நீரின் மீது தன் அரியணையை அமைத்தான். (இறைவன்)
அல் – குர்ஆனில் கூறப்பட்டுள்ள உன்னத உண்மையாகும்.
அனைத்து வஸ்த்துக்களினதும் மூலாதாரமாக நீர் விளங்குகின்றது.
நெல் இயற்கைதான் நிச்சயமாக செயற்கை கிடையாது; நெல்லை மனிதன் கண்டுபிடித்தான் என்றால், மனிதன் இயற்கையா? அல்லது செயற்கையா? நிச்சயமாக! மனிதன் இயற்கைதான். அதனால்தான், ஒரு மனிதன் இறந்து விட்டால், அவரை ‘இயற்கை எய்தினார்’ என்று, தமிழ் கூறும் நல்லுலகம் இன்றுவரை கூறிவருகிறது; இறுதி மனிதன் மறையும் வரை கூறும்; கூறிக் கொண்டேதான் இருக்கும்.பூமியில் விளையும் உணவு வகைகளை உண்டு, பருகி, செரித்து, பின் அது நம் தாயின் கருமுட்டையின் சத்தாகவும், தந்தையின் விந்தணுக்கலாகவும் உருமாறி, ஒரு உறவுச்சேர்க்கையின் மூலமாக இணைந்து, நாம் பத்துமாதத்தில் தாயின் கருவறையின் மூலமாக, ஒரு மனிதப் பிண்டமாக வெளியாகின்றோம். இப்படி! இயற்கையின் அதாவது மண்ணின் சத்திலிருந்து மனிதன் படைக்கப்பட்டதால் தான், மனிதனை ‘மண்ணின் மைந்தர்கள்’ என்றும் பொதுவாக சொல்வார்கள்.’இறைவன்’ – ஆணும், பெண்ணும் கொண்ட தனியொரு மனிதனாக, இந்த உலகத்தில் மனிதனைப் படைக்கவில்லை; ஆண்களும், பெண்களுமாகிய ஒரு சமுதாயம் கொண்ட, மிகச்சொற்பமான மனிதர்களாகத்தான், இந்த உலகத்தில் முதல் மனிதர்களாகப் படைத்தான்; அந்த வழியில் தான், அந்த மனிதர்களுக்குத் தேவையான உணவு வகைகளையும், தனித்தனியாகப் படைக்கவில்லை; ஒரே கூட்டாக அதனை விளைவித்தான்; அப்படித்தான் நெல் எனும் தானியத்தை, மனிதன் தன் அறியும் ஆற்றலைக் கொண்டு, நாற்று விட்டது போன்று இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தான்; அதனையும் நீண்ட நேரம் நீரில் விளையும் உணவாக. பிறகு அதனை அதிகப்படியான தண்ணீர் தேங்கிக் கிடக்கும் சம நிலத்தில் நட்டு, பின் பயிராக விளைவித்துக்கொள்ளும் ‘ஞானம்’ இறைவனால் அவனுக்குள் கற்பிக்கப்பட்டது; அதன் விளைச்சல்களிலிருந்து பெரும்பகுதி உணவிற்கும் எடுத்துக்கொண்டான்; ஒரு சிறுபகுதியை அதன் கதிரிலேயே விட்டு, அடுத்த மகசூலுக்கு விதையாகவும் பயன்படுத்தியும் கொண்டான்…! இப்படித்தான் மனிதனுக்கும், நெல்லுக்கும் உண்டான தொடர்பு. நெல் மட்டுமல்ல வேறு எது ஒன்றையும் மனிதன் படைக்க முடியாது; இல்லை! மனிதனுக்கு படைக்கும் தகுதி இருக்குமென்றால், பூமியில் இருந்து எந்த ஒரு பொருளையும், அவன் படைப்பதற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது; இது சாத்தியமா? நிச்சயமாக அது சாத்தியப்பட்டு வராது! மாறாக! படைத்தவற்றைக்கொண்டு, வெவ்வெறு பரிமாணங்களில் கண்டுபிடிக்க அல்லது உற்பத்தி மட்டுமே செய்ய முடியும்
நெல்லை கண்டுபிடித்தவர் யார்?
நெல் இயற்கையா செயற்கையா நெல் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இது இயற்கையும் என்றுதான் நம்மால் சொல்லமுடியும் ஆனால் உண்மை நிலை என்பது இயற்கையில் விதை போட்டால் செடி முளைக்கிறது இதுதான் இயற்கையின் விதி ஆனால் இங்கு இந்த நெல்லை கண்டுபிடித்தவன் என்ற ஒருவர் உண்டா அல்லது நெல் என்பது இயற்கையாக இறைவன் தந்த வரம் என்று பலபேர் நம்புவார்கள் ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு நல்ல சிறந்த விவசாயிடம் கேட்டு தெரிந்து கொண்ட ஒரு விஷயம் அவர் கூறினார் ஒரு பதில்,,,,,,,,
நெல் என்பது இயற்கை அல்ல ஒரு மனிதன் கண்டுபிடித்தான் என்று கூறினார் நான் அவரிடம் கேட்ட கேள்வி இயற்கைதான் என்று வாதாடினேன் அதற்கு விஞ்ஞான சான்றுகளை நிறைய விஷயங்களை அவரோடு பேசினேன் ஆனால் அந்த விவசாயி விஞ்ஞானி சொன்ன ஒரே பதில் நெல் என்பது இயற்கை இல்லை அது செயற்கை காரணம் அதை கண்டுபிடித்தவர் யார் என்றால் நெல்லை கண்டுபிடித்தவன் நெல்லையப்பன் இதுதான் அவருடைய பெயர் அவர் ஒரு தமிழன்
விவசாயி சொன்ன பதில்
அவர் கண்டுபிடித்த விதத்தை நான் கூறுகிறேன் என்று விவசாயி சொன்னார் நான் அதை சொல்லுங்கள் ஐயா என்று கேட்டபொழுது அவர் சொன்ன விபரம் என்னவென்றால்அவருடைய பெயரையே நெல்லுக்கு வைத்துவிட்டார் மிகவும் கடினப்பட்டு பல காலம் உழைத்து அந்த நிலை கண்டு பிடித்தார் நெல்லையப்பன் பிறகு அந்த நெல்லுக்கு வேலி கட்டினாராம் அதனால் அந்த இடத்திற்கு திருநெல்வேலி என்று பெயர் வந்ததாம் பிறகு
அந்த நெல்லை விதை விதைத்தால் அந்த இடத்திற்கு திருத்தெளிச்சேரி என்ற பெயர் வந்ததாம் நெல்லை கண்டுபிடித்தது நோக்கம் என்னவென்றால் ஒரு உழவன் இதை கண்டுபிடிப்பது நோக்கம் பூமியை காப்பாற்றுவதற்காக அவன் நெல்லை கண்டுபிடித்தான் ஆம் இதை கேட்கும் போது ரொம்ப ஆச்சரியமாக அதிசயமாக இருக்கிறது காரணம் தமிழன் பூமியை காப்பாற்றுவதற்காக விவசாயம் செய்து இருக்கிறான் விவசாயி சொன்னபடி சில பதில்கள் நான் அதை நம்ப முடியுமா என்று அவரிடம் கேட்டேன் அவர் சொன்னார் நீ நம்பி தான் ஆக வேண்டும் இதான் உண்மை இதற்கு நீ கேட்கலாம் விஞ்ஞான பதில் சொல்லு அல்லது என்ற புத்தகத்தில் இருக்கிறது நான் கூறுகிறேன் இது ஆதி புத்தகத்தில் உள்ளது அந்த புத்தகம் என் மனதில் உள்ளது என்று சொன்னார் ஒருநாள் ஒருவன் சொன்னான் விவசாயம் கண்டுபிடித்தவன் தமிழன் அல்ல ஜப்பானியன் ஐரோப்பியன் இதைப்போன்ற பல முறைகளில் அவன் சொன்னான் ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு விவசாயி சொன்ன பதில் விவசாயத்தை மனிதன் கண்டுபிடித்தான் மனிதன் தான் மனிதன் என்றால் இயற்கை இயற்கை தான் மனிதனுக்கு தன்னுடைய அறிவைக் கொடுத்து அதன் மூலமாக அவன் இவ்வுலகில் இயற்கையாக இயற்கையை படைத்தான்
நெல்லையப்பனே உலகத்தையே காப்பாற்று இயற்கையின் குழந்தை அவன்
தரையில் கீழே தண்ணீர் இருந்தால் மட்டுமே இப் பூமியை காப்பாற்ற முடியும் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் நீரை சார்ந்தது தான் வாழ்கிறது கருவில் உள்ள குழந்தை கூட தண்ணீர் இல்லாவிடில் இறந்து போகும் தண்ணீர் இல்லா விடில் 5000 வருடமாக இயக்கக்கூடிய விதையாக இருந்தாலும் ஒரு படி தண்ணி இல்லாவிடில் அந்த விதை அழகி காய்ந்து போய்விடும் ஒரு சொட்டு தண்ணீர் அந்த ஆலமரத்தின் விதை மேல் பட்டால் மாத்திரம் செடி வெளியே முளைக்கும் அந்த நீரை பூமியில் நிறுத்துவதற்காக நெல்லை என்ற தானியத்தை கண்டுபிடித்தான் நம் முப்பாட்டன் ஆதித்தமிழன் நெல்லையப்பன் தமிழ் உழவன் தண்ணீரிலேயே இருந்து தண்ணீரிலேயே எழுந்து நிற்கிற ஒரே தானியம் நெல் மட்டும் தான் உதாரணம் தென்னை மரத்திற்கு 3 அடி தண்ணீர் வைத்து பாருங்கள் இறந்துவிடும்
பூமியில் தண்ணீரை நிறுத்தி நாள் மட்டும் போதுமா ஆங்காங்கே இருக்கக்கூடிய குளம் குட்டைகள் கூட தண்ணீர் அங்கே நிற்கத்தான் செய்கிறது இதற்கும் நெல்லுக்கும் என்ன வித்தியாசம் பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டினார்கள் குளம் குட்டம் கம்மாய் பூமிக்கு வெளியே தண்ணீரை வைத்தால் அது பெயர் வயல் தரைக்கு மேலே எந்த பொருளை போட்டாலும் பூமி உள்ளே இழுத்துக்கொள்ளும் அதுதான் ஈர்ப்பு விசை நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் பூமிக்கு தரையில் தண்ணியை நிறுத்தினா மட்டும் தான் பூமி அந்த தண்ணீரை இழுத்துக்கொள்ளும் என்று தரைப்பகுதியில் தண்ணியை நிறுத்தினான் அதற்காக தான் நெல்லையப்பன் கண்டுபிடித்த நெல்தான் அந்த தண்ணீரை நிறுத்த முடியும் அறுபது நாட்களில் 6 அடி நெல்கள் வளையக்கூடிய நெல்கள் கூட இருக்கிறது பெய்கிற மழையை பரப்பு செய்து மழை நிறுத்துவதால் பூமி மழையை இழுத்துக் கொள்கிறது பூமியினுடைய மையமும் சூரியனுடைய மையமும் ஒரே தன்மை வாய்ந்தது சமமான வெப்பம் உடையது இந்த தண்ணி தான் பூமிக்கு உள்ளே செல்கிறது சூட்டையும் எடுத்து வெளியே கொண்டு வருகிறது இந்த தண்ணி தான் முதலில் அந்த சூட்டை உள்வாங்கி ஆவியை அனுப்புகிறது அந்த ஆவி மேகமாக மாறுகிறது மேகமாக மாறி மழையாக பொழிகிறது தண்ணியை நிறுத்துவதற்கான தந்திரத்தை நெல்லையப்பன் கண்டுபிடித்தார் பிறகு தண்ணீர் நீராவியாக மாறி மேகத்திற்கு செல்லும்பொழுது நீராவி தன்னுடைய வெப்பத்தை குறைத்து உடன் மேகமாக மாறுகிறது அந்த நீராவி மிக உயரமான இடத்திற்கு செல்ல வேண்டும் நீராவியை வானத்திற்கு செல்ல வேண்டும் எப்படி செல்லும் தண்ணீரை செடிக்கு ஊற்றினால் நீராவியாக மாறுமா அல்லது குளம் குட்டைகளை தண்ணீரை வைத்திருந்தால் நீராவியாக மாறுமா தரையில் தண்ணீரை ஊற்றினால் நீராவியாக மாறுமா அதுதான் சூரியனுக்கும் நிலத்திற்கும் உள்ள ஒரு உறவு அதற்காக தான் திறந்த வெளியில் வரப்பு எடுத்து சுவர் எழுப்பி அதில் நீரை நிறுத்தினான்
நிலத்தை கணக்கு பார்ப்பவன்
ஒரு ஏக்கரில் ஓர் அங்குலம் தண்ணீர் இருந்தால் அது 110 டன்னாக இருக்கும் ஒரு அடியாக இருந்தால் எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்று நீங்களாக கணக்கு போட்டு பாருங்கள் அவ்வளவு தண்ணீர் நீராவியாக மாற வேண்டும் அப்படி நீராவியாக மாறினால் மட்டுமே மழை வரும் உதாரணம் நம் வீட்டில் இருக்கும் பிரஷர் குக்கரில் ஒரு பொருள் வைத்திருக்கிறோம் அது அதிகமாக பிரஷர் ஆகும்பொழுது வெடித்து சிதறும் அதே போன்று தான் இங்கும் தண்ணீர் எப்போதெல்லாம் நெருப்புடன் சேருகிறதோ அதற்கு வெறி பிடித்தது போல் ஆற்றல் வரும் அசுர ஆற்றலாக இருக்கும் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் நீராவி ரயில் ஒன்று உள்ளது அதில் நீரையும் நெருப்பையும் சேர்த்தும் பொழுது ஒரு ரயிலை இழுத்துக் கொண்டு செல்கிறது அவ்வளவு பெரிய அரசு ஆற்றல் உண்டு தண்ணீருக்கு அதனால் உழவன் மழை பெய்கிற காலத்தில் நீரை நிறுத்தினான் இதற்காக தான் வரப்பை உயர்த்தினாலஉயர்த்தினான் இதற்காக பூமியை நிறுத்துகிற தண்ணீரை நிறுத்துகிற இடம் அதற்கு பெயர் வயல் ஆதிகாலத்தில் அந்த நீரை நிறுத்துவதற்காக கண்டுபிடித்தான் நெல்லை இப்பொழுது தண்ணீரை சுத்தமாக அளிப்பதற்காக பல விதங்களில் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம் அந்த நீர் தான் ஆவியாக மாறி மேகம் ஆக மாறுகிறது மழையாக பொழிகிறது ஐப்பசி மாசம் மழை வருகிறது இது தொடர்கிறது அடுத்தது தை மாசி பங்குனி சித்திரை ஐப்பசி கார்த்திகை பருவமழை நமக்கு கிடைக்கும் சூரியனைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் என்ன இருக்கும் என்று நாம் அறிந்த அறிந்த அறிவியல் படி நமக்கு அனைவருக்கும் தெரியும் அந்த நீரை நீராவியாக மாற்றி ஆடி மாதம் நீர் ஆவியாக மாறி அழுத்தம் அதிகரித்து கடலை நோக்கி செல்கிறது அதற்குப் பெயர் ஆடிக்காற்று என்று கூறுவார்கள் ஐப்பசி கார்த்திகையில் நிறுத்துகிற நீர்தான் ஆடி காற்றாக மாறுகிறது ஒரு மாதத்திற்கு அடுத்த மாதம் மாசி மாசம் என்ற பெயர் உண்டு கிராமத்தில் மாசி என்றால் மேகம் என்று கூறுவார்கள் தை மாதம் நாம் பார்ப்போமானால் மேகத்தில் திட்டு திட்டாக அலைந்து கொண்டே இருக்கும் ஐப்பசி கார்த்திகை போல் கருமேகங்கள் போல் இருக்காது அந்த மேகங்கள் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க கடலை நோக்கி செல்கிறது கடலில் ஆவியான அழுத்தம் குறைவாக இருப்பதால் மேகங்கள் கடலை நோக்கி செல்கிறது அதற்குப் பெயர்தான் ஆடிக் காற்று ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்
நம் பூமி என்ன ஆனது தெரியுமா?
ஆடி மாதம் காற்றே வருவதில்லை ஏன் தெரியுமா காரணம் பூமிக்குள் தண்ணீரை நாம் நிறுத்துவதே இல்லை இந்த நீரை நிறுத்தி நிறுத்தவில்லை நீராவியும் உருவாகவில்லை மேகங்களாக மழை பொழியவில்லை விவசாயிகளின் வரப்புகளை களைத்து விட்டோம் நெல்லுக்கு நீரை கட்டு என்று சொன்ன நம் திருநாட்டில் தண்ணீரை வழிய வைத்துக் கொண்டிருக்கிறோம் வெள்ளமே கொண்டாலும் என்று பயிரும் இடத்தில் தண்ணீரே இல்லாமல் நாம் நெல்லை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம் சொட்டு நீரில் நெல்லை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம் நீராவி மறுபடியும் நீராவியாக கடல் பகுதியும் கொஞ்சம் நீராவி உருவாகி இருக்கும் சூரியனுடைய வெப்பத்தால் அங்கிருந்து அந்த இடத்திற்குப் போகும் பொழுது வெற்றிடம் உருவாகி விடும் அங்கிருந்து திருப்பி கடல் பகுதியில் இருக்கும் மேகங்களை கூட இழுத்துக் கொண்டு வந்து மழை பெய்யுமாம் வீட்டில் அரிசியை கழுவி பாத்திரத்தில் போட்டு அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பிறகு சூடுபடுத்த முயற்சிக்கும் பொழுது அதில் நீராவியாக மாறும் வெந்து போன பிறகு நான் சாப்பிட முடியும் அதைப்போன்று பூமிக்குள்ளே உயிரோடு இருக்கும் ஒரு சூழ்நிலை அமைக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஆதித்தமிழன் இந்த வேலையை செய்தான் உயிர்கள் பூமியில் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக பூமிக்குள் நிலைநிறுத்துவதற்காக பாடுபட்டான் நம் தமிழன்
விவசாயத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள்
இயற்கை விவசாயம் செய்வது எப்படி?
இயற்கை முறையில் தான் விவசாயம் செய்வேனென திடமாக முதலில் முடிவெடுங்கள். அடுத்து விவசாயம் செய்யும் அனுபவமுள்ள உழவரிடமும் , இயற்கை வேளாண்மைத் துறையிலும் தேவையான தகவல்களை பெறுங்கள். துறை சார்ந்த அறிவும் , அனுபவ அறிவும் சேர்ந்து முயற்சியில் இறங்கும் போது அது நல்ல பலனையே தரும். இயற்கையுடன் அன்பாக இருங்கள். அதுவே நல்லவற்றை அறிய தூண்டும். நம்பிக்கையுடன் இறங்குங்கள் வெற்றி அடைவீர்கள்.இயற்கைமுறையில் உணவு உற்பத்திசெய்யும் உழவனே உலகின் முதுகெலும்பாவான் வீட்டில் கால்நடைகள் இருக்கிறதா , தினமும் அள்ளும் கால்நடை கழிவுகளை தோட்டத்தில் சேமியுங்கள் நம்ம மண்ணை நாம் புரிந்து கொள்ள வேண்டும் மண்ணில் என்னென்ன சத்துகள் இருக்கும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்
‘ நைட்ரசன்,
பொட்டாசியம்
பாஸ்பரஸ்
மக்னீசியம்
கந்தகம்
இவை மண்ணில் இருக்கும் இவைகள் தான் தாவரங்களுக்கு தேவைப்படும் ஒரு தாவரம் வளர்க்கிற சமயத்தில் தண்டுகளுக்கும் இலைகளுக்கும் நைட்ரசன் சத்து தேவைப்படும் அதே தாவரம் பூ பூக்கினற சயமத்தில் பாஸ்பேட் சத்து தேவைப்படும் அதே பூ காய்த்து பழமாக திரட்சியடைய பொட்டாஷ் சத்து தேவைப்படும் இந்த சத்துகள் இயற்கையாக கொடுக்க முடியும் எனில் நாமும் இயற்கை விவசாயி தான்
உரம் தழை _்நைட்ரசன்
மணி சத்து -்பாஸ்பரஸ்
சாம்பல் சத்து — பொட்டாஷியம் ,
நைட்ரசன் -யூரியா
யூரியா வை நைட்ரசன் தேவைக்காக இடுகிறோம் அதாவது இலை தண்டு வளர்ச்சி பெற யூரியா இடும்போது மண்ணில் இது நீரேற்றம் அடைந்து அம்மோனியாவாகவும் கார்பன் டை ஆக்சைடு ஆகவும் மாறுகிறது. இந்த அமோனியா, மண்ணில் உள்ள பாக்டீரியாவினால் ஆக்சிஜனேற்றம் பெற்று நைட்ரேட்டாக மாறுகிறது கால்உநடை உரம், தழை இவற்றில் இயற்கையான நைட்ரஜன சத்தை கொடுக்கலாம் மேலும் அசலோ போன்ற பாசிகள் வளர்ப்பின் மூலம் இயற்கையாக நைட்ரஜனை உற்பத்தி செய்யலாம் பயிற்சி சுழற்ச்சி மற்றும் அவரை உளுந்து போன்றவற்றை கோடைகாலங்களில் பயிர்யிடுவதின்மூலம் இயற்கையாக மண்ணில் நைட்ரசன் வளத்தை மேம்படுத்தலாம்பல இயற்கை உரங்கள் உருவாக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்மண்புழு உரங்கள் சால சிறந்தவை
பசுமைப் புரட்சியை அறிமுகம் செய்து புதிய நெல் வகைகளைக் கொடுத்து உரங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தது யார்?அவ்வாறு விளைவதற்கு சரியான விலையை நிர்ணயம் செய்யாமல் விவசாயியைக் கடனாளி ஆக்கியது யார்?எதெதற்கோ சட்டம் இயற்றுபவர்கள் விவசாய மேம்பாட்டிற்கும் சட்டம் இயற்றி அவர்களைக் கைதூக்கி விடாமல் இருப்பது யார்?இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் விவசாயம் அழிந்து கொண்டு வருவதற்கு யார் முழுமுதற் காரணம் என்று விளங்கும். இலுமினாட்டிகள் இந்தியாவில் கொள்ளையடிக்க இந்திய இலுமினாட்டிகளை கூட்டாளி சேர்த்துக்கொன்டு தமிழகத்தில் முதலீடு தொழிற்சாலை தொழில் வளம் என்று பணக்கார. மாநிலம் தமிழ் நாட்டை குறி வைத்து இடங்களை வளைத்து போட்டு நாளைக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதனால் விவசாய நிலங்களை விற்க வேண்டாம் ஏன்னா நாளைக்கு விவசாயிகள்தான் இவ்வுலகில் மனித உயீரை காக்கும் கடவுள்கள் தமிழகத்தை காப்போம் இந்திய நாட்டை காப்போம் ஏன் நாம் உலகத்தையே காப்போம்…….
Vinodhan,
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்