திருமூலரின் ஒரு அற்புதமான படைப்பு இதுதான் பரியங்க யோகத்தின் ஞானநிலை இந்த ஞான நிலையை நம்மால் அடைய முடியுமா இந்த கேள்விக்கு இப்போ இருக்கிற காலத்தில் பதில் இல்லை ஆனால் திருமூலரின் வாக்கு முடியும் என்ற வார்த்தை மட்டுமே காரணம் பலவிதங்களில் நாம் அதை உணரலாம் கூட ஓஷோ கூட திருமூலரின் ஒரு பிரதி தான் காரணம் இதுவரை உலகத்தில் சொல்லாத ஒரு விஷயத்தை வெளிப்படையாக உண்மையைக் கூறினார் அதுதான்’காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற கான்செப்டை 20-நூற்றாண்டில் அதிரடியாக ஒரு குண்டைபோட்டு உலகை அதிரச் செய்தவர்தான் ரஜினிஷ் எனும் ஓஷோ. காமம் வாயிலாகத்தான் மேலான தெய்வீக அனுபவத்தைப் பெறமுடியும் என்றார் ஓஷோ.ஆனால் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் திருமூலர் 1,600 ஆண்டுகளுக்கு முன்பே “காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்ற கான்செப்டை சொல்லிவிட்டார்.போகமும், யோகமும் சித்தர்களுக்கு ஒன்றென்றார் திருமூலர்.

காமம் கடந்தால் ஞானம் பெறலாம்! புலன்களைக் கடந்தால் மெய்யுணர்வு பெறலாம்! யோகம் கடந்தால் யோகம் ஞானம்! சின்றின்பம் விட்டால் பேரின்பம்! சதையின்பம் விட்டால் சிவானந்தப் பேரின்பம் என்கிறார் திருமூலர்.”புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்புபோல உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லார்க்கே” – (திருமந்.283) திருமந்திரத்தில் “பரியங்க யோகம்” எனும் தாந்திரிக யோகத்தை முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியவர் திருமூலர் ஆவார். ஓஷோவும் சித்தர் திருமூலரும் காலத்தால் வேறுபட்டவர்கள். இவர்கள் இருவருக்கும் 1600 ஆண்டுகாலம் இடைவெளி உண்டு. ஆனாலும் தமிழில் திருமந்திரம் தந்த திருமூலர் பரியங்க யோகம் என்ற பெயரால் அன்றே தாந்திரிக யோகத்தை உலகிற்கு அளித்தார். அதன் ஆங்கில மொழியாக்கம் கண்டிப்பாக வெளிவந்திருக்கக் கூடும். அதனை ஓஷோ கற்று அறிந்ததால் அவரது ஆன்மீக பேச்சில் திருமூலரின் பரியங்க யோகம் தாந்திரிக யோகமாக பரிணாமம் அடைந்திருக்கக்கூடும். திருமந்திரத்தில் வாழ்வு முறை, கடவுள், அன்பு, மரணம், தியானம், யோகம், போகம் அத்தனையும்திருமூலரால் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. புது மொந்தையில் பழைய கல் போல் திருமூலரின் அத்தனை கருத்துக்களையும் ஓஷோ தனது சொற்பொழிவுகளில் புதிய பார்வையாக எளிமையான விளக்கங் களாகச் சொல்லியிருக்கிறார்.

மரணத்தைப்பற்றி ஓஷோவின் பார்வையிலிருந்து அப்படியே ஒத்துப்போகிறார் திருமூலர். மரணமில்லாப் பெருவாழ்வை திருமந்திரத்தில் காணமுடிகிறது.திருமூலர் வடமொழியில் ஒன்பது ஆகமங்களையே தமிழில் கூறவே என்னை இறைவன் படைத்தான். ஒன்பது தந்திரங்களாகத் திருமந்திரத்தைப் பாடவைத்தான் என உணர்ந்தார் திருமூலர். ஆக, இறைவன் என்கிற இந்த பிரபஞ்சம் வடமொழி அறிஞர்கள் மூலம் வேத ஆகமங்களை 5000 ஆண்டுகளுக்குமுன் அருளினான். அதன்பின், அந்த இறைவன் என்கிற பிரபஞ்சம் காலத்திற்கேற்ப வியாசர் என்ற அறிஞனால் “பகவத்கீதை யை யோக நூலாக, வாழ்வின் சாத்திர நூலாக, தோத்திர நூலாக அருளினான். இது 2500 ஆண்டுகளுக்குமுன் நடந்தது. அதே இறைவன் என்கிற பிரபஞ்சம் பதஞ்சலி என்கிற அறிஞன் மூலம் “குண்டலினி யோகத்தை யோக சூத்திரமாக அருளினான். இது 2300 ஆண்டுகளுக்குமுன் நடந்தது. அதே இறைவன் என்கிற பிரபஞ்சம் 1600 ஆண்டுகளுக்குமுன் திருமூலர் மூலம் குண்டலினி யோகமாகவும். பரியங்க யோகமாகவும் மனித குலத்துக்கு அருளினான் திருமந்திரம் என்கிற நூலை, அதனை இன்றைய கால கட்டத்திற்கேற்ப பாமரனும் அறிந்து கொள்ளவே இறைவன் என்கிற இப்பிரபஞ்சம் ஓஷோவின் மூலம் திருமந்திரத் தகவல்களை அருளினான் என்பதே இந்நூலின் வாதம்! திருமந்திரத்தில் சொன்ன அத்தனைக் கருத்துக்களை ஓஷோவின் வாயிலாக அறியலாம். அட்டாங்க யோகம் என்ற குண்டலினி யோகம் பரியங்க யோகம் என்கிற தாந்திரிக யோகம்இரண்டையும் ஒருங்கே அளித்த பெருமை திருமூலருக்கேஉரியதாகும்.

ஓஷோவுக்கு அட்டாங்க யோகத்தில் அனுபவமற்றவர் என்று அவரது வாழ்வு முறையே நமக்கு வெளிப்படுத்தி விட்டது.குண்டலினியோகத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவனால் மட்டுமே பரியங்க யோகம் என்கிற தாந்திரிக யோகாவில் வெற்றிபெற முடியும் என்பது திருமந்திரத்தின் கூற்று. அதனால் குண்டலினியோகாவில் தேர்ச்சி பெறாத ஓஷோ தாந்திரிக யோகாவில் வெற்றிபெற சாத்தியக்கூறு இல்லை என்றே சொல்லலாம். ஆனாலும் திருமூலரின் யோக முறைகளை மிக எளிமையான சொற்பொழிவுகளால் உலகிற்கு தந்த ஓஷோவிற்கு ஒரு சல்யூட் இது மட்டுமல்ல இவருக்கு பல விஷயங்களை நாம் செய்யலாம் காரணம் ஒவ்வொரு ஞானி அல்ல மகான் அல்ல ஆனால் அவர் ஒரு மனிதனாக வாழ வேண்டும் என்று நினைத்தால் மனிதனின் ஒரு புனிதன் ஆனால் இவர் மட்டும்தான் ஓஷோ போன்ற ஒருவர் மறுபடியும் பிறப்பது இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை திருமூலரும் இதைவிட ஒரு ஆயிரம் மடங்கு அற்புதமானது திருமூலரின் ஒரு பிரதிநிதிதான் ஓஷோ !

vinodhan, 7010054619

 

Shopping Cart