பொதுவாக வில்வ இலைகள் மூன்று இலைகளாக சேர்ந்து இருக்கும். இவற்றை திரிதள வில்வம் என்பார்கள்.

இந்த மூன்று இலைகளைப் பிரிக்காமல் மூன்று மூன்றாக இறைவனை அர்ச்சிப்பதே முறை.

மூன்று இலைகளுக்கு மேல் கொத்தாக ஐந்து, ஏழு என்று எண்ணிக்கைகளுடனும் அதற்கு மேலும் எண்ணிக்கையில் உள்ள வில்வ இலைகளும் உண்டு. இவற்றை மகா வில்வம் என்பார்கள்.

அது போல ஏழு வில்வ தளங்களுடன் துலங்கும வில்வத்திற்கு காசி வில்வம் என்று பெயர்.

இதை சௌபாக்கிய வில்வம் என்றும் சொல்வதுண்டு. சகல சௌபாக்கிய செல்வங்களையும் கொடுக்கக் கூடியதே காசி வில்வம்.

இதைவிட சென்னை கோவூர் சிவாலயத்தில் 16 இலைகளுடன் கூடிய மகா வில்வம் உண்டு. இதன் நோய் நிவாரண சக்திகள் அபாரம்.

இது போரூருக்கு அருகில் உள்ள தலம். புதனுக்குரிய தலம்.

இங்கு ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும், மகாவில்வ இலை பூஜை விசே‌ஷமானதாகும். சீதையை தேடி வந்த இராமன், இத்தல இறைவனை 48 நாள் விரதம் இருந்து வழிபட்ட பிறகே இராமேஸ்வரம் புறப்பட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது. 

இந்த வில்வ இலைகளின் தரிசனமே எத்தனையோ கொடிய நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்றால் அதைக் கொண்டு இறைவனைப் பூஜிப்பதால் ஏற்படும் பலன்களை என்னென்பது

vinodhan,

Shopping Cart