இந்தக் கேள்விக்கு இந்த உலகில் பலர் பேர் விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வித்தையை அறிந்தவர்கள் ஒரு சிலர் மட்டும் தான் பலரும் உண்டு அதிலும் இப்பொழுது இக்காலகட்டத்தில் தேவைப்படக்கூடிய ஒருவர் இது அவருடைய அனுபவம் அவர்தான் சுவாமி ராமா இந்த விஷயத்தை அனைத்தையும் தன் வாழ்க்கையில் அனுபவித்தவர் அவர் சொல்லும் செயல்பாடுதான் இந்த கருத்து இதை சொன்னது அனைத்தும் சுவாமி ராமா.நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்கிறோம்.உடலை அடிப்படையாக வைத்தே மனம் இயங்குகிறது என்று முடிவு செய்கின்றோம். உடலில் இருந்து மனம் பிறக்கிறது என்ற கோணத்திலிருந்து பார்த்தால் கர்ப்பத்திலுள்ள சிசுவுக்கு மனம் கிடையாது. அது உலகில் பிறந்த பின்னர்தான் எண்ணம், உணர்வு போன்றவை வளர்ச்சி பெறுகின்றன. இதே வகையில்தான் நாம் பிரபஞ்சத்தையும் பார்க்கிறோம்.எங்கிருந்தோ வந்து மண்ணில் விழுந்த சில மூலக்கூறுகள் பல்கிப் பெருகின. அதன் வாயிலாக உயிரினங்களின் தோற்றம் ஏற்பட்டதாக நாம் நம்புகிறோம். மில்லியன் கணக்கான வருடங்கள் அந்த உயிரினங்களுக்கு உள்ளே பல சிக்கலான விந்தைகள் நடந்தன. பிறகு மெதுவாக அந்த உயிருக்கு உணர்வுகள் தோன்றின.ஆனால் பழங்காலத்தைச் சேர்ந்த கீழ்த்திசை மக்களின் கருத்து வேறுவிதமாக இருந்தது. சொல்லப் போனால் முந்தைய கருத்துக்கு அதற்கு எதிரானதாகவே இருந்தது. மனிதனின் ஒவ்வொரு நிலையும் மேலே உள்ள நிலையிலிருந்து உருவெடுப்பதாக யோக தத்துவம் கூறுகிறது. உணர்வுகளில் இருந்து மனம் பிறக்கிறது. மனதிலிருந்து வெளிப் ஸ்தூல உடல் தோன்றுகிறது. மனம் உடலாக வடிவெடுக்க விரும்புவதால் அது அவ்விதம் தன்னை படுத்திக்கொள்கிறது என்கிறது யோக நூல்.
உலகைப் பார்க்கும் ஒரு வித்தியாசமான கோணம் இது! மனிதனின் மூலாதாரமானது உடல், மனம் போன்ற அம்சங்களுக்கு அப்பாற்பட்டது. புரிந்துகொள்ள முடியாத ஒரு உணர்வின் வடிவமாக நாம் பிறப்பெடுத்திருக்கிறோம் என்று இது உணர்த்துகிறது. ஸ்தூல உடலுக்கு அப்பால் இந்த உணர்வு நிலை அமைந்திருக்கிறது. இங்கிருந்துதான் நாம் வந்தோம். இறுதியில் இந்த இடத்திற்குத்தான் திரும்பிச்செல்ல இருக்கிறோம். இந்த முழுப்பிரபஞ்சமும் அந்த உணர்வு மையத்திலிருந்துதான் வெளிப்பட்டது. பின்னர் இறுதியாக அந்த மூலத்திற்கே திரும்பிப் போகவிருக்கிறது. கடல் அலைகரைக்கு வந்துவிட்டுக் கடலுக்குத் திரும்புவதை இதற்கு உதாரணம் கூறலாம்.சில வானியல் ஆராய்ச்சியாளர்களும் இதே விந்தையான கருத்தையே தெரிவிக்கிறார்கள். அவர்கள் ஆய்வு செய்யும் களமானது இதற்கு அப்பால் யோசிக்க அனுமதிக்கவில்லை. பிரபஞ்சம் பற்றிய அவர்களின் புவியியல் தீர்மானங்கள் தடுமாறிப் போகின்றன. அழியாத்தன்மை, முடிவற்ற நிலை போன்ற கோட்பாடுகள் சௌகரியமற்றுப் போகின்றன.எந்த இடத்தில் இவை எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்? காலம். ஆகாயம் போன்றவற்றிற்கு எல்லை இருந்தால், அது எங்கே உள்ளது? அதற்கு அப்பால் என்ன இருக்கிறது?
பிரபஞ்ச உண்மைகளை அறிவதற்கு மனித அறிவு ஒரு அற்பமான கருவி என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். பல வானியல் ஆய்வாளர்கள் பால்வெளி மண்டலங்களும் (Galaxies) கிரகங்களும் (Planets) ஒன்றையொன்று உந்தித் தள்ளுவதாக தற்போது நம்புகிறார்கள்.அவற்றுக்கு இடையே உள்ள ஆகாயவெளி விரிவடைந்து கொண்டே போகிறது. அந்த விரிவினால் ஏற்படும் அழுத்தம் ஏதாவது ஒரு மையத்தில் குவியும்போது அண்டப் பெருவெடிப்பு நிகழும் என்கிறார்கள். இதுவே அண்டப் பெருவெடிப்புக் (Big Bang Theory) கோட்பாடாகும்.வெடிப்புக்கு பிறகு அண்டப்பெருவெளி போதுமான அளவு விரிவடைந்த பின்னர் பிரபஞ்சம் அனைத்து கிரகங்களையும் தன்பால் மீண்டும் இழுக்கும், நட்சத்திரங்களும் பால்வெளி மண்டலங்களும் இந்த ஈர்ப்பில் இடம் பெறும். மீண்டும் ஒரு அடர்வு மையம் உருவாகும்போது அடுத்த அண்டவெடிப்பு நிகழும் என்கிறார்கள்.இது விரிவும், அழிவும் தொடர்ந்து நடைபெறும் இயக்கமாகச் செயல்படுகிறது. பிரபஞ்சம் மூச்சை உள்ளிழுத்து, வெளியே விடுகிறது என்றும் இதைக் கூறலாம். மனிதர்களாகிய நாம் உயிர் வாழ்வதும் இதே போன்று அமைந்திருக்கிறது. ‘பிரபஞ்ச சுவாசத்தின்’ மூலம் நாம் வளர்கிறோம். வடிவம் பெறுகிறோம் எனலாம். ஏதோ காரணமாக நாம் மனிதர்கள் வடிவில் பிரபஞ்சத்தில் உலவவிடப்பட்டுள்ளோம். ஸ்தூல உடல் பெற்றுள்ள நாம் நமது மேலே உள்ள உணர்வு நிலைக்கு திரும்பிச் சென்றாக வேண்டும்.
சுவாசம் என்ற விஷயத்தினுள் மறைந்து கிடக்கும் செய்திகளை ஒருவர் ஆராய்ந்து அறிவதற்கு விரும்பினால் அவர் பல்லாண்டு காலம் அல்லது தனது வாழ்நாள் முழுவதையும் அதற்குச் செலவழிக்க வேண்டிவரலாம்.சுவாசம் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுதல்:பிராணாசக்தியை அதிகரித்துக் கொள்ளும் காரியத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம் என்ற கருத்து மேற்கு நாட்டவர்களுக்கு வியப்பளிப்பதாக உள்ளது. சிலர் அதை ஒரு ரகசியமான கலை என்றும் கருதத்தலைப்படுகிறார்கள். கீழ்த்திசை நாட்டவர்களின் நுண்ணறிவு சார்ந்த விஷயங்களின் பக்கம் பார்வையைத் திருப்பினால், அது அவ்வாறான மாயாஜாலக்கலை அல்ல என்பது தெரியவருகிறது.யோகிகளின் கருத்துப்படி பிராணாசக்தி என்பது எளிமையான. விஞ்ஞானபூர்வமானதாகும். அறிவியல் பூர்வமான இந்த மூச்சுக்கலையைக் கற்றுக்கொள்ள கால அவகாசம் நிறையத் தேவைப்படுகிறது என்பது மட்டும் நிஜம். நமது கலாச்சாரமும்,. பழக்கவழக்கங்களும் சுயவிழிப்புணர்வை கூர்மைப்படுத்தி; கொள்வதிலிருந்து விலகிச் சென்றுவிட்டன. சுவாசம் பற்றிய விழிப்புணர்வை நாம் எளிதாக நம்மிடம் உருவாக்கித் கொள்ளலாம். நாம் வேலை செய்வது, சிந்திப்பது, உணர்வது போல சுவாச விழிப்புணர்வையும் ஒரு பழக்கமாக உருவாக்கிக் கொள்ள முடியும்.
உதாரணத்துக்கு உங்கள் இடது காலை எடுத்துக் கொள்வோம். அதைப் பற்றி நீங்கள் அதிகமாக அலட்டிக்கொள்வது கிடையாது. சொல்லப்போனால், அந்த காலைப் பற்றிச் சிந்திப்பதும் இல்லை.”நான் அடுத்த வைக்கவேண்டும்?”அடியைஎங்கே எடுத்து நான் தூங்கி எழுந்ததும் அதை எப்படி இயக்குவது என்று ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும்?” என்றெல்லாம் திட்டமிடுவதும் கிடையாது.நீங்கள் நடந்து செல்லும்போது உங்கள் மனதில் ஏற்படும் சிந்தனைகளை நிறுத்திவிட்டு நடப்பது மீது கவனம் செலுத்த அவசியமில்லை.வலது காலுக்குப் பிறகு இடது கால் உயரவேண்டும். அதன் பின்னர் மறுபடியும் வலது கால் இயங்க வேண்டும். பெருவிரலை கவனமாக மேலே உயர்த்தி நிலத்தில் இழுபடாமல் பாதுகாக்க வேண்டும்” என்றெல்லாம் திட்டம் போடுவது கிடையாது. உங்கள் கால் எங்கே பதிகிறது, என்ன செய்கிறது என்று நீங்கள் யோசிப்பதே இல்லை. அதைத் தவறான இடத்தில் வைத்து விடுவோமோ என்று அஞ்சுவதும் கிடையாது.
இந்தப் புத்தகத்தை உட்கார்ந்து நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் உங்களைச் சுற்றி இருக்கும் மக்களுடனும் கலந்துறவாடவே செய்கிறீர்கள். தொலைபேசி அழைப்பு வரலாம்என்று நினைக்கிறீர்கள். அதுபோலவே காலைப் பற்றியும் கவனம் உங்களிடம் இருக்கிறது.தொடர்ந்து வருடக்கணக்கில் நீங்கள் காலைப் பயன்படுத்து வதால் அது இயல்பாக இயங்குகிறது. அது எளிதாக வந்துவிடும் காரியமல்ல என்பதை நினைவில் வையுங்கள். சரியானபடி அதைப் பயன்படுத்தப் பல வருடகாலம் பிடித்திருக்கிறது. கால்களைச் சிறுவயதில் உபயோகிக்கப் பயிலும்போது வாயிலும் பாதங்களை வைத்துப் பார்த்திருக்கிறோம் அல்லவா?கால்களை அப்படியும் இப்படியுமாக அசைத்தும், பெருவிரலை பற்களால் கடித்து வலியால் சிணுங்கியும் அவதிப்பட்டிருக்கிறோம். பலவிதமான முயற்சிகளும், தவறுகளும் செய்து நாம் நடக்கக் கற்றுக்கொண்டோம். அதெல்லாம் நீண்ட காலத்துக்கு முன்பு நடந்தவை என்பதால், அதைப்பற்றி நினைக்கவேண்டிய தேவை ஏற்படுவதில்லை. இதேவகையில் சுவாசத்தையும் பயன்படுத்திப் பலன்பெற முடியும். காலால் நடப்பது போலவே சுவாசமும் ஒரு தன்னிச்சையான காரியமாக மாறிவிடும்.
சுவாசத்தின்மீது கவனம் செலுத்தி தொடர்ந்தவிழிப்புணர்வுடன் நம்மால் இருக்கமுடியும். அறிவியல்பூர்வமான மூச்சுக்கலை ஸ்வரோதயா (Svarodaya) என்று அழைக்கப்படுகிறது. இதில் தேர்ச்சிபெற்ற யோகிகளால் தங்களின் ஒவ்வொரு மூச்சின் மீதும் கவனத்தைச் செலுத்தி அதைக் கட்டுப்படுத்த முடியும்.யோகவிஞ்ஞானக் கலையின் முக்கியமான பகுதி பற்றி இப்போது பார்க்கலாம். சுவாசம் என்ற உடலியல் இயக்கம் மட்டும்தான் தன்னிச்சையாகவும், மனிதனின் விருப்பப்படியும் இரண்டு விதமாக இயங்கும் திறன் பெற்றிருக்கிறது. சாதகர் தனது சுவாசத்தின்மீது கவனம் வைத்து அதை அவர் விரும்பும் வகையில் வழி நடத்த முடியும். அவர் சுவாசத்தை கண்டு கொள்ளாது இருந்தால் உடல்தானே அந்த காரியத்தைச் செய்கிறது.சுவாசிப்பது இல்லாது போனால் உடல் இயக்கம் கிடையாது. சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம் அலட்சியப்படுத்தி விடும் சமயத்தில், மனதின் ஏதோ ஒரு பகுதி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மூச்சுவிடுவதற்கான இயக்கங்களை நடத்துகிறது.இப்போது சுவாசம் மூளையின் கட்டுப்பாட்டிற்குள் விடுகிறது.
நமக்குள்ளே இருக்கும் 30 ஆழ்மனப்பிராந்தியம் சிக்கை தீர்க்கக் கைகொடுக்கிறது. இங்கிருந்து தான் மனக்கிளர்ச்சிகம் எண்ணங்கள், சிந்தனைகள் புறப்படுகின்றன என்று நாம் புரி கொள்வதில்லை. போதுமான விழிப்புணர்வு நம்மிடையே இல்லாது போய்விட்டதே காரணமாகும். சுவாசத்தின்மீது நமக்கு கவனம் இல்லாது போனால் அதன் ஒழுங்கும், நேர்த்தியும் கெட்டி. போய் விடுகின்றன.இதே காரியம் உங்கள் இடது காலுக்கும் நேரலாம் ஜனங்க தங்கள் பாதங்களைச் சரியாகப் பயன்படுத்தத் தவறும்போது இ நடக்கிறது. தவறாக பயன்படுத்தினாலும் இது நேரலாம். “ஐயோ எனது குதிக்காலில் கடுமையான வலி ஏற்படுகிறதே” என்று கூறுகிறார்கள். கொஞ்சம் அனுசரிப்புடன் இருந்தால், உங்களால் எப்போதும் போல நடக்க இயலும்.அக்கறை இல்லாது போகும்போது பாதம் கோணலாகி வடிவம் மாறிப்போகலாம். அதன் பிறகு நீங்கள் பாதங்களுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவருக்கு ஒரு பெரிய தொகையைக் கட்டணமாகச் செலுத்தி வைத்தியம் பார்ப்பீர்கள். அவர் சில பயிற்சிகள் செய்யும்படி பரிந்துரை செய்வார். இவ்வாறு செய்யும்போது மெதுவாகப் பாதத்தின்மீது உங்களுக்கு விழிப்புணர்வு தோன்றுகிறது. பிறகு அது நன்கு செயல்படத் தொடங்கிப் பிரச்சினை தீர்ந்து நோய் அகல்கிறது.இச்செயல் சுவாசத்திற்கும் பொருந்தும். கட்டுப்பாடின்றிச் சுவாசத்தை ஓடவிட்டால் அது உடலுக்கும், மனதுக்கும் கெடுதியை ஏற்படுத்துகிறது. அவ்வாறு விழிப்புணர்வுடன் சுவாசத்தைக் கட்டுப்படுத்தினால் அது நடக்க விடாமல் இருந்து இணக்கமாக நடக்கத் தலைப்படுகிறது.
உங்கள் சுவாசமும், விழிப்புணர்வும் ஒன்று சேர்ந்துவிட்டால், ஏன் இதை முன்பே செய்யாமல் போனோம் என்று நினைக்கத் தோன்றுமளவு மனதுக்கு இதம் கிடைக்கும்.சிலருக்கு காயம் ஏற்பட்டு சில காலம் நடக்க முடியாது போய்விடுகிறது அல்லவா? தங்கள் உடலின் கீழ்ப்பகுதியை அவர்கள் அலட்சியம் செய்துவிடுவதே இதற்குக் காரணமாகும். இடுப்புக்கு மேலே மட்டும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மேல் பகுதி உயிர்த்துடிப்புடன் இருந்திருக்கிறது. அலட்சியப்படுத்தப் பட்ட உடலின் கீழ்ப்பகுதி செத்துப்போன நிலையை அடைந்து கனத்துப் போய்விடுகிறது. தங்களுடைய செயலிழந்த பாகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க அவர்கள் கடுமையான முயற்சிகள் செய்ய நேரிடுகிறது. கால்களைப் பயன்படுத்தும் முறைகளை மீண்டும் ஒருமுறை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.தங்களின் விழிப்புணர்வை பாதம்வரை அவர்கள் கொண்டு செல்கிறார்கள். அதற்கு கடுமையான முயற்சிகள் தேவைப்படு கின்றன. உடலின் கீழ்ப்பகுதியை அவர்கள் மனப்பூர்வமாகவே ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். அதை அலட்சியப்படுத்தி உடல் தொடர்பிலிருந்து துண்டித்துக் கொண்டுவிட்டனர்.
நாம் சுவாசக் கலையைக் கற்றுக்கொள்ளும் சமயத்திலும் இதே வகையான பிரச்சினையைத்தான் எதிர்கொள்ள நேர்கிறது. சுவாசம் என்ற விஷயத்தையே நாம் ஒதுக்கி அலட்சியம் செய்துவிட்டோம். அது தன்னிச்சையாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதை மீண்டும் நம்முடைய கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அதற்கு நாம் சதா விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். சுவாசம் என்பது நமது உடலின் ஒரு அங்கம் என்றே நாம் கருதவேண்டும். நமது உயிரின் ஒரு பரிமாணம் என்று நினைத்துச் செயல்பட வேண்டும்.இந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போது பிராணாயாமம் (Pranayama) என்ற சுவாசக் கட்டுப்பாடு அறிவுபூர்வமான செயல் என்பது தெளிவாகிறது. நாம் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருந்து, ஒவ்வொரு நாசி வழியாகவும் காற்றை உள்ளே இழுக்கும்போது என்ன நிகழ்கிறது என்று கவனித்தறிய வேண்டும். சுவாசம் வலது நாசியிலிருந்து இடது நாசிக்கு மாறும்போது உடல். மற்றும் மனோநிலைகளில் ஒரு சுருதி மாற்றம் நிகழ்வதைக் காணலாம்.உதாரணமாக, இடதுநாசி வழியாகச் சுவாசம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் நாம் உணவு உண்டால், அது மனதுக்குத் திருப்தி தருவதில்லை. வலது நாசி வழியே சுவாசம் நடக்கும்போதுதான் உணவு அருந்த வேண்டும் என்று பழைய யோகநூல்கள் கூறுகின்றன. ஏனென்றால், உணர்வுகள் சுவாசத்துடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளன. சுவாச வேகத்தை மாற்றும்போது, நம்மால் உணர்ச்சிகளின் வேகத்தையும் மாற்றிவிட முடியும்.இதை முயன்று பார்க்கும்போது கணத்துக்குக் கணம் மாற்றங்கள் நடப்பதை உணரலாம். இந்த வகையில் அறிவியல்பூர்வமான மூச்சுக்கலை வெறும் கோட்பாட்டுச் செய்தி அல்ல. செயல்முறைப் பயிற்சிக்கு இதில் வாய்ப்புகள் உள்ளன. அனுபவப்பூர்வமான அறிவை இது அதிகரித்துக்கொள்ள உதவும்.
இந்த விழிப்புணர்வு படிப்படியாக அதிகரிக்கிறது. பிராணா சக்தியின் இயக்கம் பற்றித் தெரிந்துகொள்ளும்போது அதை சுயமாக ஆய்ந்து பார்த்தறியும் ஆசை உருவாகிறது. சுவாசப் பயிற்சி மற்றும் சுவாசத்தின் மீது கவனம் வைப்பது ஏற்படுகின்றன. இதன் விளைவாக நம்முள் ஒரு முழுமையான விழிப்புணர்வு வருகிறது. இதற்கு முன்பு அப்படி நேர்ந்ததில்லை என்பதை உணர்கிறோம். நமது கண்களை மூடிக்கவனம் செலுத்தும்போது முற்றிலும் புதிய மனிதர்களாக நாம் மாறுகிறோம். ஸ்வரோதயா என்னும் அறிவியல் பூர்வமான மூச்சுக்கலை நமது உள்முக விழிப்புணர்வை ஆரம்பித்து வைக்கிறது. அதுவே பிரதான சக்தியாக இருந்து புதிய வாழ்வையும் வடிவத்தையும் அளிக்கிறது.
Vinodhan,