சங்க இலக்கியத்தில் வளரி
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல்
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;
(புறநானூறு 339 , 4 – 5)
தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஏவுகணை
வளரி… இந்தப் பெயர், தமிழ்ச் சமூகத்தின் ஞாபகத்தில் இருந்தே மறைந்துவிட்டது. பொருளும் அழிந்து, பெயரும் அழிந்த ஒரு சோகச் சொல் இது. ஆனால், ஒரு காலத்தில் இது வீரத்தின் குறியீடு; விசையின் குறியீடு; பரங்கியர் படையை நடுங்கச்செய்த தென்தமிழகத்துப் போர்முறையின் குறியீடு பண்டைத் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி பல்வேறு வடிவமைப்புகளை உடையது. வளைந்த இறக்கை வடிவம் (Angled Feather Shaped) அனைத்து வளரி வடிவமைப்புகளிலும் காணப்படுகிறது. மான்வேட்டையில் பயன்படுத்தப்பட்ட வளரி விலங்கினைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. போரில் பயன்பட்ட பட்டையான வளரி எறிகருவிகள் துல்லியமான வடிவமைப்புகளையும் கூரான வெளிப்புற விளிம்புகளையும் கொண்டது. தப்பிக்க எண்ணியவாறு ஓடியவரை உயிருடன் பிடிக்க வளரியை எறிவதுண்டாம். போர் வீரர்கள் தங்களுடைய கொண்டையில் வளரியைச் செருகி வைத்திருப்பார்களாம். தாக்க வேண்டிய சமயத்தில் கொண்டையிலிருந்து உருவிய வளரியின் தட்டையான கனமற்ற முனையைக் கையில் பிடித்துத் தோளுக்கு மேலே உயர்த்திப் பலமுறை வேகமாகச் சுழற்றி விரைவாக இலக்கினை நோக்கி எறிவதுண்டாம். புதுக்கோட்டை திவானாகிய விஜய இரகுநாத பல்லவராயர் வளரியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எழுதியுள்ளார்.வளரி காற்றில் வேகமாகச் சுழன்று சென்று இலக்கைத் தாக்கிவிட்டு எறிந்தவரிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடும். திரும்ப வரும் வளரி ஆபத்தானது. எறிந்தவரைத் தாக்க வல்லது. எனவே எறிந்தவர் இதனைக் கவனமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகெங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.‘வளரி’ ஓர் எறியாயுதம். கரையில் இருந்து எறிந்தால், தண்ணீரின் மீது சீவிச் செல்லும் சித்துக்கல்போல, காற்றின் மீது சீவிச் சென்று இலக்கைத் தாக்கும். நின்ற இடத்தில் இருந்து எதிரியைத் தாக்கப் பயன்பட்ட வேல்கம்பு, அதுவே தூரத்தில் சென்று தாக்கவேண்டிய தேவை வந்தபோது, பாய்ந்து செல்லும் குத்தீட்டியாகப் பரிணமித்தது. கைவீச்சு வரை போரிட முடிந்த ஆயுதம், இப்போது கையெறியும் தூரம் வரைப் போய்த் தாக்கும் பலமான ஆயுதமாக மாறியது. நவீன காலத்தில் துப்பாக்கி, ஏவுகணை ஆனதைப்போல.வாள், வளரியானதும் அப்படித்தான். நின்ற இடத்தில் இருந்து எதிரியை வீழ்த்தப் பயன்பட்ட வாள், தூரத்தில் இருக்கும் எதிரியைத் தாக்கவேண்டிய தேவை வந்தது. காற்றில் சுழன்று பறக்கும் வடிவத்துக்கு மாறியது. நீண்ட வாள், பிறை நிலவாக வளைந்தது. தன்னை தாங்கிப் பிடிக்கும் கைப்பிடியை, வாளின் நுனி வளைந்து வந்து பார்த்தபோது, வளரி ஆனது.
சங்க இலக்கியத்தில் வளரி
“வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், எயினர் (மறவர்) போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.
வளரி பூமராங்காய் மாறின பரிணாம வளர்ச்சி
வீசி எறிந்தால் மீண்டும் வீசி எறிந்த இடத்திற்கே வருவது வளரி. அறுபது மீட்டர் தூரத்திற்குச் சென்று ஒரு வட்டத்தில்திரும்பி வருவது அதன் சிறப்பு. அது ஒரு நவீன கண்டு பிடிப்பு அல்ல. ஆதிமனிதன் கண்டுபிடிப்பு. சுமார் 1200 ஆண்டுகளாக செவ்விந்தியர்கள், ரோமானியர்கள், எகிப்தியர் கள் பூமராங்கைப் பயன்படுத்தி வந்திருக்கிறார் என சரித்திரம் சொல்கிறது. ஆஸ்திரேலியாதான். இருந்தாலும் பூமராங்கின் தாயகம் ஆஸ்திரேலிய பழங்குடியினர் வேட்டையாடுவதற்காகவும் விளையாட்டுப் போட்டிகளுக்காகவும் பொழுதுபோக்காகவும் பூமராங் (Boomerang) என்ற எறிகருவியைப் பயன்படுத்தியுள்ளதை நாம் பள்ளியில் படித்திருக்கிறோம் அல்லாவா? இந்த பூமராங் வீசியவனைத் தேடித் திரும்ப வந்துவிடும். மரம் மற்றும் எலும்புகளால் செய்யப்பட்ட பூமராங் குறிப்பிட்ட காற்றியக்கவியல் பண்புகளைக் (Aerodynamic Properties) கொண்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவின் சின்னமாகவும் கருதப்படுகிறது. தற்போது இந்த பூமராங் ஓட்டுப் பலகை (Plywood) மற்றும் பாலிப்ரொப்பிலீன், பாலிப்ரோபீன், கார்பன் ஃபைபர்-வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் ஆகிய பிளாஸ்டிக் பொருட்களால் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
பூமராங் ஒரு ஆயுதம் அல்ல, அது ஒரு விளையாட்டு சாதனம். ஆனால் கங்காரு வேட்டைக்கு பூமராங் பயன் படுகிறது. அதாவது பூமராங்கை வீசி, கங்காருவை வேட்டைக்காரர்கள் பக்கம் விரட்டி விடுவர். பயந்து ஓடும் கங்காரு நிலை குலைந்து விடும். அப்போது வேட்டைக் காரர்கள் சுலபமாக அதனைப் பிடித்து விடுவார்கள். அதைத் தெரியாதவர்கள். பூமராங் ஒரு ஆயுதம் என்றும் அதனைக் கொண்டு கங்காரு வேட்டையாடப்படுகிறது என்றும் எழுதி விட்டார்கள். கங்காரு போன்ற ஒரு விலங்கை அடித்து வீழ்த்தக் கூடிய அளவுக்கு பூமராங் வலுவான ஆயுதம் இல்லை.பூமராங் எப்படி திரும்பி வருகிறது என்பது இன்னமும்ஆராய்ச்சிக்குரியதாகவே உள்ளது. முறையாகப் பயிற்சிஇருந்தால் பூமராங்கை எடுத்து வீசி, வீசிய இடத்திற்கே திரும்பி வரும்படி செய்து விடலாம். அது எல்லோராலும் கைவரப் பெறும். பயிற்சி முக்கியம். காற்று வீசும் திசைக்கு எதிராக 45 டிகிரியில் வீசப்படும். காற்றைக் கிழித்துக் கொண்டு அது செல்கிறது. காற்று அதிகமாக இருந்தால் பூமராங் நிலை தடுமாறி விழுந்து விடலாம்.
வளரியை பயன்படுத்த தடை ஆயுத சட்டம் 1801
1801 ஆம் ஆண்டில், கிழக்கிந்தியக் கும்பினி அரசு, பிரிட்டிஷ் ஆயுதச் சட்டத்தைக் கொண்டுவந்தது, இந்தச் சட்டம் வளரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. கர்னல் அக்னியு சிவகங்கைப் பகுதியில் பத்தாயிரம் வளரிகளைக் கைப்பற்றியதாக சென்னைப்படை வரலாறு தெரிவிக்கின்றது குறைந்தது 15,000 வளரிகளாவது பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. பெரும்பாலானவை உடனடியாக அழிக்கப்பட்டன, சில பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கு (லிவர்பூல், ஃபிட்ஸ்வில்லியம் அருங்காட்சியகங்கள் போன்ற அருங்காட்சியகங்கள்) கொண்டு செல்லப்பட்டன. வளரியை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற காரணத்தால் பின்னாளில் வளரிகளை கோவில்களுக்கு படையலாகப் படைக்கும் வழக்கம் தோன்றியிருக்கலாம் 1920களில் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக
தமிழர்கள் போராடிய போது அவர்களை ஒடுக்குவதற்கு படைகளை குவித்தது ஆங்கிலேய அரசு.அப்போது அவர்களை எதிர்த்து தாக்க அம்மக்கள்
வளரியையே பயன்படுத்தினர், பகையாளியை தாக்கிவிட்டு மீண்டும் அடித்தவரிடம் திரும்பும் அந்த ஆயுதத்தை பார்த்து ஆங்கிலேயர்கள் கலங்கி போயினர். வளரி தடை செய்யப்பட்டது, வீட்டில் வைப்பது குற்றம் என்று கருதப்பட்ட காரணத்தால் அதற்கு பிறகு அந்த ஆயுதம் கோவில்களில் வைக்கப்பட்டது, இன்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது இடுப்பில் வளரி தாங்கியிருப்பார்தென்மாவட்டங்களில் பல கோவில்களில் வளரி பூசைக்குரிய ஆயுதமாக இருக்கிறது.
வீரத்தேவர்ளி வளரி
கி.பி. 1311 ஆம் ஆண்டு மதுரை மீது படையெடுத்து வந்த மாலிக்கபூர் படையுடன் சண்டையிட்டு இறந்த செய்த வீரத்தேவர், கழுவத்தேவர் ஆகிய போர்வீரகளுக்கு கீழக்குயில்குடி என்னும் கிராமத்தில் நடுகல் எடுத்து பட்டவன் என்ற பெயரில் தெய்வமாக வணங்கி வருகிறார்கள். இந்த நடுகல்லில் வீரத்தேவர்,கழுவத்தேவருக்கு வலது கையில் வாளும்,இடது கையில் வளரியும் வைத்துள்ளனர். பிரமலைக்கள்ளர் இனத்து மக்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் நடுகற்களில் காணப்படும் வீரர்களும் வீராங்கனைகளும் வாள், வேல், வளரி ஆகிய ஆயுதங்களுடன் காணப்படுகின்றன. கொல்லிமலையில், அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு மரத்தடியில் உள்ள நடுகல்லில் இடம்பெற்றுள்ள வீரன் ஒருவன் வளரி ஏந்தியுள்ளான
வளரி குறித்த பல செய்திகள்
புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் மன்னர்களுடைய படையில் வளரி போர்க்கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வளரிக்காகத் தனிப் படையே இருந்ததாம். ஏராளமான வளரிகளை இவர்கள் ஆயுதக் கிடங்கில் சேமித்து வைத்திருந்தார்களாம்.
எட்கார் தர்ஸ்டன் (Edgar Thurston) எழுதிய ‘தென்னிந்தியாவின் குலங்களும் குடிகளும்’ (‘Caste and Tribes of Southern India’) என்ற நூலில், கொடிய ஆயுதமான வளரி தென்தமிழகத்தின் கள்ளர் மற்றும் மறவர் குடியினரின் குடும்பங்களில் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிடுகிறார்.
பிரிட்டிஷ் தொல்லியல் வல்லுனரான ராபர்ட் புரூஸ் ஃபுட் மதுரை மாவட்டத்தில் வளரியின் பயன்பாட்டைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கள்ளர் இனத்து மணவினைச் சடங்குகளில் மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் இடையே வளரி பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும் குற்ப்பிட்டுள்ளார்.
வளரியை எப்படி பயன்படுத்தப்படும் முறைகள்?
வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லதுகிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.
வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில்கள்ளர் நாடு, சிவகெங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன்சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.வளரி பல்வேறு வடிவமைப்புகளை உடையது. வளைந்த இறக்கை வடிவம் (Angled Feather Shaped) அனைத்து வளரி வடிவமைப்புகளிலும் காணப்படுகிறது. மான்வேட்டையில் பயன்படுத்தப்பட்ட வளரி விலங்கினைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. போரில் பயன்பட்ட பட்டையான வளரி எறிகருவிகள் துல்லியமான வடிவமைப்புகளையும் கூரான வெளிப்புற விளிம்புகளையும் கொண்டது. தப்பிக்க எண்ணியவாறு ஓடியவரை உயிருடன் பிடிக்க வளரியை எறிவதுண்டாம். போர் வீரர்கள் தங்களுடைய கொண்டையில் வளரியைச் செருகி வைத்திருப்பார்களாம். தாக்க வேண்டிய சமயத்தில் கொண்டையிலிருந்து உருவிய வளரியின் தட்டையான கனமற்ற முனையைக் கையில் பிடித்துத் தோளுக்கு மேலே உயர்த்திப் பலமுறை வேகமாகச் சுழற்றி விரைவாக இலக்கினை நோக்கி எறிவதுண்டாம். புதுக்கோட்டை திவானாகிய விஜய இரகுநாத பல்லவராயர் வளரியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எழுதியுள்ளார். வளரி காற்றில் வேகமாகச் சுழன்று சென்று இலக்கைத் தாக்கிவிட்டு எறிந்தவரிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடும். திரும்ப வரும் வளரி ஆபத்தானது. எறிந்தவரைத் தாக்க வல்லது. எனவே எறிந்தவர் இதனைக் கவனமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
vinodhan,