தனிமை என்பது என்ன என்று என்னைக் கேட்டால் உண்மையிலேயே சுகம் என்றுதான் நான் கூறுவேன். ஏனென்றால் மனதிற்கு சிறந்த மருந்து தனிமை தான். ஏனென்றால் தனிமையில்தான் ஒருவன் சிறந்த அறிவாளியாகவும் புதுமையான படைப்புகளை உருவாக்குகின்றவனாகவும் மாறுகிறான். எப்படி என்றால் தனிமையில் இருக்கும்போது நம் மனமானது மிகவும் அமைதியாக இருப்பதே நீங்கள் உணரலாம். ஆனால் இந்த அமைதி தனிமையில் கிடைக்க வேண்டுமென்றால் நாம் முதலில் மனம் என்கிறவனை கவனிக்க வேண்டும். ஆம் அப்போதுதான் மனதில் இருக்கும் கழிவுகள் அனைத்தும் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும். அந்த நேரத்தில் நாம் அமைதியாக அமர்ந்து அதை கவனித்தால் போதும் ஏனென்றால் அப்போதுதான் நம் மனதில் இருக்கும் கவலை வேதனை கஷ்டம் கோபம் என அனைத்தும் வெளியேறும் போது நமக்கு எவ்வித reactionனும் இருக்கக்கூடாது.அப்போது மன அமைதி கிடைக்கும். ஆனால் பலபேர் தனிமையில் இருந்தால் அதிகம் கவலை கொள்கிறார்கள் அப்போது இவை வேதனையாக மாறத் தொடங்குகிறது. ஏன் கவலை கொள்கிறார்கள் என்றால் மனிதர்கள் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் நம்மை சுற்றி பல பேர் இருந்தால் தான் சந்தோஷம் என்றும் நினைக்கின்றனர்.
அவை எல்லாம் நிரந்தரமில்லை தனிமை என்பது தான் நமக்கு நிரந்தரம் நாம் சாகும் வரை தனிமை தான் நிரந்தரம் எப்படி என்றால் நாம் பிறக்கும் போதும் தனியாகத்தான் பிறக்கிறோம் இறக்கும்போதும் தனியாகத்தான் இருக்கிறோம். அதுவே பூமியின் இயற்கை என் தனிமை என்பது சுகம் என்கிறேன் என்றால் நீங்கள் தனியாக இருக்கும் போது மனதை புரிந்து கொள்ள முடியும். மனம் என்பது சாதாரண ஒன்றாக நீங்கள் நினைக்கிறீர்கள் ஆனால் மனதை பற்றி அறிய தனி கலயை உருவாக்கி அதை மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு மனிதன் உலக சாதனை படைக்க செய்வதும் மனமே அதே மனம் மனிதனை அழிக்ககூடிய அளவிற்கு அதிக ஆற்றல் கொண்டது. மனிதர்கள் யாரையோ தேடி எதையோ நம்பிக்கொண்டு மனிதர்களின் பின்னால் சுற்றிக் கொண்டு அவர்களிடத்தில் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டு கடைசியில் ஏமாற்றப்படுகிறார்கள். பிறகு மனம் வருத்தப்படுகிறார்கள் விரக்தி அடைகிறார்கள். அதன்பின்பு எனக்கு யாருமே இல்லை என்று புலம்புகிறார்கள். அப்போது தனிமை என்கிற ஒன்று தேவைப்படுகிறது.அந்த தனிமையில் மனிதர்கள் செய்த சில தீய வினைகளை நினைத்து மனம் வாடுகிறார்கள். அதனால் இங்கு தனிமை வேதனையாக மாறுகிறது. பிறகு தற்கொலை செய்துகொள்கிறார்கள் அதற்குத் தான் கூறுவார்கள் தனிமை தான் ஒரு மனிதனை தவறு செய்யத் தூண்டும் என்று சரி தனி வழி எப்போதும் சந்தோஷமாக மாறும் அது மனிதர்களாகிய நாம் கையில் தான் உள்ளது எப்படி என்றால் வேதனை கஷ்டங்களில் சிக்கிய நீங்கள் உங்கள் கஷ்டத்தை யாரிடமும் கூறாமல் நீங்கள் தனிமையை விரும்பவேண்டும்.
அப்போது என்ன நடக்கும் என்றால் மனதில் புதைந்துள்ள நச்சுக்கள் முதலில் வெளியேறத் தொடங்கும் அதாவது கவலை கோபம் அழுகை வேதனை வெறுப்பு இப்படி மனதை துன்புறுத்த செய்யும் நச்சுக்கள் வெளியேறும். அப்போது மனதின் செயல்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.அப்போ நீங்கள் தெரிந்து கொள்ளலாம் மனதின் பித்தலாட்டங்களை உங்களுக்கு நடந்த துன்பங்கள் ஒன்றுமே இருக்காது. ஆனால் மனம் அதை எவ்வளவு பெரியதாக உருவகப்படுத்தி உங்களை நிலைகுலைய வைக்கும். அதை நீங்கள் கவனிக்க கவனிக்க அது உங்களை விட்டு மறைய ஆரம்பிக்கும்.சில காலம் சென்ற பிறகு தனிமையாக நீங்கள் இருப்பீர்கள் உங்களது மனம் ஒருவித பக்குவமடைந்த தெளிவாக இருப்பதை நீங்கள் உணர முடியும். தனிமையை நீங்கள் விரும்ப ஆரம்பித்து விடுவீர்கள். இந்த மனிதர்களுடன் பழகுவதை விட தனிமையில் இருப்பதை எவ்வளவு சிறந்தது. ஏனென்றால் மனிதர்களுடன் பழகி அதன் மூலம் வரும் துன்பங்களை விட தனிமையில் வரும் துன்பம் எவ்வளவு சிறந்தது தனிமையில் துன்பமே கிடையாது மனம் அமைதியாக நிம்மதியாக இருக்கும். ஏனென்றால் சூழ்நிலைக்கேற்ப மனிதர்கள் அவர்களை மாற்றிக்கொள்கிறார்கள்.அந்த சில சூழ்நிலை நமக்கு பாதகமாக மாறிவிடுகிறது ஏன் நாம் மனிதர்களை வெறுகிறோம் என்றால் எதிர்பார்ப்பு தேவை அன்பு இதையெல்லாம் அளவுக்கு அதிகமாக அவர்களிடம் நாம் வைப்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் அவையே கத்தியாக மாறுவதால் நாம் மனவேதனை கொள்கிறோம். நோயினை நாமே உருவாக்குகின்றோம். ஆகவே தனிமை என்பது மனதிற்கு சிறந்த மருந்து 70 80 வயதிற்கு மேல் எப்படியோ நீங்கள் தனிமையில் தான் இருக்கப் போகிறீர்கள் அப்போது யாருமே உங்கள் கூட இருக்கமாட்டார்கள். இருப்பார்கள் ஆனால் இருக்க மாட்டார்கள். அப்போ இருக்கவேண்டிய தனிமை நமக்கு அதிக கஷ்டத்தை ஏற்படுத்தும் அப்போது நம்மால் தாங்க முடியாது.
நீங்கள் சிறுவயதிலேயே தனிமையில் இருக்க பழகிக் கொண்டால் உங்களுக்கு இந்த தனிமை வயதான காலத்தில் இனிமையாக இருக்கும். இப்படி இருந்து பழகினால் ஒரு கட்டத்திற்கு மேல் உங்களுக்கு மனிதர்கள் கூட இருக்கப் பிடிக்காது மனிதர்களை கேட்க மாட்டீர்கள் மனித தொடர்பு குறைய ஆரம்பித்துவிடும் தனிமை என்கிற ஒன்றினை சரியாக புரிந்து கொண்டு வாழ்ந்தால் நமக்கு மனிதர்களுக்காக ஏங்க வேண்டிய அவசியமில்லை. எப்போதும் மன அமைதி மற்றும் சந்தோஷம் கிடைக்கும். ஏன் வயதான காலத்தில் இனிமையாக இருக்கும் என்கிறேன் என்றால் மனதை நீங்கள் கவனித்த பிறகு அதில் தோன்றும் மாயை விலகும் பிறகு மனம் அமைதியாக இருக்கும் போது உங்களுக்குள் ஓர் சந்தோஷம் கிடைக்கும் அந்த சந்தோஷம் எவ்வளவு பணம் எவ்வளவு மனிதர்கள் கூட இருந்தாலும் அதற்கு நிகராக எதுவுமே கிடையாது. அதனால்தான் முதுமை காலத்தில் எவ்வித மனிதர்களையும் நினைத்து ஏங்க மாட்டீர்கள் அப்போது உங்களுக்குள்ளேயே சந்தோஷம் இருக்கும் அந்த சந்தோஷம் உங்கள் உள்ளுணர்வு என்று சொல்லக்கூடிய super conscious உங்களுக்கு கொடுக்கும். இதுவே கடவுள் என்கின்றனர். கடவுள் என்றால் நம் உள்ளே கிடப்பவர் அதாவது (உள் கட )அதனால்தான் கடவுள் என்கிறார்கள். ஆகவே தனிமையில் தான் நீங்கள் மனதை கடந்து உங்களுக்குள் இருக்கும் கடவுளை உணர முடியும்.நான் தனிமையை நேசிப்பவன். நன்றி.. மகிழ்ச்சி….😇
HIPNOTIST SIVAGANESH,