இயற்கை மருத்துவம் என்பது உயிர் வாழ்க்கை பற்றிய அறிவியல். உடல் நலமாக இருக்கும்போதும் நோய்வாய்ப்படும் போதும் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு முறையே ‘இயற்கை மருத்துவம்’.

ஆரோக்கியம் பற்றிய விதியுள்ளது. இதுவும் சிகிச்சை பற்றிய விதியும் ஒன்றே. இந்த விதியைப் பின்பற்று வோருக்கு ஆரோக்கியமும் சிகிச்சையும் கைகூடும். சுகாதாரத்திற்கான பழக்க வழக்கங்கள் பின்வருமாறு.

1. சீரான உணவு (மாறுபாடில்லா உண்டி)

2. உண்ணா நலத்தது நோன்பு

3. ஓய்வு

4. இளைப்பாறுதல்

5. பயிற்சி-பொழுதுபோக்கு

6.மூச்சுப்பயிற்சி

7. சூரியக் குளியல்

8. நீர் சிகிச்சை

மருந்து மின்சிகிச்சை, எந்திர சிகிச்சைக்கு இங்கு இடமில்லை. அகிம்சை என்பதே இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கை.அளவறிந்து உண்ணவேண்டும். அதுவும் “பசித்த பின் புசி” என்று அவ்வை சொன்னார். நடப்பில் இது இரண்டையும் கடைபிடிப்பது எளிதல்ல. பசி வரும் முன்பே வெளியே புறப்படவேண்டியுள்ளது. போகிற இடத்தில் நல்ல உணவு கிடைப்பது நிச்சயமில்லை.

விருந்துக்குப் போன இடத்தில் சாப்பிட்டுப் போங்கள் என்ற உபசரிப்பை மீற முடியவில்லை. வடை, பாயசம் என்ற சொற்களே இனிக்கிறது. முடிவில் சாப்பிட ஒரு பழம் கொடுக்கிறார்கள். பக்கத்து இலைக்காரர் மேலும் ஒரு கரண்டி பாயசம் ஊற்றும்படி பரிந்துரை செய்கிறார். இத்தகைய சூழ்நிலையில் நடப்பது என்ன? அளவுக்கு அதிகமாக உண்ணுகிறோம். பசிக்கும் உண்ணுகிறோம். இதன் விளைவு என்ன? முன்பே

இரைப்பை அமிலத்தைச் சுரந்துவிடுகிறது. வயிறு முட்ட உண்ட உணவு புரள்கிறது. இடப்பற்றாக்குறை காரணமாக நுரையீரல், இதயம் நெருக்கடிக்கு ஆளாகி மூச்சு முட்டுகிறது. கூழாக்கப்படும் உணவு உணவுக்குழாயில் புகுந்து தொண்டை வரை மேலேறுகிறது. உணவுக் கூழுடன் அமிலமும் சேர்ந்து தொண்டையில் எரிச்சல் வருகிறது. மேலேறுவதால்

இதற்கு என்ன சிகிச்சை? வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுப்பதை விடவும் சிறந்த மருத்துவம் எதுவும் கிடையாது. இதனால் அறிய வேண்டியது என்ன? “பசித்த பின் புசி”. விருந்து படைப்போர்’ அறியவேண்டியது இதுதான். இன்னும் கொஞ்சூண்டு என்று வற்புறுத்த வேண்டாம்.முன்னொரு காலத்திலே ஒரு ஊர்லே ஒரு ராசா இருந்தார். அங்கே நெருப்பும் இல்லை, சமையலும் இல்லை. உப்பும் இல்லை. சாத்தானுக்கு வேலை இல்லை. நோயாளிகள் இல்லை. அநீதி இல்லை. விசாரணை, தண்டனை யெல்லாம் கூட இல்லை.

சாத்தான் ஒருவேலை செய்தான். வெளியில் இருந்து நெருப்பு கொண்டு வந்தான். ஒரு சமையற் காரனையும் கூட்டி வந்தான். சமையற்காரன் வறுத்தும் வேகவைத்தும் நாக்குக்கு ருசியாக சமைத்துக் கொடுத்தான். ராசா முதலாக அனைவரும் தேவைக்கு அதிகமாக உண்ணத் தொடங் கினார்கள்.

சாத்தான் சமையற்காரனிடம் உப்பு என்று ஒரு பொருளையும் கொண்டுவந்து கொடுத்தான். சமைத்த உணவில் மேலும் சற்றே ருசிகூடியது. மக்கள் வயிற்றை மறந்தார்கள். நாக்குக்காகவே உண்டார்கள். சாத்தான் அத்துடன் நிற்கவில்லை.

சமையற்காரன் பேச்சை எல்லோரும் கேட்கும் வகை செய்தான். இதற்காக அவன் ஆடு, கோழி, முயல், பன்றி இறைச்சியை உணவாக சமைத்தான். பலரும் மிருகமானார்கள். ராசாவின் தம்பி ராசாவைக் கொன்று ராசா வானான்.

ராசா தன்னையே நீதிபதியாக்கிக் கொண்டான். எப்போதும் அடிதடி சண்டை என்றானது. இதைப் பார்த்த ஒரு முனிவர் அநீதியை முடிவுக்குக் கொண்டுவர ஒரு வழி சொன்னார்.

அவர் சொன்னார், நீங்கள் படைக்க முடியாத எதையும் அழிக்க உங்களுக்கு உரிமை கிடையாது. விலங்குகளைக் கொல்லா தீர்கள் என்றார். புலால் உண்ணாமை உடல் – மன நலத்திற்கு முதற்படி.உடல் நலத்தில் மூன்று பிரிவுகள் உண்டு. உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதை உடல் நலம் என்று குறிப்பிடலாம். இரண்டாவது பிரிவு நலக்குறைவு. பசி எடுப்பதில்லை. சரியாக மலம் கழிவது இல்லை.

உண்பதில், உழைப்பதில், கொண்டாட்டத்தில் ஆர்வம் இல்லாது சிலர் இருப்பார்கள். இவர்கள் உண்பார்கள், உறங்குவார்கள், உழைப்பார்கள். ஆனால் உற்சாகம் இல்லாமல் பிறர் செய்கிறார்களே என்பதற்காகச் செய்வார்கள். இவர்கள் நலக்குறைவானவர்கள்.

மற்றவர் போல உண்ண, உறங்க முடியாமல் படுக்கையில் முடங்குபவரை நோயாளி என்கிறோம். இவர்களது ஏலாமைக்கு காய்ச்சல், சளி, தலைவலி, வயிற்றுவலி, ஆஸ்த்துமா, வயிற்றுப்போக்கு, டீ.பி., மூட்டுவலி, வாதம், புற்றுநோய், அல்சர் என ஏராளமான பெயர்கள்.

இயற்கையை உணர்ந்தவர்கள் இப்படிச் சொல்கிறார்கள். உடல் தன்னை குணப்படுத்திக் கொள்கிறது. அந்நியப் பொருளை வெளியேற்றுகிறது. நோயை ஒரு பானையுடன் ஒப்பிடலாம். பானையில் மண் என்ற பொருள் உள்ளது. கூடவே பானையைச் செய்த கலைஞனின் செயல் உள்ளது.

அதுபோலவே நோயில் உடலால் செரிக்க முடியாத பொருள் ஒன்று உள்ளது. உடல் அதை வெளியேற்ற முயற்சிக்கிறது.ஆதலால் நோய் என்று சொல்லப்படுவதே சிகிச்சைதான். அதைத் தடை செய்யாமல் வாழப் பழகுவோம். நோயே சிகிச்சையாவதால் நோய்க்கு மருந்திடாமல் இருப்பதே அறிவுடைய செயலாகும். மனிதரிடம் ஏராளமான தவறான எண்ணங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் உணவு உண்பதால் சக்தி பிறக்கிறது என்பதும், மனிதர்கள் அன்றாடம் எவ்வளவு கலோரி வெப்ப சக்தி தேவைப்படுகிறது என்று கணக்கிட்டார்கள். அது பலவிதமாக உள்ளது.

1800 கலோரி சக்தி தேவை என்று ஒருவர் எழுதினார். 2800 கலோரி, 3200 கலோரி, 3400 கலோரி, 3600 கலோரி, 3800 கலோரி இப்படியாக பல அளவுகள் சொல்லப்பட்டன. இவ்வளவு சக்திதரும் உணவு தேவை என்றும் சொல்லப் பட்டது. அப்படியானால் ஏன் 300 சதம் வித்தியாசம்?

வரலாற்றில் மற்றவர் உண்பதில் மூன்றில் ஒரு பங்கை உண்டவர்கள் பல காலம் வாழ்ந்திருக்கிறார்கள். இயற்கை நல வாழ்வை அறிந்தவர்களும் சொற்ப உணவே உண்டு நெடுங்காலம் இளமையைப் பராமரித்திருக்கிறார்கள். ஒரு உண்மை தெரியுமா?

உணவுதானே செரித்து சக்தியாக மாறவில்லை. உணவை செறிக்க உடல்தான் சக்தியைச் செலவிடுகிறது. இழந்த சக்தியை மீட்டெடுக்க உணவு மேசைக்குச் செல்லக்கூடாது. படுக்கை அறைக்குச் செல்லவேண்டும். களைப்பாக இருப்பவர்கள் இளைப்பாறி பசியையும் உணவைச் செறிக்கும் ஆற்றலையும் பெறவேண்டும். மற்றும் ஒரு கேள்வி உண்டு? ஏழை பசியால் சாகிறான் என்றால், பணக்காரன் ஏன் சாகவேண்டும்?

உண்ட உணவை வெளியேற்றுவதில் தான் உடல் அதிக சக்தியை விரயம் செய்கிறது. நோய்கள் மிகுதியாகிறது. உடல் நலம் மோசமாகிறது. முறையற்ற உணவு மூளையில் நஞ்சு படிவதற்குக் காரணமாகிறது. ஆதலால் உடலுக்கு ஒவ்வா உணவை நீக்கி ஏற்ற உணவை நேரமறிந்து உண்டு நலம் பேணுவது உடலுக்கும் மனத்திற்கும் ஆரோக்கியம் தரும்.

இயற்கை மருத்துவர் திரு. வெள்ளிமலையிடம் ஒரு பெரிய தமிழ் அறிஞரை அழைத்து வந்தார்கள். அவரால் இட்டிலியை விழுங்க முடியவில்லை. வெள்ளிமலை இட்லியை விழுங்கத் தேவையில்லை என்றார். தமிழறிஞர் கேட்டார். பின் என்ன செய்வது? வாயில் இட்டு அரைத்துக் கொண்டே இருங்கள். உணவு உமிழ் நீருடன் கலந்து கூழாக மாறி தொண்டையில் தானாக இறங்கட்டும் என்றார்.

அப்படியே செய்து பார்த்தபோது தமிழறிஞருக்கு வியப்பு மேலிடும் அளவுக்கு நன்மை தெரிந்தது. மருத்துவரிடம் அவர் கேட்டார், இட்டலி மட்டும்தான் இப்படியா? இப்படித்தான் உண்ண வேண்டுமா? மருத்துவர் எதுவானாலும் உண்ணும் முறை இதுவே என்றார். பகலுணவையும் அரைத்து மசித்து உமிழ்நீர் கலந்து கரைந்து

உண்டவர்க்கு ஆனந்தம் மேலிட்டது. மருதமலை இயற்கை

மருத்துவர். சுப்பிரமணியன் சொல்வது போல,

பசித்து உண்ண வேண்டும். மசித்து உண்ண வேண்டும். ரசித்து உண்ண வேண்டும். ருசித்து உண்ண வேண்டும். கூடிய வரையில் சமைக்காதவற்றை உண்ணவேண்டும். ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே கொள்ளவேண்டும். முழு உணவு

காலை உணவைத் தவிர்க்கலாம். அல்லது காலை உணவை சமைக்காத உணவாகக் கொள்ளலாம். என்ணை சேராத உணவைத் சேர்த்து கொள்வது நல்லது. இருவேளை உணவுகளுக்கு இடையில் ஐந்து மணி நேர இடைவெளி இருப்பது நல்லது. தண்ணீரைச் சிறுக, சிறுக உண்ண வேண்டும் நிறைய உமிழ்நீர் உள்ளே செல்லவேண்டும். உணவைக்குடி! நீரை உண்.ஆயிரம் மைல் நடைப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த ருசிய நாட்டு டாக்டர். பார்பரா மூர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். நான் காய்கனி உணவு மட்டுமே உண்பவர். எங்கள் பண்ணையில் நிறைய பறவைகளும், விலங்குகளும் இருந்தன. அவற்றில் பலவற்றை கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கொன்று தின்றார்கள்.

என் அன்பிற்குரிய பறவைகளைக் கொன்றது எனது மனதைப் பாதித்தது. இதுவே நான் மாமிச உணவை வெறுத்ததற்குக் காரணம். டாக்டர் படிப்பை முடித்தபோது இறைச்சி, மீன் போன்றவை நல்ல உணவல்ல என்று அறிந்தேன். இந்தியாவில் இமயமலைப் பகுதியில் அலைந்த போது எப்படி வாழ்வது என்பது அறிந்ததால் நீண்ட காலம் வாழமுடியும் என்பதை அறிந்துகொண்டேன். இன்று

இரவில், இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குகிறேன்.

இது எனக்குப் போதுமானது. நான் உண்ணும் உணவே

இதற்குக் காரணம்.

முதலாவதாக தாவர உணவுக்கு மாறினேன். பிறகு பால் பொருட்கள் ஒவ்வொன்றாக விலக்கினேன். பிறகு சமைத்த பொருட்களை ஒதுக்கினேன். பிறகு பச்சடி, பழம், தேன், பழச்சாறு இவையே உணவானது. இன்று பழச்சாறு, தேன் இரண்டு மட்டுமே உண்ணுகிறேன். எப்போதாவது கொட்டைகள் (பருப்புகள்) சாப்பிடுவதுண்டு.

எனது உடம்பில் நான் நடத்திய சோதனை மூலம் நான் அறிந்து கொண்டது இதுதான். உடலுக்குத் தேவையான சக்தியோ, வெப்பமோ உணவு மூலமாக வருவதில்லை. 60 வயது மூதாட்டி பார்பராமூர் அவர்கள் வழிநடப்போம்.

திருக்குறள் 95வது அதிகாரம் மருந்து வான்புகழ் கொண்ட வள்ளுவன், மருந்து பற்றி பத்து குறள்கள் எழுதியுள்ளான். முதற்குறள் உடலில் நீர், நெருப்பு, காற்று மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் வரும் என்று கூறுகிறது. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளி முதலா எண்ணிய மூன்று

இரண்டாவது குறள் மருந்து வேண்டாம் என்று சொல்லுகிறது. உண்டது உடலை விட்டு நீங்கிய பிறகு உண்டால் மருந்து வேண்டாம்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்

மலமாக, சிறுநீராக, வியர்வையாக உண்டது அற்றுப் போன பின்பும் அளவறிந்து உண்ணும்போது ஆயுள் நீடிக்கும்.

அற்றால் அளவறிந்து உண்க, அது உடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

உண்டது அற்ற பின்பும் துவரப் பசித்த பின்பு உண்ணவேண்டும்

ஒவ்வாததை நீக்கி (மாறல்ல) உண்ண வேண்டும்

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து

உண்டது மூச்சாக, வேர்வையாக, மலமாக, சிறுநீராக

இழந்த பின்பு உண்பவர் உடலில் இன்பம் நிற்கும். அளவு கடந்து இரை எடுப்பவர் உடலில் நோய் நிற்கும். இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இறையான் கண்நோய்!

Reference & courtesy G. Nammalvar book 

By VINODHAN,

 

Shopping Cart