பிரச்சினைகளை இனங்காணும்போது பலவித குழப்பங்கள் வரலாம். தனிப்பட்ட் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளானாலும் சரி அல்லது நிறுவனங்கள், சமுதாயம் என்று ஒட்டுமொத்தமாகப் பலரைப் பாதிக்கும் பிரச்சினை யானாலும் சரி, நாம் முதலில் செய்ய வேண்டியது இதுதான்: பிரச்சினையை வகைப்படுத்துவது. அன்றாடம் சந்திக்கக்கூடிய பல பிரச்சினைகள் சுலபத் தில் வகைப்படுத்தக் கூடியவை. அவற்றுக்கான தீர்வுகளும் அப்படியே. உதாரணமாக அலுவலகத்துக்குச் செல்லும் ஒருவர் தினமும் எப்படியோ தாமதமாகத்தான் போக முடிகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை ஒட்டி அவருக்கு மன உளைச்சல், பதற்றம், அலுவலகத்தில் எதிர் கொள்ளும் கேள்விகள் என்று பல விளைவுகள் ஏற்படும். ஆனால் அவரது பிரச்சினை இவை அல்ல. தாமதம்தான் அவர் பிரச்சினை. இதைத் தீர்மானிப்பதும் இதற்குத் தீர்வு காண முயல்வதும் சுலபம்தான். ஆனால் அதே நபருக்கு, சக மனிதர்கள், உறவினர்கள் ஆகியோரிடத்தில் பழகுவதிலோ ஏற்றுக்கொள்ளப்படுவதிலோ பிரச்சினை என்றால் அதனை எளிதில் வரையறுக்கவோ, வகைப்படுத்தவோ முடியாது. ஏனென்றால் இப்படிப்பட்ட பிரச்சினைகள் பல பரிமாணங் களும், காரணங்களும் கொண்டவை.

அவர் பழகும் விதம்,தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதம், மற்றவர்களை அணுகும் முறை, குறைநிறைகளை சுட்டிக்காட்டும் அல்லது ஏற்றுக்கொள்ளும் முறை, தன்னைப் பற்றிய அபிப்பிராயம் மற்றவர்களைப் பற்றிய அபிப்பிராயம், அவற்றை வெளிப் படுத்தும் விதம் போன்ற பல காரணங்களால் அவருக்கு மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்.அதாவது இதுபோன்ற பிரச்சினைகள் பன்முகம் கொண்டவை. எனவே அதைத் தீர்ப்பதற்கான அணுகு முறையும் பன்முகத் தன்மை வாய்ந்ததாகத்தான் இருக்க வேண்டும்.

உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தனித் தன்மை வாய்ந்தவை. அதற்கான தீர்வும் அப்படித்தான் இருக்கும். அதாவது ஒருவருக்குப் பொருந்துவது இன்னொரு வருக்குப் பொருந்தாது. குறிப்பிட்ட நபர், அவரது தன்மை, சிந்தனை முறை ஆகியவற்றைச் சார்ந்துதான் அவற்றை தீர்க்க முடியும். ஆக, பிரச்சினைகளின் தன்மை வரையறைக்கு உட்பட்டதா, இல்லையா என்பதை முதலில் தெரிந்து கொள்வது, அவற்றைத் தீர்ப்பதற்கான முதல்படி என்று சொல்லலாம். எவ்வகையான பிரச்சினையாக இருந்தாலும், அதைத் தீர்ப்பதற்கு வழி தேடும் முன்னர், பொதுவாக, பிரச்சினைகளிலிருந்து விடுபட சரியான முயற்சிகள் மேற் கொள்வதற்குத் தடையாக இருக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆரம்ப கட்டம்

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, “When in Contradiction, go to the basic”, முரண்பட்ட சூழ்நிலையில்
சிக்கும்போது துவக்கப் புள்ளிக்குச் சென்று, அங்கிருந்து வேண்டும். எந்தப் பிரச்சினையும் தீர, அதனுடைய ஆரம்பம் அல்லது தோற்றுவாய்க்குச் செல்வது முக்கியம். அதாவது அதன் வேரைத் தேட வேண்டும். இதற்கு, பின்னோக்கிச் சென்று ஆற, அமர சிந்திக்கப் பழகுதல் மிகவும் முக்கியம்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதை முழுவதும் புரிந்துக் கொள்ளுதல் அவசியம். நோயின் அறிகுறிகளைப் பார்த்து அவற்றுக்கு சிகிச்சை செய்யும் மருத்துவர் சிறந்த மருத்துவராகக் கருதப்பட மாட்டார். நோயின் காரணத்தை அறிந்து அதைப் போக்க சிகிச்சை அளிப்பதுதான் சிறந்த மருத்துவம். அதுபோலத்தான், வரையறுக்க முடியாத எந்த பிரச்சினையையும் அணுகும்போது முதலில் அதன் அடிப் படைக் காணரங்களைக் கண்டறிய வேண்டும். அதன்பின் தான் அதற்கான தீர்வு பற்றி சிந்திக்கத் துவங்க வேண்டும். விரிவான

அணுகுமுறை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இரண்டாவது தடை, அதன் பரிமாணத்தையும், தாக்கத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யாததுதான். உதாரணமாக ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் தான் படைத்தவற்றை எப்படிப் பிரசுரத் திற்குக் கொண்டு வருவது என்பது பற்றி சிந்திக்கிறான் என்று வைத்துக் கொள்வேர்ம். அவன் எதைப் பற்றி அல்லது யாரைப் பற்றியெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் ? முதலில் அவனது தேவைகளைப் பற்றி அல்லது விருப்பத்தைப் பற்றி கணக்கில் எடுக்க வேண்டும். அதன் மூலமாக எதை சாதிக்க விரும்புகிறான் ? அது எதன் மூலம் பூர்த்தி அடையும் ? அதற்கு என்ன செய்ய வேண்டும்? சமுதாயத்தில் இந்த நூலுக்கான தேவை இருக்கிறதா போன்றவற்றை சிந்திப்பது முதல்படி
இரண்டாவதாக, பதிப்பாளர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். யார் இதைப் பிரசுரிப்பார் ? யாரிடம் போனால் இதற்கான மரியாதையும், நியாயமான சன்மானமும் கிடைக்கும் ? அவரது செல்வாக்கு அல்லது நிலை என்ன ? அவர் இந்தக் கையெழுத்துப் பிரதியை மேம்படுத்த, யோசனைகள் சொல்லக் கூடியவரா ? சிறந்த முறையில் வெளியிடவும் விற்பனை செய்யவும் கூடியவரா ? இதை யெல்லாம் பார்க்க வேண்டும்.

மூன்றாவதாக, வாசகர்கள். எந்த மாதிரியான வாசகனுக்காக எழுதியிருக்கிறோம் ? அவர்களை அது சென்றடையுமா? அவ்வாறு அடைவதற்கு என்ன செய்யலாம் ? ஆகியவற்றை யெல்லாம் அந்த எழுத்தாளன் சிந்தித்தாக வேண்டும்.இந்த மூன்று விதமான கேள்விகளுக்கும் திருப்தி கரமான பதில் கிடைக்கும் என்றால், பிறகு அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். அதாவது, திட்டத்தை செயல் படுத்துதல். இவ்வாறு செய்யத் தவறுவதுதான் இரண்டாவது முக்கியத் தடையாகும்.வழிமுறைகள், செயல்பாடுகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சரியான வழிமுறை களும், செயல்பாடுகளும் இல்லாமல் இருப்பதுதான் மூன்றாவது முக்கியத் தடை. அது குறித்து சரியான விதத்தில் சிந்திக்காமல் அவசரமாக செயல்படுதல், நடைமுறைப் படுத்தும்போது நேரக்கூடிய மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருத்தல் ஆகியவை பிரச்சினை களைத் தீர்க்க உதவாது.

இதற்கான காரணங்கள் என்ன ? பிரச்சினையின் வீரியத்தையும், பரிமாணத்தையும், புரிந்து கொள்ளாமல்,
‘வரும் போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அவசரப்பட்டு செயலில் இறங்குதல்; சரியான சிந்தனைக் குவிப்பு இல்லாதது ஆகியவைதான் இதற்கான காரணங்கள். இந்த அம்சங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரில், உலக அழகிப் போட்டியை பெரிய இந்திய நிறுவனங்கள் சில, நடத்த உத்தேசித்தன. அதற்கான ஏற்பாடுகளை உலகமே வியக்கும் வண்ணம் செய்தன. மிகவும் பிரம்மாண்டமானதாக அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன. பல விளம்பர நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கின. அதே சமயத்தில், உலக அழகிப்போட்டியை அங்கே நடத்தக் கூடாது என்று சில அமைப்புகள் போராட்டம் நடத்த ஆரம்பித்தன.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் இதை ஒரு பிரச்சினையாகவே மதிக்கவில்லை. எனவே இது பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை. போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள், அவர்களுடைய பலம். அவர்களுக்கிருந்த செல்வாக்கு, மக்களின் அதரவு எதையும் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பத்திரிகை நிருபர்கள் இந்தப் பிரச்சினையைக் குறித்து கேட்டபோதெல்லாம், அதைப் பொருட்படுத்தி பதில் சொல்லவில்லை. இந்த அழகிப் போட்டியை நடத்த வேண்டுமென்று விரும்பி, எழுத்தாளர்கள் மற்றும் இதன் ஆதரவாளர்கள் தங்கள் கருத்துக்களைப் பொது ஜன ஊடகங்கள் (பத்திரிகை, டி.வி.) மூலமாகப் பிரச்சார பணியில் வெளிப்படுத்தி வந்தனர். இதுபோன்ற செய்தி களுக்கும் கருத்துக்களுக்கும் ஊடகங்கள் பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்தன. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனங்கள் இவற்றின் மூலம் பெரும் திருப்தி அடைந்தனர்.
அதனால் இத்தகையோரை உற்சாகப்படுத்தியும் நிகழ்ச்சி தயாரிப்பிலும் பெரும் கவனத்தை அளித்து வந்தனர். ஆனால் அதே சமயத்தில் எதிர்ப்பாளர்கள் எப்படிப்பட்ட தயாரிப்புகளை மேற்கொண்டார்கள்? மக்கள் ஆதரவைத் திரட்ட என்ன செய்தார்கள்? ஆகியவற்றை ஊன்றி கவனிக்கத் தவறினர்.

உலக அழகிப் போட்டி நடந்த நாளன்று, ளர்ச்சி களும், ஆர்ப்பாட்டங்களும், அவற்றை சமாளிப்பதற்கான அரசின் நடவடிக்கைகளும் பெருமளவு நடைபெற்றன. இந்த நிகழ்வுகள் பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் அடைத்துக் கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்தன. இதனால் உலக அழகிப் போட்டி என்ற மாபெரும் நிகழ்வு, அதன் பிரம்மாண்டம், அதன் சிறப்பு போன்றவை எதிர் பார்த்த அளவிற்குப் பேசப்படவில்லை. பார்வையாளர்களும் குறைவாகத்தான் வந்தார்கள். அதை ஏற்பாடு செய்த அத்தனை நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன.

பிரச்சினைகளின் முழுப் பரிமாணத்தை தெரிந்து, அதற்கு தகுந்தாற்போல தீர்வுகள், வழிமுறைகள், செயல் பாடுகள் ஆகியவற்றைத் தீர்மானித்து செயல்படுத்தும் அணுகுமுறை இல்லாது போனால் என்ன ஆகும் என்பதற் கான உதாரணம் இது.

vinodhan, 7010054619

Shopping Cart