ஐந்துருவும் மூன்றுருவும் ஒன்றாய்க் கூடி
அதனாலே இரண்டுருவும் களங்கமின்றி
தோய்ந்து கணபதி ரண்டமெல்லாம்
தொல்லையற்று நின்றகுரு நாதஉன்னை
ஆய்ந்துணர்ந்து தோய்ந்ததற்கு நீயேசொந்தம்
அல்லாமல் வேறுண்டோ அமைச்சர் கோவே
மாய்ந்த குருநாதா உன்னடியினேயே
நோக்கு வர்மம் நான்கு வகைப்படும் அதை நாம் அறிந்திருக்கிறோம் இது எல்லோரும் அறிந்தது நோக்கு வர்மம் என்றால் எல்லோருக்கும் ஏழாம் அறிவு என்ற திரைப்படம் வந்ததால் யாவரும் அறிவார் ஆனால் நோக்குவர்மம் பலகாலம் முன்பே வாழ்ந்திருக்கும் ஒரு பழமையான கலை.
- முதல்வகை நோக்கு வர்மம் ஒருவர் தாக்கும்போது நேருக்கு நேர் நின்று அவர் கையால் தாக்காமல் எதிரியின் முகத்தை கண்களால் உற்று நோக்கிப் பார்த்து தாக்குவதுதான் முதல் நிலை
- இரண்டாவது நிலை ஒன்று இருக்கிறது எதிரியை முகத்தை பார்க்காமல் பின்னால் நின்றுகொண்டு ஒருமுகமாக நம்முடைய மனதை நிலைநிறுத்தி தாக்கும் நிலை
- மூன்றாவது ஒரு வகை இருக்கிறது நோக்கு வர்மத்தின் அடுத்தபடியாக இருக்கக்கூடிய நக்கு வர்மம் என்ற ஒரு முறை உள்ளது இதை குறித்து வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்
- நான்காவது முறை ஒன்று உள்ளது இது மெய் தீண்டா காலம் என்று கூறுவார்கள் அதாவது ஒரு எதிரியை பார்க்காமலே பல கிலோ மீட்டரில் உள்ள தூரத்திலுள்ள அவரை நாம் இருந்த இடத்திலே இருந்து கொண்டு அவரை தாக்குவது
இதைப் போன்று நோக்குவர்மம் முறைகள் பல உள்ளன நோக்கு வர்மத்தை கற்றுக்கொள்ள இப்போது இருக்கும் இளைஞர்கள் மிக ஆர்வமாக உள்ளனர் அதை கற்றுக் கொண்டால் எதிரியை வீழ்த்தி விடலாம் நிறைய காரியங்கள் செய்து விடலாம் நம் வாழ்க்கையை சரி முறை நிறை முறை செய்து கொள்ளலாம் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது இது ஓர் அற்புதமான குணப்படுத்தும் கலை பிற்காலத்தில் அது போர்க் கலையாக மாறியது இப்போது நான் உங்களுக்கு இந்த நோக்கு வர்ம யுத்தி பயிற்சி முறைகளை கற்றுக் கொடுக்க போகிறேன் அனைவரும் கற்றுக் கொள்ளுங்கள் இது சாதாரண ஒரு பயிற்சி அல்ல இந்த பயிற்சியை தினமும் செய்யவேண்டும் தினமும் செய்தால் மாத்திரம் நாம் அந்த நிலையை அடைய முடியும் என்று சாமிக்கண்ணு குருநாதர் கன்னியாகுமாரியில் உள்ளவர் இவர்தான் என்னுடைய குருநாதர் இவர் சொன்ன சில பயிற்சி முறைகளை நான் உங்களுக்கு இந்த பகுதியில் அளிக்கிறேன் பயிற்சியை ஜாக்கிரதையாகவும் மன தைரியத்துடன் ஒரு நல்ல குருநாதரை மனதில் நினைத்துக் கொண்டு பயிற்சி செய்யுங்கள் உண்மையாகவே இந்த நோக்கு வர்ம ஆற்றல் உங்களுக்கு வரும் இந்த நோக்கு வர்மம் பல பயிற்சிகள் உள்ளன இனி வரப்போகிற பகுதிகளில் அதிக பயிற்சி முறைகளை கன்னியாகுமரியில் உள்ள நோக்கு வர்ம ஆசான் சொல்லிக்கொடுத்த முறைகளை உங்களுக்கு கூறுகிறேன்
நோக்கு வர்ம சக்தியை அதிகப்படுத்தும் நோக்கு படுகட வர்ம சக்தி பயிற்சி
இந்த பயிற்சியை நாம் தினமும் செய்ய வேண்டும் அதை எப்படி என்றால் இதன் பெயர் படுகட என்று கூறுவார்கள் இரவு வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் நம்முடைய இரு கைகளையும் வானத்தை நோக்கி நாம் அமைதியாக வடக்கு பக்கம் பார்த்தவாறு அமைதியாக 14 முறை மூச்சை வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாக வெளியிட வேண்டும் பிறகு அமைதியாக ஒரு நிமிடம் கழித்து இந்த மந்திரத்தை கூற வேண்டும்
நோக்கு வர்மம் மந்திரம்
ஓம் நஸ் சிஸ் மஸ் வஸ் சஸ் திசைக் காவல் தேவியே ஓம் சிவாய நமஹ குரு குரு ஸ்வாஹா
இந்த சக்தி வாய்ந்த நோக்குவர்மம் மந்திரத்தை மனதிற்குள்ளே 108 தடவை சொல்லிக் கொண்டே இருங்கள் கைகளை மேல் நோக்கியவாறு இரு கைகளையும் விரித்துக் கொண்டு மனதிற்குள்ளே இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் உச்சரித்த பின்னர் கைகளை இறக்கி விட்டு இரு கைகளையும் நெஞ்சுப்பகுதியில் வைத்துக் கொண்டு கீழே படுத்து விட வேண்டும் பிறகு கண்களை மூடிய நிலையிலேயே மனதிற்குள் இந்த இந்த நோக்கு வர்ம ஆற்றலை முறையாக சொல்லிக்கொடுத்த அகத்தியரின் ஒரு மந்திரத்தை அறுபத்தி மூன்று தடவை சொல்லிவிட்டு மனதை நிலைபெற செய்து கீழே படுத்துக் கொண்டே இந்த நோக்குவர்ம ஆற்றலை எனக்குள்ள வந்துவிட்டது என்ற ஒரு நம்பிக்கையிலேயே மனதிற்குள் என் மனமே சாந்தி சாந்தி இந்த சக்தியை இந்த நோக்கு வர்ம ஆற்றலை நான் பெறப் போகிறேன் என்ற ஒரு சங்கல்பத்தை எடுத்துக் கொண்டு இந்த நோக்கு வர்மம் ஆற்றல் எனக்குள் சித்தியாகி விட்டது என்ற மன நிலையில் நாம் தூங்க வேண்டும் இதை தவறாமல் முதலில் சரிவர பழக வேண்டும்
ஓம் அகத்தீசாய மாமுனியே அடியேனுக்கு நோக்குவர்ம ஆற்றலை சிவாய நமஹ ஓம் நாமத்தினாலே இந்த சித்தியை அடைவேன் ஆக 35 மூறை இந்த மந்திரத்தை கடைசியாக சொல்லி விட்டு தூங்கச் செல்லுங்கள் அகத்திய மாமுனி உங்களோடு இருப்பாராக
இனி அடுத்த பதிவில் சந்திப்போம் நோக்கு வர்மம் தொடரும் ,,,,,,,,,,,
vinodhan,
#vinodhan,