ஏரியா 51 என மாறியது. ஏரியா 51’ பகுதியில் கண்ணுக்கு தெரியும். ஆய்வுக் கூடங்களை விட மண்ணுக்குள் மறைந்திருக்கும் ஆய்வுக் கூடங்களே அதிகம். அதனால்தான் ‘ஏரியா 51’ வைரல் விஷயத்தில் பட்டையை கிளப்புகிறது.

‘ஏரியா 51’ பற்றிய பரபரப்பு அடிக்கடி காட்டுத் தீ போல பரவுவதற்கு பாப்லஸார் என்ற ஆராய்ச்சியாளர் ஒரு காரணம். ஏனெனில் பாப்லஸார் 1989-ஆம் ஆண்டு முதல் ‘ஏரியா 51’ பகுதியின் எஸ்-4 சோதனை பிரிவில் பணியாற்றி வருவதாக வும் இவரே ‘ஏரியா 51’ பகுதியில் நடக்கும் ஏலியன் ஆராய்ச்சிகளுக்கு வகிக்கிறார். என்றும்
கூறப்படுகிறது. இவர் வெளியிடும் ஆய்வு முடிவுகள் தான் ஏரியா 51′-யை பரபரப்பாக்குகிறது.

பாப்லஸார் ‘ஏரியா 51’ பகுதியில் சில ஏலியன்களை பிடித்து வைத்து ஆய்வுகளை மேற்கொள்வதாக வெகு காலமாக நம்பப்படுகிறது. அதற்கு சான்றாக ஏலியன் தொடர்பான பல உண்மை தகவல்களை பாப்லஸார் வெளியிட்டுள்ளார். யூ.எப்.ஓ. எனப்படும் பறக்கும் தட்டு தொழில்நுட்பம், பறக்கும் தட்டிற்கான எரிபொருள் தொழில் நுட்பம்,ஏலியன்களின் கிரகம் பற்றிய தகவல் என பலவற்றை ஆய்வு முடிவுகளாக வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக 2003-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உன்னுன்பென்டியம் தனிமத்தை 1989-ஆம் ஆண்டே கணித்து கூறிவிட்டார். உன்னுன்பென்டியம் தான் ஏலியன் தொழில்நுட்பத்தின் பலம் என்றும் கூறியிருந்தார்.

‘ஏரியா 51’ பகுதியில் ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களது விவரங்களை வெளியிட அமெரிக்கா அரசாங்கம் தயங்குகிறது. அங்கு பணியாற்றுபவர்களுக்கென லாஸ்வேகாஸில் இருந்து தினமும் 20 சில விமானங்கள் ‘ஏரியா 51’ பகுதிக்கு சென்று வருவதாகவும் அவைகளில் 1000 ஊழியர்கள் அங்கு சென்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

வெள்ளை நிற விமானத்தின் நடுவே சிவப்பு கோடு இருக்கும். ‘ஜேனெட்’ என அழைக்கப்படும். இந்த விமானம் மட்டும்தான் ‘ஏரியா 51’ பகுதியின் வானில் பறக்க அனுமதிக்கப் படுகின்றது. ராணுவ விமானங்களுக்கு கூட இங்கு பறக்க குறிப்பிடத்தக்கது. என்பதும் அனுமதி கிடையாது

ஏரியா 51 எப்படி இருக்கும்?

        விமானப்படை தளத்திற்குச் செல்லவில்லை. ஆனால், பாலைவனத்தில் எவ்வளவு தொலைவுக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு தொலைவு செல்வோம், நம் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என நினைத்துப் பயணித்தோம் – விலகி இருக்குமாறு அமெரிக்க ராணுவத்தின் மிரட்டும் வகையிலான எச்சரிக்கைகளை மட்டுமே நாங்கள் பார்க்க முடிந்தது” என்று சினியட் கர்வன் தெரிவித்தார்.அவர் முன்பு ரேடியோ 1 நியூஸ்பீட் -ல் பொழுதுபோக்குப் பிரிவு செய்தியாளராக இருந்தார். இந்தக் கட்டுரை தொடர்பான விஷயங்களைக் கையாண்டதை அடுத்து, எங்களுடைய முதன்மையான வேற்றுகிரகவாசி செய்தியாளராகிவிட்டார். 2014ல் சாலைப் பயணமாக அவர் ஏரியா 51-க்குச் சென்றார் உயர் ரகசியத்தன்மை உள்ள அந்த ராணுவ முகாமை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுமே வேற்றுகிரகம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன.” அங்கு `பூமிவாசிகளை வரவேற்கிறோம்’ என்ற அறிவிப்புப் பலகை, நெடுஞ்சாலையில் இருந்தது பெட்ரோல் நிலையமும் வேற்றுகிரகத்தைப் போலவே அமைக்கப்பட்டிருந்தது. அலுவலர்களும் அதுபோலவே இருந்தனர். கவுண்டரில் இருந்த பெண்மணியும் போரடித்து இருப்பவரைப் போல இருந்தார்.” அங்கு சுற்றியிருந்த சில கட்டடங்களின் சுவர்களில் கார்ட்டூன் வேறுகிரகவாசிகள், அடையாளம் தெரியாத பறக்கும் வாகனங்களின் படங்கள் இருந்தன. அவற்றில் பிரபலமான லிட்டில் ஏரியன் மோட்டலும் ஒன்று.”புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தூண்டும் நிறைய அம்சங்கள் இருந்தன; ஆனால் ஏரியா 51 ன் பாதுகாப்பான வாயிலில் இருந்து நாங்கள் கண்காணிக்கப்படுகிறோமா என்று எங்களுக்கு சிறிது அச்சம் இருந்தது மர்மமான ஒன்று இருக்கும்போது அதைச் சுற்றி பல கற்பனைகளும் கதைகளும் கட்டி விடப்படும். அமெரிக்க ராணுவம் இந்த இடத்தில் ரகசிய ஆயுத ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாகவும், அமெரிக்கா அரசு வேற்றுகிரகவாசிகள் குறித்த சோதனைகளை ரகசியமாக செய்து வருவதாகவும், வேற்றுகிரக UFO-க்கள் வந்து இறங்குவதாகவும் பல மர்மக் கதைகள் இதைச் சுற்றி உள்ளன.24 ஜூலை 1952-ம் ஆண்டு இரண்டு விமானப்படை அதிகாரிகள் நெவாடாவில் கார்சன் சிங்க் என்னும் பகுதியில் மூன்று டெல்ட்டா விங் எனும் அசாதாரண விமானம் V வடிவத்தில் வானில் பறப்பதைப் பார்த்தாகச் சொல்லி பரபரப்பை பற்றவைத்தார்கள். அமெரிக்க கடற்படை வீடியோ ஒன்றில் வானில் சுழலும் ஒரு வட்டவடிவ UFO ஒன்றும் பதிவாகியுள்ளது. இது மட்டுமல்லாது ஏரியா 51-க்கு அருகில் பொதுமக்கள் பார்த்த பல UFOக்கள் பற்றிய தகவல்கள் கூட பதிவாகி உள்ளன. எது எவ்வாறாயினும் இதுவரை இந்த இடம் பற்றிய எந்த ஓர் அதிகாரப்பூர்வமான தகவல்களும் அமெரிக்க அரசால் வெளியிடப்படவில்லை.

                                                                                                   

                                                                                                         ஏரியா 51’யை எங்கிருந்து பார்க்க முடியும் தெரியுமா?

பாதுகாக்கப்பட்ட பகுதியான ‘ஏரியா 51’யை பொது மக்கள் பார்க்க முடியும். எங்கிருந்து தெரியுமா? வெகு தூரத்தில் நின்று ‘ஏரியா 51’ பகுதியில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ‘டிகாபூ பீக்’ பகுதியில் நின்று தொலை நோக்கி வழியே பார்க்கலாம். இதற்கு முன்பாக ‘வைட்ட சைட்ஸ்’ மற்றும் ‘ப்ரீடம் ரிட்ஜ்’ என இரு இடங்களில் இருந்து’ஏரியா 51′ பகுதியை பார்க்க முடிந்தது. பின்னாளில் இவை இரண்டும் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் இன்றைய இளைஞர்கள் ‘ஏரியா 51’ பகுதியின் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளனர். அங்கு என்ன உள்ளது. அப்படி அங்கு என்னதான் ஆராய்ச்சி நடத்தப்படுகிறது என்பதை தெளிவுப்பகுத்தி கொள்ள பல வழிகளில் எண்ணத்தோடு ‘ஏரியா 51’ பகுதியை நெருங்குவது அவ்வளவு சுலபம் இல்லை. அங்கு அமெரிக்கா வெள்ளை மாளிகையை விடவும் இரு மடங்கு பாதுகாப்பு போடப் பட்டிருக்கிறது ஒரு ஈ எறும்புக்கு கூட உள்ளே போக அனுமதி கிடையாது. அத்துமீறி உள்ளே நுழைவோர் கேள்விகள் இன்றி கைது செய்யப்படுவர். மேலும் இவ்விடத்தை பாதுகாக்கும் காவலர்கள் ‘Cammo Dudes’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ராணுவத்தையோ, காவல்துறையையோ சேர்ந்தவர்கள் அல்ல. ரகசியப் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள். இவர்களைப்பற்றி இன்றளவும் தகவல்கள் தர அமெரிக்கா அரசு மறுத்து வருகிறது. வேற்றுகிரகவாசிகளோ, அணு ஆயுத பரிசோதனையோ, விமானப்படை தளமோ, இல்லை இது அனைத்தையும் தாண்டிய வேறு ஏதோவொன்றோ, எதுவாயினும் அங்கு இருப்பது உண்மையில் என்னவென்பது அமெரிக்கா அரசுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம்.

Vinodhan,

Shopping Cart