மனதை ஒருநிலைப்படுத்துவது ஏற்படும் அதிக நன்மை கொண்ட பேரின்ப நிலை.. முதலில் மனம் என்பது குரங்கு நிலை கொண்ட தன்மையை தான் மனம் என்று கூறுவார்கள் ஏனென்றால் அவை குரங்கு போன்று அவை அங்கும் இங்கும் தாவி கொண்டே இருக்கும் மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் மணம் தான் ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் இதனை எண்ணம் என்று கூறலாம் சரி இதை நாம் ஒரு நிலை கொண்டு வரவேண்டும் மனதை அடக்கும் வித்தையை அறிந்தவன் இவ்வுலகில் எவரையும் நம்மால் அடக்க முடியும் நாம் யார் என்ற கேள்விக்கு பதில் யாருக்காவது தெரியுமா. மனதை ஒரு நிலைக்கு கொண்டுவரும் போது மனமானது அடுத்த கட்டத்திற்கு நம்மை எடுத்துச் சென்று அந்த கேள்விக்கான பதில் நமக்கு கிடைக்கும் .மனதை அடக்க தெரிந்தவனே வித்தைக்காரன் என்று சில ஆன்மிகவாதிகள் கூறுவது மன ஒருமைப்பாட்டு நிலைத்தான் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் இதற்கு அர்த்தம் இவைதான் இதற்கான விழிப்புணர்வு நம்மிடத்தில் இல்லை ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் சமுதாயத்தை பின்பற்றியே வாழ்வதினால் இதற்கான விழிப்புணர்வு நம்மிடத்தில் சற்று குறைவு தான் இந்த மனநிலையைத்தான் இப்போது உள்ள ஆன்மீகவாதிகள் நம்மிடம் மறைமுகமாக ஏதேதோ சொல்லிக் கொடுத்து வருகிறார்கள் இதனை புரிந்து கொண்டு இதை ஒருநிலை படுத்த முயற்சி செய்யவேண்டும் மனதை ஒருநிலைப்படுத்துவதனால்தெளிந்த நீரோடை போல் பளிச்சென்று தெளிவாக இருப்போம்‌‌. ஒரு நிலைப்பட்ட மனமானது அனைவரையும் ஈர்க்கும் அளவுக்கு சக்திகள் நம்மிடத்தில் இருக்கும் சக்திகள் என்பது வேறொன்றுமில்லை மனம் ஒருநிலை போது ஒருவித ஆற்றல் வெளியாவதைநாம் சக்தி என்கிறோம் மனம் ஒரு நிலை ஆனால் என்ன ஆகும் என்றால் ஆரோக்கியம் கூடும் பிறகு இரண்டு ஆள் பலம் கிடைத்தது போல் ஒரு உணர்வு இருக்கும் இதன் மூலம் நாம் அனைவரையும் நம்மால் வசீகரிக்க முடியும் மனதை உணர்வுகளில் சிதற விடாமல் பார்த்துக் கொண்டால் மனம் ஒருநிலைப்படும்.மக்களுக்கு இது போன்ற விழிப்புணர்வு வேண்டும் ஏனென்றால் சமுதாயத்தில் நடக்கும் நன்மையை விட தீமையையே அதிகம் மக்களுக்கு வெளியிடப்படுகிறது மனமானது அதைத் தொடர்ந்து தீமைகளையே அதிகம் சேகரிப்பதால் மனம் அதிகமாக எதிர்மறைக் கொண்ட எண்ணங்களையே உள்வாங்குகிறது எண்ணம் போன்றவை மனதில் இருந்துதான் தோன்றியது ஆகவே மனதை அடக்கினால் எண்ணங்கள் தோன்றுவது சற்று குறையுமே தவிர எண்ண அலைகள் நிற்காது அதை நாம் கண்டுக்காமல் இருக்கவேண்டும் மனமானது தெளிந்த நீர் போன்று இருந்தால் என்ன அலைகள் வராது எண்ணங்களை நிறுத்துவது எப்படி என்று கேட்டால் எண்ணங்களை எல்லாம் நிறுத்த முடியாது ஏனென்றால் இந்த உலகம் முழுவதுமாக எண்ண அலைகளையே பரிமாற்றம் செய்யப்படுகிறது ஆகவே பிரபஞ்சம் முழுவதும் எண்ண அலைகளே. எனவே மனதை செம்மை படுத்த முயற்சி செய்து அதனை அடக்கினால் அனைத்துமே நம்மிடம் வரும். எப்படி ஒரு நிலை கொண்டு வருவது என்றால் நீங்கள் எந்த வேலை செய்தாலும் உதாரணமாக ஓட்டுனராக இருந்தாலும் சரி நவீன டெக்னாலஜியை பற்றி வேலையாக இருந்தாலும் சரி ஒரு நிலையோடு அதாவது அதில் மட்டும் அதிக கவனம் கொண்டு வேலை செய்யும் போது அதில் உள்ள சூட்சுமம் நமக்குத் தெரியும் எந்த வேலையாக இருந்தாலும் சரி கவனம் கொண்டு செய்யும் போது அந்த வேலையில் நீங்கள் expert ஆக முடியும் இதை விட முக்கியமான ஒரு உண்மையான எதார்த்தமான விஷயம் என்னவென்றால் சந்தோஷமாக இருக்க முடியும் யாருமே இல்லாமல் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் மனஅமைதி இதில் கிடைக்கும் மக்கள் அனைவரும் ஏதேதோ கற்றுக்கொள்ள எங்கெங்கேயோ யாரையோ தேடி போய் கற்றுக் கொள்கிறார்கள் ஆனால் அந்த விஷயத்தை நீங்கள் முழுமையாக கற்றுக் கொண்டிருக்க மாட்டீர்கள் ஒரு சிலரே அதை கற்றுக் கொண்டு இருப்பார் அவர்கள் இயல்பாகவே மன ஒருநிலைப்பாடு இருக்கும் என்னதான் ஆர்வம் கொண்டு கற்றுக்கொள்ள போனால் ஒரு சிலரே அதை நடத்தி முடித்து காட்டுகிறார்கள் அதற்கு மிகப்பெரிய சிக்ரெட் என்னவென்றால் இந்த மன ஒருநிலை பாடுதான். சரி மனதை ஒருநிலை படுத்த என்ன செய்ய வேண்டும். இதற்கு சில பயிற்சிகள் இருக்கின்றது நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. நீங்களே நான் சொன்ன மனநிலைப்படி பயிற்சிக்கு சென்ற மனம் என்கிற நினைவலைகளை கட்டுப்படுத்தி உள்ளுணர்வு என்ற நமக்குள் இருக்கும் கடவுளை வெளியே கொண்டு வாழ்க்கையை வளமாக்கி உலக இன்பங்களை அனுபவித்து உலகத்திற்கு நன்றி சொல்லி வாழ்க்கையை முடித்து விட்டு சென்று விடுங்கள். நன்றி‌. இதில் மன ஒருமைப்பாட்டினை மட்டுமே நான் எழுதியுள்ளேன் வேற எதுவுமே இல்லை எல்லாம் புகழும் என் குருவிற்கு குருவே சரணம் நன்றி…..

Hipnotist SivaGanesh

Shopping Cart