துரியோதனின் உயிர் உல தொடையில் இருந்தது என்று கண்டுபிடித்து அவனை வீழ்த்தியது போல மனதின் உயிர் நிலையை அறிந்து சித்தர்கள் வீழ்த்தினார்கள். அது பற்றி விரிவாகக் காண்போம்.
நமது மனம் நமது நாசித் துவாரத்தில் இயங்கும் டே சுவாசத்தோடு இணைந்து காரியப்படுகிறது. சுவாசத்தின் என அசைவு எந்த நிலையில் உள்ளதோ அது போலவே அ மனிதனின் இயக்கமும் உள்ளது. மனம் இயங்கத் லி | தொடங்கிவிட்டால் அணுச்சிதைவு ஏற்பட்டால் எப்படி ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு பதினாறாக காரியப்படுவது போலவே மனமும் காரியப்படும். எனவே சுவாசத்தைப் பிடித்து மனதின் இயக்கத்தை முதலில் கட்டுப்படுத்தினார்கள். பிறகு மனதின் வலிமை இழந்த பிறகு அதைக் கொன்றார்கள். மனதின் வலிமை குறையாத வரை அதை எதிர்த்துப் போராடி வெல்ல முடியாது.
சித்தர்கள் மனதைக் கொன்ற விதத்தை அறிவோம். ஒரு மயில் சீற்றம் அடைந்த பாம்பைக் கொல்வதற்கு முதலில் பாம்பின் கொடூரத்தைக் குறைக்கும். நெடுநேரம் போராடிய பாம்பு களைப்படைந்து ஒடுங்கும்போது மயில் அதைக் கொன்று விடும். இதே முறையில் தான் மனதையும் கொல்ல வேண்டும். ஆரம்பத்தில் தவத்தில் கண்களை மூடியதுமே நமது மனம் படம் எடுத்து ஆடத் தொடங்கும். அதனுடைய ஆட்டம் குறைந்தது இரண்டு நேரமாவது நீடிக்கும். அதுவரை நாம் அதனிடம்நெருங்கவே கூடாது. பிறகு பாம்பின் சீறலைப் போன்று மனதின் சீறல் குறையும். அதாவது நமது மூக்கில் சுவாசம் உள்ளே போன பிறகு வெளியேறும் போது ஒரு சீறல் உண்டாகும். இது பனிரெண்டு அங்குலத்திற்கு மேலே போகும் போது சீறல் சத்தம் நன்றாகவே தெரியும். உதாரணமாக ஓடியாடி உடற்பயிற்சி செய்தவன் சீறல் போன்று இருக்கும். ஆடாமல் அசையாமல் மூச்சின் சிறலைக் கவனித்தால் பனிரெண்டு அங்குலமாகக் குறையும் போது சீறல் அறவே இருக்காது. பனிரெண்டு அங்குலம் என்பது புருவ மத்தியில் இருந்து ஒரு சாண் நீளமாகும். அடுத்து யோக சாதனை மூலமாக பனிரெண்டு அங்குலத்தி லிருந்து ஒரு அங்குலமாகக் குறைக்க கடினப் பயிற்சி செய்ய வேண்டும்.
நமது சுவாசம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற பஞ்ச பூத தொடர்பில் இயங்கும். இதனாலேயே மண்ணாசை, பொன்னாசை, பொருளாசை எல்லா ஆசைகளும் உதயமாகும். இதில் ஆகாய பூதத்தில் சுவாசம் நடக்கும் போது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் உருவாகும். மனதின் சுழற்சி வேகம் குறையத் தொடங்கும். இதை அறிந்த சித்தர்கள் ஐந்து பூதங்களில் ஆகாய பூதம் நடைபெறுகிற நேரத்தில் விழிப்பாக இருந்து மனதையும், சுவாசத்தையும் ஒடுக்குகிறார்கள். ஆகாயபூதம் நடைபெறாத படி மனம் கடுமையாகப் போராடும். அமைதியாக அமர்ந்தவர்கள் பெருமூச்சு விடுகிறார்களே அந்த நேரமே ஆகாய பூதம் சுவாசத்தில் நடக்கிறது என்பதாகும். அந்த நேரத்தில் [பனிரெண்டு அங்குல சுவாசத்தை நெருக்கி குறைத்து பதினொன்றாகக் குறைத்து விட்டால் மனதின் ஆற்றலும் பனிரெண்டில் இருந்து பதினொன்றாகக்குறைந்து விடும்] இதனால் யோகியின் குணாதிசயத்தில் மாறுபாடு உண்டாகும். அதாவது உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு நிற்கிற ஆற்றல் உண்டாகி விடும்.
எப்படியெனில் சாப்பிட ஆசை தோன்றும் போது சாப்பிடாமல் நிறுத்தி விடலாம். ஆனால் சாப்பிடும் இச்சை இருந்து கொண்டே இருக்கும். மாறாக பதினொன்று அங்குலமாகக் குறைந்த சுவாசம் மூலம்] சாப்பிடும் இச்சை இல்லாமல் போகும். அடுத்து இன்னும் போராடி இரண்டு அங்குலம் குறைத்து சுவாசத்தை பத்து அங்குலமாக குறைத்து விட்டால் மனதின் வேகம் குறைந்து மனம் அமைதியை விரும்பும். தவம் செய்வதை விரும்பும். தனிமையை விரும்பத் தொடங்கி விடுவார்கள். ஞானத்தின் சாயல் வெளிப்படத் தொடங்கி விடும் மேலும் போராடி ஆகாய பூதம் நடக்கிற நேரத்தில் மூன்று அங்குலம் குறைத்து விட்டால், அடுத்தவர் போதித்து உணராமலேயே தனக்குள்ளேயே ஞானம் உதயமாகி விவேகியாகி விடுவார்கள் இன்னும் பல ஆண்டுகள் தவம் இருந்து போராடி நான்கு அங்குலம் குறைத்து சுவாசத்தை எட்டு அங்குலமாகக் குறைத்து விட்டால் மனதிற்கு நாம் அடிமையாக இருந்தது மாறி நாம் இட்ட பணியைச் செய்து முடிக்கும் ஏவலாளி போலத் தூரத்தில் நடக்கும் சம்பவங்களைத் தெரிந்து வந்து மனம் உணர்த்தும். தனது சக்தியைப் பயன்படுத்தி மேலும் முயலாத வண்ணம் மனம் போராடும். அடுத்து ஐந்து அங்குலம் குறைத்து சுவாசத்தை ஏழு அங்குலமாக ஆக்கி விட்டால், மனம் தனது செயல்பாட்டை இழந்து விடும். இந்த நேரத்தில் சித்தர்கள் தரிசனம் உண்டாகும். நல்லாசிகளைத்தருவார்கள். அடுத்து சுவாசம் ஆறு அங்குலமாக வரும் போது ஆகாயத்தில் உள்ள பிரபஞ்ச இரகசியங்கள் தெரிய வரும். பிறப்பின் இரகசியமும் தெரிய வரும். வான் பற்றி நின்ற இறை தரிசனமும் உண்டாகும். அடுத்து சுவாசத்தை ஐந்து அங்குலமாகக் குறைக்கும் போது உடம்பு காய சித்தி பெற்று விடும். அதாவது உச்சந்தலை அமிர்தம் உடலில் ‘ புகுந்து கற்பதேகமாக மாற்றி விடும். பிரளய காலத்திலும் அழியாத சித்தி வல்லபம் உண்டாகும். இன்னும் போராடி சுவாசத்தை நான்கு அங்குலமாகக் குறைக்கும் போது, இது மிக மிகச் சிரமம்; என்றாலும் வெற்றி பெறும் போது மூக்கு நுனியை விட்டு சுவாசம் வெளியேறாது. மூக்கு என்பதே நான்கு அங்குல நீளம் மட்டுமே உடையது. அப்போது அணிமாதி சித்திகள் அனைத்தும் கைவரப்படும்.
இந்த நிலையில் அடுத்த மனிதர்கள் கண்களில் அகப்படாமல் மறைந்து வாழ தீர்மானிப்பார்கள். இன்னும் சுவாசம் மூன்று அங்குலமாகக் குறைக்கும் போது மூக்கில் நெருப்பு எறும்பு பயணிப்பது போல உணர முடியும். அப்போது இந்த சூரிய குடும்பத்தை விட்டு அடுத்தடுத்து உள்ள நவ கண்டங்களில் சஞ்சரித்து விட்டுத் திரும்பி வரும் வல்லபம் உருவாகி விடும். இதுவே ஆன்ம ஒளிப் பயண மாகும். அடுத்து சுவாசம் இரண்டு அங்குலமாகக் குறைக்கும் போது, நமது ஆன்மாவை நமது மனமே கண்டு வழிபாடு செய்யும். சிவதரிசனமும் ‘உண்டாகி இறைவனோடு நமது ஆன்மா உரையாடுவதை மூன்றாவது நபராக மனம் கண்டு களிக்கும். அடுத்து நமது சுவாசத்தை ஒரு அங்குலமாக குறைக்கும் போது புறப்பட்ட இடத்திலேயே சுழன்று வருவதால் தேகம் அழியாது. பல்லாண்டுகள் புதைந்துகிடந்தாலும், உணவு, உறக்கம், சுவாசம் இல்லாமல் வாழ முடியும். பஞ்ச பூதங்களின் தயவு இல்லாமலேயே நமது உடம்பு கல்தூண் போல ஆகி விடும். உணர்வு மட்டும் சிவ நடனத்தை கண்டு களிக்கும். அந்த உடம்பை விட்டு இறைவன் நீங்குவதே இல்லை. இப்படிப்பட்ட உடல்களை மனிதர்கள் கண்களுக்குத் தெரியாத வண்ணம் மறைத்து விடுவார்கள்.
நமது மனமும் விரும்பிய பறவையாகவோ, பாம்பாகவோ உடல் எடுத்து உலகைக் காண முடியும். ஆன்மா இறைவனை தொழுது நிற்கும். நமது மனம் விரும்பிய உடல் எடுத்து உலகில் மகிழும். பெரும்பாலான யோகிகள் கிளி, புறா,காகம்,பருந்து, நல்ல பாம்பு உருவத்தில் வாழவே விரும்புகிறார்கள். ஆரம்ப நிலை சாதகர்களுக்கு அறிவுரை வழங்கவும் உலகில் பஞ்சம் பட்டினி வராதபடி கோள்களை மாற்றி மழை வர வைப்பதும், உலக நடப்புகளில் கவனம் வைத்துக் கடவுள் போல தொண்டு செய்வார்கள். எனவே மனதைக் கொன்று அதைச் சீர்திருத்தி உலகில் நிரந்தர கர்மயோகியாக இருப்பதே சித்தர்களின் இலட்சியமாகும். வெல்லப்படாத மனதோடு செய்கிற கர்மயோகம் மிகவும் ஆபத்தானது. சித்தி பெற்ற பிறகு செய்வதே நிலையான விளைச்சல் ஆகும் இப்படி மனதைக் கொல்ல இரவும் பகலும் அயராது உழைக்கிறார்கள் யோகிகள். நுஞ்சபூதமாகிய ஆகாய பூதத்தைப் பயன்படுத்த தேர்ந்த பிராணாயாமம் கற்று பகற் பொழுதில் நமது சுவாசத்தை இடகலையிலும், இரவு தவம் செய்யும் போது சுவாசத்தை பிங்கலையிலும் மாற்றி சாதனை செய்யும் போது மிக விரைவில் சுவாச பந்தனம்உண்டாகிறது. இதன் மூலம் மனம் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகிறது.
மனம் ஒடுங்கும்போது தனித்திருந்து பசித்திருந்து விழித்திருந்து தவம் செய்கிற சுவையுணர்வு வந்து விடும். அப்புறம் உலக வாழ்வு அனைத்துமே ஒரு நாடக சாலை நடிப்பாகவே தெரியத் தொடங்கி விடும். இந்த முறையில் பயின்று சித்தியானவர்கள் மட்டுமே தவ சீலராகும். மற்றபடி செத்துப் போனவர்கள் தவமுறை அனைத்தும் காசாளர் ஆக்குமே தவிர கடைத்தேற்றம் என்பது வராது. இதுபற்றி விரிவாகவே அடுத்து பதிவில் காண்போம்!
vinodhan 7010054619